Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pammal Mudhal Komal Varai
Pammal Mudhal Komal Varai
Pammal Mudhal Komal Varai
Ebook270 pages1 hour

Pammal Mudhal Komal Varai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள். அப்படி மக்கள் மனங்களில் பதிந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தாக்களை வாசகர்கள் மனத்தில் பதியவைக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.
எந்தப் படத்தில் எந்த வசனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டது, எந்த வசனம் மக்களின் மனங்களைக் கவர்ந்தது, ஒரு சில படங்கள் வசனத்துக்காகவே ஓடிய காரணம் என்ன, எந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதினார்கள், அவர்கள் எழுதிய வசனத்தால் பெற்ற சமுதாய அந்தஸ்து என்ன, பிரபலமான வசனம் உருவான விதம், அதற்கு வசனகர்த்தா எடுத்துக்கொண்ட சிரத்தை ஆகியவற்றை இந்நூலில் படித்து அறியலாம்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136806084
Pammal Mudhal Komal Varai

Read more from Aranthai Manian

Related to Pammal Mudhal Komal Varai

Related ebooks

Reviews for Pammal Mudhal Komal Varai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pammal Mudhal Komal Varai - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    பம்மல் முதல் கோமல் வரை

    Pammal Mudhal Komal Varai

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வசன எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்தவர்கள்!

    திரையுலக பிரம்மாக்கள்

    1. பம்மல் சம்பந்த முதலியார்

    2. கே.சுப்ரமணியம்

    3. இளங்கோவன்

    4. ஏ.டி.கிருஷ்ணசாமி

    5. ஏ.ஏ. சோமையாஜுலு

    6. பாவேந்தர் பாரதிதாசன்

    7. கொத்தமங்கலம் சுப்பு

    8. பி.எஸ்.ராமையா

    9. ஏ.எஸ்.ஏ.சாமி

    10. கம்பதாசன்

    11. தஞ்சை ராமையாதாஸ்

    12. எஸ்.டி.சுந்தரம்

    13. சக்தி கிருஷ்ணசாமி

    14. ஏ.கே.வேலன்

    15. டி.வி.சாரி

    16. ஏ.பி.நாகராஜன்

    17. கண்ணதாசன்

    18. ஜாவர் சீதாராமன்

    19. முரசொலி மாறன்

    20. ப.நீலகண்டன்

    21. ஏ.எல்.நாராயணன்

    22. அறிஞர் அண்ணா

    23. எஸ்.அய்யாபிள்ளை

    24. மா.லட்சுமணன்

    25. வித்வான் வே.லட்சுமணன்

    26. துறையூர் மூர்த்தி

    27. எம்.எஸ்.சோலைமலை

    28. மதுரை திருமாறன்

    29. டி. என். பாலு

    30. கோமல் சுவாமிநாதன்

    வசன எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்தவர்கள்!

    உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்களைத்தான்.

    இப்படி மக்களோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களின் கதையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்பவை வசனங்களே. அந்த வசனங்களே மக்களின் உணர்வுகளில் கலந்து, அவர்களை உணர்ச்சியின் பிடியில் ஆழ்த்துகின்றன. சென்ற நூற்றாண்டில் நாடகங்கள் சுதந்திர உணர்வுக்கு வித்திடும் வகையில் செய்திகளைத் தாங்கிச் சென்றன. பின்னர், சமூக சமய முன்னேற்றத்துக்கான செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஊடகமாக நாடகம் திகழத் தொடங்கியது. அதன் வேராக விளங்கியதும் வசனங்களே!

    பிற்காலத்தில் நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள். அப்படி மக்கள் மனங்களில் பதிந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தாக்களை வாசகர்கள் மனத்தில் பதியவைக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.

    எந்தப் படத்தில் எந்த வசனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டது; எந்த வசனம் மக்களின் மனங்களைக் கவர்ந்தது; ஒரு சில படங்கள் வசனத்துக்காகவே ஓடிய காரணம் என்ன; எந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதினார்கள்; அவர்கள் எழுதிய வசனத்தால் பெற்ற சமுதாய அந்தஸ்து என்ன; பிரபலமான வசனம் உருவான விதம்; அதற்கு வசனகர்த்தா எடுத்துக்கொண்ட சிரத்தை - ஆகியவற்றை இந்நூலில் படித்து அறியலாம்.

