Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

O! Pakkangal - Part 2
O! Pakkangal - Part 2
O! Pakkangal - Part 2
Ebook288 pages1 hour

O! Pakkangal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களைக் கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இது வரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.
இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.
தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.
வாசகர்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான விமர்சனமும், உற்சாகமான ஆமோதிப்பும் மட்டும் இல்லையென்றால் தமிழ்ச் சூழலில் என்னைப் போன்ற கட்டுரையாளன் சீக்கிரமே நொந்து நூலாகிக் காணாமற்போய்விடுவான்.
ஏனென்றால் இங்கே அரசியல் என்பது ஒரு பிரச்னையில் இருவேறு அல்லது பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படும் களமாக இல்லை. அந்தத் தலைவர் கருத்தைச் சரியென்று சொன்னால் நீ இந்தத் தலைவரின் எதிரி, இவர் கருத்தை ஆதரித்தால், நீ அவருடைய எதிரி. இரண்டில் ஒரு பக்கம்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். வேறு எதுவாக இருந்தாலும் உனக்கு முத்திரை குத்தி உள் நோக்கம் கற்பிப்போம் என்று அருவெறுக்கத்தக்க அரசியல் இங்கே நடத்தப்படுகிறது.
கலாசாரத் துறையின் போலித்தனங்களோ பட்டியலிட்டுத் தீராது. இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயில் முதலிடத்தில் இருந்தாலும், செக்ஸ் பற்றி இளைஞர்களுடன் விவாதிப்பது கெட்ட காரியமாகத் திட்டப்படும். கிளுகிளுப்பூட்டி காசு சம்பாதிக்க செக்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அறிவூட்டக் கூடாது.
எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று நம்பப்படுகிற ஆன்மிகத் துறை போலித்தனங்களில் இதர துறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. எத்தனை போலி சாமியார்களும் குருமார்களும் அம்பலப்பட்டாலும், மதங்களும் அவற்றின் நடைமுறைகளும் மேலெழுந்தவாரியாகக் கூட விமர்சிக்கப் படுவதில்லை. சிறு முணுமுணுப்புகள் கூட பெரும் கண்டனங்களாகக் காட்டப்படும்.
இப்படிப்பட்ட சூழலில் மக்கள் சார்பும் மனித நேயமும் உடையவர்கள் கறாராக இருந்தால்தான் சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படமுடியும். கறாராக இருப்பதை முரட்டுத்தனம் என்று சித்திரித்து திசை திருப்புவதும் ஒரு சதிதான்.
இவன் கறாரானவனே தவிர முரடன் அல்ல என்று உணர்ந்து தொடர்ந்து என்னிடம் அன்பு காட்டி வரும் விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. சமூகத்துக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடனாகவே என் எல்லா எழுத்தையும் கருதுகிறேன்.
சென்னை , ஜனவரி 2007.
- ஞாநி
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580121205843
O! Pakkangal - Part 2

Read more from Gnani

Related to O! Pakkangal - Part 2

Related ebooks

Reviews for O! Pakkangal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    O! Pakkangal - Part 2 - Gnani

    http://www.pustaka.co.in

    ஓ! பக்கங்கள்

    பாகம் – 2

    O! Pakkangal

    Part 2

    Author:

    ஞாநி

    Gnani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gnani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு நாயகன் உருவாகிறான்!

    2. ஆயிரம் பொய் சொல்லி...

    3. தே.மு. தே.பி!

    4. ஏன் ஓட்டு போட வேண்டும்? ஏன் ஓட்டு போடக் கூடாது?

    5. தேர்தல் டைரிகுறிப்பு

    6. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்!

    7. ஏசுவின் மனைவி இவளா?

    8. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!

    9. ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

    10. 17 வருட பரபரப்பு?!

    11. சில தவறுகள்... சில பாடங்கள்!

    12. எரிபொருள் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

    13. கலைஞருக்கு சவால்விடும் கண்டதேவி!

    14. பின்தொடரும் நிழலின் குரல்!

    15. அசுத்தமானவளா பெண்?!

    16. முதுகெலும்பு முறிவதில்லை!

