Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil
Vaanavil
Vaanavil
Ebook145 pages54 minutes

Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வானவில் தொகுப்பில் 'வானவில்' கதையை ஒரு கவிதைத் தனமான வரிகளால் கோர்திருப்பேன். சத்யாவின் குழந்தை மனசு என்னையும் வானவில்லை ரசிக்க வைத்தது. 'அன்னம்மா' நெகிழ வைக்கிறார். அவர் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? கேள்விக்குறிக்கு விடை இல்லை. 'இது யாரு பெத்த தங்கம்' பாக்கியவதியும் குழந்தையான நாள்கள் அவை. நாமும் குழந்தையின் அழுகை ஒலி, சிரிப்பொலி கேட்கின்றோம் வாசிக்கையில். குழந்தையைக் கடத்தியவர் யார்? 'கருவினை சுமந்தவர் ' முடிவு என்ன? 'வலை'யில் யாரும் சிக்காமல் இருக்கவேண்டும். வாழ்க்கையை மிகவும் கவனமாக வாழவேண்டும். அத்தனை கதைகளிலும் ஏதோ ஒன்று இதயத்தில் பதியம் போடுகிறது.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580177910961
Vaanavil

Related to Vaanavil

Related ebooks

Reviews for Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil - Senthilkumar Amirthalingam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானவில்

    (சிறுகதைகள்)

    Vaanavil

    (Sirukadhaigal)

    Author:

    செந்தில்குமார் அமிர்தலிங்கம்

    Senthilkumar Amirthalingam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/senthilkumar-amirthalingam

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    என்னுரை

    வானவில்

    அன்னம்மா

    இது யாரு பெத்தத் தங்கம்?

    கருவினை சுமந்தவர்

    பேச்சி

    தெப்பக்குளத்து மீன்கள்

    வலை

    கடல்

    கிறுக்கன்

    கோகிலா டீக்கட

    பட்டுச்சேலை

    வைராக்கியம்

    பூ வேலை செய்த கதவுகள்

    மிருகபானம்

    வாழ்த்துரை

    முதலில் வேகமாய் ஒரு புரட்டுப் புரட்டியபோதே தெரிந்துவிட்டது ‘இந்த எழுத்தாளரிடம் விஷயம் இருக்கிறது’ என்று.

    133 பக்கங்களில் செந்தில்குமார் அமிர்தலிங்கம் எழுதியிருந்த அத்தனை கதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

    கதைகளின் அழகான முடிவுகள் என்னைக் கவர்ந்தன. முன்பெல்லாம் நாங்கள் கதைகள் எழுதும்போது ஒரு விஷயத்தைச் சற்றும் மறக்க மாட்டோம். கதைகள் யார் மனசிலும் விஷத்தை விதைத்துவிடக் கூடாது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’... நல்லவன் வாழ்வான். இதுதான் அனைத்துக் கதைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்போம்.

    இப்போதெல்லாம் பலர் இவ்வாறு நினைக்கவில்லையே என்ற குறை இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் நீங்கி மனசெங்கும் மகிழ்ச்சி பரவியது.

    இது தவிர இன்னொரு விஷயத்துக்காகவும் இவரைப் பாராட்டியே தீர வேண்டும். எழுத்தில் மிகுந்த கண்ணியம் காத்திருப்பது இவர் மேலிருந்த மரியாதையைக் கூட்டியது.

    முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் கிரிக்கெட் வீரரைப்போல் ‘வானவில்’ கதையிலேயே மனதைக் கொள்ளை கொண்டுவிட்டீர்கள் செந்தில்ஜி.

    கதைகளைச் சோகமாக முடித்தால்தான் அது நல்ல முடிவு என்று சிலர் நினைக்கையில், சுப முடிவுகள் கொடுத்திருக்கிறார். இவர் என் ஜாதி என்று சந்தோஷம் ஏற்பட்டது.

    கடைசி வரை சஸ்பென்ஸ்ஸைக் காப்பாற்றியிருக்கிறார் சில கதைகளில். உதாரணம் ‘கிறுக்கன்’ மற்றும் ‘வைராக்கியம்’.

    அன்னம்மா கதை மனசில் ஒட்டிக்கொண்டது. அவரின் செயல் அவரை வணங்குமளவுக்கு உயர்த்திவிட்டது.

    இது யாரு பெத்த தங்கம்? கதை இயல்பான நீரோட்டமாகப் போய்... கடைசியில் பளிச்சென்று முடிந்திருக்கிறது. வலிந்து புகுத்திய முடிவாக இல்லாமல் தன்னிச்சையாய் முடிந்திருப்பது அருமை.

