Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruppavai Pasura Vilakkam
Thiruppavai Pasura Vilakkam
Thiruppavai Pasura Vilakkam
Ebook358 pages2 hours

Thiruppavai Pasura Vilakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த 30 பாசுரங்கள் திருப்பாவை. வேதமனைத்திற்கும் வித்தான திருப்பாவை ஒரு அமுத சாகரம். கோதையின் பாசுரங்களை ரசிக்காதவர் இருக்கவே முடியாது. கோதையின் பாசுரங்களிலே தலை சிறந்து நிற்பது திருப்பாவை. திருப்பாவைக்கு எத்தனையோ மகான்கள் விளக்கம் சொல்லியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் பல பெரியோர்கள் இன்னும் விளக்கம் சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ஒரு புது செய்தி, புதிய அனுபவம் திருப்பாவையில் நமக்குக் கிடைக்கும். அடியேன் படித்து கேட்டு அறிந்தவற்றைக் கொண்டு இந்த திருப்பாவை பாசுர விளக்கத்தினை தொகுத்துள்ளேன்.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580176810787
Thiruppavai Pasura Vilakkam

Related to Thiruppavai Pasura Vilakkam

Related ebooks

Reviews for Thiruppavai Pasura Vilakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruppavai Pasura Vilakkam - Seshadri Kannan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருப்பாவை பாசுர விளக்கம்

    Thiruppavai Pasura Vilakkam

    Author:

    சேஷாத்ரி கண்ணன்

    Seshadri Kannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/seshadri - kannan

    பொருளடக்கம்

    முன்னுரை

    திருப்பாவை அறிமுகம்

    பாசுரம் 1

    பாசுரம் 2

    பாசுரம் 3

    பாசுரம் 4

    பாசுரம் 5

    பாசுரம் 6

    பாசுரம் 7

    பாசுரம் 8

    பாசுரம் 9

    பாசுரம் 10

    பாசுரம் 11

    பாசுரம் 12

    பாசுரம் 13

    பாசுரம் 14

    பாசுரம் 15

    பாசுரம் 16

    பாசுரம் 17

    பாசுரம் 18

    பாசுரம் 19

    பாசுரம் 20

    பாசுரம் 21

    பாசுரம் 22

    பாசுரம் 23

    பாசுரம் 24

    பாசுரம் 25

    பாசுரம் 26

    பாசுரம் 27

    பாசுரம் 28

    பாசுரம் 29

    பாசுரம் 30

    முன்னுரை

    அனைவருக்கும் அடியேனின் தெண்டன் சமர்பித்த விஞ்ஞ்சாபணங்கள்.

    அடியேனைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு:

    அடியேன் பிறந்த ஊர் பாதூர் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் இருக்கும் ஊர் வளர்ந்தது சரஸ்வதி குடியிருந்து அருள்பாலிக்கும் கூத்தனூர், பணி நிமித்தமாக கடந்த 26 வருடங்களாய் சிங்கப்பூரில் வசித்து வருகின்றேன்.

    சிங்கப்பூர் தான் அடியேனின் தமிழ் ஆர்வத்தை வளர்த்து மேடை அமைத்துக்கொடுத்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

    சிங்கப்பூரில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் அனுக்கிரஹத்தால் பலமேடைகளில் தமிழ்ல் இலக்கியம் பேசவும் பக்தி சொற்பொழிவுகள் ஆற்றவும் அனுக்கிரஹம் கிடைக்கிறது.

    இரண்டு வருடங்களுக்கு முன் தோழி அனுராதா வேங்கடேஸ்வரன் அழைத்து திருவண்ணாமலை ஷ்யாம் FM you tube channel - ல் திருப்பாவை விளக்கம் சொல்கிறீர்களா என்று கேட்டார். ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டேன்.

    திருவண்ணாமலை ஷ்யாம் FM தலைவர் திரு. சரவணன் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பினார்.