    17. அன்பெனும் அடைக்கும் தாழ்!

    18. ஒளிவதற்கு இடமில்லை!

    19. குழந்தைக்குப் பாலூட்டினால் அம்மாவுக்குத் தங்க வளையல்?!

    20. சட்டசபையில் ‘ருசிகர’ சம்பவம்?!

    21. சில கேள்விகள்!

    22. மனைவி, துணைவி என்ன வித்தியாசம்?

    23. சிக்குன்குனியாவுக்கு யார் பொறுப்பு?

    24. திரைப்படம்... திட்டம்... தீர்ப்பு…!

    25. அன்றே சொன்னார் அண்ணா!

    26. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

    27. தாதா கண்ணில் காந்தி

    28. சர்ச்சைக்குரிய உறவுகள்!

    29. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

    30. வாக்காளப் பெருமக்களே... வாக்குகளை நாங்களே போடுவோம்!

    31. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

    32. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

    33. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

    34. ஒழுக்க விதிகள் மாறலாம்!

    35. விண்ணிலிருந்து மண்ணுக்கு..!

    36. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்!

    37. புரசைவாக்கம் பாபுவும் சதாம் ஹுசேனும் நாமும்!

    38. கவலைகள் ஓய்வதில்லை!

    39. பணமா? மனமா?

    40. பதில்களைத் தேடும் கேள்விகள்!

    41. அடுத்த ஜனாதிபதி?!

    42. பாரதி 125

    43. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்?

    மக்கள் சார்பும் மனிதநேயமும் முக்கியம்

    அரசியல், கலாசாரம் பற்றிய என் விமர்சனக் கருத்துக்களைக் கடந்த முப்பதாண்டுகளில் வெவ்வேறு பத்திரிகைகளில் நான் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன் என்றாலும், ‘ஓ’ பக்கங்கள் வாசகர்களை சென்றடைந்ததைப் போல இது வரை வேறு எதுவும் சென்றடையவில்லை. இதற்குக் காரணம் ஆனந்த விகடன்தான். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலும் இருக்கும் தமிழ் வாசகர்களிடமும் என் கருத்துக்களை சென்று சேர்ப்பித்திருக்கிறது விகடன்.

    இந்த நல்வாய்ப்புக்கு முழு காரணமானவர்கள் மூவர். என் கருத்துக்களால் கலவரமடைந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களும் கலாசாரக் காவலர்களும் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தியபோதும், அவற்றால் சலனமடையாமல் ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையில் தனக்குள்ள உறுதியுடன் எனக்குத் தொடர்ந்து விகடனில் இடம் அளித்துவரும் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை பொது நாகரீகத்துக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கும் ஆசிரியர் அசோகன், பொழுதுபோக்கு அம்சங்களில் மட்டுமன்றி சமூக விமர்சனப் பணியை எப்படிச் செய்கிறது என்பதில்தான் இதழியலின் மரியாதையே அடங்கியிருக்கிறது என்று ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நிர்வாக ஆசிரியர் இரா.கண்ணன் ஆகிய அந்த மூவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

    தொலைபேசி, கடிதங்கள் வாயிலாக என்னுடன் ‘ஓ’ பக்கங்களைத் தொடர்ந்து விவாதிக்கும், எனக்கு முகம் தெரியாத வாசகர்களுக்கும், தெருவிலும் டீக்கடைகளிலும் ஓட்டல்களிலும் என்னைப் பார்த்த உடன் உரிமையுடன் நிறுத்தி அந்த வாரக் கட்டுரையை அலசும் வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் அக்கறைதான் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கிறது.

    வாசகர்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான விமர்சனமும், உற்சாகமான ஆமோதிப்பும் மட்டும் இல்லையென்றால் தமிழ்ச் சூழலில் என்னைப் போன்ற கட்டுரையாளன் சீக்கிரமே நொந்து நூலாகிக் காணாமற்போய்விடுவான்.

