Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaperum Cinema Iyakunargal
Maaperum Cinema Iyakunargal
Maaperum Cinema Iyakunargal
Ebook243 pages1 hour

Maaperum Cinema Iyakunargal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார் என்பதெல்லாம் பழம்சொல் - சினிமா எடுத்துப்பார், 100 நாட்கள் ஓட வைத்துப்பார், விருது பெற்றுப்பார், சர்வதேசத் திரைப்படவிழாவில் கலந்து பார், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கிப்பார், இது இன்று அரிதான செயல் - இது இன்றைய சொல்!

நண்பர் ராஜேஷ் இந்த அரிதான செயலை மிக லாவகமாக, நிஜமாக்கிய, உலகத்தின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போட்டு சட்டம் வைத்து நம் வீட்டு வரவேற்பறை ஆணியில் அடித்து நம் கண்ணுக்கு முன் மாட்டியிருக்கிறார் இப்புத்தகத்தில்.

அற்புதமான இயக்குநர்களின் அபூர்வமான படங்களையும், அதை இயக்கி முடிக்க அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பார்க்கும் போது, வாழ்க்கையின் பேராட்டம் நமக்கு மட்டும் அல்ல பெவாலிஹில்ஸில் திரிந்த ஸ்டீவன் ஸ்பீலுக்கும் சினிமா மிகப்பெரிய பேராட்டம்தான் என்பது இவர் எழுத்துக்களில் தெளிகிறது.

எனக்கும், நமக்கும் பரிச்சயமான வுடி ஆலன், ஸ்பீல்பெர்க், ஆங் லீ, ஹிட்ச்காக். ஸ்டீவன் சொடர்பர்க் பற்றிய ஆழமான அழுத்தமான விவரங்கள் மட்டுமல்லாமல் அதிகம் பரிச்சயமில்லாத மைக்கேல் கர்ட்டிஸ், ஸ்டான்லி குப்ரிக், ராபர்ட் வைஸ் ஆகியோர் இயக்கிய அற்புதமான படங்களையும் அந்த இயக்குநர்களின் அபரிதமான அறிவு, திறன், எல்லாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை ராஜேஷ் எளிதான தமிழில் நமக்கு பரிசாக்கியது நம் வரப்பிரசாதம்.

10 வருடமே திரையுலகில் திணறித் தடுக்கி, முடிவில் "நான் உழைத்தேன். ஆனால் இந்தத் துறை எனக்கு என்ன கைம்மாறு செய்தது'' என்று சாடுபவர்கள் நடுவில், தன் 30 வருட அனுபவத்தை, ராஜேஷ் இழைத்து ஒரு அரிய, போற்றத்தக்க புத்தகத்தை உருவாக்கியது அவர் முழுமையை முதிர்ச்சியைக் காட்டுகிறது.

60 வருட வாழ்க்கையை 60 நிமிடங்களில் நம் கண்முன் காவியமாக, ஓவியமாக, திரைச்சுருளில் லாவகமாக அடக்கும் பிரம்மாக்கள் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் இயக்குநர்கள்.

நண்பர் இயக்குநர் சேகர் கபூர் சொல்லுவார், "திரைப்படத்தை இயக்குவது சாதாரண மனிதர்களால் இயலாத காரியம். வெறியும் உழைப்பும், அட்ரீனலின் சுரப்பு நீர் மனிதனைத் தூக்கிச்செல்லும் தன்மையும் மட்டுமே ஒரு திரைப்பட இயக்குநரை இந்த அசாதாரணமானப் பணியைச் செய்ய வைப்பது" என்று.

அதுபோன்ற இயக்குநர்கள் பிறந்த விதம், வளர்ந்த சூழல், அவர்கள் நடந்த பாதை - சந்தித்த பிரச்சினைகள் எல்லாவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பை இப்புத்தகத்தின் வாயிலாகப் பெற்ற நாம், அதிர்ஷ்டசாலிகள்.

ஆண்டிப்பட்டியில் பிறந்த ஒரு இளைஞன், இயக்குநர் கனவுகண்டு மெய்ப்படுவதுதான் பெரிய சாதனை, அவன் அனுபவித்ததுதான் சோதனை என்ற குறுகிய வட்டத்தில் இருக்கிறோம்.

ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிறந்த ரிச்சர்ட் ஆட்டன்பரோ, சிசில் பி-டிமிலி, ஜான் ஃபோர்டு இவர்களும் முட்பாதையும், கற்பாதையும் பெரியவர்களுடைய இழிச்சொல்லையும் கடந்து வந்த நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான்.

ஆனால் அசாதாரணத்தை, வெகு சாதாரணமாக சாதனையாக்கி உலகத்தின் மிகச்சிறந்த படங்களை நமக்குத் தந்துவிட்டு ஒரு ஆசிரியரின் இடத்தில் நின்று நமக்கு வாழ்க்கைப் பாடம், படம் வாயிலாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு நன்றி. எழுதிய நண்பர் ராஜேஷுக்கு வாழ்த்துக்கள்.

சுஹாசினி

திரைப்படக் கலைஞர்

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131605151
Maaperum Cinema Iyakunargal

Read more from Actor Rajesh

Related to Maaperum Cinema Iyakunargal

Related ebooks

Reviews for Maaperum Cinema Iyakunargal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaperum Cinema Iyakunargal - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    மாபெரும் சினிமா இயக்குநர்கள்

    Maaperum Cinema Iyakunargal

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    அறிமுக உரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    பாராட்டுரை

    என்னுரை

    ஜீன் கெல்லி - Gene kelly (1912-1996)

    வாரன்பேட்டி - Warren Beatty (Born 1937)

    ஜான் கேஸவெட்ஸ் - John Cassavetes

    விக்டர் ஃப்ளமிங் - Victor Fleming (1883-1949)

    பிராங் காப்ரா - Frank Capra (Born 1897)

    சார்லி சாப்ளின் - Charlie Chaplin (1889-1977)

    ஜார்ஜ் லூகாஸ் - Geroge Lucas (1944-)

    பஸ்டர் கீட்டன் - Buster Keaton (1895-1966)

    ஆர்சன் வெல்ஸ் - Orson Welles (1915-1985)

    ஜார்ஜ் ஸ்டீவென்ஸ் - George Stevens (1904-1975)

    ஜோசப் எல் மேன்கிவிஸ் (Joseph L Mankiewicz-Born 1909)

    ஃபிரிட்ஸ் லாங் - Fritz Lang (1890–1976)

    ஸ்டான்லி குப்ரிக் - Stanley Kubrick (26-7-1928 to 7-3-1999)

    ஆர்தர் பென் - Arthur Penn (Born-1922)

    டேவிட் லீன் - David Lean (25-3-1908 to 16-4-1991)

    நிக்கோலஸ் ரே - Nicholas Ray (7-8-1911 to 16-6-1979)

    ஃபிரட் ஜென்னிமான் - Fred Zineer mann (29-4-1907 to 14-3-1997)

    ஜான் ஸ்டர்ஜஸ் - John Sturges (Born-1911)

    ராபர்ட் வைஸ் - Robert Wise (1914-2005)

    ஊடி ஆலன் - Woody Allen (Born 1935)

    ஜான் ஹஸ்டன் - John Huston (5.8.1906 to 28.8.1987)

    ஜான் ஃபோர்டு - John Ford (1.2.1895 to 31.8.1973)

    டி.டபிள்யூ. கிரிஃபித் - D.W.Griffith (22.01.1875 to 21.07.1948)

    ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - Alfred Hitchcock (1899-1980)

    பிரான்சிஸ் ஃபோர்டு கொப்பாலோ - Francis Ford Coppola (Born 1939)

    ரிச்சர்டு அட்டன்பரோ - Richard Attenborough (Born 1923)

    சிசில் பி டெமிலி - Cecil B De Mille (Born 1881)

    மைக்கேல் கர்ட்டிஸ் - Michael Curtiz (1888-1962)

    ஆங் லீ - Ang Lee

    ஜேம்ஸ் காமரூன் - James Cameron

    ஜோனதான் டெம்மி - Jonathan Demme

    மார்ட்டின் ஸ்கோர்சிஸ் - Martin Scorsese

    மெல் கிப்ஸன் - Mel Gibson

    பால் வெர்ஹோவென் - Paul Verhoeven

    குவென்டின் டரன்டினோ - Quentin Tarantino

    ஸ்டீவன் சொடர்பெர்க் - Steven Soderbergh

    ஸ்டீவன் ஸ்பீல்பர்க் - Steven Spielberg

    டிம் பர்ட்டன் - Tim Burton

    ஆசிரியர் பற்றி…

    பதிப்புரை

    புகழ்பெற்ற திரைப்படக்கலைஞர் ராஜேஷ் அவர்கள் திரைப்பட நுணுக்கங்கள் பலவற்றை நன்கறிந்தவர். சினிமாவின் ஆற்றலை நன்கு உணர்ந்தவர். சினிமாவைச் சமூக முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்.

