Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - November 2018
Kanaiyazhi - November 2018
Kanaiyazhi - November 2018
Ebook223 pages1 hour

Kanaiyazhi - November 2018

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

November month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109503635
Kanaiyazhi - November 2018

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - November 2018

Related ebooks

Reviews for Kanaiyazhi - November 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - November 2018 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி, நவம்பர் 2018

    மலர்: 53 இதழ்: 08 நவம்பர் 2018

    Kanaiyazhi November 2018

    Malar: 53 Idhazh: 08 November 2018

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி, நவம்பர் 2018

    தலையங்கம் - ம.ரா.

    #நானும் கூட...

    காளி!

    ஆதி காவலாளி

    கால மாற்றக் குறியீடு!

    மேரு மலை உச்சியிலிருந்து

    அம்புமழை பொழிந்த போது

    விளையாட்டாக வெட்டித் தள்ளியவள்!

    வீசி வந்தவனின் குதிரையும்

    வில்லும் கொடியும் உடலும்

    வீழ்ந்திடச் செய்தவள்!

    வாளையும் கேடயத்தையும்

    அடித்து நொறுக்கியவள்!

    எருமை வேட மகிஷாசுரனிடம்

    "கர்ஜிப்பாய்… கர்ஜிப்பாய்

    என்னால் நீ கொல்லப்பட்டபின்

    இங்கேயே தேவதைகள்

    கர்ஜிக்கப் போகின்றன" என்று

    கொம்புகளை முறித்து

    பூமியையே பொடிப்பொடி ஆக்கியவள்!

    இன்று இதோ

    குடிகார கணவனிடம் வீட்டில்

    அடிவாங்கிக் குமைகிறாள்!

    அலுவலக மேலிடுக்கில்

    அதிகாரப் பேய்ப் பிடியில்

    வழிபாட்டு இடர்களில்

    வாழ்க்கை பெருவெடிப்பில்

    பெண்ணாய்ப் பிறந்த சோகத்தைப்

    பெருமூச்சில் கரைக்கிறாள்.

    உரிமை உயிர் மூச்சுவிட

    சபரிமலை போகவும் தடுக்கவும்

    ஊர்வலம் ஆகிறாள்.

    விருப்பம் மில்லாத சேர்க்கையை

    விலங்குகளும் எதிர்க்கின்றன.

    மனிதர்களின் நாகரிகம்

    சீண்டலில் அணி சேர்க்கிறது.

    இயற்கையின் அழைப்பும்

    இருத்தலின் உயிர்ப்பும்

    விருப்பத்தின் வழிபாடு!

    அங்கே அதிகார ஆதாய

    அத்துமீறலுக்கு இடமிருக்காது.

    ஆனாலும் வரலாறு முழுக்க

    பாலியல் சீண்டல்?

    ஆணுக்கும் பெண்ணுக்கும்

    பொதுவான உணர்வுகள்.

    ஆனாலும் இந்த

    அநாகரிக விளைச்சலில்

    ஆண்கள் மட்டும் எப்படி?

    ஆண்களின் இயல்பே அப்படியா?

    அறிவியல், உளவியல் சான்றுகள் உண்டா?

    அல்லது

    ஆண்கள் மனதை அப்படிக்

    கட்டமைத்திருக்கிறார்களா?

    கலை இலக்கியம்

    பாலியல் சீண்டலைக் கட்டமைக்கப்

    பயன்பட்டு இருக்குமோ?

    கட்டமைக்கக் காரணம் என்ன?

    நமது வரலாறு என்பதே

    போர்களின் நிகழ்ச்சிநிரல்தானே.

    வெற்றி பெற்றவன்

    பெண்களைச் சிறை பிடித்தது ஏன்?

    ஆடு, மாடு, நாடு என்பது கடந்து

    பெண்களுக்காக சண்டை போட்டது ஏன்?

    ஒரு மரத்தில் தோன்றிய தீப்பொறி

    காட்டையே அழிப்பதைப் போல

    தாம் வாழும் ஊருக்கு

    அவள் தீயானாள் என்பதை

    "மரம்படு சிறு தீ என

    அணங்காயினள் தாம் வாழும் ஊர்க்கு" என்று

    புறநானூறு சொல்கிறதே?

    ஒவ்வொரு சண்டையிலும் இருபக்கமும்

    ஆண்களே மடிந்திருக்கிறார்கள்!

