Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories
100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories
100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories
Ebook250 pages16 minutes

100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இப் படைப்பு பற்றி...


 


காதலாடுதல், மாப்ள பெஞ்ச் வரிசையில் கோலிவுட் கதை சொல்லி’யின்       “100 ஒன் லைன் கதைகள்” என்கிற மூன்றாவது புத்தகம்.


வெளிவந்த படங்களின் ஒன் லைன் கதைகள் அல்ல. ஹாலிவுட்டில் படத்தின் ஒன் லைன் கதையை சுமார் 30 முதல் 50 வார்த்தைகளில் சுருக்கி சொல்வது தான் லாக் லைன் (log line). அதுவே நம் திரையுலகில் அதை ஒன் லைனர் (one liner) என்பார்கள்.


எனது இந்த ஒன்லைன் கதைகள் விஷுவல் மீடியா படைப்புகளான சினிமா, குறு்ம்படம், தொலைக்காட்சி தொடர் மற்றும் சிறுகதை, நாவல், திரைக்கதை போன்ற படைப்புகளுக்கு தேவையான கருப் பொருள் தான் இந்த ஒன் லைன் மூலக் கதை.


படைப்புக்கான புத்தம் புது கருவே இதன் உரு. இந்த மூலக்கதை அவரவர் பாணியில், கற்பனைத் திறனோடு எழுத்து அல்லது காட்சி ஊடகங்களுக்கான படைப்பாக்க­வும் உதவும்.


- சுவெகி

Languageதமிழ்
Release dateDec 25, 2021
100 ஒன் லைன் கதைகள்: 100 One Line Stories

Related to 100 ஒன் லைன் கதைகள்

Related ebooks

Reviews for 100 ஒன் லைன் கதைகள்

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100 ஒன் லைன் கதைகள் - சுவெகி சுவெகி

    "கோலிவுட்

    கதைசொல்லி" யின்

    100

    ஒன்லைன் கதைகள்

    ONE HUNDRED MOVIE LOGLINES

    1

    ஹீரோவுக்கு காதல் திருமணம் தான் இலக்கு. இருபத்தி ஐந்து வயதில் நான்கு பெண்களை காதலித்து. மூன்றாவது பெண்ணோடு

    திருமணம். கலாட்டா காதல்களும், கல்யாணமுமே கதை.

    2

    இருபது வயது வரை ஹீரோவுக்கு தான் ஒரு இரட்டையர் என்பது தெரியாது. அது தெரியும் போது அவன் கொலைக் குற்றவாளி. கொன்றது யாரை, அவர்கள் எப்படி இரட்டையர்கள் என்பதே கதை.

    3

    உலகம் இன்னும் ஒரே வாரத்தில் அழியப் போகிறது. ஒரே மாதிரி கனவு இருவருக்கும். அதில் ஒருவன் நல்லவன். மற்றொருவன் கெட்டவன். அவர்களின் ஒரு வார அலப்பறைகள் தான் கதை.

    4

    இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கல்லூரியில் நட்பாக பழகினாலும் யார் மிக நெருக்கம் என்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு பின்னும் அது தொடர....விளைவே கதை.

    5

    தான் எழுதும் கதை போலவே எதிர் வீட்டில் சம்பவங்கள் நடக்கிறது. க்ளைமேக்ஸ் தவிர மற்றதெல்லாம் நடந்து விட, க்ளைமேக்ஸை எழுத முடியாமல் தவிக்கும் எழுத்தாளரின் முடிவே மீதிக் கதை.

    6

    வாழும் போது வல்லமையோடு திகழ்ந்த ஒரு வலிமையான தலைவர். தன் வாழ்க்கையை வரலாற்றை எழுதி மீண்டும் வீதிக்கே வந்து விடுகிறார். அவரது வரலாற்று பக்கங்கள் தான் விரியும் கதை.

    7

    பொது வெளியில் பெண்ணியம் பேசிக் கொண்டு தன்னை முற்போக்கு பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒரு பிரபல பெண்ணியவாதியின் பிற்போக்கு வாழ்க்கை முறைகளே கதைக் கரு.

    8

    ரேடியோ எஃப்எம் ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டும் ஒளிபரப்பவே முடியவில்லை. காரணத்தை தேடி அலைய கண்கள் விரிய கிடைக்கும் காரணமும், காரணகர்த்தாக்களும் தான் கதை.

    9

    கடல் உள்வாங்கி ஊரை விட்டு பல மைல் தூரத்திற்கு சென்று விட கடல்புறத்தை புறம்போக்கு நிலமாக்கி பட்டா போட்டு விற்று புது நகரமாக்கி வாழ்கிறார்கள். கடல் திரும்புவது தான் கதை.

    10

    புகழ்பெற்ற இசையமைப்பாளரின் இளம் உதவியாளர் இசைக் கல்லூரி இறுதியாண்டு பிராஜெக்ட்டில் இசை

    Enjoying the preview?
    Page 1 of 1