    எழுதாளாரும் குடும்ப நண்பருமான திரு. இந்திரா செளந்திரராஜன் இதை நீ புத்தகமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார். சார் இதை எப்படி புத்தகமாக கொண்டு வர முடியும்? நான் சொன்னது நான் படித்ததையும், கேட்டதையும் கொண்டு எனக்குப் புரிந்ததைக் கொண்டு எழுதியிருக்கிறேன். சரியாக வருமா எனக் கேட்டேன். திரு. இந்திரா செளந்திரராஜன் அவர்கள் சரியாக வரும் என்று சொன்னதோடு அல்லாமல் Pustaka பிரசுரத்தினரையும் அழைத்து எனது உரையை புத்தகமாக்க ஏற்பாடும் செய்துவிட்டார்.

    இதை பகவானின் கிருபை என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.

    திருப்பாவை எனும் பாசுரக் கடலில் ஒரு பாசுரம் சேவிக்கவே அத்துனை விஷயம் வேண்டும் 30 பாசுரத்திற்கும் விளக்கம் சொல்லவேண்டும் என்று அடியெடுத்துக்கொடுத்தவர் அனுராதா வேங்கடேஷ்வரன். அந்த வேங்கடவனின் பெயர் சம்பந்தம் உள்ளவர்.

    அதை புத்தகமாக்க வழிசெய்து கொடுத்தவர், இந்திரா செளந்தரராஜன். செளந்தரராஜ பெருமாள் பெயர் சம்பந்தம் உள்ளவர்.

    அதானால் இதனை பெருமாள் வழிநடத்துகிறான் என்றெண்ணி அவன் பாதம் பணிந்து நிற்பதைத் தவிர அடியேனுக்கு வேறொன்றும் தெரியாது.

    ஆச்சார்யர்களின் அனுக்கிரஹத்தோடும், ஆண்டாளின் அனுக்கிரஹத்தோடும் அடியேனால் முடிந்த வரை விளக்கம் சொல்ல முயன்றிருக்கின்றேன்.

    அடியேனின் இந்த விளக்க உரைக்கு ஸ்ரீ முக்கூர் லெஷ்மி நரசிம்மாச்சார்யார் சுவாமிகளின் கோதையின் பாதை புத்தகம் தான் வழிகாட்டியாக, கைபிடித்து அழைத்துச் சென்றது. ஆச்சார்யனாக ஸ்ரீ முக்கூர் லெஷ்மி நரசிம்மாச்சார்யார் சுவாமிகளை மனதில் வரித்துத் தான் இந்த தொடரை தொடங்கினேன். சுவாமிகளின் திருவடியில் தெண்டன் சமப்பிக்கின்றேன்.

    மற்றும் ஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமிகளின் உரையும் அடியேனை வழிநடத்தியது. ஸ்வாமிகளின் சரணார விந்தத்தில் தெண்டன் சமர்ப்பிக்கின்றேன்.

    இந்த உரையில் ஏதாவது சொற்குற்றம் பொருட் குற்றம் இருப்பின், அதனை பொருத்து மன்னிக்க வேண்டும். இந்த குறைபாடுகள் அடியேனின் சிறுமையினால் ஏற்பட்டதே அன்றி. அடியேனின் ஆச்சார்யர்களிடமிருந்து வந்தவை அல்ல.

    அடியேனுடைய முதல் முயற்சியின் போது சிலருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருகிறேன்.

    அடியேனை சிங்கப்பூர் மேடைகளில் ஏற்றி ஒரு பேச்சாளானாக மெருகேற்றிய அருமை நண்பர் பாலு மணிமாறன்.

    ஆன்மீக மேடைகளில் பேசுவதற்கு ஊக்கம் அளித்த நண்பர் ராம்குமார் சந்தானம்.

    அடியேனை எப்போதும் ஆசிர்வதித்து, அடியேனின் பேச்சினை எளியவன் பேச்சு என்று கருதாமல் எப்போதும் வந்து கேட்கும் பாடகர் கலைமாமணி வீரமணி ராஜீ அண்ணா.

