Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Junior Tej Page – 2
Junior Tej Page – 2
Junior Tej Page – 2
Ebook128 pages42 minutes

Junior Tej Page – 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“இந்த ஜூனியர் தேஜ் பேஜ் - 2, சிறுகதைத் தொகுப்பு நூலில் 15 சிறுகதைகள் பந்தி விரிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் வேறு வேறு கோணங்களில், வேறு வேறு மனிதர்களின் மாறுபட்டக் கதைக்களமாகக் காணப்படுகிறது.

எல்லாக் கதைகளிலும் மனம் சிலாகிக்கும் சம்பவங்கள் பதிந்து கிடக்கின்றன. நல்ல உயிரோட்டமான எழுத்து நடை, வாசிக்கத் துவங்கினால் அதன் ரசனையில் சட்டென்று கதை முடிந்து விட்டதே என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அற்புதமான கதைகள்.” என்று தன் வாழ்த்துரையில் சொல்கிறார் கலை நன்மணி ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள். வாசிப்பை நேசிக்கும் வாசகப் பெருமக்களே. வாசித்து மகிழுங்களேன்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580172710696
Junior Tej Page – 2

Read more from Junior Tej

Related to Junior Tej Page – 2

Related ebooks

Reviews for Junior Tej Page – 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Junior Tej Page – 2 - Junior Tej

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜூனியர் தேஜ் பேஜ் – 2

    (சிறுகதைகள்)

    Junior Tej Page – 2

    (Short Stories)

    Author:

    ஜூனியர் தேஜ்

    Junior Tej

    For more books

    https://www.pustaka.co.in/home/author/junior-tej

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    1. சோளப் பூ

    2. வேதம் புதுமை செய்

    3. நாணயம்

    4. ‘மணி’விழா

    5. நன்றிக் கடன்

    6. எதிர்வினை

    7. சஸ்பென்ஸ்

    8. இட்லி

    9. ஷெல் ஷாக் (சிறுகதை)

    10. உயர்ந்த மனிதர்கள்

    11. வெயிட் பண்ணுங்க

    12. அப்பா-மகன்

    13. மலர்ந்த முகமே...

    14. கனவு ஊஞ்சல்

    15. நாக்கு

    பெற்றோர்க்குச் சமர்ப்பணம்

    A ஜானகி - V அருணாசலம் (தேஜ்)

    குரு வணக்கம்

    அணிந்துரை

    திரு அசோகன், சென்னை

    ஜூனியர் தேஜ் பேஜ் (2) – சிறுகதைகள் - என்ற நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் முழுவதையும் படித்தேன்.

    ஒவ்வொரு படைப்பையும் படிக்கும்போது, எழுத்தாளர் ஜூனியர் தேஜ் அவர்கள் சமுதாயத்தை எந்த அளவுக்குக் கூர்ந்து, உற்று நோக்கி உள்ளார் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணரமுடிந்தது.

    ஒரு படைப்பாளி, சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும், மனித குணநலன்களையும் கூர்ந்து நோக்கினால்தான், இவ்வாறான மாறுபட்டக் கருக்களைக் கொண்டுப் படைப்புகளை வழங்க இயலும் என்பதற்கு இந்த நூலில் உள்ள கதைகளே சாட்சிகளாக அமைந்துள்ளன.

    பல கதைகள், நெஞ்சை நெகிழச் செய்தன.

    தள்ளுவண்டியில் ‘பாப்கார்ன்’ பொறித்து விற்கும் இளைஞனுக்கும், பூ விற்கும் பூவைக்கும் இடையே உருவாகி, வளர்ந்த யதார்த்தமான காதலை முதல் கதையான ‘சோளப்பூ’ என்ற சிறுகதையின் கதைக்கருவும், கதையின் நடையும் மனதைக் கொள்ளைக் கொண்டன.

    ‘பத்து ரூபாய் நாணயம்’ படும் பாட்டை நாமெல்லாம் நன்கு அறிவோம். அதைக் கருவாக எடுத்துக்கொண்டு, ‘நாணயம்’ என்ற விழிப்புணர்வுக் கதையை எழுதிய விதம் நிச்சயம் படிப்போர்க்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கும் விதத்தில் அமைத்திருப்பது சிறப்பு.

    ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் விதியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட ‘எதிர்வினை’ என்ற சிறுகதை சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் அமைந்துள்ளது.

    ஒருவரைக் காக்க வைப்பது, அவர் மனதில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ‘வெயிட் பண்ணுங்க...’ - என்ற சிறுகதை எடுத்து சொல்கிறது.

