Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urangum Manasatchi
Urangum Manasatchi
Urangum Manasatchi
Ebook358 pages2 hours

Urangum Manasatchi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதியிலிருந்துதான் தமிழ் இலக்கியம் மக்கள் பிரச்சனைகளைப் பேசத் தொடங்கியது. அப்படிப் பேசுகின்ற பொழுதுகூட தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பேசாமல் மக்கள் பிரச்சனைகளை மக்களோடு இணைந்து நின்று குரல் கொடுத்ததுதான் பாரதியின் சிறப்பு. இந்தத் தேசம் எப்போது வெள்ளையரிடமிருந்து விடுபடும் என்பது அந்தக் காலகட்டத்தில் தேசப் போராட்டத்தின் திலகங்களாகத் திகழ்ந்த லாலா லஜபதிராய், திலகர், விபின் சந்திரபாலர் போன்றவர்களுக்கே தெரியாது. ஆனால், மகாகவி பாரதிக்கு மட்டும்தான் இந்தத் தேசம் விடுதலை காணும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் விடுதலைக்கு சுமார் 20 ஆண்களுக்கு முன்பே பாரதி.

"ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று''.

என்று எழுதினான். அதுவும் 'ஆடு பள்ளுப்பாடு' என்று மக்களுக்கு ஆணையிடாமல், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!' என்று தன்னையும் இணைத்துக் கொண்ட மாண்புதான் பாரதியை மகாகவியாக்கியது; இன்றும் அவனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் அவன் வாழ்வான்...

அதேபோன்று இந்த மண்ணில் நடக்கும் பல கொடுமைகளை தன் கட்டுரையில் கோடிட்டுக் காட்டும் வழக்குரைஞர் தமிழ்மணி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுப்பது அழகு...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580144106826
Urangum Manasatchi

Related to Urangum Manasatchi

Related ebooks

Reviews for Urangum Manasatchi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urangum Manasatchi - A. Tamilmani

    https://www.pustaka.co.in

    உறங்கும் மனசாட்சி

    Urangum Manasatchi

    Author:

    ஆ. தமிழ்மணி

    A. Tamilmani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/a-tamilmani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நல்லவராவதும்...

    2. எச்சரிக்கை தேவை.

    3.மரண தண்டணை: தவிர்க்க.முடியாதா?.

    4. எங்கே செல்லும் இந்தப் பாதை?.

    5. தொலைந்து போகும் முகவரிகள்.

    6. இலங்கை: தொடரும் துயரம்.

    7. வன்முறையற்ற குடும்பம்.

    8. ஊக்கப்படுத்துங்கள்! ஊனப்படுத்தாதீர்கள்!.

    9. கச்சத்தீவு மீட்பு: காலத்தின் கட்டாயம்.

    10. பாதை மாறும் கலைப்பயணம்.

    11. தேர்வு என்றாலே பதற்றம் ஏன்?.

    12. போபால்: நீதி கேட்டு நெடும்பயணம்.

    13. விட்டில் பூச்சிகளாகும் மாணவர்கள்.

    14. வாழ்க்கையைக் கொண்டாடுவோம்!.

    15. பொருளாதார விடுதலை எப்போது?.

    16. அகதிகளாகும் கிராமவாசிகள்.

    17. சாட்சிகளற்ற ஒரு இனப்படுகொலை.

    18. ஆறுதல் வேண்டாம்; மாறுதல்.வேண்டும்!.

    19. மாணவர்களை நெருக்கும். ஆ(வி)பத்துகள்.

    20. மாவோயிஸ்டுகளின் போராட்டம்...

    21. பயணங்கள் இனிதாகட்டும்.

    22. மாசு சூழ் உலகு?.

    23. முக்கியத்துவம் இழந்த முக்கியம்.

    24. குழந்தைகளுக்கு எதிரான. நடைமுறைகள்.

    25. ஈராக்: வெற்றி யாருக்கு?.

    26. போரில்லாமல் ஓர் பேரழிவு?.

    27. ஏழைகளைச் சூறையாடும் மது.

    28. உயிர் மேல் ஆசை வை.

    29. ஒரு செய்தியின் விளைவு.

