Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaveeran Alexander
Maaveeran Alexander
Maaveeran Alexander
Ebook252 pages1 hour

Maaveeran Alexander

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

வீர வரலாறுகள் பல உண்டு. ஆனால் வீரத்தோடு மனதில் ஈரக் கசிவோடு கூடிய ஒரு ஒப்பற்ற வேந்தனைக் காண்பது என்பது அரிதிலும் அரிது. அந்த ‘அரிது’ என்பதைப் பற்றிப் பிடித்து நிற்பவர் மகா அலெக்சாண்டர்! ‘போரும் வெற்றியும்’ மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு, அதனையும் சாதித்தவர் மாவீரன் அலெக்சாண்டர்! 33 வயதிற்குள்ளேயே தனது லட்சியங்களை நிறைவேற்றி, மரணத்தை முத்தமிட்டவர்!

ஆனால் இறக்கிற தருவாயில்தான் உண்மையான வாழ்க்கை போரிலும், அதனால் கிடைத்த வெற்றியிலும், அது அளித்த பொன், பொருளிலும் இல்லை என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்ந்ததோடு, அதனை உலகிற்கும் எடுத்துரைத்த ஞானியாக இருந்தவர்!

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, சுமார் 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர், இன்னும் உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது வீரமும், ஞானமும் மட்டுமே. மாமன்னர் அலெக்சாண்டரின் வீரவரலாறு பிசிறின்றி தெளிவாகவும், விறுவிறுப்பாகவும், தகவல்கள் நிரம்ப அடங்கப் பெற்றதாகவும் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156708668
Maaveeran Alexander

Read more from Kundril Kumar

Related to Maaveeran Alexander

Related ebooks

Related categories

Reviews for Maaveeran Alexander

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaveeran Alexander - Kundril Kumar

    http://www.pustaka.co.in

    மாவீரன் அலெக்சாண்டர்

    Maaveeran Alexander

    Author :

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1 மகத்தான மாசிடோனியா

    2 பிலிப்

    3 அலெக்சாண்டரின் பிறப்பு

    4 குரு அரிஸ்டாட்டில்

    5 முதல் வெற்றி

    6 தந்தை மகன் உட்பகை

    7 பிலிப் மரணம்

    8 பேரரசர் அலெக்சாண்டர்

    9 போருக்கு முன்...

    10 பாரசீகப் போர்

    11 இந்தியாவை நோக்கி...

    12 போரஸ் மன்னர்

    13 மாவீரனின் மரணம்

    என்னுரை

    வீர வரலாறுகள் பல உண்டு. ஆனால் வீரத்தோடு மனதில் ஈரக் கசிவோடு கூடிய ஒரு ஒப்பற்ற வேந்தனைக் காண்பது என்பது அரிதிலும் அரிது.

    அந்த ‘அரிது’ என்பதைப் பற்றிப் பிடித்து நிற்பவர் மகா அலெக்சாண்டர்!

    ‘போரும் வெற்றியும்’ மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு, அதனையும் சாதித்தவர் மாவீரன் அலெக்சாண்டர்!

    33 வயதிற்குள்ளேயே தனது லட்சியங்களை நிறைவேற்றி, மரணத்தை முத்தமிட்டவர்!

    ஆனால் இறக்கிற தருவாயில்தான் உண்மையான வாழ்க்கை போரிலும், அதனால் கிடைத்த வெற்றியிலும், அது அளித்த பொன், பொருளிலும் இல்லை என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்ந்ததோடு, அதனை உலகிற்கும் எடுத்துரைத்த ஞானியாக இருந்தவர்!

    இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, சுமார் 2 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர், இன்னும் உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது வீரமும், ஞானமும் மட்டுமே.

    மாமன்னர் அலெக்சாண்டரின் வீரவரலாறு பிசிறின்றி தெளிவாகவும், விறுவிறுப்பாகவும், தகவல்கள் நிரம்ப அடங்கப் பெற்றதாகவும் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக நம்புகிறேன்.

