Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sumeriar - Indiyar Thodarpu
Sumeriar - Indiyar Thodarpu
Sumeriar - Indiyar Thodarpu
Ebook143 pages56 minutes

Sumeriar - Indiyar Thodarpu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சுமேரியர் - இந்தியர் தொடர்பு’ என்ற இந்த நூலில் நான் 20 ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் உள்ளன. அகநானூறு முதல் விஜய நகர சாம்ராஜ்யம் வரை பேசப்பட்ட இரு தலைப்பறவை இன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகளில் உள்ளது. ரஷ்யாவின் நாணயத்தில் உள்ளது. பல நாட்டுத் தபால் தலைகளிலும் உள்ளது. இதே போல இறைவனின் திருமணங்களை இன்று தமிழ் நாடு முழுதுமுள்ள கோவில்களில் காண்கிறோம். இதுவும் சுமேரியாவில் உள்ளது. கல்லீரல் மூலம் ஜோதிடம் பார்ப்பது, இத்தாலியிலும் பாபிலோனியாவிலும் இருப்பது வியப்புக்குரியது. இது போல பல நம்பிக்கைகள் உலகம் முழுதும் இருப்பது உலக ஒற்றுமைக்கு அடிகோலியது.

Languageதமிழ்
Release dateJul 18, 2022
ISBN6580153508675
Sumeriar - Indiyar Thodarpu

Read more from London Swaminathan

Related to Sumeriar - Indiyar Thodarpu

Related ebooks

Reviews for Sumeriar - Indiyar Thodarpu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sumeriar - Indiyar Thodarpu - London Swaminathan

    http://www.pustaka.co.in

    சுமேரியர் - இந்தியர் தொடர்பு

    Sumeriar - Indiyar Thodarpu

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    முன்னுரை

    1. சுமேரிய கல்யாணம் - இந்து திருமணம் ஒப்பீடு

    2. சுமேரியாவில் கல்லீரல் ஜோதிடம்

    3. கல்லீரல் மூலம் ஹிட்டைட்ஸ், எட்ருஸ்கன் ஜோதிடம்

    4. பாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக் கல்வெட்டுகளும்

    5. பேயை விரட்ட எலியே போதும்! ஹிட்டைட்ஸ் கண்டுபிடிப்பு!

    6. மெசபொடோமியாவில், எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை!

    7. சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!!

    8. ‘மூன்றில் இரண்டு பங்கு இறைவன்; ஒரு பங்கு மனிதன்’ - கில்காமேஷ்

    9. கில்காமேஷ் - இந்துசமய தொடர்பு பற்றி மேலும் சில தகவல்கள்

    10. சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?

    11. சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!!

    12. மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது - இந்துக்கள் உடனே செயல்படவேண்டும்

    13. சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

    14. சுமேரிய இந்திய ஒற்றுமைகள்

    15. இராக்கில் 3000 கடவுள்: இந்துக்கள் போல சிலைக்கு ‘கண் திறக்கும்’ அதிசயம்!

    16. சுமேரியாவில் இந்து புராணக் கதை!

    17. சுமேரியாவில் தமிழ் பறவை

    18. பஹ்ரைன் அதிசயங்கள்

    19. தேள் - ஒரு மர்ம தெய்வம்!

    20. சிரியா நாட்டில் இந்துக் கோவில்!

    21. சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும்

    22. குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை - 1

    23. AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை - 2

    24. AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை - 3

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ. பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஓய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 17 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V. SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    இதழியல்

    வினவுங்கள் விடைதருவோம் (பி.பி.சி. தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    பெண்கள் வாழ்க

    ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? (28 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    வரலாற்று விநோதங்கள்: 27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

    எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம்; பல் பளபளக்க ப்ளூரைட்

    தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

    தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்! (27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    ‘சுமேரியர் - இந்தியர் தொடர்பு!’ (24 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    முன்னுரை

    ‘சுமேரியர் - இந்தியர் தொடர்பு’ என்ற இந்த நூலில் நான் 20 ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் உள்ளன. அகநானூறு முதல் விஜய நகர சாம்ராஜ்யம் வரை பேசப்பட்ட இரு தலைப்பறவை இன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகளில் உள்ளது. ரஷ்யாவின் நாணயத்தில் உள்ளது. பல நாட்டுத் தபால் தலைகளிலும் உள்ளது. இதே போல இறைவனின் திருமணங்களை இன்று தமிழ்நாடு முழுதுமுள்ள கோவில்களில் காண்கிறோம். இதுவும் சுமேரியாவில் உள்ளது. கல்லீரல் மூலம் ஜோதிடம் பார்ப்பது, இத்தாலியிலும் பாபிலோனியாவிலும் இருப்பது வியப்புக்குரியது. இது போல பல நம்பிக்கைகள் உலகம் முழுதும் இருப்பது உலக ஒற்றுமைக்கு அடிகோலியது.

    இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் 2011 முதல் நான் எழுதிய கட்டுரைகள் ஆகும். அவை என்னுடைய பிளாக்குகளில் வெளியான தேதிகளும் கட்டுரை எண்களும் ஒவ்வொரு கட்டுரையிலும் இருக்கும். இவைகளைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். இந்த நூல் அச்சகடித்த வடிவத்தில் வேண்டுமானால் எழுதுங்கள். நான் எழுதிய கட்டுரைகளில் பல படங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த நூலில் ஒரு சில படங்களே இருக்கும். பாபிலோனியா, சுமேரிய பற்றிய நூல்கள் ஆங்கிலத்திலும் வேறு பல அன்னிய மொழிகளிலும் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. தமிழில் மிகச் சில நூல்களே வந்துள்ளன. அந்தக் குறைகளைப் போக்குவதற்கு என் புஸ்தகம் ஓரளவு உதவும் என்று நம்புகிறேன்.

    அன்புடன்

    ச. சுவாமிநாதன், June 2022

    1. சுமேரிய கல்யாணம் - இந்து திருமணம் ஒப்பீடு

    பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

    மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

    இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

    பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

    இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ராமாயணம், சிலப்பதிகாரம்).

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டது. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1