    30. உயர்நீதிமன்றத்தில் தமிழ் இயலாதா?.

    31. எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாய்?

    32. பெண்களை அச்சுறுத்தும் வல்லூறுகள்.

    33. வேலைக்கு உதவாத கல்விமுறைகள்.

    34. தண்ணிரில் கரையும் பண்டிகைகள்.

    35. மனிதகுலத்திற்கு எதிரான பேரழிவு.

    36. ஈராக் உணர்த்தும் பாடம்.

    37. தேர்தல் திருவிழாவின் பலி ஆடுகள்?.

    38. மீனவர் படுகொலைகள்: இன.அழிப்பின் விரிவாக்கம்?

    39. வீழ்ந்து விடாத சுயமரியாதை.

    40. உறங்கும் மனசாட்சியை உலுக்கும் நேரம்.

    41. பிஞ்சு முகங்கள் வாடுவதுதகுமோ?.

    42. கிரிக்கெட்: காலனி ஆதிக்கத்தின் நீட்சி... அடிமைகளின்மோகம்.

    43. உணவெல்லாம் விஷமானால்?.

    44. சுதந்திர தேசத்தின் அடிமைகள்?

    45. மீண்டும் ஒரு நாடகம் வேண்டாம்!.

    46. மனிதவளத்திற்கு எதிரான.விளையாட்டு வியாபாரம்.

    47. அன்று சாந்தி இன்று பிங்கி.

    48. வருமுன் காவாதான் வாழ்க்கை...

    49. ஈழம்: கனவு தேசம்.

    50. மனமும் மணமும் எதுவரை?.

    51. ஏமாற்றத்தின் மறுபக்கம்?

    52. வறட்சியிலும் வெள்ளம்.

    ஓர் வழக்குரைஞரின் சமூகம் சார்ந்த.
    வாதங்கள்!.

    தமிழில் வெளிவரும் பத்திரிகைகளில் 'ஜனசக்தி'க்கு நீண்ட நெடிய வரலாறும் தனித்துவமும் உண்டு. பாவேந்தர் பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கவிதை 'ஜனசக்தி'க்காக பாவேந்தர் எழுதி 'ஜனசக்தி’யில் வெளிவந்த கவிதையாகும். ஜனசக்தியில் வெளிவந்த 'நண்டு செய்த தொண்டு' என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைதான் அவருக்கு திரையுலக வாய்ப்பை வாங்கித் தந்தது. ஜனசக்தியில் அலுவலகச் சிறுவனாக நுழைந்து, பிழை திருத்துபவர், ஆசிரியர் குழுவில் ஒருவர் என வளர்ந்து பிற்காலத்தில் தமிழிலக்கியத்தில் தனித்த இடத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர் எழுத்தாளர் த.ஜெயகாந்தன். இதுபோன்று 'ஜனசக்தி’யின் சாதனைகள் ஏராளம்...

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் தா.பாண்டியன் தேர்வு செய்யப்பட்டதும் ஜீவா நினைவு நாளில் மீண்டும் 'ஜனசக்தி'யை நாளிதழாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். 'ஜனசக்தி' நாளிதழ் ஓர் ஆண்டு நிறைவு பெற்றதும் அதில் ஆசிரியராகவும் கட்டுரைப் பகுதி ஆசிரியராகவும் பணியாற்றியவர்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுபட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் ஜனசக்தியின் அன்றைய பெறுப்பாளர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் என் வீடு தேடி வந்து, "ஜனசக்தியின் கட்டுரைப் பகுதி ஆசிரியர் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார். நான் அதற்கு உடன்படவில்லை. இரண்டு மூன்று முறை என் வீட்டிற்கு வந்த தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் என் மனைவி, என் மகன் ஆகியோருடன் விவாதித்து 'ஜனசக்தி'...

    கட்டுரைப் பகுதி ஆசிரியர் பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இறுதியில் என்னுடைய அறிவுலக ஆசான் ஜீவாவின் பத்திரிகையில் பணியாற்றிய வரலாற்றுச் சிறப்பும், மகாகவி பாரதி போன்று பத்திரிகையில் பணியாற்றிய வரலாறும் வாய்க்கிறது என்பதனால் அந்தப் பொறுப்பை நான் ஏற்றேன்...