    பேச்சாளார் மணிகண்டன்.

    புத்தகம் எழுத தூண்டிகொண்டே இருக்கும் இசைக்கவி ரமணன்.

    என்னுடைய எல்லா முயற்சிகளிலும் அடியேனுடன் தோளோடு தோள் நிற்கும் நண்பர் தமீம் அன்சாரி.

    இந்த புத்தகத்தைப் படித்து தன்னுடைய மேலான கருத்தை தெரிவித்து ஊக்கம் அளித்த தோழி பா. கங்கா.

    சிங்கப்பூரில் அடியேனுக்கு இராமாயணம் உரையாற்ற மேடை அமைத்துக்கொடுத்த மாதவி இலக்கிய மன்ற தலைவர் தமிழ் நெஞ்சர் டாக்டர் என்.ஆர். கோவிந்தன்.

    சிங்கப்பூர் வடபத்ர காளியம்மன் ஆலய நிர்வாகத்தினர், மேலாளர் திரு. ராஜகோபால், ராஜா பட்டாச்சார் மற்றும் ஆலய அர்ச்சகர்கள்.

    பலவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் சிங்கப்பூர் லிஷா அமைப்பு, லிஷா இலக்கிய மன்றம்.

    லிஷாவின் மூத்த ஆலோசகர் திரு இராஜ்குமார் சந்திரா.

    முனைவர் இரத்தின வேங்கடேசன் – தலைவர், சிங்கப்பூர் தமிழ் இலக்கிய களம்.

    முனைவர் மன்னை இராஜகோபாலன் – சிங்கப்பூர்.

    தொலைக்காட்சியிலும் அறிமுகப்படுத்தி அழகு பார்த்த நண்பர் புதுயுகம் திரு பரணி.

    பேச்சாளார் நடுவர் திரு. கலையமுதன்.

    குடும்பப் பொருப்பினை பார்த்துக்கொண்டு அடியேனை என் வழியில் பயணிக்க விட்டு ஊக்கம் அளிக்கும் அடியேனின் மனையாள் பத்மா மகள் வைஷ்ணவி மற்றும் மகன் ஹரி.

    அடியேன் சிங்கப்பூரில் இருப்பதால் எனக்கு எல்லாவிதத்திலும் உதவி வரும் அக்க ஜெயந்தி அத்திம்பேர் ரமேஷ் மற்றும் மருமான் உப்பிலி ஸ்ரீனிவாசன்.

    அத்தை மகன் S. பத்மநாபன்.

    ராஜா வெங்கட்ராமன் - Brother in law.

    Mr. Anshul, Khanna Managing Director, Station Satcom Group (For allowing me to pursue my passion by giving flexible work hours)

    இன்னும் பலரின் அன்பும் ஆதரவும் அடியேனை வழிநடத்துகிறது. அத்துனை நண்பர்களின் பெயர்களையு இங்கு குறிப்பிட இயலவில்லை என்றாலும் அனைவரின் நினைவும் அடியேனின் நெஞ்சத்தில் உண்டு.

    சமர்ப்பணம்

    அடியேனுக்கு சிறு வயதிலே இராமாயணமும் மகாபாரதமும் பிரபந்தங்களும் கதைகளாகச் சொல்லிக்கொடுத்த என் தாத்தா வாழைக்குறிச்சி உ.வே. திருவேங்கடத்தையங்ககார்,

    அடியேனை நல்ல படி படிக்க வைத்து, நல் நெறிகளைப் போதித்து வழிநடத்திய என் பெற்றோர்,

    வாழக்குறிச்சி திரு T. சேஷாத்ரி – S. ஜனகம்,

    அடியேனுடைய எல்லா முயற்ச்சியையும் மகிழ்ந்து ஆதரித்து ஆசிர்வதித்த அடியேனின் அத்தை செல்லம்மாள்.