    ‘மலர்ந்த முகமே!’ - என்ற சிறுகதை, நம் தமிழ் நாட்டின் பண்பை எதிரொலிக்கிறது. படிப்பை விடப் பண்புதான் முக்கியமென்று ஒரு பெண், தன் வாழ்க்கைத் துணைவரைத் தீர்மானிப்பது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    பணிவாக நடப்பதும் நம்மை மற்றவர்கள் எவ்வாறு எடை போடுகிறார்கள் என்பதையும், ‘நாக்கு’ என்ற சிறுகதையின் கதைமாந்தர்கள் வாயிலாக வெளிப்படுத்துவது சிறப்பினும் சிறப்பு.

    எழுத்தாளர் திரு ஜூனியர் தேஜ் அவர்கள் மேலும் மேலும் பலப் பல புத்தகங்கள் வெளியிட்டு, இலக்கிய வானில் ஓர் நட்சத்திரமாகப் பிரகாசிக்கவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    -கே. அசோகன், சென்னை

    வாழ்த்துரை

    எஸ் ராமன், சென்னை

    எழுத்து வித்தகரான ‘சாவி’ அவர்களின் பிரத்தியேக கவனத்தை ஈர்த்த எழுத்துகளின் சொந்தக்காரரான ‘ஜூனியர் தேஜ்’ என்ற படைப்பாளியின் படைப்புகளின் பரம ரசிகன் என்கிற முறையில், ‘ஜூனியர் தேஜ் பேஜ் – 2 ‘ என்ற தலைப்பிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

    வித்தியாசமான பெயரை போலவே, இவருடைய ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமாகவே இருக்கும் என்பது, அவருடைய எழுத்துகளை பின் தொடரும் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு நன்கு புரியும்.

    சிறுகதை என்பது, நாம் சார்ந்திருக்கும் சமுதாயம் சார்ந்த வெளிப்பாடுகள்தான்.

    சமூக நிகழ்வுகளை, மனித மனங்களின் உணர்வுகளை, மாறுபட்ட சிந்தனைகளை காட்சிப்படுத்தும் சாதனம்தான் சிறுகதைகள்.

    அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் நம்மில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, இந்த தொகுப்புச் சிப்பிக்குள் அடங்கியிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் அமைந்திருப்பது மிக சிறப்பு.

    ஒவ்வொரு சிறுகதையை படிக்கும்போதும், ‘இது போன்ற நிகழ்வுகளை நாமும் கடந்து வந்திருக்கிறோம்...’ - என்ற உணர்வு அலைகள், வாசகனின் மனதில் நிச்சயம் எழும்.

    மண், பொன்னை விட, மனித நேயம் என்ற ‘ஆபரணம்’ தான் மனித வாழ்க்கைக்குத் தேவை என்ற கருத்தை பரப்பும் இந்த சிறுகதைகளை படிப்பவர்ளை பாக்கியசாலிகள் என்று சொல்ல தோன்றுகிறது.

    மேன்மேலும் பல புதுமையான சாதனைகளை செய்து, எழுத்து வானில், சிறகு விரித்து பறந்து, உயரம் தொட, படைப்பாளி ‘ஜூனியர் தேஜ்’ அவர்களை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறேன்.

    எஸ்.ராமன் Bsc.CAIIB,

    சென்னை

    வாழ்த்துரை

    கலை நன்மணி திரு ஐரேனிபுரம் பால்ராசய்யா

    வாழ்க்கையின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு என்பது சிறுகதை இலக்கியம்.

    சிறுகதைகள் மனித வாழ்வில் இருந்தே உருவாகிறது. சாமானிய மனிதர்களின் அனுபவங்களும், எண்ணங்களும், வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வமும், கற்பனைத் திறமும் சிறுகதைகளாக விரியும்போது, வாசிப்பவர்களை இன்ப வெள்ளத்தில் இழுத்துச் செல்வதும், அறிவுரை வழங்கி ஆழமாகச் சிந்திக்க வைப்பதும் சிறுகதைகள்தான்.

    நல்லத் தரமானச் சிறுகதைகளை வாசிக்கிறபோது, மனிதப் பண்புகள் மெருகேறி இருப்பதையும்; கதை மாந்தர்களின் வாழ்வியலை வாசிக்கிறபோது நல்ல படிப்பினையும் நமக்குக் கிடைத்து விடுகிறது. ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை அனைத்தும், படைப்பிலக்கியம் ஆகிறபோது வாசகர்களின் மன ஓட்டத்தை மாற்றி அமைக்கிறது. சிறுகதையின் கற்பனை ஆற்றல், சொல்நயம், தெளிந்த நடை, மனித சமூகத்தை நல்வழிப்படுத்துகிறது.

    ஜூனியர் தேஜ் அவர்களின் அத்தனை சிறுகதைகளின் கருப்பொருட்கள் மிக

    Enjoying the preview?
    Page 1 of 1