Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endrendrum Kaadhalan
Endrendrum Kaadhalan
Endrendrum Kaadhalan
Ebook116 pages1 hour

Endrendrum Kaadhalan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகு தேவதையான மீரா அலுவலகத்தில் நன்றாக பணிபுரிபவள். இவளது அக்கா ஊனமுற்றவளாக இருக்கின்றாள். மீராவை அலுவலக முதலாளி முகுந்த் என்பவன் காதலிக்கிறான். முகுந்தனின் காதலை ஏற்பாளா? இவர்களுக்கிடையே என்ன நேர்ந்து? மீராவின் திருமணம் யாருடன்? வாசித்து அறிவோம் என்றென்றும் காதலன்.

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580100606645
Endrendrum Kaadhalan

Read more from Devibala

Related to Endrendrum Kaadhalan

Related ebooks

Reviews for Endrendrum Kaadhalan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endrendrum Kaadhalan - Devibala

    https://www.pustaka.co.in

    என்றென்றும் காதலன்

    Endrendrum Kaadhalan

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே நுழைந்தாள் மீரா.

    காசோலையில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த முகுந்த் நிமிர்ந்தான். ஒரு நிமிஷம் இருங்க! வந்துட்டேன்! காத்திருந்த அத்தனை இதழ்களிலும் தன் கையெழுத்தைப் பதித்துவிட்டு, பஸ்ஸர் அழுத்த, பியூன் வந்தான்.

    பி.ஏ.கிட்ட குடுத்துடு! அவன் விலக

    மீரா... ஏழு மணி வரைக்கும் இன்னிக்கு நீங்க வொர்க் பண்ண வேண்டிவரும்!

    சார்... நான் வீட்ல...!

    இப்ப மணி நாலுதான். போன் பண்ணி தகவல் தந்துடுங்க. உங்க பக்கத்து வீட்ல போன் இல்லே?

    சார்...!

    லுக் மீரா! இது வருஷக் கடைசி. முக்கியமான ஸ்டேட்மென்ஸ் ஹெட் ஆபீசுக்கு அனுப்பியாகணும். நீங்க இருக்கீங்க. ஓவர்டைம் கிளெய்ம் பண்ணிக்கலாம்! மீரா ஒரு நிமிடம் போல நின்றுவிட்டு வெளியே வந்தாள்.

    ஏழு மணி வரை வேலை முடித்துவிட்டு, அதன் பிறகு பஸ் பிடித்து வீடு போய்ச்சேர ஒன்பதைக் கடந்துவிடும். கொரட்டூரில் எக்ஸ்டன்ஷன் பகுதியில் வீடு!

    ஆள் அரவமற்ற இடம்!

    அழைத்துப்போக ஆண்பிள்ளை துணைகூட இல்லாத பிரதேசம்! இதையெல்லாம் ஆபீசரிடம் சொல்ல முடியுமா? சொன்னால்தான் புரிந்துகொள்வாரா? பெண்ணாய்ப் பிறப்பதே பாவம்! அதிலும் வேலை பார்க்கும், நடுத்தர வர்க்கப் பெண் ஜென்மம் மகாபாவம்! தன் இருப்பிடம் வந்து உட்கார்ந்தாள். ஐந்தரை மணியானதும் பெரும்பாலானவர்கள் தன் இருப்பிடத்தைக் காலி செய்ய, மீராவுக்கு எரிச்சலாக இருந்தது.

    'ஏன்? இங்கே ஆண்கள் இல்லையா? இவர்களில் ஒருவரை இருக்கச் சொல்லக்கூடாதா?’ மேலும் பதினைந்து நிமிடங்கள் ஓட,

    பியூன் வந்தான்.

    ஆபீசர் வரச் சொல்றார்!

    மீரா சலிப்புடன் உள்ளே நுழைந்தாள். தன் கையை உயர்த்தி ஒரு முறை சோம்பல் முறித்த முகுந்த், அவளை உன்னிப்பாகப் பார்த்தான்.

    உட்காரு மீரா!

    இருக்கட்டும் சார். எனக்கு என்ன வேலைனு சொல்லுங்க. சீக்கிரமா ஆரம்பிக்கறேன்!

    ஸாரி! ஆபிஸ்ல வேலை எதுவும் இல்லை. உன்கிட்ட நான் பர்சனலா கொஞ்சம் பேசணும் மீரா

    மீராவின் பார்வையில் கேள்வி தொங்கியது. 'என்னிடம் இவனுக்கென்ன பர்சனல்?'

    அதை ஆபீஸ் நேரத்துக்குள்ள, அஞ்சரை மணிக்கு முன்னால பேசக்கூடாதா சார்? கேட்டே விட்டாள்.

    அவசரத்துல பேச எனக்கு இஷ்டமில்லை மீரா. அப்படிப்பட்ட விஷயமும் இல்லை இது. பிளீஸ் உட்காரு!

    மீரா நாற்காலி நுனியில் உட்கார, மேசையில் அவளுக்கு வெகு அருகாமையில் அமர்ந்தான் முகுந்த்.

    இந்தக் கம்பெனில உன் சர்வீஸ் என்னா மீரா?

    எட்டு வருஷம்!