    சினிமா நூல்கள் பலவற்றைப் படித்தவர், தொடர்ந்து ஆர்வமுடன் படித்து வருபவர். வெளிநாட்டு சினிமா கலைநுட்பங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க வேண்டும் என்ற தெளிந்த கருத்தோட்டம் கொண்டவர்.

    தலைசிறந்த உலகத் திரைப்படங்களை சலிப்பின்றி பார்த்து ரசிப்பவர்; கற்றுத் தேர்ந்தவர்.

    நான் கண்ட சீனா, உலகம் போற்றும் திரைக்காவியங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ள திரு. ராஜேஷ் எழுதியிருக்கும் மற்றொரு நூல்தான் மாபெரும் சினிமா இயக்குநர்கள் என்ற நூலாகும்.

    உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களான ஜீன் கெல்லி, வாரன் பேட்டி, ஜான் காஸாவெட்ஸ், விக்டர் பிளமிங், பிராங் காப்ரா, சார்லி சாப்ளின், லூகாஸ், பஸ்டர் கீட்டன், ஆர்சன் வெல்ஸ், ஜார்ஜ் ஸ்டீவென்ஸ், ஜோசப் எல் மேன்கிவிஸ், பிரிட்ஸ் லாங், ஸ்டான்லி குப்ரிக், ஆர்தர் பென், டேவிட் லீன், நிக்கொலாஸ்ரே, ஃபிரட் ஜென்னிமான், ஜான் ஸ்டர்ஜஸ், ராபர்ட் வைஸ், வுட்டி ஆலன், ஜான் ஹஸ்டன், ஜான் ஃபோர்டு, கிரிஃபித், ஆல்பிரட் ஹிட்ச்காக், பிரான்சிஸ்போர்டு கொப்பாலோ, ரிச்சர்டு அட்டன்பரோ, மைக்கேல் கர்ட்டிஸ், ஆங்லீ, ஜேம்ஸ் காமரூன், குவென்டின் டரண்டினோ, பால் வெர்ஹோவன், மார்ட்டிஸ் ஸ்கோர்சிஸ், மெல் கிப்ஸன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஸ்டீபன் சொடர்பர்க், சிசில்மி டெமிலி உள்பட எண்ணற்ற மாபெரும் சினிமா இயக்குநர்களை திரைக்கலைஞர் ராஜேஷ் அறிமுகம் செய்துள்ளார்.

    தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் பயனுள்ள நூல். வாசகர் உலகம் வரவேற்கும் என நம்புகிறோம்.

    - பதிப்பகத்தார்

    *****

    அறிமுக உரை

    புகழ்பெற்ற சில ஆங்கிலப் படங்களின் தலைப்புகள்தான் கீழே உள்ளவை.

    கான் வித் த விண்ட், ஜோன் ஆப் ஆர்க், கிரேட் டிக்டேட்டர், ஜூலியஸ் சீசர், கிளியோபாட்ரா, சாம்ஸன் அண்ட் டிலைலா, டென் கமாண்ட்மன்ட்ஸ், தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய், லாரன்ஸ் ஆப் அரேபியா, காட்பாதர். காந்தி, சைக்கோ, சிட்டிசன் கேன், சவுண்ட் ஆப் மியூசிக், பிரம் ஹியர் டு எடர்னிடி, பிக்மேலியன்

    இவற்றைப்போல மேலும் சில படங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. எல்லாவற்றையும் அங்கு குறிப்பிடுவது முடியாது.

    இந்தப் படங்களைப் பார்த்தவர்கள் பல பேர் இருப்பார்கள். எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் சிலவற்றையாவது பார்த்திருப்பார்கள். இந்தப் படங்களையெல்லாம் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கும் படங்கள் என்று ஒதுக்கிவிட முடியுமா? எல்லாமே காவியங்கள், வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழும் ஓவியங்கள்!

