Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Icekatti Azhagi
Icekatti Azhagi
Icekatti Azhagi
Ebook98 pages7 minutes

Icekatti Azhagi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104789
Icekatti Azhagi

Read more from Pa. Vijay

Related to Icekatti Azhagi

Related ebooks

Reviews for Icekatti Azhagi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Icekatti Azhagi - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    ஐஸ்கட்டி அழகி

    Icekatti Azhagi

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கண்

    காதோரம் சொல்கிறேன்!

    நீ இல்லாவிட்டால்... நீ இருந்தால்...

    சந்தேகங்கள்...

    அவள் எழுதுகிறாள்...

    தீயில் பூ பூவில் தீ

    சுவாசத்தை பரிமாறிக்கொள்வோம்

    கனவில் நீ!

    உயிர் எழுத்து

    ஒரு பூ கனவு காண்கிறது!

    ஈரமான தீ

    வந்துபோகிறவர்களுக்கு ஷாஜஹான்...

    ஒரு சொட்டுக் கண்ணீர்....

    வானவில் நகல்

    சருகு வாசம்

    மெட்டியை விட சின்னது பூமி!

    அந்த நூலகத்தில்...

    நீயும்... நானும்...

    நிலவில் வானவில்

    கண்

    அவள் கண்களில் ஒளி உதயம்

    அதை சந்திக்க பயம்

    சமுத்திரத்திற்குள்

    ஒரு சூரியன் விழுந்து

    தழும்புவது போல

    அவள் கண்ணுக்குள்ளே மிதக்கிறது

    அந்த ஒளி!

    ***

    குறும்பு பார்வை பார்ப்பாள்

    என் குருதி மெல்ல

    உறை நிலைக்குப் போய்

    உருகு நிலைக்குத் திரும்பும்!

    காதல் பார்வை பார்ப்பாள்

    என் இதயத்தை யாரோ

    குளிர்சாதனப் பெட்டிக்குள்

    கூட்டிக்கொண்டு போவார்கள்!

    கேலிப் பார்வை பார்ப்பாள்

    ஒரு தீ

    குப்பென்று என்னுள் கனலும்..

    வெல்லும்!

    கெஞ்சல் பார்வை பார்ப்பாள்

    திடவமாய்...

    Enjoying the preview?
    Page 1 of 1