    படித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    என்றும் அன்புடன்,

    குன்றில்குமார்

    1 மகத்தான மாசிடோனியா

    இப்போது கிரீஸ்.

    அப்போது இதனை கிரேக்கம் என்பார்கள்.

    இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இருநாடுகளுக்கு இடையே உள்ள ஒரு சிறிய நாடு. ஆனால் பண்டைய நாட்களில் கலை, கல்வி, நாகரீகம், பண்பாடு, அறிவாற்றல் போன்ற அனைத்திலும்  உயர்ந்தோங்கி விளங்கிய நாடு.

    கி.மு. 13ஆம் நூற்றாண்டில் கிரேக்க மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெஸ்ஸாலி என்னும் பகுதியில் இருந்து தெற்குப் புறமாக இருந்த பெலொப்பனேசியாவுக்கு இடம் பெயர்ந்தனர். அந்த நேரத்தில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை ‘அக்கீயர்கள்’ என்று அழைத்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து இயோலியர், ஐயோனியர், டோரியர் போன்ற வேறு சில பிரிவினர்களும் பெலொப்பனேசியாவில் குடியேறத் தொடங்கினர்.

    இவ்வாறு குடியேறியவர்கள் பின்னர் மெல்ல மெல்ல அந்தப் பிரதேசம் முழுவதிலும் தங்கள் ஆதிக்கத்தைக் கட்டி எழுப்பினார்கள். சில காலத்தில் அப்பகுதியின் சொந்தக்காரர் களாகவும் அவர்கள் ஆகிவிட்டனர்.

    நாளடைவில் இப்பிராந்தியத்தில் வசித்த மக்கள் அனைவருமே கிரேக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். இவை முழுவதும் கிரேக்கம் என்று ஒரே தேசமாக அழைக்கப்பட்டாலும், உண்மையில் அது ஸ்பார்ட்டா, தீப்ஸ் போன்ற குட்டிக் குட்டித் தீவுகள் அடங்கிய பல்வேறு சிறுசிறு நாடுகள் இணைந்த ஒன்றாகவே இருந்தது.

    அவ்வின மக்களிடையே நல்ல ஒற்றுமையும் இருக்கவில்லை. ‘நீ பெரியவன், நான் பெரியவன்’ என்ற போட்டி மனப்பான்மை மிகுந்தே காணப்பட்டது.

    குறிப்பாக கிரேக்கத்தின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பிரதேசம் மாசிடோனியா. இங்குள்ளவர்களும் கிரேக்கர்கள் என்றே அழைக்கப்பட்ட போதிலும், அந்நாட்டில் இவர்கள் ‘தாழ்த்தப்பட்ட மக்க’ளாகவே கருதப்பட்டனர்.

    மாசிடோனியாவைச் சேர்ந்தவர்களும் கிரேக்க மொழியைத்தான் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த மொழியைச் சுத்தமாக உச்சரிக்காமல் வேறு சில அன்னிய மொழிகளையும் இதனுடன் கலந்து பாமரத்தனமாகவும், கொச்சையாவும் உச்சரித்தனர். நாகரீகம் அற்றவர்களாகவும், முறையான வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்தத் தெரியாதவர் களாகவும் இருந்தனர்.

    இவ்வாறான காரணங்களால், மாசிடோனியர்களை இதர கிரேக்கர்கள் மரியாதையுடன் நடத்தத் தவறினர். இவர்களை இளக்காரமாகப் பார்த்தனர். தங்களுக்கு இணையானவர்கள் இல்லை என்றும், பெருமளவு தாழ்ந்தவர்கள் என்றும் கருதினர்.

    கிரேக்கர்களின் நாகரீகம் உலகம் முழுவதும் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

    இறைவழிபாடு என்பது இவர்களிடம் மிதமிஞ்சி இருந்தது. கிட்டத்தட்ட நம் இந்தியர்களுக்கு இணையான பக்தி மார்க்கம் உடையவர்களாக அவர்கள் திகழ்ந்தனர்.

