Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Sutri Pengal
Ennai Sutri Pengal
Ennai Sutri Pengal
Ebook148 pages47 minutes

Ennai Sutri Pengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கையின் ஓட்டத்தைப் பல்வேறு விதமாக எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இங்கு ஏராளம். அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் துவண்டு போய் விடுபவர்களும் பலர். அப்படித் தன் துயரங்களை என்னோடு பகிர்ந்து கொண்ட சில பெண்களின் கதைகள்தான் இந்தத் தொகுப்பு.

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580134008987
Ennai Sutri Pengal

Read more from Girija Raghavan

Related to Ennai Sutri Pengal

Related ebooks

Reviews for Ennai Sutri Pengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Sutri Pengal - Girija Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்னைச் சுற்றிப் பெண்கள்

    Ennai Sutri Pengal

    Author:

    கிரிஜா ராகவன்

    Girija Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/girija-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    துணிந்துரை

    என்னுரை

    1. என்னைச் சுற்றிப் பெண்கள்

    2. நிமிர்ந்து நிற்கும் சுநீதா!

    3. சம்பாதிச்சது எங்க போச்சு?

    4. பிரிவு மட்டும் தான் தீர்வா?

    5. என்ன தைரியம் இவர்களுக்கு?

    6. வாழ்க்கைப் பாடம்

    7. பேசாத கணவன்

    8. கேட்டு வருமா பாசம்?

    9. காசு பெறாத தங்கம்

    10. ஒப்புக்கொள்ள மாட்டேன்

    11. மனைவி ஒரு மக்கு

    12. பிரச்சனைகளை சரிப்படுத்திவிடும் பிரிவு

    13. பழிவாங்க வேண்டாமே!

    14. சிரிக்க மறந்து போச்சு

    15. வேண்டாம் வேலை!

    16. ‘சன் ஆஃப் ஸாகரிகா’

    17. அழுதால் பிடிக்கும்!

    18. எனக்கு எண்பது!

    19. கணவர் கையில்...

    ‘துணிந்துரை’

    பெண் நூலாசிரியரால், பெண்கள் பற்றி, குறிப்பாகப் பெண்களுக்காக எழுதப்பட்ட கதைகளுக்கு, நான் அணிந்துரை எழுத, துணிந்து முற்பட்டதால் இது ‘துணிந்துரை’தானே!

    Man is a gregarious animal - மனிதன், கூடி வாழும் குணம் உடையவன், என்பது பொருளாதாரத்தின் முதல் விதி. ஆனால் காடுகளில் கூட்டமாக வாழும் மான், யானை போன்றவை ஒரே குணம் உடையவை. கூடி வாழ்வதில் அவைகளுக்குக் குழப்பம் இல்லை!

    ஆனால், மனிதன் வாழும் சமூகத்தில், ஒவ்வொருவரும் தனிரகம். இங்கு மான், மயில் என மென்குணம் படைத்தோரும் உண்டு. நரி, நல்ல பாம்பு என வன்குணம் உடையோரும் உண்டு சராசரி மனிதனுக்கே இங்கு வாழ்வது சிரமம், எனில் பெண்ணைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

    நமது சமூகம் 5000 ஆண்டு பழைமை உடையது. குகை மனிதன் பெண்ணை முதன்மையாக்கிக் குடும்பத்தை அமைத்தான். வேட்டையாடுதல் ஆணின் வேலை. குடும்ப, சமூக நிர்வகிப்பு பெண்ணைச் சார்ந்தது. ஆனால், ஆண்மகன், மெல்ல மெல்ல, பெண்ணை அரியாசனத்திலிருந்து அகற்றி, அரிதாரம் பூசிய போகப் பொருளாக்கினான். அவள் அடிமைப்பட்டுப் போனாள்! கோபம் கொள்ளுதலும், குரூரமாக அடித்தலும் அவன் கோலோச்சும் வகையாயிற்று. அவன் குடும்பமும், சமூகமும் கூட்டுச் சதியில் ஈடுபட்டன.

    விளைவு சமநிலை சரிந்த சமூகம் காட்சி மாறியது. தற்பொழுது, பெண்ணின் எழுச்சி! இது வரவேற்கத்தக்கதே!

    பாதிக்கப்பட்ட எல்லாப் பெண்ணும் சுயம்புவாகி விட முடியாது. கைதூக்கி விடவும், தூரத்து வெளிச்சத்தைச் சுட்டிகாட்டவும் Mentor எனப்படும் தூண்டும் கரங்கள் தேவை. அப்படிப்பட்ட ஒரு நற்காரியத்தைத்தான் இந்த நூலாசிரியர் திருமதி கிரிஜா ராகவன் செய்திருக்கிறார்! அற்புதமான கதைகள்!

    ‘நான் சகலமும் இழந்தவள்’ என்று கூன்மனம் கொண்டு தம்மைச் சந்திக்க வந்தவர்களை எல்லாம், வான் பார்த்து வளர்ந்த விருட்சமாக மாற்றியிருக்கிறார். பாராட்டுக்கள்!