    ஏனென்றால் இங்கே அரசியல் என்பது ஒரு பிரச்னையில் இருவேறு அல்லது பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்படும் களமாக இல்லை. அந்தத் தலைவர் கருத்தைச் சரியென்று சொன்னால் நீ இந்தத் தலைவரின் எதிரி, இவர் கருத்தை ஆதரித்தால், நீ அவருடைய எதிரி. இரண்டில் ஒரு பக்கம்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். வேறு எதுவாக இருந்தாலும் உனக்கு முத்திரை குத்தி உள் நோக்கம் கற்பிப்போம் என்று அருவெறுக்கத்தக்க அரசியல் இங்கே நடத்தப்படுகிறது.

    கலாசாரத் துறையின் போலித்தனங்களோ பட்டியலிட்டுத் தீராது. இந்தியாவிலேயே எய்ட்ஸ் நோயில் முதலிடத்தில் இருந்தாலும், செக்ஸ் பற்றி இளைஞர்களுடன் விவாதிப்பது கெட்ட காரியமாகத் திட்டப்படும். கிளுகிளுப்பூட்டி காசு சம்பாதிக்க செக்ஸை பயன்படுத்தலாம். ஆனால் அறிவூட்டக் கூடாது.

    எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று நம்பப்படுகிற ஆன்மிகத் துறை போலித்தனங்களில் இதர துறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. எத்தனை போலி சாமியார்களும் குருமார்களும் அம்பலப்பட்டாலும், மதங்களும் அவற்றின் நடைமுறைகளும் மேலெழுந்தவாரியாகக் கூட விமர்சிக்கப் படுவதில்லை. சிறு முணுமுணுப்புகள் கூட பெரும் கண்டனங்களாகக் காட்டப்படும்.

    இப்படிப்பட்ட சூழலில் மக்கள் சார்பும் மனித நேயமும் உடையவர்கள் கறாராக இருந்தால்தான் சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படமுடியும். கறாராக இருப்பதை முரட்டுத்தனம் என்று சித்திரித்து திசை திருப்புவதும் ஒரு சதிதான்.

    இவன் கறாரானவனே தவிர முரடன் அல்ல என்று உணர்ந்து தொடர்ந்து என்னிடம் அன்பு காட்டி வரும் விகடனுக்கும் வாசகர்களுக்கும் நன்றி. சமூகத்துக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடனாகவே என் எல்லா எழுத்தையும் கருதுகிறேன்.

    சென்னை, ஜனவரி 2007.

    - ஞாநி

    1. ஒரு நாயகன் உருவாகிறான்!

    நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையை மையமாக வைத்து மேதா பட்கர் நடத்திவந்த உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சற்றே ஓய்ந்திருக்கிறது. மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் தலையீட்டை அடுத்துத் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்கிறார் மேதா பட்கர். அதேசமயம், இந்த விவகாரம் வேறொரு பக்கம், வேறொரு ரூபத்தில் வெடித்து, மறுபடியும் பரபரப்புக்கு ரூட் போட்டிருக்கிறது. இப்போதைய விவகாரத்தின் நாயகன்... பிரபல இந்தி நடிகர் அமீர்கான்!

    அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் மறுபடியும் அணையின் உயரத்தை உயர்த்துவதை எதிர்த்துதான் மேதா பட்கர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். டெல்லியில் அவர் நடத்திய போராட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன. அவர்களில் ஒருவராக அமீர்கானும் தன் ஆதரவை தெரிவித்தார். நேரடியாக மேதாவைச் சந்தித்து, தன் ஆதரவைத் தெரிவித்தார்.

    அப்போது, நர்மதைப் பகுதி மக்களின் ஜீவாதார உரிமையை ஆதரிக்கும் அமீர்கான், நாட்டின் பல கிராமங்களில் நிலத்தடி நீரைக் கொள்ளையடித்து வரும் கோக் கம்பெனியின் விளம்பர படங்களில் மட்டும் நடிப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று விமர்சித்துப் பேசினார், நர்மதைப் போராட்டக் குழு ஆதரவாளரான எழுத்தாளர் அருந்ததி ராய்.