    இந்தியர்களைப் போலவே நிறைய தெய்வங்கள் உண்டு. அதாவது கல்விக் கடவுள் சரஸ்வதி என்பது இந்தியர்களுக்கு.  அவர்களுக்கு அத்தீனே. இதேபோல வீரத்திற்கு ‘ஆரெஸ்’, பயணத்திற்கு ‘ஹெர்மஸ்’, நோய் தீர்க்கும் வல்லமைக்கு ‘அப்பல்லோ’... என்று ஏராளமான கடவுள்கள்.

    கோயிலைப் புனிதமானதாக மதித்தனர். குற்றம் புரிந்ததாகக் கருதப்படுகிறவர்களைக் கோயிலின் அருகில்கூட நடமாட விடுவதில்லை. கண்டிப்பு அதிகம்.

    நம்மைப்போலவே கடவுள் சிலைகளுக்கு எண்ணெய் அபி ஷேகம் செய்து ஆராதனை செய்வதும், மண்டியிட்டும் நிலத்தில் வீழ்ந்தும் வணங்குவதும் போன்ற வழக்கங்கள் அவர்களிடம் காணப்பட்டன. ஆனால் ஒரு சிறிய வித்தியாசம். அவர்கள் ‘ஆலிவ்’ எண்ணெயால் தெய்வ விக்ரகங்களுக்கு அபிஷேகங்கள் செய்தனர். காரணம் அங்கு ஆலிவ் மரங்கள் அதிகம்.

    பாம்பு வழிபாட்டை அவர்களும் கடைப்பிடித்தனர். வழி யில் எங்காவது பாம்பைக் கண்டால் கம்பையோ, கல்லையோ எடுப்பதில்லை. மாறாக வழிபடுகிற வழக்கம் இருந்தது.

    மந்திரங்களைக் கற்ற யாரும் கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அரசர், புதிய திட்டம் எதையாவது செயல்படுத்த முனையும்போது முதலில் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்துவிட்டுத் தொடங்குவார்.

    கடவுள் வழிபாட்டையோ, மதக் கோட்பாடுகளையோ கிண்டல் செய்தால், அது ராஜதுரோகமாகக் கருதப்பட்டு, உரிய தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது.

    கடவுள் மீது எந்த அளவிற்குப் பக்தி செலுத்தினார்களோ, அந்த அளவிற்கு விளையாட்டுக்களின் மீதும் அவர்கள் தீவிர பற்று வைத்திருந்தனர்.

    ஒலிம்பியா என்னும் இடத்தில் கி.மு. 776ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற இந்தப் போட்டியை ‘ஒலிம்பியாட்’ என்று அழைத்தனர்.

    ஒலிம்பியாட் போட்டிகளில் கிரேக்கர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது நிபந்தனை. எனவே விளையாடுவதற்காக மைதானத்திற்குள் வருபவர்கள் கிரேக்கர்கள்தானா என்பதை உறுதி செய்த பிறகே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இருப்பதைப் போலவே ஓட்டப்பந்தயம், தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல் என்று அத்தனை விளையாட்டுக்களுமே அப்போதும் உண்டு. போட்டிகள் அனைத்தும் சுட்டெரிக்கும் வெயிலில் நடத்தப்படும்.

    போட்டியில் பங்கேற்பவர்கள் மைதானத்தில் கௌரவிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பரிசளிப்பும் அமோகமாக நடைபெறும்.

    அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு என்ன தெரியுமா?

    ஆலிவ் மர இலைகளால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை!

    கிட்டத்தட்ட 10 நூற்றாண்டுகள் வரை, அதாவது கி.பி. 393ஆம் ஆண்டு வரை ‘ஒலிம்பியாட்’ போட்டிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பின்னர் நின்றுபோயிற்று.