    'ஜனசக்தி' நான்காம் பக்கத்திலும், எட்டாம் பக்கத்திலும் இடம் பெற்ற கட்டுரைகள் அரசியலாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில் தனித்த வரவேற்பைப் பெற்றது; பெற்றும் வருகிறது. அப்படி 'ஜனசக்தி'யில் இடம் பெற்ற பேராசிரியர்கள் க.ப.அறவாணன், க.செல்லப்பன், தி. இராசகோபாலன், பழனி. இராகுலதாசன் போன்றோரின் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்று இருக்கிறது. அதே போன்று பி.தயாளன், இரா.உமா, இளசை எஸ்.எஸ். கணேசன் போன்றோரின் கட்டுரைகளும் நூல் வடிவம் பெற்று இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வெளிவருவதுதான் வழக்குரைஞர் தமிழ்மணியின் இந்த நூல்.

    இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளில் தொன்னூறு விழுக்காடையும் தாண்டி 'ஜனசக்தி'யில் வெளிவந்த கட்டுரைகள்தான். இந்தக் கட்டுரைகள் ஜனசக்தியில் வெளிவருவதற்கு முன்பும் வெளிவந்த பின்பும் நான் படித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது நூலாக அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பதை முழுமையாகப் படிக்கின்ற பொழுது வியப்பாக இருக்கிறது; வழக்குரைஞர் தமிழ்மணியின் ஆளுமை என்னைப் பாராட்ட வைக்கிறது...

    தமிழ் இலக்கியத்தில் பாரதியிலிருந்துதான் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பேசப்பட்டது. அவன் தான் தமிழ் மண்ணில் காலூன்றிக் கொண்டு இந்திய தேசம் முழுவதையும் ஆரத் தழுவி உலகத்தை உற்றுப் பார்த்தவன். இந்தப் பார்வையும் பாரம்பரியமும் வழக்குரைஞர் தமிழ்மணியின் படைப்புகளிலும் தென்படுவது அவருடைய எழுத்தின் சிறப்பாகும்...

    தமிழகக் கல்வி முறையில் உள்ள கேடுகளையும், ஊடகங்களின் செயல்பாடுகளையும் எழுதுகின்ற வழக்குரைஞர் தமிழ்மணி, காவிரி,.

    முல்லைப் பெரியாறு பிரச்சனைகளைத் தொட்டுக் காட்டி, இலங்கைத் தமிழர்களின் இன்னல்களையும் அதில் இந்திய அரசின் கயமைத்தனத்தையும் சுட்டிக்காட்டி, சதாம் உசேன் மீது அமெரிக்கா தொடுத்த அயோக்கியத்தனமான போரையும் அம்பலப்படுத்துகிறார். இதுதான் தமிழ் மண்மீது நின்று கொண்டு, இந்திய தேசத்தை பருந்துப் பார்வையில் பார்த்து, உலகத்தை உற்றுநோக்கும் பாரதியின் வழித்தடமாகும். இந்த நோக்கையும் போக்கையும் வழக்குரைஞர் தமிழ்மணியின் கட்டுரைகளை கருத்தூன்றிப் படிப்பவர் அறிவர்...

    பாரதியிலிருந்துதான் தமிழ் இலக்கியம் மக்கள் பிரச்சனைகளைப் பேசத் தொடங்கியது. அப்படிப் பேசுகின்ற பொழுதுகூட தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பேசாமல் மக்கள் பிரச்சனைகளை மக்களோடு இணைந்து நின்று குரல் கொடுத்ததுதான் பாரதியின் சிறப்பு. இந்தத் தேசம் எப்போது வெள்ளையரிடமிருந்து விடுபடும் என்பது அந்தக் காலகட்டத்தில் தேசப் போராட்டத்தின் திலகங்களாகத் திகழ்ந்த லாலா லஜபதிராய், திலகர், விபின் சந்திரபாலர் போன்றவர்களுக்கே தெரியாது. ஆனால், மகாகவி பாரதிக்கு மட்டும்தான் இந்தத் தேசம் விடுதலை காணும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் விடுதலைக்கு சுமார் 20 ஆண்களுக்கு முன்பே பாரதி.