    கடந்த காலத் திரைப்பட வரலாற்றில் வசனகர்த்தாக்களின் பங்கு என்ன; அன்று அவர்களுடைய வசனநடை எப்படி இருந்தது; அன்றைய வசனநடை இன்றைய திரைப்பட உலகுக்கு எந்தளவிற்குத் துணையாக நிற்கிறது? - போன்ற தகவல்களை அறியக் காத்திருக்கும் வாசகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். வசனம் எழுத வரக்கூடியவர்களுக்கும், பழைய ஏட்டைப்புரட்டி சாட்டையடி வசனத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களுக்கும் இந்நூல் உதவியாக இருக்கும்.

    திரையுலக பிரம்மாக்கள்

    உயிர்களைப் படைத்து உடல்களுடன் உலவவிடுபவன் பிரம்மதேவன் என்றால், திரைப்படங்களின் உயிர்நாடியான கதை மற்றும் உரையாடல்களை எழுதும் எழுத்தாளர்களை ‘திரையுலக பிரம்மாக்கள்' என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை! (அந்த 'உயிர்'களுக்கேற்ற உடல்களைச் செதுக்கும் இயக்குனர்களை 'திரைச் சிற்பிகள்' என்று குறிப்பிடலாம்).

    என்ன காரணத்தாலோ திரையில் முகம் காட்டும் நடிகர்-நடிகையர்க்கும் இயக்குனர்களுக்கும் கிடைக்கும் முக்கியத்துவமும் புகழும் கதை வசனகர்த்தாக்களுக்குக் கிடைப்பதில்லை. இயக்குனர்கள் கதை- திரைக்கதை, வசனம் ஆகியவற்றைத் தாங்களே எழுதிக் கொண்டதாகக் கூறிக்கொள்ளும் வழக்கம் அதிகமானதால், படத்தை இயக்காமல் கதை அல்லது வசனம் அல்லது கதை, வசனம் இரண்டையும் எழுதும் எழுத்தாளர்கள் என்ற இனம், எண்ணிக்கை அளவில் குறைந்துகொண்டே வருகிறது.

    1931-லிருந்து 2006 முடிய வெளிவந்துள்ள ஏறத்தாழ நான்காயிரம் தமிழ்ப் படங்களில் (மொழிமாற்றுப் படங்களைச் சேர்க்காமல்) சுமார் நூறு இயக்குனர்கள் மட்டுமே தாங்களே கதை-வசனமும் எழுதி, படங்களையும் இயக்கியிருக்கிறார்கள். அவர்களைத் தவிர ஏறக்குறைய ஆயிரத்து முன்னூறுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் திரைப்படங்களுக்கென்றே கதை மட்டுமோ, வசனம் மட்டுமோ அல்லது கதை, வசனம் இரண்டுமோ எழுதியிருக்கிறார்கள்.

    திரைப்படங்களுக்கென்று எழுதப்படாத பல இலக்கியவாதிகளின் புதினங்களை அல்லது சிறுகதைகளை அவர்களிடமிருந்து உரிமம் வாங்கி, தயாரிப்பாளர்கள் படமெடுக்க முடிவு செய்யும் போதும், அத்தகைய கதை-வசனகர்த்தாக்களிடம் அக்கதைகளுக்கான உரையாடல்களை எழுதும்படி தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இப்படியாக, திரைப்பட எழுத்தாளர்களின் பங்களிப்பு தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் தேவைப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படுகிறது. இத்தகைய எழுத்தாளர்களின் படைப்பாற்றலையும், பணியையும் விவரிப்பதே இந்நூலின் நோக்கமாகும். இதுவரை, பல்வேறு நடிகர், நடிகையர், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் குறித்தும் திரையுலகுக்கு அவர்கள் ஆற்றிய பணி குறித்தும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கதை-வசனகர்த்தாக்கள் பற்றிய முதல் நூல் அனேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