    இந்தக் கதை உள்படப் பல கதைகளில் மிக நுட்பமான உணர்வுகளை எழுதியிருப்பது இவரைப் பாராட்ட வைக்கிறது. ஓரளவாவது அனுபவித்திருந்தால்தான் அதை அவ்வளவு துல்லியமாக எழுத முடியும். உதாரணம்… ‘இது யாரு பெத்தத்தங்கம்?’ கருவினைச் சுமந்தவர் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

    இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதையாகக் கருவினைச் சுமந்தவர் கதையைச் சொல்வேன். முதலில் ஏதோ சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணிக் கடத்தல் கதைதான் என்று நினைத்தேன். எனினும் ஏன் இந்தக் தலைப்பு என்ற சந்தேகம் மட்டும் ஒரு பக்கம் இருந்தது. சாட்டையடி அறிவுரை. (இவரது பல கதைகள் நேரடியாக வளவளவென்று அட்வைஸ் கொடுக்காமல் உள்ளர்த்தமாகப் பின்னிப்பிணைந்த அறிவுரைகள் வைத்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கும் பாணி)

    மிக முக்கியமான சிறப்பாகச் சொல்ல வேண்டியது இம்மியளவும் ஆபாசம் கலக்காத இவரது எழுத்து பாணி. பெண்கள் முகம் சுளிக்க மாட்டார்கள். வயசாளிகள் படித்து ரசித்துப் பாராட்டி ஆசீர்வதிப்பார்கள்.

    குறிப்பாய்ப் பாராட்ட வேண்டிய கதை ஒன்று இந்தத் தொகுப்பில் உள்ளது. அது… ‘பட்டுச்சேலை’. இதயங்களின் மெல்லிய எண்ண ஓட்டங்களையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் ‘ஊடும் பாவுமாகப்’ பின்னிவிட்டார் பின்னி. மோகன் நெய்யும் பட்டுச் சேலையின் கௌரவத்தை உயர்த்திவிட்டார்.

    இவர் தேர்ந்த எழுத்தாளர் மட்டுமின்றித் தேர்ந்த வாசகரும்கூட என்று நிறுவியது வண்ணதாசனின், ‘கனியான பின்னும் நுனியில் பூ ‘ சிறுகதையைக் குறிப்பிட்டிருந்த விதம்.

    பின் வரும் வரிகள் நான் ரசித்தவை:-

    //அவனுக்கு சொத்தென இருப்பது ஊருக்கு ஒதுக்குப்புரத்து ஓலைக்குடிசை, அது ஓட்டைக்குடிசை, இரண்டு அலுமினியத்தட்டு, ஒரு பானை, சில கந்தல்துணிகள், ஒரு சாக்குப்பை அதில் கரித்துண்டுகள் கொஞ்சம், வண்ண சாக்பீஸ் துண்டுகள் கொஞ்சம், இறந்து போன மனைவியின் புகைப்படம் ஒன்று, அவள் அழகாய் பெற்றுப்போட்ட சத்யா எனும் ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, கிழிந்த பாய் ஒன்று, மெலிந்த நாய் ஒன்று-//

    //குயில்களின் நாதம் மட்டுமல்ல அவன் குழந்தையின் பாதமும்-//

    //இயற்கைத் தீட்டிய ஓவியம்//

    வித்யாவின் கண்களைப்போன்ற கருப்பு திராட்சைப் பழங்களும்-//

    //வீட்டுச் சுவர்களில் எல்லாம் அந்த குட்டி தேவதையின் அழுகைச் சத்தமும், சிரிப்புச் சத்தமும் ஒலித்தது.//

    //கிறிஸ்துவின் கிருபையாலும், முருகனின் அருளாலும்// என்ற வரியைப் படித்துவிட்டு ‘சபாஷ்’ என்று கைதட்டினேன்.

    கடைசிக் கதையின் தலைப்புக்கே நூறு மார்க் கொடுக்கலாம். ‘மிருகபானம்’. தலைப்பு யோசித்த விதத்தைப் பாராட்டியே தீரவேண்டும்.

    செந்தில்குமார் அமிர்தலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வளவு அருமையான கதைகள் எழுதியிருக்கும் நீங்கள் கட்டாயம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பரிசுகள் வெல்வீர்கள். உறுதி.

    வைரத்தைப் பட்டை தீட்டுவது போல் வாக்கியங்களுக்கு பாலீஷ் போட்டிருக்கிறீர்கள். கதைகளை யோசிக்கவும் கதைகரு உருவாக்கவும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்.

    இது போல் மேலும் மேலும் நிறைய எழுதுங்கள். இது போன்ற எழுத்தெல்லாம் விஷம் கலக்காத அமுத பானங்கள். பெண்களைக் கவரக்கூடிய இதே வகை கண்ணிய எழுத்தை உங்களின் தொண்ணூற்றி இரண்டு வயசு வரைக்கும் தொடருங்கள்.

