Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalai Nesikkirean...!
Kaadhalai Nesikkirean...!
Kaadhalai Nesikkirean...!
Ebook239 pages50 minutes

Kaadhalai Nesikkirean...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலை நேசிக்கின்றேன் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம். இன்றைய அறிவியல் பூர்வமான கம்ப்யூட்டர் தொழில் நுட்ப யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும், அன்றாட மனித வாழ்வில் குடும்ப சூழ்நிலைகளில் ஏற்படுகிற மனதாங்களும், மனப் போராட்டங்களும், பிரச்சனைகளும், தொல்லைகளும், துயரங்களும் அநுபவித்து, சூழ்நிலை கைதியாக வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.

காரணம் கணவன் மனைவிக்குள், காதலன் காதலிக்குள் ஏற்படுகிற விரிசல்களும், ஏற்றத் தாழ்வுகளும் நீதிமன்றத்தில் தீர்ப்புகளுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் மனுக்கள் ஏராளம்! ஏராளம்!!…

எனவே, காதல் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அன்றாடம் மழுங்கடிக்கப்பட்டு, பொருளாதார வசதி வாய்ப்புக்களை தேடுவதிலும் உருவாக்குவதிலும் அக்கறை செலுத்தப்பட்டு நடைபிணமாக திரிந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

ஆகவே,காதலால் நேசிக்கப்படுவது காதலியை மட்டுமல்ல...!

தாய், தந்தை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் கூடத்தான் என்பதனை வலியுறுத்தவே,இது நல்ல வாய்ப்பாக கருதி, சிறிய முயற்சியோடு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580124706788
Kaadhalai Nesikkirean...!

Read more from M.P.Natarajan

Related to Kaadhalai Nesikkirean...!

Related ebooks

Reviews for Kaadhalai Nesikkirean...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalai Nesikkirean...! - M.P.Natarajan

    https://www.pustaka.co.in

    காதலை நேசிக்கிறேன்...!

    Kaadhalai Nesikkirean...!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம்!

    நான் எழுத்து பணியில் தொடர்ந்திட, ஆக்கமும் மன ஊக்கமும் தந்த வாசக பெருமக்களுக்கு என்ன நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் உரிதாக்குகிறேன்.

    காதலை நேசிக்கின்றேன் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம். இன்றைய அறிவியல் பூர்வமான கம்ப்யூட்டர் தொழில் நுட்ப யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும், அன்றாட மனித வாழ்வில் குடும்ப சூழ்நிலைகளில் ஏற்படுகிற மனதாங்களும், மனப் போராட்டங்களும், பிரச்சனைகளும், தொல்லைகளும், துயரங்களும் அநுபவித்து, சூழ்நிலை கைதியாக வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.

    காரணம் கணவன் மனைவிக்குள், காதலன் காதலிக்குள் ஏற்படுகிற விரிசல்களும், ஏற்றத் தாழ்வுகளும் நீதிமன்றத்தில் தீர்ப்புகளுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் மனுக்கள் ஏராளம்! ஏராளம்!!…

    எனவே, காதல் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அன்றாடம் மழுங்கடிக்கப்பட்டு, பொருளாதார வசதி வாய்ப்புக்களை தேடுவதிலும் உருவாக்குவதிலும் அக்கறை செலுத்தப்பட்டு நடைபிணமாக திரிந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

    ஆகவே,காதலால் நேசிக்கப்படுவது காதலியை மட்டுமல்ல...!

    தாய், தந்தை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் கூடத்தான் என்பதனை வலியுறுத்தவே,இது நல்ல வாய்ப்பாக கருதி, சிறிய முயற்சியோடு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    என்னை உருவாக்கிய பெற்றோர், உற்றார், உறவினர்கள், சுற்றார்கள், நண்பர்கள் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குவதில் பெருமையோடு மகிழ்ச்சியடைகிறேன்.

    என்றும் உங்கள் ஆதரவு கரத்தோடு

    அன்புடன்,

    மு.ப.நடராசன், M.A.,(SD), M.B.A., M.H.R.M.,

    ***

    காதலை நேசிப்பேன்!

    கவிதை துளியாய் உன்னை தீண்டி

    கனவு தொல்லை கொடுப்பேன்!

    கண்கள் பேசும் வார்த்தையை

    அறிந்து காதல் மழை பொழிவேன்!