    இதுவரை வந்துள்ள தமிழ்ப் படங்களுக்கு ஆயிரத்து நானூறுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் கதையோ, வசனமோ அல்லது இரண்டுமோ எழுதியிருக்கிறவர்களில், ஒரு படத்துக்கு மட்டும் எழுதியவர்களே ஐநூறுக்கும் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கு மட்டும் எழுதியவர்கள், மூன்று படங்களுக்கு மட்டும் எழுதியவர்கள் முதல் 125க்கும் அதிகமான படங்களுக்கு வசனம் எழுதிய ஏ.எல்.நாராயணன் வரையுள்ள அத்தனை எழுத்தாளர்களின் பங்களிப்பையும் விவரிப்பது என்பது இயலாத காரியம். பேசும் படங்கள் வரத்தொடங்கிய காலத்திலிருந்து முன்னோடி கதை-வசனகர்த்தாக்களாகத் திகழ்ந்த பம்மல் சம்பந்த முதலியார், கே.சுப்ரமணியம், இளங்கோவன், ஏ.ஏ.சோமையாஜுலு ஆகியோரும் பின்னர் வந்த ஏ.டி. கிருஷ்ணசாமி, ஏ.எஸ்.ஏ.சாமி, கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.டி.சுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், டி.வி.சாரி போன்றோரும் அடுத்து வந்த பி.எஸ்.ராமையா, தஞ்சை ராமையாதாஸ், ஏ.கே.வேலன், கவிஞர் கண்ணதாசன், சக்தி கிருஷ்ணசாமி, அறிஞர் அண்ணா, ஜாவர் சீதாராமன், ஏ.பி.நாகராஜன், 'முரசொலி' மாறன், ப.நீலகண்டன், ஏ.எல்.நாராயணன் போன்றோரும் கதை-வசனகர்த்தாக்கள் என்ற வகையில் தமிழ்த்திரையுலகுக்கு என்ன பங்களிப்பை நல்கியுள்ளனர் - என்பதை இந்நூல் விவரிக்கிறது.

    இயன்றவரை அவர்களது வசன நடை எவ்வாறு இருந்தது? என்பதற்கு சான்று பகரும் வகையில் அவர்கள் எழுதிய வசனங்களின் மாதிரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், முக்கிய நடிகர்-நடிகையர் யார் யார் என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு எழுத்தாளரின் சொந்த ஊர், பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு போன்ற குறிப்புகளும் அவர்களைப் பற்றிய இதரச் சிறப்புச் செய்திகள் இருந்தால் அவையும் இயன்றவரை கொடுக்கப்பட்டுள்ளன.

    மற்றொரு குறிப்பு, இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள அத்தனை எழுத்தாளர்களுமே அமரர்களானவர்கள். அவர்களின் சாதனைகளை முதன்முதலாக இந்த நூலில் பதிவு செய்வதில் பெருமையடைகிறேன். இந்த நூலை மிகச்சிறப்பாக வெளிக் கொணர்ந்திருக்கும் விகடன் பிரசுர பதிப்பாளர் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    - அறந்தை மணியன்

    1. பம்மல் சம்பந்த முதலியார்

    சென்னை நகரையடுத்த பம்மல் என்ற கிராமத்தில் 1876-ல் பிறந்தவர் சம்பந்த முதலியார். தந்தை ப.விஜயரங்க முதலியார், தாயார் திருமதி மாணிக்கவேலு அம்மையார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் பயின்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவராக இருந்த காரணத்தினால் தமது நெருங்கிய நண்பரான வி.வி.சீனிவாச ஐயங்கார் என்பவருடன் இணைந்து 1891-ல் சென்னையில் 'சுகுண விலாச சபா' என்ற பயில் முறை (அமெச்சூர்) நாடகக் குழுவைத் தொடங்கினார். சட்டக் கல்வி முடிப்பதற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட அக்குழுவுக்காக இவர் நாடகங்களை எழுதி, இயக்கி அவற்றில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தபோதும், 1924-ல் சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டாக நியமிக்கப்பட்ட பிறகும் கூட தொடர்ந்து நாடகப் பணிகளில் ஈடுபட்டார்.