    போர்க் காலச் சமுதாயத்திற்குச்

    சண்டை போட ஆண்கள் தேவை.

    ஆண் குழந்தைகளை

    ஈன்று புறம் தருதலே பெண்களின் கடன்.

    இப்போதும்

    ஆண்குழந்தை விருப்பத்தின்

    ஆணி வேர், அதுதானோ?

    குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை

    ஆண்களின் எண்ணிக்கையில் இல்லை.

    இருக்கிற பெண்களுக்கும்

    ஆண்டுக்கு ஒரு குழந்தைதான்.

    எனவே

    குறைவான ஆண்களைக் கொண்டு

    எல்லாப் பெண்களும் குழந்தை பெற

    ஆண்களுக்குப்

    பாலியல் சீண்டல் மனதைக்

    கட்டமைத்திருப்பார்களோ?

    அந்தக் கட்டமைப்பை உடைக்கத்தான்

    ஆண்களை அசுரர்களாக்கித்

    தரையில் போட்டு மிதித்துத்

    தண்டிக்கும் காளிகள் கையில்

    இப்போதும் ஆயுதங்களா?

    அப்போது காளி கையில் சூலம்!

    இன்றைய பெண்களிடம்

    # மீ டூ.

    பெண்கள்

    உடைமைப் பொருள் இல்லை

    உயிர்: உடம்பு.

    மகிடாசுரனுக்குத் தண்டனை

    மரணம் மட்டுமே!

    ஆனால் இப்போது

    இயல்பு வாழ்க்கை பறிபோக

    குடும்பம் சுற்றம் சமூகம் எங்கும்

    தலைகாட்ட முடியாமல்

    தனக்குள் தானே தலைமறைவாகும்

    உயிரின் வாதை!

    ஒருகாலத்தில் குழந்தை உற்பத்திக்காக

    ஆண்மனதில் பாலியல் சீண்டல்

    கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

    இப்போது அது,

    சுயமரியாதை சீண்டல்.

    ஆண், பெண், திருநங்கை என

    அனைவருக்குமானது சுயமரியாதை.

    எனவே கடந்த கால

    ஆண்மனக் கட்டமைப்பின்

    அடித்தளம் மாற, அனைவருக்குமான

    சுயமரியாதையைக் கட்டமைக்கட்டும்

    # நானும் கூட!

    அன்புடன்ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - நவீனா

    கட்டுரை - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

    சிறுகதை - தி. பழனிவேல்

    கவிதை - காரைக்குடி சாதிக்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - நா. கண்ணன்

    குறுநாவல் - அகரமுதல்வன்

    விருது விழா - சிவ கிருஷ்ணா

    கட்டுரை - முனைவர் சு. நரேந்திரன்

    கவிதை - தங்கேஸ்

    சிறுகதை - சோ. சுப்புராஜ்

    நினைக்கப்படும் - மரன்

    கவிதை - முருகன்.சுந்தரபாண்டியன்

    எதிர்வினை - பேராசிரியர் க. நெடுஞ்செழியன்

    கவிதை - இல. கருப்பண்ணன்

    கவிதை - சதீஷ் குமரன்

    கட்டுரை - கவிஞர் ஆடலரசன்

    கவிதை - பண்ணாரி சங்கர்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை – நவீனா

    மீ டூ

    ரானா பர்க் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்க சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர், ஒரு பதிமூன்று வயது பெண் குழந்தையை தனது அலுவலினூடே சந்திக்க நேரிடுகிறார். அந்தக் குழந்தையுடன் உரையாடும்போது, அந்தக் குழந்தை, தான் கொடூரமான வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதை அவரிடம் சொல்கிறாள். அதைக்கேட்டு டரானாவின் கண்கள் கலங்குகின்றன. தனக்கும், தன் பால்ய வயதிலும், அதன்பின்னும் சிறியதும் பெரியதுமாக நடந்த அத்தனை பாலியல் துன்புறுத்தல்களும் அவர் கண் முன்னே வந்து போகின்றன. அவரது மனதில் இருந்த வலி முற்றி, துக்கமாக மாறி அவரின் தொண்டையை வந்து அடைகிறது. தனக்கு ஏதோ ஆறுதல் கூற போகிறார் என்கிற ஆர்வத்தோடு டரானாவை உற்று நோக்கியபடி நின்றுகொண்டிருந்த குழந்தையிடம், தனக்கே வேறொருவர் ஆறுதல் கூறும் நிலையில் அவர் மனம் இருப்பதை உணர்ந்தவராய், தாயன்போடு அவளை அணைத்துக் கொண்டு, கண்ணீர் மல்க ‘எனக்கும்தான்’ (#metoo) என்று கூறி விட்டு தன் இருப்பிடம் திரும்புகிறார். இந்த நிகழ்வு நடந்த ஆண்டு 2006.