    உள்ளம் சொல்லும் மொழி கேட்டு

    உல்லாசம் அறிவேன்!

    உலகம் உள்ள வரை

    உயிரோடு இருந்து...

    காதலை நேசிப்பேன்!

    கள்ளம் கபடம்

    இல்லாத காதலை

    என் கவனத்தில் மேற்கொள்வேன்!

    கனவே நிஜம் என்று

    வர்ணனை கொடுப்பேன்!

    உனது மவுனம்

    சொல்லும் வார்த்தை கேட்டு

    வார்த்தை ஜாலமாய்

    கீதம் இசைப்பேன்!

    வானவில் தோரணத்திற்கு

    இன்றும் அதிகம் வர்ணம் பூசுவேன்!

    தென்றல் வந்து

    உன்னைத் தீண்டும் ரகசியத்தை

    அறிந்து செந்தமிழ் பாட்டெடுப்பேன்!

    குயிலின் இசையறிந்து

    இதமாய் மழையில்

    நனைந்து கீதம் இசைப்பேன்!

    ***

    பார்த்தேன்! ரசித்தேன்!

    அவளை பார்த்தேன்!

    ரசித்தேன்! பழக நேரமில்லை...

    அவளை பார்த்த போது

    எனக்கும் காதல் மலர்ந்தது!

    அவளை ரசித்தேன்!

    இயற்கையோடு இணைத்து...

    அவளை ரசிக்க மனம் இனிக்கும்!

    அவளை பார்க்கும் போது

    மனம் பரவசமடையும்!

    அவளை பார்த்த பின்பு தான்

    என்னை நான் ரசிக்க முடிந்தது!

    அவளை நான்

    ஒருமுறை பார்த்தது தான்,

    ஆனால், ஒரு நாளுக்குள்

    ஓராயிரம் நினைவுகளில்

    பார்க்கிறேன்! ரசிக்கிறேன்!

    ***

    எல்லாம் அவளுக்காக...

    நீங்காத நினைவுகள்

    மலரும் உணர்வுகளாய்...

    மனதில் மகிழும் விதத்தில்

    மாற்றங்கள் நிகழ்கின்றன!

    கனவுகள் உன்னை தேடி

    மகிழும் போது மகிழ்ச்சிகள்

    கண்கொள்ளா...

    காட்சி பொருளாகின்றன!

    எண்ணற்ற சிந்தனைகள்

    வண்ணமிகு கோலமிட்டு

    வானவில்லை வர்ணிக்கின்றன!

    ஏற்றமிகு காதல் கவிதைகள்

    மனதில் பதிகின்றன!

    சீரிய சிந்தனை திகட்டாத

    மிளிர்வுடன் பொழிவு பெறுகின்றன!

    வசந்தகால உணர்வுகள்

    வைகறை தென்றலில்

    வலம் வருகின்றன!

    இசையும் நயமும்

    இன்பமும் துன்பமும்

    கலந்து இன்னிசை பாடுகின்றன!

    ***

    உயிர் ஜீவனாய்...

    என் ஜீவராகம்

    உன்னை தேடி தேடி போகும்!

    என்னாளும் தானே கவிதைகள் எழுதி

    உயிர் ஜீவன் வாழும்!

    உன்னைத் தான்,

    என்றும் நலம் விசாரிப்பேன்!

    எனக்குள் தானே

    அதனையும் கேட்கிறேன்!

    என்னை நானே மறந்து

    என் கண்ணை மறந்து

    உன் ஜீவனாய் வாழ்கிறேன்!

    ஏற்றமிகு காதலை

    என்றும் வர்ணணை கொள்கிறேன்!

    வானவில்லில் ஊஞ்சல் கட்டி

    உன்னை வாழ்த்தி பாடுகிறேன்!

    இதய வாசலில் கோலம் போட்டு

    கொஞ்சும் தமிழில் வர்ணம் பூசுகிறேன்!

    அன்பே! ஆருயிரே!

    ஆசை தாகம் தீர்த்து விடு!

    அழகே! பேரழகே!

    அந்திமாலை பொழுதினால்

    என் வசம் தஞ்சம் அடைந்து விடு!

    மனம் விட்டு பேசலாம்!

    மணிக்கணக்காய்

    இருவரும் காத்திருக்கலாம்!

    ***

    காதல் உணர்வு...

    காதலை நேசிக்கிற

    உணர்வு சந்தோசமடையும்!