    "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று''.

    என்று எழுதினான். அதுவும் 'ஆடு பள்ளுப்பாடு' என்று மக்களுக்கு ஆணையிடாமல், 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!' என்று தன்னையும் இணைத்துக் கொண்ட மாண்புதான் பாரதியை மகாகவியாக்கியது; இன்றும் அவனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் அவன் வாழ்வான்...

    அதேபோன்று இந்த மண்ணில் நடக்கும் பல கொடுமைகளை தன் கட்டுரையில் கோடிட்டுக் காட்டும் வழக்குரைஞர் தமிழ்மணி தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தன்னை இணைத்துக் கொண்டு குரல் கொடுப்பது அழகு...

    'ஒரு செய்தியின் விளைவு' என்ற கட்டுரையை, தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசியலையும் வழிநடத்தும் சாதனமாக பத்திரிகைகள் விளங்க வேண்டும். அதற்கு மக்களும் தயாராக வேண்டும் என்று வழக்குரைஞர் தமிழ்மணி கட்டுரையை முடித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்டை மாநிலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு கட்டுரையை வழக்குரைஞர் தமிழ்மணி முடிக்கிறார். இதுவே பாரதியின் பரம்பரையைச் சார்ந்தவர் வழக்குரைஞர் தமிழ்மணி என்பதை மெய்ப்பிக்கிறது. இதே அணுகு முறையை இந்த நூலில் பல கட்டுரைகளில் காணலாம்...

    'உயர் நீதிமன்றத்தில் தமிழ் இயலாதா?' என்ற தலைப்பில் 23.06.10 அன்று 'ஜனசக்தி'யில் வழக்குரைஞர் தமிழ்மணி எழுதி இருக்கும் கட்டுரை வரலாற்றின் நெடுகிலும் தமிழுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியைப் பேசுகிறது. சமீபத்தில்கூட மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு நீதிபதி ஒரு வழக்குரைஞரை தமிழில் வாதாட அனுமதிக்காத செய்தி நாளிதழ்களில் வெளிவந்தது. என்ன செய்ய? அந்த நீதிபதியும் ஒரு தமிழர் என்பதுதான் அவமானம்! இத்தகையப் போக்குகள் எப்படி தமிழர் மனங்களில் கோலோச்சுகிறது?.

    1957 இல் திருச்சியில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் இலக்கியப் பேராசான் ஜீவா, தி.மு.க.வின் மொழி முழக்கம் பற்றி, ''Never Hindi Ever English என்று முழங்குகிறீர்களே Never Hindi Ever Tamil" என்றல்லவா நீங்கள் முழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். அன்று ஜீவாவின் முழக்கம் கண்டு கொள்ளப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்றும், சென்னை இராஜதானிக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் ஜீவா முழங்கிய முழக்கங்களை இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டும். தமிழ் மொழியை வைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் தெருவுக்கு பத்து நர்சரிப் பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கிவிட்டு 'தமிழ் வாழ்க' என்றும், 'தமிழுக்காக வாழ்கிறோம்' என்றும் சொல்வது அயோக்கியத்தனமாகும்!.

    பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கும் மக்களையும், கடந்த காலத்தைப் போன்று கூட்டங்களுக்கு மக்கள் கூடாததையும் கட்டுரைகளில் வருத்தப்பட்டு பதிவு செய்திருக்கிறார் வழக்குரைஞர் தமிழ்மணி. இதில் மக்களைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

    பணம் வாங்காமல்தானே 1967 இல் தமிழக மக்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினர். அதன்பின் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்கு அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்ததற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்தானே காரணம்! பதவி கிடைக்கும் வரை எளிமையாக வாழ்வதும், பதவி கிடைத்தபின் மக்கள் பணங்களைக் கொள்ளையடித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதும் இந்திய அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையோர் வரலாறாக இருக்கிறது. இதைக் கண்ட பின்புதான் வாக்குகளை விலைபேசும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்...