    ‘விசு’வின் திரைப்படத்தைப் பார்த்த பின்பும், பணி ஓய்வுப் பணத்தைப் பிள்ளைகளிடம் கொடுத்து விட்டுத் திண்டாடும் தம்பதியினர், துணிவு என்னும் பெயரில் சென்னையில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு திண்டாடும் பெண், வெந்நீர்ப் பார்வை பார்க்கும் மாமனார் பன்னீர்செல்வத்தால் பாதிக்கப்பட்டவள், நடுவயது வந்த பின்னும் தாம்பத்யத்தில் நிதானம் எய்தாத கணவன் - என பெண்ணின் பிரச்சனைகளில்தான் எத்தனை விதமான உறவு முட்கள்! இத்தனைக்கும் வழிகாட்டும் இந்த நூலாசிரியர் ‘செயல்முறை உளவிய’லில் சிகரம் தொடுகிறார்!

    தங்களிடம் ‘புஜபலம்’ இருக்கிறது எனச் சொல்லிக்கொள்ளலாம் ஆண்கள். ஆனால் ‘நிஜபலம்’ பெண்ணுக்குள் புதைந்திருக்கிறது என நமக்குப் புரிய வைக்கிறார் இவர்; வலிமையான உண்மைக் கதைகள் மூலமாக!

    ‘வெற்றிவிடியல்’ ஸ்ரீனிவாசன்

    நிதி ஆலோசகர்

    என்னுரை

    அன்பு வாசகருக்கு,

    வணக்கம். வாழ்க்கையின் ஓட்டத்தைப் பல்வேறு விதமாக எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் இங்கு ஏராளம். அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் துவண்டு போய் விடுபவர்களும் பலர். அப்படித் தன் துயரங்களை என்னோடு பகிர்ந்து கொண்ட சில பெண்களின் கதைகள்தான் இந்தத் தொகுப்பு.

    இவை எல்லாமே ‘லேடீஸ் ஸ்பெஷ’லில் தொடராக வந்தவை, எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர் நண்பர் சுப்ர. பாலன். அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்: நடந்ததையெல்லாம் பெயர், நிறுவனம் உட்பட அப்படியே எழுதியிருக்கீங்களே, பரவாயில்லையா மேடம் என்றார்.

    உண்மை அதுவல்ல. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் நிஜம். அவற்றிற்கு நான் தந்த ஆலோசனைகளும் நிஜம். இவைகளை விளக்க நான் கோர்த்திருக்கும் கதைகள் கற்பனை. அவற்றில் வரும் பெயர்கள் இடம், நிறுவனம், வேலை எல்லாமே கற்பனை.

    இப்படிப் பெண்களின் பிரச்சினைகளைக் கதையோட்டமாக சொல்லி சுவாரசியப்படுத்தியிருப்பதற்கே காரணம், அதனை எல்லோரும் விரும்பிப் படிக்க வேண்டும்; தங்களுக்கு ஏதாவது பாடம் இருக்குமானால் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.

    ‘பெண்ணுலகம்’ என்னும் பெண்கள் நிகழ்ச்சியை 13 வருடங்களுக்கு முன்னால் ஒரு பிரபல தொலைக்காட்சிக்காகத் தயாரிக்க ஆரம்பித்தேன். என் கண்களைத் திறந்த நிகழ்ச்சி அது. தொடர்ந்து பலதரப்பட்ட பெண்கள் என்னிடம் பேச ஆரம்பிக்க, என் முழுக்கவனமும் பெண்கள் பக்கம் திரும்பி விட்டது. இதற்காகவே 1997ல் லேடீஸ் ஸ்பெஷல் என்னும் பெண்கள் மாத இதழையும் ஆரம்பிக்க வைத்தது.

    அன்றிலிருந்து இதோ, இன்று இதை எழுதும் நிமிடம் வரை, சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்துப் பேசியிருப்பார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட சோகங்கள், சுமைகள், வலிகள் ஏராளம். நான் படித்துத் தெரிந்து கொண்ட உளவியல், அனுபவித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், பலரையும் பார்த்துப் புரிந்து கொண்ட வாழ்க்கை முறைகள். இப்படிப் பலவற்றையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஆலோசனைகள் தருகிறேன். அதனை செயல்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கும்போது நான் ஆனந்தப்படுகிறேன்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பம்தான் பலம், என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை, வலிகள் வரும்போதுதான் நம் வலிமை கூட வேண்டும். இந்தப் புத்தகத்திலுள்ள கதைகள் தரும் செய்திகள் உங்களுக்கு பலம் கூட்டும் என்று நம்புகிறேன்.

    பணத்திற்குப் பஞ்சமிருந்தாலும் பாசத்தை வஞ்சனையில்லாமல் என் மேல் பொழிந்த என் நாமக்கல் தாத்தா பாட்டிக்கு இந்தப் புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன்.

    ‘எழுது, எழுது, இன்னும் நன்றாக எழுது’ என்று என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும் நண்பர் ‘வெற்றிவிடியல்’ ஸ்ரீனிவாசன், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருப்பது எனக்கு மேலும் பெருமை அளிக்கிறது.

    புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வணக்கம்.

    நட்புடன்

    கிரிஜா ராகவன்

    60/9, LKS Nest

    7வது அவென்யூ, அசோக் நகர்,

    சென்னை - 600083

    Ph. 044-24898162

    Enjoying the preview?
    Page 1 of 1