Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal
Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal
Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal
Ebook196 pages1 hour

Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குறுகிய காலத்தில் புகழையும் பணத்தையும் கொடுப்பது திரையுலகம். இருப்பினும் வெற்றி பெறுவது கடினம். படத்தின் வெற்றிக்கு திரைக்கதைதான் முக்கிய காரணம். திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் நாம் ஓட வேண்டும். நல்ல திரைக்கதையை எவ்வாறு எளிதில் அமைப்பது என்பதை இந்த புத்தகம் சொல்கிறது. திரைக்கதையை மூன்று வழிகளில் எவ்வாறு அமைப்பது என்பதை ஆசிரியர் விளக்குகிறார். திரைக்கதைக்கான சதித்திட்டத்தை எவ்வாறு நிபுணத்துவம் செய்வது, கட்டமைப்பை எவ்வாறு நிபுணத்துவம் செய்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை எவ்வாறு எழுதுவது என்பதை அவர் மூன்று பகுதிகளாக விளக்குகிறார். திரைத் துறையில் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டி.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136806096
Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal

Read more from Aranthai Manian

Related to Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal

Related ebooks

Reviews for Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    திரைக்கதை எழுத புதுப்புது உத்திகள்

    Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பகுதி – 1

    1. படைப்பாற்றலும் பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதும்

    2. திரைப்பட முன் மாதிரிகளிலிருந்து நல்ல கருப்பொருட்களைக் கண்டெடுத்தல்

    3. தேவதைக் கதைகள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் ஆகியவற்றிலிருந்து நல்ல 'ஐடியா'க்களை விரைவாகக் கண்டெடுத்தல்

    4. விவரிக்கப்படாத அல்லது கதையாக எழுதப்படாத செய்திகளிலிருந்து கருப்பொருளைத் தேடுதல்

    பகுதி – 2

    1. திரைக்கதைக் கட்டமைப்பை முடிவு செய்தல்

    2. திரைக்கதைக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள்

    3. மாற்று விவரித்தல் – கட்டமைப்புகள்: ‘ஃப்ளாஷ் பேக்' முறை

    4. தொடர்ந்து வரும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட (TANDEM NARRATIVE) திரைக்கதைக் கட்டமைப்பு

    5. தொடர்ந்து வரும், வேறுபட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட (SEQUENTIAL NARRATIVE) திரைக்கதைக் கட்டமைப்பு.

    6. பல கதாநாயகர்கள் பல வில்லன்கள் உள்ள திரைப்படங்கள்

    7. திரைக்கதைக் கட்டமைப்புக் குறைபாடுகளே படங்களின் தோல்விக்குக் காரணம்

    பகுதி – 3

    1. திரைக்கதை - வசனம் எழுதுதல் 'ட்ரீட்மெண்ட்' (TREATMENT) எழுதுதல்

    2. வசனம் அல்லது உரையாடல் எழுதுதல்

    3. திரைக்கதை எழுதும் போது மனதில் கொள்ள வேண்டியவை

    4. திரைக்கதை ஒரு 'செய்முறைக் குறிப்பேடு' (INSTRUCTION MANUAL)

    5. நேர நெருக்கடியிலும் சிறப்பாக எழுதுதல்

    முடிவுரை

    இணைப்பு - 1

    முன்னுரை

    திரைக்கதை எழுதுவது குறித்து ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால் இதுவரை தமிழில் மூன்று பேர் மட்டுமே இத்தகைய நூல்களை எழுதியுள்ளனர்.