    அதேபோன்று வாய்ச்சொல் வீரர்களாக பல தலைவர்கள் மாறியதை அனுபவரீதியாக அறிந்த மக்கள் எவருடைய மேடை முழக்கத்தையும் கேட்பதற்கு இப்போது தயாராக இல்லை. அப்படி வரவேண்டும் என்றால் அதற்கும் கூலி கேட்கும் மனநிலையில் மக்கள் வந்ததற்கு இந்த மண்ணில் வாழும் மாபெரும் தலைவர்கள் பலரே காரணம். ஆம்! மேய்ப்பர்கள் ஏய்ப்பர்களான பின் ஆடுகளை நொந்து கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்ததிலிருந்தே வழக்குரைஞர் தமிழ்மணியின் கட்டுரையின் சிறப்புகள் புரியும்...

    தொழில் ரீதியாக வழக்குரைஞராக இருக்கும் தமிழ்மணி இந்தச் சமூகத்தை வென்றெடுப்பதற்காக இந்தச் சமூகத்தையே நீதிமன்றமாகக் கொண்டு இந்தச் சமூகம் பற்றிய வாதங்களை முன் வைக்கிறார். இந்த வாதங்களை எவரும் அவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாது. சமூக அக்கறையுள்ள வழக்குரைஞர் தமிழ்மணி இன்னும் அதிகமாக எழுத வேண்டும். அது தமிழ் சமூகத்திற்கு அவர் செய்யும் மகத்தான கடமையாகும்.

    தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மணப்பாறை மண் பலரைத் தந்திருக்கிறது. அந்த வரிசையில் வழக்குரைஞர் தமிழ்மணியும் இணைந்திருக்கிறார் என்பதற்கு இந்த நூல் சான்றாகும். வாழ்க வழக்குரைஞர் தமிழ்மணி; வளர்க அவருடைய எழுத்துப் பணி!.

    என்றும் அன்புடன்.

    கே. ஜீவபாரதி.

    .

    1. நல்லவராவதும்...

    மே மாதம் பெற்றோர்களுக்கு இரண்டாவது பிரசவ காலம். எவ்வளவு மதிப்பெண் வரும்? எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியுமா? என்ற கேள்விகள் நெஞ்சைத் துளைத்தெடுக்கும்.

    நினைத்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததில் சேர்த்து விட்டு, தமது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டு, மீண்டும் அடுத்த மே மாதம் தான், தன் குழந்தைகளின் படிப்புப் பற்றி யோசிக்கும் போக்கு பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படுகிறது.

    வயலில் விதைத்த விதை முளைத்துச் செழித்து வளர்வதை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வளர்த்து வீட்டுக்குக் கொண்டு வரும் விவசாயியைப் போல, தனது பிள்ளையின் ஒவ்வோர் அசைவும் கண்காணிக்கப்படாவிட்டால் தமது கனவு, கானல் நீராகிவிடும் என்பதை, இயந்திரகதியில் இயங்கும் பெற்றோர்களால் உணர முடிவதில்லை...

    பொருளாதாரம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்ற மனப்போக்கு அதிகரித்ததன் விளைவாக, தமது குழந்தைகளைப் பற்றிச் சிந்திக்கும் நேரம் மிகக்குறைவாகவே இன்றைய பெற்றோர்களிடம் காணப்படுகிறது.

    எந்தப் பொருளாதாரம் தம்மை எதிர்காலத்தில் காப்பாற்றும் என்று நினைத்தார்களோ, அந்த பொருளாதாரத்தைக் கையில் வைத்திருக்கும் போது, அவர்கள் குழந்தைகள் அவர்களை விட்டு வெகுதூரம் சென்றிருப்பார்கள்...

    எந்த நேரத்தில் எது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்து போனால் எதுவும் சிறப்பாக அமையாது...

    எப்படிப்பட்ட கீழ்த்தரமான திரைப்படத்துக்குச் சென்று வந்தாலும், பெரிதாகக் கவலைப்படாத பெற்றோர்கள், தமது பிள்ளைகள் இலக்கியக் கூட்டங்களுக்கோ, கருத்தரங்குகளுக்கோ சென்று வந்தால், வானமே இடிந்து விழுந்ததைப் போலப் பெரிய சலசப்பையே குடும்பத்தில் உருவாக்கும் போக்கு இன்று நிலவுகிறது...