    திருப்பாவை அறிமுகம்

    ஆச்சார்யன் துதி

    (குரு வந்தனம்)

    ஸ்ரீமதே ஸ்ரீ லஷ்மீ ந்ருஸிம்ம பரப்ரஹ்மணே நம:

    ஸ்ரீமதே ஸ்ரீ லஷ்மீ ந்ருஸிம்ம திவ்ய பாதூகா ஸேவக

    ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ நாராயணா யதீந்த்ர மஹா தேசிகாய நம||

    ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத மஹா தேசிகாயன நம:

    ஸ்ரீ மட்டபல்லிநாதம் ப்ரணதோஸ்மி நித்யம் நம:

    ஸ்ரீமத் உபய வேதாந்த ஸ்ரீ முக்கூர் லஸ்க்மீந்ருஸிம்ஹார்ய

    மஹா தேசிகாய நம:

    ஆண்டாள் துதி

    அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

    பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால்

    பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை

    சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

    சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை,

    பாடி அருளா வல்ல பல்வளாய்யாய்! நாடி நீ

    வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்

    நாங்கடவா வண்ணமே நல்கு

    உத்தமமான மார்கழி மாதத்தில் மார்கசீரிஷம் என்ற ஆண்டாள் ஆரம்பித்த நோன்பினை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டாள் அவதாரச் சிறப்பை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

    ஆண்டாள். கோதை நாச்சியாரின் அவதாரத்திற்கு மூல காரணம் வரஹா அவதாரம்.

    அவதாரங்களிலே பெரிய அவதாரம் வராஹ அவதாரம்.

    ஞானப் பிரானை அல்லால் நான் கண்ட நல்லதுவே என்று சேவிக்கிறார் நம்மாழ்வார்.

    பூமி பிராட்டியைத் தன் மூக்கிலே காப்பாற்றிக் கொண்டு வருகிறார் வராஹ மூர்த்தி,

    கோல வராகமென்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் என்று கொண்டாடுகின்றார் நம்மாழ்வார்.

    அப்படிப் பூமிப் பிராட்டியை காப்பாற்றி மேலே எடுத்துக் கொண்டு வந்தபோது பூமி பிராட்டி அழுதாளாம். யாராவது தன்னை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பாற்றினாள் அழுவார்களா? ஆனால் பூமி பிராட்டி அழுதாளாம்.

    ஏன் என்று பெருமாள் கேட்டானாம், பிராட்டி சொன்னாள். நான் உங்கள் மனைவி ஆபத்து என்றவுடன் ஒடி வந்து காப்பாற்றி விட்டீர்கள், ஆனால் பூலோகத்துக் குழந்தைகள் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் அழைத்தால் வந்து யார் காப்பாற்றுவார்?

    முதலில் பூலோகவாசிகளுக்கு உன்னை எப்படி அழைப்பது என்றுதான் தெரியுமா?

    பெரிய யஞ்யம், யாகம் செய்து உன்னை அழைக்க வேண்டும் என்றால், எத்தனை சிரமமான காரியம்? எல்லாருக்கும் கை வருமா? எது உன்னை அடைய சுலபாமான வழி? நீ அதை சொல்லவேண்டும் என்று கேட்டாளாம் பூமி மாதா. மூன்று உபாயங்களை சொன்னார் வராஹ மூர்த்தி.

    நாம் கடைத்தேருவதற்குச் சுலபமான வழிகளைச் சொன்னதால் அவதாரங்களில் ஏற்றம் உடையது வராஹ அவதாரம்.

    வராஹ அவதாரம் முடிந்து மற்ற அவதாரங்களும் முடிந்தது. வைகுண்டத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறான்.

    ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி மற்ற நித்ய சூரிகள் சூழப் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள், பூலோகத்தைப் பார்க்கிறான். அங்கே மனிதர்கள் பக்தியை மறந்து, அறம் தொலைத்துச் செய்யக்கூடாதவற்றை எல்லாம் செய்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

    இதனைப் பார்த்த பெருமாள் தம் குழந்தைகள் கலியின் பிடியில் சிக்கி அவதிப்படுகிறார்களே? ராமனாய் அவதாரம் செய்து எப்படி வாழ்வது என்று நடந்து காட்டி வந்தேன், கிருஷ்ணனாக அவதரித்துக் கீதையை உபதேசித்து வந்தேன் இது எதுவுமே பலன் அளிக்கவில்லையே என்று வருந்தினானாம்.

    மகாலெஷ்மியைப் பார்த்துக் கேட்டானாம், நான் சொன்ன கீதை பலன் அளிக்கவில்லை, தந்தை சொன்னால் கேட்காத பிள்ளைகள் தாயார் சொன்னால் கேட்பார்கள், நீ போய் உபதேசம் செய்து விட்டு வா என்றானாம்.

    பிராட்டியோ பெருமாளோடு அவதரித்த ராம கிருஷ்ண அவதார விருத்தாந்தங்களைச் சொல்லி அப்படி உன்னோடு சேர்ந்து அவதரித்தபோது பட்ட கஷ்டங்கள் போதும், தனியாகப் போய் வேறு கஷ்டப்பட முடியாது என்று சொல்லிவிட்டாள்.

    பெருமாள் இப்போது பூமிபிராட்டியைப் பார்த்தானாம், அவள் உடனே என்னை எப்போது பூலோகம் புகச் சொல்வீர்கள் என்றுதானே முடிச்சுப்போட்டுக் கொண்டு காத்திருந்தேன் என்றாள்.

    அது எப்போது போட்ட முடிச்சு? என்ன முடிச்சு?

    வரஹா அவதாரத்திலே பெருமாள் சொல்லிய எளிய உபாயங்களை முடிச்சாகத் தம் முந்தானையில் போட்டு வைத்திருந்தாளாம் பூமி பிராட்டி.

    பூமாதா போட்டிருந்த மூன்று முடிச்சு

    1. பெருமாளின் திருவடியிலே புஷ்பத்தை இட்டு அர்ச்சிக்க வேண்டும்

    2. அவன் நாமத்தை உரக்கச் சொல்லவேண்டும்

    3. அவன் திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்

    இந்த மூன்று முடிச்சுகளோடு ஆடிமாதத்தில், பூர நட்ஷத்திரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் பெரியாழ்வார் திருமகளாகக் கோதை என்ற பெயருடன் அவதரித்தாள் ஆண்டாள்.

    பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்து அரங்கனையே ஆண்டதால், ஆண்டாள் ஆனவள் கோதை.

    திருப்பாவையின் முதல் பத்துப் பாசுரங்கள் அவன் பெயரினைப் பாடு என்கிறது.

    இரண்டாவது பத்து பாசுரங்கள் அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணு என்கிறது.

    மூன்றாவது பத்து பாசுரங்கள் அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணு என்கிறது.

    திருப்பாவை என்பது வெறும் தமிழ் பாசுரம் அல்ல!!ஓரு யஜ்ஞம்!வேதத்தின் சாரம்!!

    யஜ்ஞம் செய்வதில் இரண்டு பகுதி, கேட்டல் (ஸ்ரவணம்) கீர்த்தனம் (சொல்லுதல்) இரண்டும் நடக்கிறது.

    திருப்பாவையிலும் இரண்டும் உண்டு.

    வேதங்களைக் கற்க வேண்டும்!! அது மிக மிக கடினம்

    சரி வேதங்களை விட்டு விட்டு வேதத்தின் சாரத்தினைச் சொன்ன சுக்தங்கள் கற்க வேண்டும்.

    இன்றைய கால கட்டத்தில்அதுவும் இயலாது...