    தொழில்முறை நாடகக் குழுக்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட, தம்மைப் போல பல்வேறு பணிகளில் இருந்த உயர்மட்டக் குடும்பத்து இளைஞர்களைத் தமது நாடகக் குழுவில் இணைத்துக்கொண்டு, 1891 முதல் 1936 வரை தொண்ணூற்று நான்கு நாடகங்களை எழுதி இயக்கி நடித்து சாதனை புரிந்திருக்கிறார்.

    பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய பதிமூன்று நாடகங்கள் திரைப் படங்களாக உருவாக்கப்பட்டன.

    முதலாவதாக 'காலவரிஷி' என்ற நாடகம் 1932-ல் ‘காலவா' என்ற பெயரில் படமானது. (1931-ல் வெளிவந்த 'காளிதாஸ்'தான் தமிழ் பேசிய முதல் திரைப்படம் என்றாலும் அப்படத்தின் பல பாத்திரங்கள் தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் உரையாடியதால் முதல் முழுநீள தமிழ்ப் படம் 'காலவா'தான்.) பம்பாய் சாகர் மூவிடோன் என்ற நிறுவனம் தனது ஸ்டுடியோவிலேயே உருவாக்கிய இந்தப் படத்தின் உரையாடல்கள் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக வசனங்களே ஆகும்! பிரபல கர்நாடக இசைப் பாடகர் பி.பி.ரங்காச்சாரி அப்படத்தில் நடித்து, இயக்கியுமிருந்தார்.

    1934-ல் வெளியான 'சதி சுலோசனா' என்ற படத்துக்குத் தனது நாடகக் கதையுடன் உரையாடல்களையும் எழுதி இயக்கினார். கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் சம்பந்தனார் நடிக்கவில்லை.

    இவர் எழுதி நடித்து, மிகப் பிரபல நாடகமான 'மனோஹரா' 1936-ல் முதன் முறையாகப் படமாக்கப்பட்டபோது இவரது மேடைநாடக வசனங்களே பயன்படுத்தப்பட்டன. பம்பாயில் தயாரான அந்தப் படத்தில் இவர் புருஷோத்தம மன்னன் வேடத்தில் நடித்திருந்தார், (பின்னர் 1954-ல் அதே கதையை 'மனோகரா' என்ற தலைப்பில் கலைஞர் மு.கருணாநிதி வசனமெழுத சிவாஜிகணேசன் மனோகரனாக நடித்த திரைப்படம் பெரும் புகழ் பெற்றது).

    அதே 1936-ல் ‘மடையர்கள் சந்திப்பு' என்ற குறும்படத்துக்கு கதை, வசனமெழுதி அதில் சம்பந்த முதலியார் நடித்துமிருந்தார். ‘மகாத்மா கபீர்தாஸ்' என்ற படத்துடன் அந்தக் குறும்படமும் சேர்த்துத் திரையிடப்பட்டது.

    ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தயாரித்த இரண்டாவது படமான 'ரத்னாவளியும்' 1936-ல்தான் வெளியானது. சம்பந்த முதலியாரின் நாடக வசனம்தான் பெரும்பகுதி படத்திலும் பயன்படுத்தப்பட்டது. கல்கத்தாவில் உருவான அப்படத்தில், சம்பந்த முதலியார் நடிக்கவில்லை.

    1935-ல் வெளியான சாரங்கதாரா

    1936-ல் வெளியான லீலாவதி சுலோசனா

    1938-ல் வெளியான யயாதி

    1939-ல் வெளியான ஜோதி ராமலிங்க சுவாமிகள்

    1941-ல் வெளியான சபாபதி, மற்றும் சந்திரஹரி

    1948-ல் வெளியான பிரம்மரிஷி விசுவாமித்திரா, மற்றும் வேதாள உலகம்

    - ஆகிய திரைப்படங்களெல்லாம் சம்பந்த முதலியார் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்களையும் அவற்றின் வசனங்களில் பெரும் பகுதியையும் அடிப்படையாகக் கொண்டு உருவானவைதான். எனினும் இந்த எட்டுப் படங்களிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1