    படிக்கும் காலத்தில் இது போன்ற கூட்டங்களுக்குச் செல்லலாமா? கேள்விகள் பிள்ளைகளின் கன்னத்தில் பட்டுத் தெறிக்கும்.

    24 மணி நேரமும் படிப்பு, படிப்பு என்று மூளையை முடுக்கிவிடும் போது எங்காவது சிறு இடம் கிடைத்தாலும் அங்குதாவிச் செல்லவே மனம் விரும்பும். இந்தச் சூழ்நிலையில் தான் மாணவ-மாணவியருக்குக் கூடா நட்பு ஏற்பட்டு வழி தவறிச் செல்ல நேரிடுகிறது. இது அழுத்தத்தினால் ஏற்படும் விளைவு.

    படிக்கும் மாணவர்கள் தமது படிப்பு சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ளும் ஆரோக்கியமான நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் மூலமே தன் மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் ஓரிரு மணி நேரம் செலவிடலாம். இதனால் படிப்பு ஒன்றும் கெட்டுப் போவதில்லை.

    தமிழகத்தில் நல்லதொரு மாற்றமாக ஊர்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. பெற்றோர்கள் தமது குழந்தைகளை இத்தகைய கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்ட முடியும்.

    பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில், வயல் வெளியில் உழைத்த நம் தம்பி ஒருவன் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர முடிந்தது என்றால் அங்கு அவனது மனம் ஆரோக்கியமாக இருந்தது. படிப்பு தவிர விவசாயமும் அவனைப் பண்படுத்தியது.

    மாணவர்களிடையே செய்தித்தாள் படிக்கும் பழக்கம், செய்தி கேட்கும் பழக்கம் போன்றவற்றை உருவாக்க வேண்டும். பல்வேறு செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் தனது மூளையைச் சரியாக பயன்படுத்த வழி காணலாம்.

    கல்வி சார்ந்த கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களைப் பண்படுத்த முடியும்.

    ஏன்? எதற்கு? எப்படி? எப்பொழுது? என்று சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் பள்ளி நாட்களிலேயே வளர்ந்தால்தான், காலச்சூழற்சியில் இருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

    குற்றவியல் தத்துவப்படி பெற்றோர்களின் மரபியல் பண்பும், நடவடிக்கைகளும் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

    ஒரு சில இல்லங்களில் தந்தைக்கும், தாய்க்கும் இடையே நடக்கும் பனிப்போரினால் குழந்தைகளின் மனங்களில் ஆழமான காயங்கள் உருவாகின்றன. குழந்தைகளிடம் எப்பொழுதும் கனிவான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று உளவியல் அறிஞர்கள் வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தம் குழந்தைகள் இந்தச் சமூகத்தில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று கருதும் பெற்றோர்கள், தாம் அப்படி இருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும்.

    குழந்தைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அவர்கள் முன்பாக புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களைச் செய்யும் தந்தை, தன் பிள்ளைகளை அவ்வாறு செய்யக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்?.

    அநாகரிகமான வார்த்தைகளை வீதியில் கொட்டித்தீர்க்கும் ஒருவர், தன் குழந்தையின் வாயில் செம்மொழி தவழ வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?.

    பெற்றோர்கள் முன்மாதிரியாகத் திகழும் போது குடும்பங்கள் மட்டும் அல்ல, இந்த நாடும் முன்மாதிரியாகத் திகழும். நல்லவராவதும், தீயவராவதும் நடத்தையில் தான்.

    .

    2. எச்சரிக்கை தேவை.

    பன்னிரண்டு ஆண்டுகள் வீடு, பள்ளிக்கூடம் என்று ஒருவித இருக்கமான சூழ்நிலையில் வளர்ந்தவர்கள், திறந்துவிடப்பட்டக் கூண்டுக்கிளியின் மனநிலையோடு, கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கும் காலமிது.

