Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udaintha Nilakkal Part 3
Udaintha Nilakkal Part 3
Udaintha Nilakkal Part 3
Ebook285 pages1 hour

Udaintha Nilakkal Part 3

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இனிய வாசகர்களுக்கு வணக்கம்!

ஒவ்வொரு தேசத்தின் சரித்திர பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாத கண்ணீர் கறைகளும் உறைந்து போன உதிரச் சுவடுகளும் இருக்கத்தான் செய்கின்றன...

ஒரு நந்தவனம் இலையுதிர்ந்த கதையை இரவுகளோடு சொல்ல அதைக் கேட்டு இரவானது பனித்துளி கண்ணீர் வடிப்பது போல சரித்திரத்தின் மறைந்த சம்பவங்களை கவிதை நடையில் தொகுக்கும் எழுத்து பயணமே உடைந்த நிலாக்கள் என்னும் உணர்ச்சிவசமான காதல் களஞ்சியத்திற்குள் படிந்து கிடக்கும் உண்மை!

உடைந்த நிலாக்கள் என்பது காதலித்தவர்களுக்காக காதலிப்பவர்களுக்காக காதலிக்கப் போகிறவர்களுக்காக காதலை உணர்ந்தவர்களுக்காக காதலை மதிப்பவர்களுக்காக காதலை அறிந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது!

உடைந்த நிலாக்கள் இப்போது முதல் பாகம், இரண்டாம் பாகம் கடந்து மூன்றாம் பாகத்தினுள் நுழைகிறது!

உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகத்தின் களம் விசாலமானது! சற்றே வியப்பானது!

கிளியோபாட்ரா என்னும் உலகப் பேரழகியின் வெளிச்சத்திற்கு வராத அந்தரங்க வாழ்க்கையின் அபூர்வமான தகவல்களும் - சம்பவங்களும் காட்சிகளும் கற்பனை கலந்த நெசவில் இலேசான அந்தி மழை போன்ற கவிதை நடையில் "ரோமாபுரியில் காதல் தேவதை” என்ற தலைப்பில் தேவி வார இதழில் தொடராக வெளிவந்தது!

உலகில் அதிகமாக சொல்லப்பட்ட பத்து பெயர்களில் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமா ஐந்து பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமாக சொல்லப்பட்ட இரண்டு பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்!

அந்த எகிப்து தேசத்து இளம் நைல் நதி நடந்து சென்ற பாதைகளையும் அது ரோமாபுரி வரை கலங்கடித்த ராஜ்ஜிய ரசனாலயங்களையும் சில ஜீரணிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்யாமல் அப்படி அப்படியே எழுத்துக்களாய் மெழுகி, கிளியோபாட்ரா என்னும் அழகு சூறாவளி சுற்றியடித்த திக்குத் திசைகளை ஒரு கவிதை ஒளிப்பதிவு செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறேன்!

உலகத்தின் வெப்பமான பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வெப்பக் குவியல் எகிப்தில்தான் உள்ளது!

எகிப்து தேசம் என்பது எப்போதுமே வரலாற்றின் ஒரு மர்மத்துவமான மண்ணாகவே இருந்து வருகிறது!

அந்த பாலைவன பூமியின் கொடூரமான வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது நைல்நதி!

உலகின் நீளமான நதியையும் ஆழமான சரித்திரத்தையும் கொண்டது எகிப்து கலாச்சாரம்!

மன்னர்கள் தங்கள் உடல்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விண்ணை உரச கட்டிய பிரமிடுகள் நாளைய உலகத்தையும் பிரமிக்க வைக்கும்! இந்த பிரமிடுகளின் பூமியில்தான் பல காதல் ரகசியங்களும் பல மனித நாகரீகங்களும் புதைந்துள்ளன...

ஒவ்வொரு பிரமிடும் இன்றைய மதிப்பின் படி ஒரு தேசத்தை வாங்கும் அளவில் உள்ளது!