    சினிமா என்பது சிற்பம், சித்திரம், கவிதை இவற்றைப் போல தனி ஒரு மனிதனின் கலைப்படைப்பு அல்ல. கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடிகன், ஒளி ஒலிப் பதிவாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஆடை அணி வடிவமைப்பாளர்கள், ஒப்பனை செய்பவர் என்று பல துறைக் கலைஞர்களின் பங்களிப்புகளை உள்ளடக்கிய ஒரு கலைக்கடல்.

    இப்படிப் பல துறைக் கலைஞர்களிடமிருந்து பல்வேறு கலைத்திறனைத் தன் படத்திற்குத் தேவையான அளவுபெற்று படத்தை உயிரோவியமாக உருவாக்குவது தான் ஒரு திரைப்பட இயக்குனரின் பணி. கூறப்போகும் எல்லா கலைகளின் நுட்பங்களையும் வீச்சையும் ஒரு இயக்குனர் நன்கு அறிந்திருக்க வேண்டும். எனவே ஒரு படத்தின் சிறப்புக்கு இயக்குனர் முழு காரணம்.

    வெள்ளிக்கிழமை தோறும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாமா நம் நினைவில் நிற்கின்றன? அரிதாக ஏதோ ஒன்றிரண்டு தான் நம் நெஞ்சில் பதிகிறது. அந்தப் படங்களை இயக்கிய இயக்குனர்களை நாம் சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா?

    புகழ்பெற்ற படங்கள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக சுவையோடு உங்கள் சிந்தனைக்கும் உணவாக அமைகிறது. சில படங்கள் பல மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கின்றன.

    எனவே இத்தகைய படங்களை இயக்கிய இயக்குநர்கள் அற்புதக் கலைஞர்களாக மட்டுமல்ல, சமுதாயத்திற்கு அருந்தொண்டாற்றிய மாமேதைகளாகக் கருதப்பட்டுப் போற்றப்பட வேண்டும். அந்த முறையில் தான் இந்த நூலின் ஆசிரியர் ராஜேஷ் உலகப் புகழ்பெற்ற சில ஆங்கிலப் படங்களை இயக்கிய இயக்குனர்களின் வாழ்க்கைகளை நமக்கு எடுத்துரைக்கிறார்.

    இன்று தமிழ்ப்படத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறந்த நூல் இது. இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள படங்களையெல்லாம் பார்த்தவர். சினிமாவில் என்ன என்ன சாதிக்கலாம் என்பது புரியும். அனேகமாக தமிழ்ப்பட உலகில் இன்று பிரபலமாக உள்ள அனைவரும் இந்தப் படங்களைப் பார்த்திருப்பார்கள். காரணம் சினிமாவே ஒரு மேலைநாட்டுக் கண்டுபிடிப்பு. ஆரம்பத்தில் நாம் (இந்தியர்கள்) அவர்களுடைய படங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் நம்முடைய சினிமா அறிவை வளர்த்துக் கொண்டோம்.

    இந்த நூலில் காணப்படும் இயக்குநர்களின் வாழ்க்கைகளை பார்க்கும் போது பல பேர் எழுபது வயதைத் தாண்டி எழுபத்தைந்து என்பது தொன்னூறு வயது வரை வாழ்ந்திருப்பது தெரிகிறது. கலைஞர்கள் அதுவும் சினிமாவில் உள்ளவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு காலத்தையும் வாழ்க்கையையும் வீணாக்குவார்கள் என்று நம்மிடம் தவறாய் பதிந்துள்ள ஒரு கருத்தை அது வெகுவாக மாற்றுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரே மனைவியுடன் ஐம்பது அறுபது ஆண்டுகள் வாழ்க்கையின் கடைசி வினாடி வரை குடும்பம் நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தியும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

    இந்தப் புத்தகத்தில் பல சுவையான செய்தித் துணுக்குகளும் உள்ளன. காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ நம்முடைய சத்தியஜித் ரே இயக்கிய சத்ரஞ்ச் கே கிலாடி என்ற படத்தில் ஒரு ஆங்கில ஜெனரலாக வேடமேற்று நடித்துள்ளார். இந்த ரிச்சர்ட் அட்டன்பரோ, சிறந்த இயக்குனர் மட்டுமல்ல மிகச்சிறந்த நடிகரும்கூட.

    லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற புகழ்பெற்ற படத்தை இயக்கிய டேவிட் லீன், லேயிலா தேவி என்ற இலங்கை பெண்ணைக் காதலித்து மணந்து அவருடன் 19 வருடம் வாழ்ந்திருக்கிறார்.

    சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையை பரிகசித்தும் சர்வாதிகாரத்தால் விளையும் தீமைகளை விளக்கியும் சார்லி சாப்லின் இயக்கித் தயாரித்த Great Dictator (ஒரு பெரிய சர்வாதிகாரி) என்ற படத்தில் கடைசிக் காட்சியில் வரும் வசனங்கள் அனைத்தும் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியன. அதை ஒரு வசன இலக்கியம் என்று சொல்வதே பொருந்தும். சாப்ளின் சாதாரணமாக பேசும்படங்களில் நம்பிக்கையில்லாதவர். மெளன படங்களின் காலம் முடிந்து பேசும் படங்கள் வந்த பிறகும் அவர் மௌனப் படங்களையே எடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகுதான் அவர் பேசும் படத்திற்கு சமரசமானார்.

    அப்படிப்பட்டவர் சர்வாதிகாரத்தின் தீமைகளை விவரித்து நெடுநேரம் ஆற்றிய சினிமா உரை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல படங்களுக்கு வசனங்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்து விளக்கியது. தன்னைப் பரிகசித்து எடுத்த இந்தப் படத்தை ஹிட்லரே பார்க்க விரும்பினார் என்றும் படப்பெட்டியைத் திருட்டுத்தனமாக தன் நாட்டிற்குக் கொண்டு வந்து பார்த்தார் என்றும் இந்தக் காலத்துப் பத்திரிகைகளில் செய்திகள் கூறின.

    ராஜேஷ் ஒரு சிறந்த நடிகர். திரைப்படங்களை அணுஅணுவாக ஆய்ந்து ரசிப்பார். புகழ்பெற்ற புதுப்புது செய்திகளைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பம் அறிந்தவர்களைப் போற்றுபவர். அவர் தமிழ் திரைத்துறைக்கு ஆற்றியுள்ள பெருந்தொண்டு இந்த நூல்.

    இந்த நூலில் குறிப்பிட்டுள்ள இயக்குனர்கள் அனைவருமே அமெரிக்காவில் ஆங்கில மொழியில் படமெடுத்தவர்கள். இவர்களைப் போலவே புகழ்பெற்ற படங்களை இயக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக நம்முடைய நாட்டைச் சேர்ந்த சத்யஜித்ரே, சுவீடன் நாட்டைச் சேர்ந்த இக்மெர் பெர்க்மேன், ஐப்பான் நாட்டு அக்கீரா குரோசாவா ஆகியோர்கள் உலகப் புகழ்பெற்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கையையும் தொகுத்து ஒரு புத்தகமாக ராஜேஷ் அடுத்து வெளியிடுவாரானால் அவர் தொண்டு மேலும் சிறப்புறும். ராஜேஷ் அவர்களுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

    அன்பன்

    வலம்புரி சோமனாதன்

    *****

    அணிந்துரை

    வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார் என்பதெல்லாம் பழம்சொல் - சினிமா எடுத்துப்பார், 100 நாட்கள் ஓட வைத்துப்பார், விருது பெற்றுப்பார், சர்வதேசத் திரைப்படவிழாவில் கலந்து பார், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கிப்பார், இது இன்று அரிதான செயல் - இது இன்றைய சொல்!

    நண்பர் ராஜேஷ் இந்த அரிதான செயலை மிக லாவகமாக, நிஜமாக்கிய, உலகத்தின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போட்டு சட்டம் வைத்து நம் வீட்டு வரவேற்பறை ஆணியில் அடித்து நம் கண்ணுக்கு முன் மாட்டியிருக்கிறார் இப்புத்தகத்தில்.

    அற்புதமான இயக்குநர்களின் அபூர்வமான படங்களையும், அதை இயக்கி முடிக்க அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பார்க்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1