    1930களில் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தமிழ் பேசும்படக் காட்சி என்ற பெயரில் எண்பது பக்க நூல் எழுதினார். அதில் கூட திரைப்படத் துறையில் உள்ள பல்வேறு பகுதிகளை விவரிக்கும் போது 'சினேரியோ' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதுவது குறித்து பன்னிரண்டு பக்கங்களையே ஒதுக்கியுள்ளார். பின்னர் மணிக்கொடி காலத்து எழுத்தாளரான B.S. ராமையா 1943ல் 'சினிமா?' என்ற பெயரில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். 176 பக்கங்கள் கொண்ட அந்நூலில் படக்கதை என்ற அத்தியாயத்தில் திரைக்கதை எழுதுவது பற்றிய விவரங்களை முப்பத்தைந்து பக்கங்களில் விளக்கியிருக்கிறார். அதற்குப் பல்லாண்டுகளுக்குப் பிறகு அதாவது 2002ல் பிரபல எழுத்தாளர் 'சுஜாதா' அவர்கள் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி என்ற நூல் வந்துள்ளது. இடையே உலகப் புகழ் பெற்ற ‘பேல பேலாஸ்' எழுதிய சினிமாக் கோட்பாடு என்ற நூலை எம். சிவகுமார் என்பவர் 1985ல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

    மேற்சொன்ன இந்த நான்கு நூல்களைத் தவிர வேறெதுவும் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை.

    திரைப்படங்கள் குறித்தும், திரைப்பட உத்திகள் குறித்தும் அதிக அளவில் தமிழ் நூல்கள் வெளி வரவில்லை. அண்மைக் காலங்களில் பதிப்பகத் துறை இத்தகைய நூல்களைத் தமிழில் வெளியிட ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமான வளர்ச்சி என நான் கருதுகிறேன்.

    அதே நேரத்தில் எனக்குள்ள பெரும் பொறுப்பையும் நான் உணர்ந்து கொண்டேன்.

    ஒரு சில தவிர்க்க முடியாத ஆங்கிலப் படங்களுடன், ஏராளமான தமிழ்ப்படங்களையும் அவற்றின் திரைக்கதைகள் எவ்வாறிருந்தன என்பதையும் முன்னுதாரணங்களாகக் காட்டியுள்ளேன்.

    நாற்பது நடிக - நடிகையரைக் கொண்டு, ஒன்பது கால கட்டங்களில் நடக்கும் பதினொரு உட்கதைகளுடன் திரைக்கதை எழுத வேண்டுமானால் அதைக் கட்டமைப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

    ஒரே நேரத்தில் நடக்கும் இணைகோடுகள் போன்ற வேறு வேறு கதைகளை இணைக்கும் திரைக்கதை அமைப்பதற்கான வழிமுறைகளை விளக்கும் நூல்கள் இதுவரை வந்ததில்லை. ஆதலின், இந்நூலில் சில விதிகளையும் கொள்கைகளையும் நிறுவ நான் முயன்றுள்ளேன்.

    இதில் நான் நான்கு பெரும் உத்திகளை சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்; அவை புதிய வகையிலான 'ஃப்ளாஷ்-பேக்' உத்திகள், தொடர்ந்து வரும் பல பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட (TANDEM) திரைக்கதை, தொடர்ந்து வரும் வேறுபட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் கொண்டே (SEQUENTIAL) திரைக்கதை மற்றும் பல கதாநாயகர்கள், பல வில்லன்களைக் கொண்ட ஒரே திரைக்கதை ஆகியவை. இவை குறித்த விரிவான விளக்கங்களையும், அவை எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் விவரித்துள்ளேன். அவை ஒவ்வொன்றிலும் ஒருங்கிணைப்பு வேகம் விறுவிறுப்பு மற்றும் இறுதித் தீர்வு போன்றவற்றைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களையும் விளக்கி எச்சரிக்கை கொடுத்துள்ளேன்.

    இத்தகைய மாறுபட்ட கதைகளில் வரக்கூடிய புதிய பாணியிலான கதாபாத்திரங்கள், அடிக்கடி சிக்கலை உருவாக்கக்கூடிய காட்சித் தொகுப்புகள் ஆகியவற்றையும் அலசியுள்ளேன்.

    அதே நேரத்தில் இத்தகைய புதிய பாணி திரைக்கதைக் கட்டமைப்புகள் கூட எவ்வாறு வழக்கமான ‘மூன்று – அங்க’க் கட்டமைப்பையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றன என்ற வியப்பான செய்தியையும் விவரித்திருக்கிறேன்.