    பின்னர் இதுபற்றி அமீரிடம் நிருபர்கள் கேட்டதும், எனக்கு விவரங்கள் தெரியாது. கோக் கம்பெனியிடம் இதுபற்றி பேசுவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதையடுத்து, இந்த விவகாரம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    கோக் கம்பெனியிடம் நான் பேசுவேன் என்று அமீர் சொன்ன அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்த கம்பெனியின் அதிகாரிகள் முந்திக்கொண்டு, இது பற்றி பேச அமீரிடம் நேரம் கேட்டிருக்கிறார்கள்.

    இப்படி கோக் கம்பெனி அவசரம் காட்டுவது பற்றி சமுதாய ஆர்வலர்கள் சிலர் பேசும்போது, நிலத்தடி நீரை கோக் கம்பெனி பயன்படுத்துவது தொடர்பாகத் தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக அவர்கள் அவசரப்படவில்லை. கோக்கின் விளம்பர முகமாக இருக்கும் அமீர்கான், பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது, கோக் கம்பெனியின் இமேஜையும் சேர்த்தே பாதிக்கும் என்பதால், இதெல்லாம் விளம்பர ஒப்பந்தத்துக்கு விரோதமானது என்பதுபற்றி பேசவே அவசரம் காட்டுகிறார்கள் என்கிறார்கள்.

    ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கொள்கையில் உறுதியாக நிற்க அமீர் தயாராக இருப்பதாகவே தோன்றுகிறது. "நிலத்தடி நீரை கோக் கம்பெனியின் நடவடிக்கைகள் பாதிக்கின்றன என்பது உண்மை என்றால், கோக் விளம்பரத்திலிருந்து விலகிக்கொள்ள அவர் தயாராகவே இருக்கிறார்’ என்கிறார்கள் அமீர்பற்றி அறிந்தவர்கள்.

    மேதாபட்கருக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, அணை திட்ட ஆதரவாளர்களான குஜராத் பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியினரும்கூட அமீரின் உருவ பொம்மையைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமீரின் படமான ‘ரங் தே பசந்தி’ குஜராத்தின் பல தியேட்டர்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தக் கொட்டகைகள் முன்னரும் மறியல்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மே மாத மத்தியில் அமீரின் புதுப் படம் ‘ஃபனா’ ரிலீஸாக இருக்கிறது. ‘ரங் தே பசந்தி’யில் சமூகப் பிரச்சனைக்காகப் போராடும் இளைஞனாக பாசிட்டிவ் பாத்திரத்தில் நடித்த அமீர், ‘ஃபனா படத்தில் காஷ்மீர தீவிரவாதியாக ‘நெகட்டிவ்’ பாத்திரத்தில் நடித்திருக்கிறார். குஜராத்தில் இந்தப் படமும் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.

    படங்கள் பற்றியோ, கோக் வருமானம் பற்றியோ அமீர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தன் உருவபொம்மையைக் கொளுத்தி, பட சுவரொட்டிகளை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தது குறித்துதான் கவலை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் கிரியா ஊக்கிகளாக செயல்படும் குஜராத் அரசியல்வாதிகளைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

    ‘‘ஏழைகள் நலனுக்காக அரசியல் செய்வதாக சொல்லித் தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்கிற இவர்கள், உண்மையில் நர்மதை அணையால் பாதிக்கப்படும் ஏழைகள் பிரச்சனை பற்றி பேசினால் ரவுடித்தனம் செய்கிறார்கள். இதை இளைஞர்கள் மனதில் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்" என்று சூடாகவே பேசியிருக்கிறார் அமீர். இந்தப் பேச்சு, வட இந்தியாவில் அமீர்கானின் இமேஜை மேலும் கூடச் செய்திருக்கிறது.

    கோக் விளம்பரம் தொடர்பாக அமீரை கண்டித்துப் பேசியிருந்த எழுத்தாளர் அருந்ததி ராய், இப்போது அமீரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். அமைதியாகப் போராடும் மேதா பட்கரின் நர்மதா பச்சாவ் ஆந்தோலன்’ அமைப்புக்கு எதிராக வன்முறைப் போராட்டம் செய்யும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை துணிச்சலாகக் கண்டித்திருப்பது அமீர்கான் ஒருவர்தான்" என்று புகழ்ந்திருக்கிறார் அருந்ததி ராய்.

