Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal@Kaadhaligal.com
Kaadhal@Kaadhaligal.com
Kaadhal@Kaadhaligal.com
Ebook88 pages26 minutes

Kaadhal@Kaadhaligal.com

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580127104841
Kaadhal@Kaadhaligal.com

Read more from Pa. Vijay

Related to Kaadhal@Kaadhaligal.com

Related ebooks

Reviews for Kaadhal@Kaadhaligal.com

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal@Kaadhaligal.com - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    காதல்@காதலிகள்.காம்

    Kaadhal@Kaadhaligal.com

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நகரக் காதல்

    பள்ளிக் காதல்

    அலுவலகக் காதல்

    மழைக் காதல்

    பேருந்துக் காதல்

    கோயில் காதல்

    கிராமக் காதல்

    கடலோரக் காதல

    பூங்காக் காதல்

    பிறந்தநாள் காதல்

    கல்லூரிக் காதல்

    இல்லறக் காதல்

    நகரக் காதல்

    நகரம் எப்போதுமே

    நரகம்தான்.

    அது

    உன்னைப் போன்ற

    காதலிகளால்தான்

    சொர்க்கமாகிறது!

    'ஹலோ' என்று

    நீ ஒருமுறை சொன்னால்

    ஒரு கிலோ எடை

    குறைகிறேன் நான்!

    லிப்ஸ்டிக் தடவிய

    உன் இதழ்களின் சுவடுகளை

    சட்டையில் சுமக்கிறேன்

    சலவைக்குப் போடாமல்!

    ஒரு மைக்ரோ வினாடி

    பார்வைக்குள்

    என் ஹார்மோன்களை

    சைக்கோ நிலைக்குத்

    தள்ளுகிறாய்..!

    என் இதயத்தின்

    பீப்... பீப்... ஒலிக்குப் பிறகாவது

    உன் காதலை அதில்

    பதிவு செய்!

    போக்குவரத்து நெரிசலில்

    சிக்னலைப் பார்க்கையிலும்

    உன் ஞாபகத்தில் நான்...

    சிவப்பு விளக்கு உன்உதடாய்..!

    மஞ்சள் விளக்கு உன்முகமாய்...!!

    பச்சை விளக்கு உன்பருவமாய்....!!!

    ஈமெயில் அனுப்பும்

    இளம் மயிலே!

    நீ சிலப்பதிகாரம் அல்ல...

    சிலுசிலு அதிகாரம்!

    நீ மணிமேகலை அல்ல...

    கனிமேகலை!

    நீ வளையாபதி அல்ல...

    வளையா நதி!

    நீ சீவக

    Enjoying the preview?
    Page 1 of 1