    ஆகவே புத்தம்புது உத்திகளைக் கையாள எண்ணும் எழுத்தாளர்கள் பழைய பாரம்பரிய பாணிகளையும் கசடறக் கற்றிருக்க வேண்டுமென்பது தெளிவு! அதே நேரத்தில், இன்றைய சூழ்நிலையில், பழைய 'மூன்று - அங்கக் - கட்டமைப்பு' எப்படி தோல்வியைத் தரக்கூடும் என்பதையும் எழுத்தாளர்கள் உணர்ந்து கொள்ள இந்நூல் உதவும்.

    இந்நூல் மூன்று வித அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது. முதலில், புத்தம்புது உத்திகளைக் கைக்கொள்ள வசதியான கருப்பொருட்களைத் தேடுவது எப்படி என்ற வகையில் பாரம்பரிய கதைப் பாணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. (முதல் பகுதி: கருப்பொருளைக் கண்டெடுத்தல்)

    அடுத்ததாக, திரைக்கதைக் கட்டமைப்பை முடிவு செய்ய உதவக்கூடிய ‘வளர்ச்சித் திட்டங்கள்' விவரிக்கப்பட்டுள்ளன. (இரண்டாவது பகுதி: திரைக்கதைக் கட்டமைப்பை முடிவு செய்தல்) மூன்றாவது இறுதிப்பகுதியில், திரைக்கதை - வசனம் எவ்வாறு எழுதப்பட வேண்டுமென்ற நடைமுறை விவரிக்கப்படுகிறது.

    காகிதத்தில் திரைக்கதை - வசனத்தை எழுதுவதுதான் முக்கியப்பணி என்றாலும் அதைத் தொடங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளையும், முன்னெச்சரிக்கைகளையும் வழங்கி, முதல் இரு பகுதிகளும் எழுத்தாளரை ஆயத்தப்படுத்துகின்றன.

    புதினம் எழுதுபவர்களுக்கோ, கவிதை எழுதுபவர்களுக்கோ நேர - நெருக்கடி என்று எதுவுமில்லை. ஆனால் திரைக்கதை - வசனம் எழுதுபவர்களுக்கு எப்பவுமே நெருக்கடி தான். இதனால் அவர்களது எழுத்து தரமின்றிப் போய்விட வாய்ப்புண்டு. ஆகவே நெருக்கடி நேரத்தில் எழுத எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளும் மூன்றாவது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

    உண்மையில், ஒரு திரைக்கதை எழுத்தாளர் என்பவர் ஓர் இசைக் கலைஞரைப் போல, அல்லது நடனக் கலைஞரைப் போல, வாய்ப்பு வரும்போதுதான் பணியாற்ற முடியும். அதுவும் உடனடியாக! ஆகவே, அதற்கேற்றார்ப்போல் திறமையை வளர்த்து வைத்துக் கொள்வதுடன் தனது கவனத்தையும் ஒருமுனைப்படுத்தி வைத்துக் கொண்டால் தான், காலக்கெடுவுக்குள் எழுதி முடிக்க இயலும், அதுவும் தரமாக!

    அத்துடன் கற்பனை என்பது, நேர் வினையாற்றுவதாக இல்லாமல் எதிர்வினையாற்றுவதாக இருக்க வேண்டும். கற்பனையைத் தூண்டி விடும் போது அது எதிர்வினை புரிந்து நல்ல பல 'ஐடியா'க்களை விரைந்து நமக்குத் தரும். கற்பனைத் தூண்டலுக்கு உதவி செய்யும் வகையில் திரைப்படப் பாணிகள், புராணக்கதைகள், தேவதைக் கதைகள் 'நீதிக்கதைகள்,’ வரலாற்றுச் சம்பவங்கள் புகைப்படங்களிலிருந்து கூட, திரைக்கதைக்குத் தேவையான 'ஐடியா'க்களைப் பெறமுடியும் என்பதும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே பல திரைக்கதைகளை எழுதியவர்களுக்கு அவர்கள் புரிந்து கொண்டுள்ள பாரம்பரிய மரபுகளுடன் கூடவே புதுப்புது கற்பனைகளையும், விவரித்தல் - கட்டமைப்புகளையும் தெரிந்து கொண்டு தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இந்நூல் ஒரு கையேடாக விளங்கும். அனுபவம் இல்லாத இளைஞர்கள், காகிதத்தில் 'ட்ரீட்மெண்ட்' (Treatment) அதாவது கதையைப் பண்படுத்துவது மற்றும் காகிதத்தில் திரைக்கதை - வசனத்தை எழுதுவது மற்றும் காலக்கெடுவுக்குள் எழுதுவது எப்படி என்பது போன்றவற்றை இந்நூலிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