    அடுத்து பெருமாளே கிருஷணனாய் அவதரித்து அளித்த பகவத் கீதையை அறிந்துகொள்ள வேண்டும்.

    பகவத் கீதையைப் புரிந்து கொள்வது கடினம், கிருஷ்ணன் சொன்னது 700 ஸ்லோகங்கள், அதுவும் கடினமான சமஸ்கிருதத்தில்.

    அதோடு மட்டுமல்ல இதற்காகக் கொஞ்சம் நேரமும் ஒதுக்க வேண்டும்.

    மகாபாரத்தில் வருகின்ற எளிமையான சகஸ்ரநாமத்தைச் சொல்லக்கூட 25 நிமிடங்கள் வேண்டும்.

    நம் காலகட்டத்தில் இவை எல்லாம் எத்தனை சிரமம் என்பதை உணர்ந்து கொண்ட பூமாதா, கோதையாக அவதரித்தாள்.

    நமக்காக ஆண்டாள் நாச்சியார் அருளியது எளிமையான் 30 பாசுரங்கள் அதுவும் அமிழ்தான தமிழ் மொழியில்.

    அதையும் ஒரே நாளில் முப்பது பாசுரங்களையும் சேவிக்க வேண்டும் என்று நியமம் வைக்காமல், வருடத்தில் ஒருமாதம், உத்தமமான மார்கழி மாதத்தில் பாவை நோன்பு என்ற ஒன்றை ஆரம்பித்து நாள் ஒன்றிற்கு ஒரு பாசுரம் சேவித்தால் போதும் என்றபடி நமக்காக அமைத்துக் கொடுத்தாள்.

    அதாவது வருடத்திற்கு 30 நாட்கள், ஒரு நாளைக்கு 5 நிமிடம் ஒதுக்கினால் போதும். நாம் கடைத்தேற வழியினைக் காட்டியிருக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

    கிருஷ்ணன் சொன்ன கீதை கேட்ட அர்ஜீனனுக்கு, கிருஷ்ணனின் வாக்கில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் கோதாவோ தன் வாக்கிற்கு தானே நிரூபனமாக நின்று, பூமாலைச் சூடிக்கொடுத்தும் பாமாலை பாடிக்கொடுத்தும் அரங்கனையே ஆட்கொண்டாள் ஆண்டாள்.

    அதனால்தான் கிருஷ்ணனுடைய வாக்கைவிடக் கோதையின் வாக்கிற்கு ஏற்றம் அதிகம்.

    "பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

    வேதம் அனைத்திற்கும் வித்தாகும்

    கோதைத் தமிழ்

    ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு"

    என்ற பட்டர் வாழித் திருநாமத்தில் சொன்னபடி நாம் வையத்திற்கு பாரமாய் இல்லாமல் மார்கழி முப்பது நாளும் ஆண்டாள் பாடிக் கொடுத்த தமிழ் மாலை கொண்டு அரங்கனைப் பாடிடுவோம், பரமனடி பணிவோம்

    யாருக்காக இந்த பாவை நோன்பு?

    கோதை அருளிய இந்த பாவை நோன்பினை நூற்க என்ன ஞானம் வேண்டும்? எந்த சம்பிரதாயம் வேண்டும்? யாருக்காவது தட்சிணை கொடுத்துக் கற்றுக்கொள்ள வேண்டுமா?

    ஆண்டாள் நாச்சியார் இந்த பாவை நோன்பினை நம்மை போன்ற பாமரர்களுக்காக வழங்கி இருக்கிறாள். அவள் தந்த 30 பாசுரங்களைப் பாட நமக்கு இசை ஞானம் வேண்டாம் சம்பிரதாய அறிவு வேண்டாம்.

    உள்ளார்ந்த பக்தி போதும். நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற நம்பிக்கை போதும்.

    முதலையின் வாயில் மாட்டிய யானை ஆதிமூலமே என்று அலறியபோது எந்த ராகத்தில் எந்தத் தாளத்தில் நாராயணனை அழைத்திருக்கும்?