    அஃப்கோர்ஸ்! பதினெட்டு வயசுல வேலைக்கு இங்கே சேர்ந்த பெண் நீ! ஞாபகமிருக்கு எனக்கு. இப்ப உனக்கு இருபத்தியாறு!

    'இதெல்லாம் இப்போது ஏன்?' என்பதுபோல அவனைப் பார்த்தாள்.

    நீ வேலைக்குச் சேரும்போது எங்கப்பாதான் அதிகாரி. அவர் போய்ச் சேர்ந்துட்டார். பொறுப்பு என் தலைல. நாலு வருஷமாச் சுமந்து சுமந்து நானும் பழகிட்டேன். எனக்கு என்ன வயசுன்னு சொல்லு மீரா!

    தெரியாது சார்!

    முப்பது!

    …...!

    அப்பா சம்பாதிச்ச பணமே பல லட்சங்கள். அது என்னால பெருகுதே ஒழிய குறையலை. எங்கம்மாவும் போன வருஷம்தான் இறந்தாங்க. அது வரைக்கும் உயர் படிப்பு, கம்பெனி தொடர்பான வியாபார நுணுக்கங்கள்னு என்னை நான் எங்கேயோ தொலைச்சிட்டு இப்பத்தான் தேடத் தொடங்கியிருக்கேன்."

    அவனறியாமல் மணிக்கட்டைப் பார்த்தாள் மீரா.

    விஷயத்துக்கு வர்றேன் மீரா. முப்பது வயசு ஆன பின்னாலதான் எனக்குனு வாழ்க்கைல ஒரு துணை, பிடிப்பு, சந்தோஷம் எல்லாம் வேணும்னு ஆசை வந்திருக்கு. அப்பத்தான் வாழ்க்கைல ஒரு அர்த்தம் இருக்கும்னு தோணுது. ஒரு பெண் துணை - மனைவிங்கற உறவு மனிதனுக்கு நிச்சயம் அவசியம் மீரா. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பார்த்தா, மனசுல தங்கற ஒரே பெண் நீதான்!

    தன் படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகளை உயர்த்தினாள் மீரா.

    கொஞ்சம் பதற்றம் இருந்தது அதில்.

    இரு! நான் பேசி முடிச்சிர்றேன். நாலு வருஷமா அலுவலக ரீதியா மட்டுமே உன்னை அணுகியிருக்கேன். அப்ப மெல்ல மெல்ல என் இதயக் கதவுகளை ஓசைப்படாம திறந்துட்டு, உள்ளே போய் நீ உட்கார்ந்த விவரம் இப்பத்தான் எனக்குப் புரியுது மீரா. என்னையறியாம உன்மேல எனக்கொரு ஈர்ப்பு இருக்குனு இப்பத்தான் புரிஞ்சுகிட்டேன். எனக்கு நானே ஒரு மாசமா கேள்விகள் கேட்டு. விமர்சனம் பண்ணி, தெளிஞ்சு ஒரு முடிவுக்கு வந்த பின்னாலதான் உன்கிட்ட பேச வந்திருக்கேன் இப்ப. யெஸ் மீரா... எனக்கு நீ வேணும்… என் மனைவியா நீ மட்டுமே வர முடியும்! என்ன சொல்றே!

    மீரா எழுந்து கொண்டாள்.

    ஏன் மீரா?

    ஸாரி சார்! இது வாழ்க்கை! வினாடி முள் ஒரு முறை சுத்தி வர்றதுக்குள்ள தீர்மானிக்க முடியாது இதை!

    தெரியும் மீரா! எனக்கும் அது தெரியும். என் எண்ணத்தை நான் சொல்லிட்டேன். பதிலைச் சொல்ல எத்தனை நாள் உனக்கு அவகாசம் வேணும்?

    நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் மீரா.

    சம்மதம்னு சொல்லத்தான் அதிகபட்சம் அவகாசம் வேணும். வேண்டாம்னு மறுக்க அவகாசம் எதுக்கு?

    மீரா...?

    ஸாரி! உங்க விருப்பத்தை நிறைவேத்தற நிலைலே நானில்லை!

    ஏன் மீரா?

    காரணம்னு பெரிசா எதுவும் இல்லை!

    ஒருத்தரை மறுக்க, நிராகரிக்க நிச்சயமா காரணம் இருக்கணும். எங்கிட்ட என்ன பிடிக்கலை உனக்கு?

    ஒருத்தரை விரும்பும்போது, அல்லது விருப்பம் சுமந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது நிறை குறைகளை அலசும் மனசு. எனக்கு உங்ககிட்ட நாட்டமே இல்லை. அப்புறம் உங்களை அலச வேண்டிய அவசியம் இல்லையே!

    ஏன் நாட்டமில்லை?

    மீரா வாட்சைப் பார்த்தாள்.

    இப்பவே ஆறரை சார். நான் புறப்படணும்!

    உன்னை - என் கார்ல - நானே உன் வீட்ல கொண்டுபோய் ட்ராப் பண்றேன்!

    "ஸாரி ஸார்! இது மாதிரி வசதிகளை ஒரு பெண் ஒப்புக்கறது

    Enjoying the preview?
    Page 1 of 1