    ஏதோ வாழ்த்துரை எழுதச் சொல்கிறாரே என்பதற்காக ஏனோதானோவென்று படிக்காமல் முழுமையாய்ப் படித்தேன். அதற்குக் காரணம் என் அக்கறை அல்ல... இவருடைய எழுத்தாற்றல்.

    மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    அன்புடன்

    வேதா கோபாலன்

    வாழ்த்துரை

    ‘எதை வாசிப்பது’ என்கிற கேள்விக்கு ஒவ்வொருவரின் பதில் வித்தியாசமாய் இருக்கும்.

    ‘வாசித்து வைத்தபின்னும் மனதை விட்டு நீங்காத ஒன்று என்றால் வரவேற்பேன்’ இப்படிப் பலர் சொல்வார்கள். அதாவது வாசிப்பில் திளைத்து வாழ்நாளில் ஒரு பகுதி நேரத்தைப் படிப்பதில் செலவழிப்பவர்கள்.

    ‘புத்தகம் படிக்காமல் என்னால் இருக்க இயலாது’ என்று தலைநிமிர்த்திப் பெருமையோடு பிரகடனப்படுத்துவார்கள்.

    படைப்பாளிகளின் உயிர்நாடி இம்மாதிரி வாசகர்கள்தான். எழுத்தாளனைத் துடிப்போடு இயங்க வைக்கும் இவர்கள் எழுத இடைவெளி விடும்போது ‘படித்து ரொம்ப நாளாச்சே. எதுவும் எழுதலியா’ என்று ஆர்வமாய் அக்கறையாய் விசாரிக்கவும் செய்வார்கள்.

    முதலில் கதையைப் படிப்பவர்கள் எழுதியது யார் என்று கவனிப்பார்கள். அதே எழுத்தாளர் எழுதிய அடுத்தடுத்த கதைகளினால் ஈர்க்கப்படும்போது வாசக மனதில் ஆசனம் கிட்டி விடுகிறது அந்தப் படைப்பாளிக்கு.

    ‘பூ வேலை செய்த கதவுகள்’ இத்தொகுப்பில் ஒரு கதை. வீட்டுக்குக் கதவு செய்ய இழுத்தடிக்கும் நபர், அவர் மீது எரிச்சலாகும் மகன், சாந்தமாய் அப்பா, கதை முடிவில் நமக்குக் கிட்டும் செய்தி இதுதான் செந்தில்குமாரின் எழுத்து நேர்த்தி.

    இப்படி ஒவ்வொரு கதையிலும் வலியத் திணிக்காத யதார்த்த நிகழ்வுகள், இயல்பான பேச்சு என்று மெல்ல மெல்ல பரிணமிக்கிறார்.

    செந்தில்குமார் எழுத்து வானில் இப்போது ஜொலிக்கும் நம்பிக்கை நட்சத்திரம்.வானவில் சிறுகதைத் தொகுப்பு அவருக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகளின் அணிவகுப்பு.

    நல்வாழ்த்துகள்.

    ரிஷபன்

    என்னுரை

    நமது குழந்தையை எடுத்துத் தூக்கி கொஞ்சுகிற போது கிடைக்கின்ற சுகம், ஆனந்தம், பேரானந்தம் எல்லாம் எள்ளளவும் குறையாமல் கிடைக்கிறது நாம் எழுதி, உருவாக்கிய புத்தகத்தைத் தடவி எடுத்து அணைத்துப் புரட்டிப் படித்துப் பார்க்கையில்.

    அதிலும் நம் படைப்பை அதே படைப்புலகில் அனுபவசாலியாக இருப்பவர்கள் பாராட்டி, சிலாகித்து எழுதுகையில்,

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்.

    போல புல்லரித்துப் பேச நா எழாமல் ஸ்தம்பிக்கச் செய்துவிடுகிறது.

    அப்படித்தான் இந்தத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகள் வழங்கிய வேதாம்மாவும் சரி, ரிஷபன் அண்ணாவும் சரி என்னைத் திக்கு முக்காட வைத்துவிட்டனர். ஆனந்தக் கண்ணீரால் நனைய வைத்துவிட்டனர்.

    என்னை விடவும் அதிகமாய் அந்தக் கதைகளை ரசித்து, ரசித்து வாசித்துள்ளனர்.

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் என்று அவர்கள் ஒற்றை வரியில் வாழ்த்து தெரிவித்திருந்தாலே அகமகிழ்ந்து உளம்குளிர்ந்து போயிருப்பேன். ஆனால் இவ்வளவு விவரிப்புகளுடன் எழுதி எனக்கு மகிழ்ச்சியின் எல்லையைக் காட்டி விட்டார்கள்.அவர்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது.

    இந்தக் கதைகளை வாசித்து என்னை உற்சாகப்படுத்தி மேலும் பலப்பல நல்ல கதைகளை எழுதுவதற்கு என்னை தயார்படுத்த இருக்கின்ற தங்களுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1