    அப்புறம் கி.பி. 1883ஆம் ஆண்டு கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் என்பவர் ‘இறந்தவர்களின் உரையாடல்’ என்னும் கவிதை ஒன்றை இயற்றினார். அந்தக் கவிதையே மீண்டும் ‘ஒலிம்பியாட்’ போட்டிகளைத் தொடங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. கி.பி. 1886ஆம் ஆண்டு கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸில் தொடங்கிய ‘ஒலிம்பிக்’ போட்டிகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு உலகமே மெச்சி வரவேற்கும் ஒலிம் பிக் போட்டியின் உருவாக் கமே கிரேக்கர்களின் நாகரீகத்தை சிறப்பாக உறுதிசெய்கிறது.

    அறிவு சற்று அதிகமாக நிறைந்தவர்கள் என்பதால் கவிதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர். நம் நாட்டில் மகாபாரதம், இராமா யணம் என்பவை எவ்வாறு புனிதமானதாகக் கருதப்படுகின்றதோ, அதேபோல, அன்றைய நாட்களில் கிரேக்கர்கள் ஹோமர் இயற்றிய இலியட், ஒடிசி ஆகிய நூல்களைப் புனிதமாக மதித்துப் போற்றி வந்தனர்.

    சுத்தம், சுகா தாரத்தைக் கண்களைப் போல நேசித்தனர். கட்டிடக்கலையில் நாகரீகத்தின் உச்சியில் இருந்த கிரேக்கர்கள், தங்கள் வீட்டை மட்டுமல் லாமல், சுற்றுப்புறத்தையும், தங்கள் வீதியையும் சுத்தமாக வைத்திருப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வந்தனர். நேர்த்தியாக உடை அணிதல், முகச் சவரம் செய்து ‘மழமழா’வென எப்போதும் காட்சியளித்தல், உடற் பயிற்சியில் அதிகக் கவனம், ஆலிவ் எண்ணெய்க் குளியல், ஆரோக்யமான உணவு என்பன உள்ளிட்ட வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் தெளிவாகவும், திட்டமிட்டும், கவனத்துடனும் எடுத்து வைத்தனர்.

    வீடுகள் அனைத்தும் வெளிச்சம், காற்றோட்டம், விஸ்தாரம் போன்றவற்றுடன் காணப்படும். நம்மூரின் அந்தக் காலத்து வீடுகளைப்போல முற்றம், சமையல்கட்டு, உணவு அறை என்று தனித்தனியே காணப்படும்.. ஜன்னல்கள் சற்றுக் குறைவுதான் என்ற போதிலும், காற்றும், வெளிச்சமும் போதிய அளவிற்குக் கிடைக்கும் வகையில் அமைந்திருந்தது அதிசயம். ஆனால் அனைத்து வீடுகளிலுமே மண் தரைகள்தான்.

    இந்தியப் பெண்களைப் போலவே கிரேக்கத்துப் பெண்களுக்கும் ஆபரண மோகம் அதிகம். அதிகளவிலான நகைகள் அணிந்தே வெளியே செல்வர்.

    அங்கும் அப்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கையே சிறந்து விளங்கியது.

    குறி சொல்லும் பழக்கம் அதிகம். குறிகேட்பவர்களும் அதிகம்.

    குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் இருந்து திருமணம் செய்வது, மழை வேண்டுவது, கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற நினைப்பது, புதிய தொழில் தொடங்குவது என்று அனைத்துமே பூஜை செய்த பின்னரே நடத்துவதைக் கண்டிப்பான வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    அதேபோல ஏதாவது தீங்குகள் நிகழ்ந்தால் அதனைத் தெய்வக்குற்றமாக நினைத்து அதற்குப் பலி போன்ற பரிகாரங்களும் செய்தனர்.

    வான சாஸ்திர நம்பிக்கையும் அவர்களிடம் ஏராளமாகக் காணப்பட்டது.