அந்த அந்தரங்கமான அடியிருட்டுக்குள் படிந்து கிடந்த ஒரு அசுரத்தனமான தேவதையின் உயிர்த்துடிப்புள்ள உண்மைகள்தான் இந்தப் புத்தகம்!

அன்புடன்
பா. விஜய்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127104424
Udaintha Nilakkal Part 3

Read more from Pa. Vijay

Related to Udaintha Nilakkal Part 3

Related ebooks

Related categories

Reviews for Udaintha Nilakkal Part 3

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udaintha Nilakkal Part 3 - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    உடைந்த நிலாக்கள் - பாகம் 3

    Udaintha Nilakkal - Part 3

    Author:

    பா.விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    ரோமாபுரியின் காதல் தேவதை

    முன்னுரை

    இனிய வாசகர்களுக்கு வணக்கம்!

    ஒவ்வொரு தேசத்தின் சரித்திர பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாத கண்ணீர் கறைகளும் உறைந்து போன உதிரச் சுவடுகளும் இருக்கத்தான் செய்கின்றன...

    ஒரு நந்தவனம் இலையுதிர்ந்த கதையை இரவுகளோடு சொல்ல அதைக் கேட்டு இரவானது பனித்துளி கண்ணீர் வடிப்பது போல சரித்திரத்தின் மறைந்த சம்பவங்களை கவிதை நடையில் தொகுக்கும் எழுத்து பயணமே உடைந்த நிலாக்கள் என்னும் உணர்ச்சிவசமான காதல் களஞ்சியத்திற்குள் படிந்து கிடக்கும் உண்மை!

    உடைந்த நிலாக்கள் என்பது காதலித்தவர்களுக்காக காதலிப்பவர்களுக்காக காதலிக்கப் போகிறவர்களுக்காக காதலை உணர்ந்தவர்களுக்காக காதலை மதிப்பவர்களுக்காக காதலை அறிந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது!

    உடைந்த நிலாக்கள் இப்போது முதல் பாகம், இரண்டாம் பாகம் கடந்து மூன்றாம் பாகத்தினுள் நுழைகிறது!

    உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகத்தின் களம் விசாலமானது! சற்றே வியப்பானது!

    கிளியோபாட்ரா என்னும் உலகப் பேரழகியின் வெளிச்சத்திற்கு வராத அந்தரங்க வாழ்க்கையின் அபூர்வமான தகவல்களும் - சம்பவங்களும் காட்சிகளும் கற்பனை கலந்த நெசவில் இலேசான அந்தி மழை போன்ற கவிதை நடையில் ரோமாபுரியில் காதல் தேவதை என்ற தலைப்பில் தேவி வார இதழில் தொடராக வெளிவந்தது!

    உலகில் அதிகமாக சொல்லப்பட்ட பத்து பெயர்களில் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமா ஐந்து பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்! உலகில் அதிகமாக சொல்லப்பட்ட இரண்டு பெயர்களிலும் கிளியோபாட்ரா இருக்கும்!

    அந்த எகிப்து தேசத்து இளம் நைல் நதி நடந்து சென்ற பாதைகளையும் அது ரோமாபுரி வரை கலங்கடித்த ராஜ்ஜிய ரசனாலயங்களையும் சில ஜீரணிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளையும் இருட்டடிப்பு செய்யாமல் அப்படி அப்படியே எழுத்துக்களாய் மெழுகி, கிளியோபாட்ரா என்னும் அழகு சூறாவளி சுற்றியடித்த திக்குத் திசைகளை ஒரு கவிதை ஒளிப்பதிவு செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறேன்!

    உலகத்தின் வெப்பமான பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வெப்பக் குவியல் எகிப்தில்தான் உள்ளது!

    எகிப்து தேசம் என்பது எப்போதுமே வரலாற்றின் ஒரு மர்மத்துவமான மண்ணாகவே இருந்து வருகிறது!

    அந்த பாலைவன பூமியின் கொடூரமான வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது நைல்நதி!