    ஆதிமூலமாகிய அந்த நாராயணால் மட்டும்தான் தன்னைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையில் அல்லவா அலறியது.

    அந்த அலறல் கேட்டு ஒடி வரவில்லையா அவன்?

    துரியோதணன் அவையிலே துகில் உறியப்படும்போது திரெளபதி கண்ணா என்று கதறினாளே? எந்தச் சம்பிரதாயத்தில் கதறியிருப்பாள்? கண்ணன் சேலையாக வரவில்லையா?

    கலியுகம் என்ற முதலை வாயில் அகப்பட்ட யானையாக நாம் நிற்கின்றோம், அராஜகம் என்ற துச்சாதனக் கரங்கள் நம் அகமென்னும் ஆடையை உரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஆதிமூலமே!! கண்ணா!! என்று நாம் கோதை காட்டிய வழியில் கதறுவோம்!! ஒடி வந்து காப்பான் நம்மை.

    திருஆடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே

    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

    பெரும்புதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே

    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

    உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

    மரு ஆரும் திருமல்லி வாள நாடி வாழியே

    வண்புதுவை நகர் கோதை மலர் பாதங்கள் வாழியே!

    பாசுரம் 1

    மார்கழி மாதம், சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் பாடிக் கொடுத்த பாசுரம் கொண்டு ஆண்டாள் பாடிக்கொடுத்த மார்கழி நோன்பு (மார்கசீர்ஷம்) என்ற நோன்பின் முதல் நாள் முதல் பாசுரத்தைச் சேவிப்போம்.

    ஆண்டாள் ஆரம்பித்த நோன்பு மார்கசீர்ஷம்

    மார்கம் என்றால் வழி.

    சீர்ஷம் என்றால் தலை என்று பொருள்.

    தலையான் வழியைக் காட்டும் நோன்பு என்பதால் மார்கசீர்ஷம் என்று பெயர் வைத்தாள் ஆண்டாள்.

    வரஹா அவதாரத்திலே பெருமாள் அருளிய மூன்று எளிய உபாயங்களை நமக்கு எடுத்துச் சொல்ல முப்பது பாசுரங்களை அருளினாள் கோதை நாச்சியார்.

    ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அவசர யுகத்திலே நிற்கவும் நேரமில்லாமல் ஒடிக்கொண்டிருக்கும் நமக்கு ஆண்டாள் அருளிய முப்பது திருப்பாவை பாசுரங்களை விட்டால் சரணாகதி செய்ய வேறு கதியில்லை.

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

    நீராடப் போதுவீர் போது மினோ நேரிழையீர்

    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்த கோபன் குமரன்

    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

    கார்மேனிச் செங்கன் கதிர் மதியம் போல் முகத்தான்

    நாராயணனே நமக்குப் பறை தருவான்

    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!!

    மார்கழித் திங்கள் – மார்கழி மாதத்திற்கு என்ன ஏற்றம்?

    மார்கழி மாதம் எப்படி இருக்கும்? மாதங்களிலே மார்கழி அதிக உஷ்ணமும் குளிரும் இல்லாமல் இருக்கும்.

    பெருமாள் எப்படி இருப்பான் என்றால் அதிக வெப்பமும் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் இரண்டும் சமநிலையில் இருப்பவனாக இருப்பானம்.

    பெருமாளை ஒரு பெரிய கல்பக விருட்ஷம் (மரம்) என்றால் உயிர்கள் அந்த நிழலில் மகிழ்வாக வாழ்வதற்கு உரிய சூழலைக் கொடுப்பவனாக இருக்கிறான்.

    மாதங்களிலே மார்கழியும் உயிரினங்கள் மகிழ்வாக வாழ ஏற்ற கால நிலையைக் கொண்ட மாதம்.

    பெருமாளைப் போல இரண்டும் சம நிலை கொண்டுள்ள உத்தமமான மாதம்.