    துக்க வீட்டிற்குச் சென்றால் குளித்த பின்னரே வீடு திரும்பும் பழக்கம் காணப்பட்டது. இந்தியர்களைப் போலவே ‘சகுனம்’ பார்க்கும் பழக்கமும் அவர்களிடம் இருந்தது.

    இப்படி இன்றைய இந்தியக் கலாச்சாரத்தை உரித்து வைத்ததுபோல இருந்தது அன்றைய கிரேக்கக் கலாச்சாரம்.

    ஆனால் இந்தக் கலாச்சாரம், மாசிடோனியர்களிடையே சற்று குறைவாகக் காணப்பட்டது. வீட்டிற்குள் நுழையும்போது கை, கால்களை அலம்பிவிட்டுச் செல்லும் பழக்கம்கூட இவர்களிடம் கிடையாது.

    இதுபோன்ற காரணத்தால் மாசிடோனியாவைச் சேர்ந்தவர்களை ‘குறைச்ச’லானவர்களாகப் பார்த்தனர் கிரேக்கத்தின் இதர பிரிவினர்.

    தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுவதைப் பற்றி மாசிடோனியாவின் அரசர்கள் யாருமே அவ்வளவாகக் கவலைப்பட்டதே கிடையாது. கிரேக்கர்களிடம் கைகட்டி பவ்யம் காட்டுவது என்பது ஆண்டவனால் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்றே நினைத்தனர்.

    ஆனால் ஒரேயருவர் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

    மாசிடோனியாவைச் சேர்ந்தவர்களும் பண்பும் நாகரீகமும் உயர் கலாச்சாரமும் கொண்ட உயர்ந்த மனிதர்கள்தான் என்று உறுதிபட நினைத்தார் அவர். கிரேக்கத்தில் மாசிடோனியர்கள் மட்டமானவர்கள் கிடையாது என்று உள்ளூர உறுதியாக நினைத்தார்.

    தங்களின் அருமை பெருமைகளையும், வீரதீரங்களையும், நாகரீக உயர்வுகளையும் வெளிச்சம்போட்டுக் காண்பித்து, ‘கிரேக்கர்களைவிடவும் மேலானவர்கள் மாசிடோனியர்கள்’ என்று கிரேக்கர்களின் வாயாலேயே சொல்ல வைத்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் குமுறினார் அவர்.

    அதனைச் செயல்படுத்தவும் செய்தார். யார் அவர்?

    2 பிலிப்

    அவர்

    பிலிப்!

    யார் அது பிலிப்?

    இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் மாவீரனாக அழைக்கப்பட்டு மக்கள் மனதைத் தொட்டு நிற்கும் மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை.

    அப்போது மாசிடோனியா நாட்டின் அரசர் பெர்டிகாஸ். பெரிய அளவில் சாதனைகள் எதனையும் செய்யாத இவர், பத்தோடு பதினோறாவது அரசராகவே பதவி வகித்து வந்தார்.

    பெர்டிகாஸின் சகோதரர்தான் பிலிப்.

    கிரேக்கர்களைவிட மாசிடோனியர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் கிடையாது என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியை உள்ளுக்குள் நெருப்பாய் வளர்த்துக் கொண்டவர்.

    தனது 15வது வயதில் மாசிடோனியாவின் தலைநகரான பெல்லாவில் இருந்து தீபு நகருக்குச் சென்றார், தன் திறமையை வளர்த்துக் கொள்ள.

    முதலில் மொழி. கொச்சையாகப் பேசுகிறவர்கள் மாசிடோ னியர்கள் என்பதை அகற்றியே ஆக வேண்டும். எனவே தீவிர மொழிப் பயிற்சி. ஆர்வமும், வேகமும் சேர்ந்து இதனை ஒரு வேள்வியைப் போல நினைத்துக் கற்கத் தொடங்கினார் பிலிப்.

    கொச்சை மாறியது. கிரேக்க மொழியில் அற்புதமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.