    கோக் போன்ற பன்னாட்டு நிறுவனப் பொருட்களுக்கு விளம்பர மாடல்களாக இருக்கும் பிரபல நட்சத்திரங்கள், அமீர்கான் போல சர்ச்சைக்குரியப் பிரச்சனைகளில் மௌனமாக இருப்பதுதான் வழக்கம். இல்லாவிட்டால், ஒப்பந்தம் முறிக்கப்பட்டுவிடும். தங்களின் வருமானம் போய்விடும். சர்ச்சைகளில் கருத்துத் தெரிவிக்கும் நட்சத்திரங்களை விளம்பர கம்பெனிகளும் பயன்படுத்துவதில்லை.

    நடிகர்கள் பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு கருத்துத் தெரிவிப்பது, உலகம் முழுக்கவே வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அது பிரச்சனையாகும் போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிக்கல் வந்துவிடுகிறது.

    ஹாலிவுட் நடிகர் சீன் பென், இராக் யுத்தத்துக்கு சற்று முன்பாக சதாம் ஹுசேனை சந்திக்கச் சென்றது சர்ச்சையாயிற்று. டேனி குளோவர் என்ற நடிகர், கியூபா அதிபர் காஸ்ட்ரோவை ஆதரிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டார். அதுவும் சர்ச்சைக்குள்ளானது. தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் குஷ்புவை மையம் கொண்டு எழுந்த ‘கற்பு’ சர்ச்சையின்போது குஷ்புவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தார் அமீர்.

    இப்போது குஜராத்தில் அமீருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் விளம்பர கம்பெனிகளுக்கு கவலை தந்த அம்சம், ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘அமீரின் படத்தை மட்டுமல்ல, அமீர் விளம்பரப்படுத்தும் பொருட்களான கோக், டொயோட்டா, டைட்டன் ஆகியவற்றையும் புறக்கணிப்போம்’ என்று அறிக்கைவிட்டிருப்பதுதான்.

    விளம்பர மாடல் என்பதற்காக ஆறு கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருக்கிறது அமீர்கானுக்கு. அந்த ஆறு கோடியை கொள்கைப் பிரச்சனையில் பணயம் வைத்ததின் மூலம், உண்மையிலேயே உயர்ந்த மனிதராகத்தான் நிற்கிறார் அமீர்!

    பின்குறிப்பு:

    இந்தக் கட்டுரை வெளியான சில மாதங்கள் கழித்து அமீர்கான், ‘கோகோ கோலாவில் எந்த நச்சுப்பொருளும் இல்லை. என்னைப் போல் மற்றவர்களும் அதைத் தைரியமாகக் குடிக்கலாம்’ என்று கூறி விளம்பரத்தில் தோன்றினார்! கொள்கை வேறு, காசு வேறு என்பதற்கு தானும் விதிவிலக்கல்ல என்று காட்டிவிட்டார் அமீர்கான்.

    ஜூனியர் விகடன்

    26.04.2006

    2. ஆயிரம் பொய் சொல்லி...

    வாக்குறுதிகளை நம்ப முடியுமா? ‘சொன்னபடி கலர் டி.வி நிச்சயமா குடுத்துடுவாங்களா?’’ என்று எங்கள் வீட்டுப் பணியாளரம்மா கேட்டார்.

    ‘நீங்க எத்தனை வருஷமா தேர்தல்ல ஓட்டு போடறீங்க?’ என்று கேட்டேன். நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் சிறுமியாக இருந்தபோது பார்த்த தேர்தல் நினைவுகளிலிருந்து அவர் தொடங்கினார். ‘ஒரு படி அரிசி ஒரு ரூபாய் வாக்குறுதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு கட்சிகள் - தலைவர்கள் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் பட்டியலிட்டுக்கொண்டே வந்தோம். சொன்னவற்றில் செய்தவற்றைவிட செய்யாதவையே அதிகம்.