    அதனால் தான் பகவானே

    மாஸானாம் மார்கஸீர்ஷோ ஹம்

    மாதங்களிலே மார்கழி நான்

    என்றான்

    அந்த மார்கழி மாதத்தில்,

    மதி நிறைந்த நன்னாள்

    மதி என்றால் சந்திரனை குறிக்கும், புத்தியையும் குறிக்கும்

    குளிர்ச்சியான மதியுடைய நன்னாள்

    இறைவனை வழிபடுவதனால் புத்தியானது குளிர்ந்திருக்கும்

    இப்படி மாதமும், புத்தியும் இறை சிந்தனை நிறைந்து நிற்கும் உத்தமான நேரத்தில் என்ன செய்யவேண்டும்?

    நீராட – முதலிலே நீராட வேண்டும்.

    இங்கு நீராட என்பதற்கு இரண்டு விளக்கம் கொள்ளலாம்!!

    ஒன்று நீராட என்பதன் நேரிடை விளக்கம், இறைவனை வழிபட நோன்பினைத் துவக்கும் முன் நீராடி புறத்தூய்மையோடு புறப்படுவோம் என்பது.

    புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

    வாய்மையால் காணப்படும்

    என்ற வள்ளுவன் வாக்கின்படி புறத்தூய்மையை நீராடிப் பெற்றுக்கொள்ள அழைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

    அடுத்து நீராட என்று பெருமாளின் அனுபவமாகிய தடாகத்தில் நீராட அழைக்கிறாள்

    பெருமாளை ஒரு நீர் நிறைந்த தடாகம் என்று கொண்டால், அந்தத் தடாகத்திலே நாம் இறைவனுடன் கலந்து இறை அனுபவத்தைப் பெறுவதை நீராட என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

    போதுவீர் போதுமினோ

    இறை அனுபவத்திலே ஆழ்ந்து, பகவான் என்றும் தடாகத்திலே நீராட யார் யாரெல்லாம் விரும்புகிறீர்களோ வாருங்கள் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

    பகவானை சேவிக்க பக்தர் குழாமாக சேர்ந்து செல்லவேண்டும். அதனால் விருப்ப முள்ளவர்களை அழைக்கிறார். அதுவும் பவ்யமாக, மார்கழி நீராட விருப்பம் எண்ணம் இருக்கும் யாவரும் வரலாம் என்று அழைக்கிறாள்.

    போதுமீர் போதுமினோ - விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம், கட்டாயமில்லை

    நல்ல விஷயங்களை செய்ய நாலு பேர்களைச் சேர்த்துக்கொண்டு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். தனி ஒருவருக்கே ஒரு ஆலயத்தை எழுப்புகின்ற பொருளாதார வசதி மற்ற அனுகூலங்கள் இருந்தாலும் தம்மோடு மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இப்படி முன்னோர்கள் சொன்னதை தன் பாசுரத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறாள் ஆண்டாள்.

    அதாவது இந்த மார்கழி நீராட்டம், மார்கழி நோன்பிருக்க பக்தி உள்ள எல்லோரும் நோன்பிருக்கலாம், எல்லோருமே உரிமையுள்ளவர்கள், வாருங்கள் நீராடி மார்கழி நோன்பினை ஆரம்பிக்கலாம் என்று அழைக்கிறாள்.

    வேதம் காட்டுகின்ற யஞ்யம் செய்ய, கற்ற ஒருவரை நியமிக்க வேண்டும்.

    ஆனால் ஆண்டாள் சொன்ன மார்கழி நோன்பிற்கு பக்தி மட்டும் போதும் அனைவருமே உரிமையுடையவர்கள் தான்.

    ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் உயர்ந்தவர் அல்ல என்பது கிடையாது கோதை காட்டிய பாதைக்கு. அதனால் தான் இது

    Enjoying the preview?
    Page 1 of 1