    மொழிக்குப் பிறகு போர் பயிற்சிகள். ஆயுதங்களை லாவகமாகக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றார். போர் நுணுக்கங்கள் மற்றும் அதன் வித்தைகளைக் கற்றார்.

    மூன்றே ஆண்டுகளில் மிகச் சிறப்பான பயிற்சியைப் பெற்று, அனைவரும் அதிசயக்கத்தக்கவிதமான தேர்ச்சியைப் பெற்றிருந்தார்.

    அவருக்கே முழுதிருப்தி.

    தனது தாயகத்திற்குத் திரும்பினார். அண்ணன் பெர்டிகாஸைச் சந்தித்தார். தனது பயிற்சிகளை விலாவாரியாக எடுத்துரைத்தார். அதனைச் செயல் விளக்கமாகவும் செய்து காண்பித்து அசத்தினார்.

    சகோதரர் அற்புத ஆற்றலுடன் உருமாறி வந்திருப்பதைக் கண்டு வியந்துபோன அரசர் பெர்டிகாஸ், உனக்கு என்ன வேண்டும்? தயங்காமல் கேள். அதனைத் தருவதற்கு நான் காத்திருக்கிறேன் என்றார் உணர்ச்சி பொங்க.

    பிலிப்பும் தயங்காமல் பதிலளித்தார்: இந்நாட்டின் படைத்தளபதியாக அமரும் அரிய வாய்ப்பைத் தாங்கள் எனக்கு அளிக்க வேண்டும்.

    இதைக்கேட்ட மன்னர், தந்தேன் உனக்கு. இப்போது முதல் மாசிடோனியாவின் படைத்தளபதி பிலிப் என்று மொழிந்தார்.

    அதுவரையிலும் அங்கு பெயருக்குத்தான் படை இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்புறம் படை வீரர்களுக்குச் சிறப்பான பயிற்சியை அளிப்பதில் பிலிப் முன்னணியில் இருந்து செயல்பட்டார். தான் கற்ற அனைத்துப் பயிற்சிகளையும் அனைத்து வீரர்களுக்கும் பதினெட்டு வயதே நிரம்பிய அந்த படைத்தளபதி கற்றுக்கொடுத்தார்.

    மாசிடோனிய படை இப்போது சொல்லிக் கொள்கிற அளவிற்குத் தலைநிமிர்ந்து நின்றது.

    இந்நிலையில் கி.மு. 359ஆம் ஆண்டு இல்லீரியா என்னும் பகுதியில் மலை ஜாதி மக்களோடு மாசிடோனியப் படைகள் பெரும் போரை நடத்த வேண்டிவந்தது.

    கடுமையாக நடந்த அந்தப் போரில் மன்னர் பெர்டிகாஸ் வீரமரணத்தைத் தழுவினார்.

    எனவே புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    வழக்கமான முறைப்படி மன்னர் பெர்டிகாஸின் மகன் அமிண்டாஸ் அரசராக முடிசூட்டப்பட்டார்.

    இந்தச் சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிலிப்பின் சொல்படியே அமிண்டாஸ் செயல்பட வேண்டிய நிலை உருவாயிற்று. அரசராக அமிண்டாஸ் இருந்தாலும், நிழல் அரசராக பிலிப்தான் செயல்பட்டு வந்தார். நாட்டின் ஒவ்வொரு முக்கிய முடிவும் பிலிப்பால் மட்டுமே எடுக்கும் நிலை.

    பொம்மை அரசராக அமிண்டாஸ் மாற்றப்பட்டு விட்டதைத் தொடர்ந்து, இராணுவ ரீதியாக நாட்டைப் பலப்படுத்துவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார் பிலிப்.

    அன்றைய காலக்கட்டத்தில் மாசிடோனியா பொருளாதார ரீதியாக அத்தனை வளமாக இல்லை. எனவே பிலிப் நினைத்தது போல படைபலத்தைப் பெருக்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இல்லாத நிலை.

    நிதியைப் பெருக்கிக்

    Enjoying the preview?
    Page 1 of 1