    17 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட சிரத்தையைக் காட்டிலும், அதிகமாகத் தங்கள் பிள்ளைகள் மீது சிரத்தை எடுத்துக் கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு, இந்தக் காலத்தில் பெற்றோர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும்.

    பாய்ந்து வரும் நீரில் எதிர்த்துச் செல்வதையே சவாலாகக் கொண்டிருக்கும் மீன்களைப் போல, பெற்றோர்கள் மட்டுமல்ல, யார் எதைச் சொன்னாலும் செவிமடுக்காத போக்கு இந்த வயதில் மாணவர்களுக்கு உண்டு. மரபியல் ரீதியான உடற்கூறு மாற்றங்கள் அதிகம் நிகழும் வயது.

    எதெற்கெடுத்தாலும் பிள்ளைகள் கோபத்தை வீசக்கூடும், பெற்றோர்களும் கோபத்தை வீசினால் விளைவு பாதகமாய்ப் போய்விடும். சூழ்நிலைகளையும், எதிர்காலம் பற்றிய அக்கறையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான உறவில் இடைவெளி ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    வீட்டுச் சூழலைவிட கல்லூரிச் சூழல் அவர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும். பல்வேறுபட்ட நண்பர்கள் கிடைப்பார்கள். தங்களின் எண்ண ஓட்டங்களுக்கான வடிகால் கிடைக்கும் இடத்தை அவர்கள் நாடிச் செல்வார்கள். எதில் ஈடுபாடு காட்ட வேண்டும், எதில் ஈடுபாடு காட்டக் கூடாது என்பதை அவர்களின் போக்கிலேயே உணர்த்த வேண்டும்.

    சேர்க்கையின் போது கல்லூரி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் பேசி அங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பிள்ளைகளின் மனதில் ஒரு தெளிவை உண்டாக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் பள்ளியில் படித்த மாணவிகளை, இருபாலர் பயிலும் கல்லூரியில் சேர்க்கும் போது, அங்குள்ள சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் தெளிவாக்கும் போது, மாணவிகளுக்குள்ள அச்சம் களையப்படும்.

    வகுப்புத் தொடங்கும் நேரம், முடியும் நேரம், இடைவேளை நேரம். விடுமுறை நாட்கள் போன்றவற்றை பெற்றோர்கள் அறிந்திருந்தால், பிள்ளைகள் தேவையில்லாமல் வெளியில் செல்கிறார்களா? என்பதை அறிய முடியும்.

    பெரும்பாலான பெற்றோர்கள் கண்டிப்பு காட்ட மறுப்பது பண விசயத்தில்தான். பிள்ளைகளின் மீதான அளவு கடந்த அன்பின் காரணமாக கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, அலைபாயும் மனத்தோடு மாணவர்கள் வகுப்பறையைப் புறக்கணித்து வெளியில் சுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். முதல் தவறு இங்குதான் ஆரம்பிக்கிறது. கேன்டீன், திரையரங்கு, பூங்கா என்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். மாணவிகள் இதில் விதிவிலக்கல்ல.

    கல்லூரிக் கட்டணம் எவ்வளவு, புத்தகச் செலவு எவ்வளவு போன்ற விசயங்களில் பெற்றோர்களிடம் ஒரு தெளிவு இருக்குமானால் கூடுதலாகப் பணம் கேட்கும் தைரியம் பிள்ளைகளுக்கு இருக்காது. பணத்தின் மதிப்பைப் பிள்ளைகள் உணரும்படிப் பெற்றோர்கள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

    பேச்சு, நடை, உடை, செயல்பாடு இவற்றில் மாறுதல் ஏற்படும் போது, பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் வருகைப் பதிவேட்டைப் பார்க்க வேண்டும். தவறுகள் திருத்தப்படும்.

    குறிப்பாகப் பெண்கள் விசயத்தில், பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரி விழாக்கள், வெளியூரில் கல்லூரி சார்பாகக் கலந்து கொள்ளும் விழாக்கள் போன்ற சூழ்நிலைகளில் பெற்றோர்களின் ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் இருக்க வேண்டும்.

    பெண்கள் சந்திக்கும் உடல் ரீதியான

    Enjoying the preview?
    Page 1 of 1