    உலகின் நீளமான நதியையும் ஆழமான சரித்திரத்தையும் கொண்டது எகிப்து கலாச்சாரம்!

    மன்னர்கள் தங்கள் உடல்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விண்ணை உரச கட்டிய பிரமிடுகள் நாளைய உலகத்தையும் பிரமிக்க வைக்கும்!

    இந்த பிரமிடுகளின் பூமியில்தான் பல காதல் ரகசியங்களும் பல மனித நாகரீகங்களும் புதைந்துள்ளன...

    ஒவ்வொரு பிரமிடும் இன்றைய மதிப்பின் படி ஒரு தேசத்தை வாங்கும் அளவில் உள்ளது!

    அந்த அந்தரங்கமான அடியிருட்டுக்குள் படிந்து கிடந்த ஒரு அசுரத்தனமான தேவதையின் உயிர்த்துடிப்புள்ள உண்மைகள்தான் இந்தத் தொடர்!

    இந்தத் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகமிக முக்கியமான உணர்வுகளால் உருவாக்கப்பட்டவர்கள்! அதன் விபரத்தை இனி பார்ப்போம்!

    1. கிளியோபாட்ரா:

    இந்தத் தொடரின் கதாநாயகி! பல ஆண்களின் இதயத்தை சின்னாபின்னமாக்கிய வாலிப ஏவுகணை! அதிகமான அறிவும் அதிகமான அழகும் சரிவிகித சாரத்தில் கலந்து செய்த தீ! எத்தனையோ போர்க்களங்களில் வெற்றிப் பதாகை பிடித்தவர்களும் கிளியோபாட்ராவின் கண்களுக்குள் காணாமல் போயிருக்கிறார்கள்! கிளியோபாட்ராவின் வாழ்க்கை எவரும் சந்திக்காத வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் சந்தித்துள்ளது!

    2. சீசர்:

    உலகத்தின் ஒரு பாதியை உருட்டித் தன் கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த மாவீரன்! சீசரின் முக அசைவுக்கெல்லாம் அரசியல் விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தார்கள் ரோமாபுரியில்..... ரோமாபுரியின் ஏகபோக சக்கரவர்த்தியாக திகழ்ந்தாலும் அவர் காலங்கள் கிளியோபாட்ராவின் நகங்களுக்குள் சிறை கிடந்தது!

    3. ஆன்டனி:

    கிளியோபாட்ராவிற்கு நிகரான போர் அறிவும் அரசியல் வியூகமும் கொண்ட மாபெரும் படைத்தளபதி! ரோம் மன்னன் சீசரின் உயிர் நண்பன் போன்றவன்! கத்திகளும் யுத்தங்களும் சீசரின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற லட்சிய வெறியும் கொண்ட போராளி! கிளியோபாட்ராவின் வாழ்க்கையில் நிஜமாக வீசிய காதல் சூறாவளி இந்த ஆன்டனிதான்!

    4. பதினான்காம் பிடோலமி:

    பொதுவாக எகிப்து அரசர்களும் அரசிகளும் ஒரே பெயர் கொண்டே அழைக்கப்பட்டார்கள்! அவர்களை வேறுபடுத்திக் காட்ட ஒன்றாம்- இரண்டாம் என்ற எண்கள் உபயோகப்பட்டன. அந்த வகையில் பதினான்காம் பிடோலமி எகிப்து மன்னனாக ஆசைப்பட்டான்! இவன் கிளியோபாட்ராவின் சகோதரன்!

    5. புரூடஸ்

    ரோம் மன்னர் சபையின் தலைமை அமைச்சர் பதவியில் இருந்தவன்! சீசரின் செல்வாக்குக்கு நிகரான செல்வாக்கை மற்ற சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் பெற்றவன்! சீசரின் வாழ்க்கையில் அடித்த மிகப்பெரிய ஊழிக்காற்று! ரோம் வரலாற்றின் ராஜகம்பீரமான பாதைக்காக உழைத்தவன்!