    புனே மற்றும் சென்னையில் இயங்கி வரும் இரு திரைப்படக் கல்லூரிகளில் மட்டுமே திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

    அந்த இரு கல்லூரிகளிலும் பயில வாய்ப்பு கிட்டாதவர்கள், பட்டறிவின் மூலமே திரைக்கதை எழுதத் தெரிந்து கொள்ளுகிறார்கள். சொல்லப் போனால், பெரும்பாலான படங்களுக்காக 'திரைக்கதை - வசனம்' ஆகியவை முன்கூட்டியே எழுதப்படுவதில்லை என்பது தான் உண்மை. திரைக்கதையானது, இயக்குநரின் மூளையில் மட்டுமே முடிவு செய்யப்படும்; ஆனால் எழுதப்படாது! வசனத்தை படப்பிடிப்புக் களத்திலேயே அப்போதைக்கப்போது எழுதிக் கொள்வார்கள். இப்படி சரியான திட்டமிடுதல் இல்லாததாலேயே பெரும்பாலான படப்பிடிப்புகளில் காலமும், பணமும் அதிக விரயமாகின்றன.

    அண்மைக் காலங்களில்தான் ஒரு முழுப்படத்திற்கான திரைக்கதை - வசனம் எழுதப்பட்டு பல பிரதிகள் எடுக்கப்பட்டு, பைண்டிங் செய்து படத்தில் சம்பந்தப்படும் எல்லோருக்கும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கொடுக்கப்படும் வழக்கம் தொடங்கியுள்ளது.

    இந்த ஆரோக்கியமான வழக்கம் தொடருவதற்கு இந்த நூல் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    - அறந்தை மணியன்

    பகுதி – 1

    திரைக்கதைக்கான கருப்பொருளைக் கண்டெடுத்தல்

    1. படைப்பாற்றலும் பொதுவான பிரச்னைகளைத் தீர்ப்பதும்

    திரைக்கதை எழுதுவதில் என்றும் இருக்கும் இரண்டு பிரச்னைகள் எவை என்றால், 'நல்ல கருப்பொருள் கிடைப்பதும், அதை முறையாகக் கட்டமைப்பு செய்வதும் தான்!' நெருக்குதல், அதிலும் நேர நெருக்கடிதான் இதற்குப் பகையாகும். ஏனெனில், நெருக்கடியினால் திரைப்படப் படைப்பாளி ஒரு பதற்றத்துக்கு உள்ளாகி, அதனால், பலமுறை திரும்பத் திரும்ப கையாளப்பட்ட கருப்பொருள்களையே மீண்டும் தேர்ந்தெடுக்கிறான், அல்லது நம்பகத் தன்மையற்ற கதைகளினால் கவரப்படுகிறான்.

    ஒவ்வோராண்டும் இத்தகைய வழக்கமான கதையம்சங்களையோ, நம்பகத் தன்மையற்ற கதைகளையோ கொண்ட ஏராளமான படங்கள் தயாரிக்கப்படுவதே இந்த பதற்ற உணர்வின் வலிமைக்கு சாட்சியாக இருக்கிறது. இத்தகைய பலவீனமான படங்களை திறமைக் குறைவானவர்கள் மட்டுமே உருவாக்குகிறார்கள் என்றாலாவது சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் தெளிவான உண்மை என்னவெனில், வழக்கமாக மிக உயர்ந்த திறமையும், நாசூக்கும் வெற்றிகரமான படங்கள் எடுத்த வரலாறும் கொண்டவர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1