    கனவை ரசிக்கிற

    தன்மை காதலுக்கு உண்டு!

    காதலுக்கு உன்னதமானவள்...

    அவள் தான்!

    அவளின் ஆசை கனவுகள்

    நிறைவேறட்டும்!

    அன்பின் சுவாசம்

    காதலில் இருக்கிறது!

    காதலை நேசிக்க... நேசிக்க...

    மனதில் புன்னகை பூக்கும்!

    கவிதை வாசிக்கிற சுகம்

    தனிமையில் புதுமையானது!

    நேசத்தை உஷ்னப்படுத்துகிற சக்தி

    காதல் உணர்வுக்கு உண்டு!

    எல்லையில்லா சந்தோசம்

    மனதில் உள்ளது என்றால்,

    காதலின் தூண்டுதலும் தான்!

    நான் நீண்ட தூரம் செல்வதற்கு

    காதல் ஒரு துணைக்கோல்!

    நாம் பயணம் செல்கிற பாதையில்

    காதல் மென்மையான

    பூக்களை தூவியிருக்கும்!

    கனவுகளை ரசிக்கிற தன்மை

    காலத்தின் தன்மையில் மாறுபடும்!

    ***

    புனிதத் தன்மை...

    காதல் என்றும் தோற்றதில்லை!

    காதலர்கள் தோற்று போகிறார்கள்!

    காதலுக்கு என்றுமே மரணமில்லை!

    கல் தோன்றா,

    மண் தோன்றா காலத்திலிருந்தே,

    இன்று வரை புதுமை படைக்கிறது!

    காதலுக்கு பிறப்பு, இறப்பு கிடையாது!

    காதலுக்கு நேசமும், பாசமும்

    அதிகம் பிடிக்கும்!

    காதலை நேசிப்பதும், சுவாசிப்பதும்

    மிக பெரிய சகாப்தம்!

    காதல் வீழ்வது இல்லை!

    துவண்டு கிடப்பதுமில்லை!

    காதலால் பக்குவப்பட்டவர்கள் ஏராளம்!

    காதலை நேசிக்கும் போது

    அதன் அருமை தெரியும்!

    காதலின் புனிதத் தன்மை

    வெற்றி பெற்றவர்களிடமே உள்ளது!

    ***

    இதயத்தை தழுவு...

    உன்னை நான்,

    ஒரு போதும் மறக்க முடியாது!

    என்னாளும்,

    என் ஜீவன் மறுக்க இயலாது!

    உன்னை நினைக்கும் ஒவ்வொரு

    நாளும், எனக்குள் இனிக்கும்!

    கண்கள் எழுதும் கவிதையை

    என்னால் வாசிக்க இயலும்!

    காதலே... எனக்குள்

    அவள் எப்படி நுழைந்தாள்!

    என விடை கூறு...

    கனவுக்குள் கற்பனையாய்

    கோடி ஆசையாய் சுமக்கிறாள்!

    என்பதை அறிந்து கொள்!

    கிட்ட வருவேன் எட்ட செல்லாதே;

    வெட்கம் தருவேன் கொஞ்சம் நழுவாதே;

    மனசுக்குள் மல்லிகைப்பூ பூக்கும்!

    மாளிகை தோட்டத்தில்

    வசந்தங்கள் பாடும்!

    இனிமையான உலகம்

    இதயத்தை தழுவும்!

    இமைகள் மூடி கண்களில்

    சுவாசம் காணும்!

    என்னையே மாற்றி

    உன்னை தந்தாய்!

    எனக்குள் பேரானந்தம் தந்து

    இம்சை கொடுத்தாய்!

    உள்ளத்தில் நீதான்

    வர்ணம் தருவாய்!

    எனக்குள் ஏனோ

    உறவை நுழைத்தாய்!

    ***

    காதல் பிரவேசத்தில்...

    அவள் என்னை,

    ஓரப் பார்வையாய்...

    பார்த்து கண் சிமிட்டுகிறாள்!

    அவள் பக்கம்

    செல்ல நினைத்தேன்!

    நினைத்த வேளையில்,

    ஓடி மறைந்து விட்டாள்!

    நீ பேசும் மவுன பாஷை

    எனக்கு மட்டும் தான் தெரியும்!

    நீ செய்யும் செய்கைகள்

    எனக்குள் உற்சாகம் தரும்!

    நீ

    Enjoying the preview?
    Page 1 of 1