    பின்னர் ‘மை ஸ்பேஸ்’ (My Space) என்னும் சமூக அமைப்பின் ஒரு பகுதியாக ‘மீ டூ’ என்னும் இயக்கத்தைத் துவங்குகிறார். இது பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பாலியல் கொடுமைகளைப் பற்றி, அவர்களே பொதுவெளியில் பேச ஆரம்பிப்பதன் மூலம், அது தனக்கும் நிகழ்ந்திருக்கிறது என்கிற பச்சாதாப உணர்வுகளைப் பிற பெண்கள் மனதிலும் எழச் செய்து, அதன் வழியாக பெண் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக வளர்ந்து வருகின்றது.

    அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு, பிரபல அமெரிக்க நடிகையும், பெண் விடுதலை போராளியுமான, அலிசா மிலானோ (Alyssa Milano) என்பவர் தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதுகிறார். அவர் குற்றம் சாட்டிய ஹார்வி வெயின்ஸ்டீன் (Harvey Weinstein) ஒரு மிகப்பெரிய அமெரிக்க பட தயாரிப்பாளர் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்ததால், அவரது ட்விட்டர் பதிவு அதிக கவன ஈர்ப்பைப் பெற்றதோடு, அமெரிக்காவையே சற்று புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தனது ட்விட்டர் பதிவில் ‘மீ டூ’ என்கிற ஹாஷ்டாக்கைப் (Hashtag) பயன்படுத்தியதன் மூலம் அமெரிக்க பிரபலத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுடன் சேர்ந்து மிலானோ பயன்படுத்திய ஹாஷ்டாக்கும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மட்டும் பன்னிரெண்டு மில்லியன் முகநூல் பதிவுகளில் ‘மீ டூ’ ஹாஷ்டாக் உபயோகப்படுத்தப்பட்டு, பல நாடுகளில் பெரும்புள்ளிகள் செய்த பாலியல் அட்டூழியங்களை வெளிச்சம் போட்டு உலகிற்கு காட்டி விட, ‘மீ டூ’ பற்றிய பேச்சு வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் பொதுமக்களிடமும் கூட பரவ ஆரம்பித்தது.

    இந்த ‘மீ டூ’ கிளர்ச்சியானது இந்தியாவைத் தாக்கிய போது, வட இந்திய நடிகையான தனுஸ்ரீ தத்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளைப் பற்றி பதிவிட்டு, அதில் ‘மீ டூ’ ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தினார். அவர் கைகாட்டிய பெரும்புள்ளி நானா பட்டேகர். அவரோடு கூடவே விவேக் அக்னிஹோத்ரி மீதும் தனுஸ்ரீ தத்தா தனது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். இவ்வாறான ஆண்களுடன் ஒத்துப் போகாத ஒரே காரணத்திற்காகவே பல ஆண்டுகளாகத் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், பாலியல் ரீதியிலான சில ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட சில நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றும், பல உண்மைகளை, தைரியத்துடன் வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பல வட இந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட மற்றும் பிற துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் ‘மீ டூ’ ஹாஷ்டாக்குடன் தனக்கு நிகழ்ந்த பாலியல் கொடூரங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த இயக்கம் தென் மாநிலங்களிலும் பரவி, சென்னை அடைந்தபோது, முதல் குரலாகப் பாடகி சின்மயி ஸ்ரீப்ரதா அவர்கள் ‘மீ டூ’ பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவர் குற்றம்சாட்டி இருப்பது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீது. 2004 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த ‘வீழமாட்டோம்’ என்கிற இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்த சின்மயி அவர்களை, வைரமுத்து அவர்கள், தனது விடுதி அறையில் தனியாக சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும், பின்னாளில் வைரமுத்துவின் ஒரு புத்தக வெளியீட்டிற்கு ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாட சின்மயியை வற்புறுத்தி, அதன் தொடர்பாக மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் பல பிரபலங்களும் இந்த ‘மீ டூ’ புகார்களில் சிக்கியிருக்கின்றனர். பி.எம். சுந்தரம், பப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1