    6. கேல் பர்னியா:

    ரோம் சாம்ராஜ்யத்தின் மகாராணி! ஆனால் வெறும் அரண்மனை அந்தப்புர விரிப்புகளுக்குள்ளும் - கேளிக்கை விருந்துகளிலும் சீசர் கலந்து கொள்ளும் போது கூட நடந்து வரும் ஒரே ஒரு உரிமையைப் பெற்றவள்! ஆனால் மக்கள் மத்தியில் நேசமுள்ள உறவொன்று இருந்தது! அடுத்த ரோமாபுரி பேரரசனுக்கான வாரிசை பெற்றுத் தராமல் சீசரின் வேதனைக்கு ஆளான ஒரு அபாக்கியவாதி!

    7. நிகோலஸ்:

    ஒரு கறுப்பு நிற மாமிச மலை! மெக்கடியன் இனத்தைச் சேர்ந்த அதிபயங்கர வீரன்! கிளியோபாட்ராவின் அந்தரங்க உதவியாளன்! கிளியோபாட்ராவைப் பற்றி இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாத ரகசியங்கள் கூட அந்த அடிமை நிகோலஸிக்கு தெரியும்! நிகோலஸின் விசுவாசம் கிளியோபாட்ராவின் உயிரை பல வித சந்தர்ப்பங்களில் காப்பாற்றியுள்ளது!

    8. மினார்:

    ரோம் மண்ணில் பிறந்த ஊமை - பிறவி செவிடன்! ஆனால் பேரரசன் சீசரின் உதவியாளன்! சீசரின் நீண்ட கால மார்பு வலிக்கு இவன் கைப்பக்குவமே மாமருந்தாக இருந்தது! மினாரின் அரவணைப்பு சீசரின் உடலுக்கு பல்லாயிரம் போர்க்களங்களில் பாதுகாப்பாய் இருந்திருக்கிறது!

    இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் கிளியோபாட்ரா சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்! இவர்களின் மீதும் கிளியோபாட்ரா என்ற ரகசிய சரித்திரத்தின் மீதும் தான் இந்த தொடர் பயணிக்கவுள்ளது!

    இன்னும் கிளியோபாட்ராவின் பின்னணி பிறப்புடன் கிளியோபாட்ரா வரலாறு ஒரு சந்தன வாசமடிக்கும் சுழல் காற்றாய் தொடரவிருக்கிறது...

    இதற்கு ஒரு மெல்லிய புன்னகையோடு தொடராய் எழுத ஒப்புதல் தந்த தேவி வார இதழ் ஆசிரியர் அவர்களுக்கும், ஓவியங்களால் உயிர் தரும் ஓவியர் ம. செ. அவர்களின் பக்கத்துணைக்கும், நல்லாதரவு அளிக்கவிருக்கும் வாசகர்களின் கண்களுக்கும் என் நன்றிகள்!

    துவக்கத்துடன்,

    பா. விஜய்

    *****

    1

    இந்த பூமியின் வரலாற்றில் இருக்கும்

    நெருப்பும், முதுகில் இருக்கும்

    நிலச்சரிவுகளும்,

    தோளில் இருக்கும் மலைகளும்...

    கையில் இருக்கும் மலர்களும்...

    யாருடைய வாழ்க்கையையாவது

    கதையாய் - பாடலாய்க் காற்றிடம்

    சொல்லிக் கொண்டேதான் இருக்கும்.

    ஓர் இலையின் நுனியிலிருந்து பனி

    சருக்கி விழும் நேரத்திற்குள்

    முடிந்து போன சரித்திரங்களும் உண்டு.

    விண்கற்களின் வயதைப் போலக்

    காலம் கடந்து வாழும்

    வாழ்விலும் உண்டு!

    ஓர் உலகப் பேரழகியின் உயிரோட்டமான

    உணர்ச்சிக்

    Enjoying the preview?
    Page 1 of 1