    ‘ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் முடிக்கணும்கிறாப்லதான் இதுவும்! ஆயிரம் பொய் சொல்லியாவது நம்ம ஓட்டை வாங்கிடணும்னு எல்லாரும் பாக்கிறாங்க’ என்று முத்தாய்ப்பு வைத்தார் பணியாளரம்மா. கல்யாணம், அரசியல் இரண்டுமே முறிந்து போவது, எப்படியாவது ஆசை நிறைவேற வேண்டும் என்கிற பொய்களால்தான்.

    தேர்தல் அறிக்கை என்பது ஒவ்வொரு கட்சியும் தன் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் அறிவிப்பதற்காக உருவானவை. ஆனால், காலப்போக்கில் அவற்றில் கொள்கை அம்சம் குறைந்துகொண்டே வந்து, செயல்திட்டம் மட்டுமே ஆக்கிரமிக்கிறது. அதுவும் நாய்க்குட்டி பந்தைக் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து தந்தால் தரப்போகும் பிஸ்கட்டைக் கண்ணில் காட்டி பந்தைக் கொண்டுவரச் செய்வது போல், குறுகிய காலக் கவர்ச்சி வாக்குறுதி பிஸ்கட்டுகளாகவே காட்டப்படுகின்றன. பந்தை எடுத்துவந்து தந்ததும் பிஸ்கட்டைத் தராவிட்டால், அடுத்த முறை பந்தை எடுக்க நாய்கூடப் போகாது.

    உடனடி லாபங்களை மட்டுமே கண் முன்பு காட்டி, வாக்காளர்களை மயக்கும் வேலையை இப்போது எல்லா அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவற்றில் ஒன்றிரண்டைச் செய்துவிட்டால், அப்படிச் செய்தவர் போட்டியாளரைவிட அரசியல் நேர்மை உடையவர் என்ற பாவனை வேறு!

    ஆனால் அடிப்படை விஷயங்கள், தொலை நோக்கில் வாழ்வாதாரமான பிரச்சனைகள் இவற்றில் எல்லாம் தங்கள் கொள்கை என்ன, திட்டம் என்ன என்பதை மக்களிடம் விரிவாகவும் ஆழமாகவும் பேசும் வழக்கமே நம் அரசியல் கட்சிகளிடம் இல்லை. இன்று மக்களும் அந்த மாதிரி ‘சீரியஸான’ விஷயங்களை அரசியலில் எதிர்பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாக மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    ***

    அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் சிநேகமாக அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இருந்த அதே வேளையில், பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள் அம்ரிதா சிங், புஷ் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவில் போராடி வருகிறார். ஆப்கன்-இராக் கைதிகளை அமெரிக்க ராணுவம் சிறைகளில் சித்ரவதை செய்துவருவதை அம்பலப்படுத்த, அரசு ஆவணங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு வெளிப்படுத்தியவர் அம்ரிதா, திருமணம் செய்திருப்பது ஓர் அமெரிக்கரை. அபு க்ரைய்ப் சிறையில் இராக் கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த படங்களை வெளியிட கோர்ட்டில் உத்தரவு பெற்ற அம்ரிதா, அமெரிக்க சிவில் உரிமை மனித உரிமை சங்கத்தின் உறுப்பினர் - வழக்கறிஞர். வயது 36.

    ***

    குத்துச்சண்டையைச் சந்தோஷமாகப் பார்த்துவிட்டுக் கலையும் மனநிலைக்கே மக்களை மீடியாவும் தயாரித்து வருகிறது. இந்தத் தேர்தலிலேயே ஏதேனும் ஒரு நாள் வைகோவும் தயாநிதி மாறனும் மாறி மாறி சவால்விடாவிட்டால், ‘இன்னிக்கு நியூஸ் கொஞ்சம் டல்லடிக்குது" என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

    அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் தேர்தல் சமயங்களிலும் சரி, தேர்தல் இல்லாத சமயங்களிலும் சரி வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் காரியம் பலித்தால் சரி; அப்போதைக்கு விஷயத்தைச் சமாளித்தால் போதும் என்பதே அணுகுமுறை.

    இந்த மோசமான அணுகுமுறைக்கு வாழும் சாட்சிகளாக இரண்டு பெண்களின் உண்ணாவிரதங்கள் இருக்கின்றன.

    Enjoying the preview?
    Page 1 of 1