Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raagangalum Thiraipada Paadalgalum
Raagangalum Thiraipada Paadalgalum
Raagangalum Thiraipada Paadalgalum
Ebook201 pages54 minutes

Raagangalum Thiraipada Paadalgalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாடலும் இசையும் முதலில் காதுக்கு இனிமையாக இருக்க வேண்டும். பாடல் கேட்பவர்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டும். அதற்குப் பிறகு தான் பாடகரின் திறமை எல்லாம்!

இத்தகைய தன்மைகள் இல்லாத காரணத்தால் தான் நமது 'கர்நாடக' இசை நிகழ்ச்சிகளை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.

அந்த இசை ஏதோ மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமே என்பது போன்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது.

இனிமையும் எளிமையும் கொண்டு, கேட்பவர்களுக்குப் புரியும் மொழியில் இருப்பதனாலேயே நமது தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மிகவும் பிரபலமாகி உள்ளன.

அந்த வகையில், ராகங்களையும் அவற்றின் அடிப்படையில் அமைந்த திரைப்படப் பாடல்களையும் நூல் வடிவில் பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் செயல் வடிவமே இந்நூல்.

Languageதமிழ்
Release dateAug 9, 2021
ISBN6580136806086
Raagangalum Thiraipada Paadalgalum

Read more from Aranthai Manian

Related to Raagangalum Thiraipada Paadalgalum

Related ebooks

Reviews for Raagangalum Thiraipada Paadalgalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raagangalum Thiraipada Paadalgalum - Aranthai Manian

    https://www.pustaka.co.in

    ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

    Raagangalum Thiraipada Paadalgalum

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை...

    நமது பாரம்பரிய இசைச் செல்வத்தை திரைப்படப் பாடல்கள் வழியாக பாமரருக்கும் கொண்டு சேர்த்த திரையிசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் பாடகர்களுக்கும் பாடகிகளுக்கும்...!

    உள்ளே...

    I. மேளகர்த்தா ராகங்களில்...

    1. தோடி

    2. மாயா மாளவ கௌள

    3. சக்ரவாகம்

    4. நடபைரவி

    5. கீரவாணி

    6. கரஹரப்ரியா

    7. கௌரி மனோகரி

    8. சாருகேசி

    9. ஹரிகாம்போதி

    10. சங்கராபரணம்

    11. ஷண்முகப்ரியா

    12. சிம்மேந்திர மத்யமம்

    13. லதாங்கி

    14. கல்யாணி

    2. ஜன்ய ராகங்களில்...

    1. பூபாளம்

    2. மோஹனம்

    3. ஹம்சத்வனி

    4. பிலஹரி

    5. நாட்டை / கம்பீர நாட்டை

    6. ஆபேரி

    7. ஆபோகி

    8. மத்யமாவதி

    9. புன்னாக வராளி

    10. பந்து வராளி சுப பந்துவராளி

    11. பைரவி

    12. ஸ்ரீ ரஞ்சனி

    13. கேதாரம்

    14. நீலாம்பரி

    15. குந்தள வராளி

    16. சாமா

    17. அமிர்தவர்ஷணி

    18. விஜய நாகரி

    19. பிருந்தாவன சாரங்கா

    20. செஞ்சுருட்டி

    21. "காபி’’

    22. முகாரி

    23. ஹிந்தோளம்

    24. ரீதிகௌள

    25. சாரங்கா

    26. அடானா

    27. ஆரபி

    28. தர்பார்

    29. சித்தரஞ்சனி

    30. சஹானா

    31. ஸாரமதி

    32. திலங்

    33. ஹம்சாநந்தி

    34. மோகன கல்யாணி

    35. மஹதி

    36. மலைய மாருதம்

    37. வசந்தா / லலிதா

    38. ஹம்சநாதம்

    39. சந்திர கௌன்ஸ்

    40. நாத நாமக்ரியா

    மேலும் சில ராகங்களில்...

    2. ‘வாசந்தி’

    3. 'ஆனந்த பைரவி'

    4. 'அமீர் கல்யாணி'

    5. 'ஆஹிர்பைரவ்'

    6. 'நவரசகன்னடா'

    7. 'குறிஞ்சி'

    8. ‘நளின காந்தி'

    9. 'நவ்ரோஸ்'

    10. ‘ஹிந்துஸ்தானி பியாக்'

    11. 'தர்மவதி'

    12. 'சுத்த சாவேரி'

    13. 'தர்பாரி கானடா'

    14. 'ஜோன்புரி'

    15. 'கானடா'

    16. 'சுத்த தன்யாசி'

    17. 'தேஷ்'

    18. 'மாண்டு'

    19. 'பீம்பிளாஸ்'

    20. ‘பஹாடி’

    21. 'பெஹாக்'

    22. 'பாகேஸ்ரீ'

    23. 'கமாஸ்'

    24. 'சிவரஞ்சனி'

    25. 'சிந்துபைரவி'

    திரைப்படங்களில் இசையமைப்பு முறைகள்

    இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் திரைப்படங்கள்

    இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இசையமைப்பாளர்கள்

    இந்த நூல் எழுத உதவிய பிற நூல்கள்

    என்னுரை

    1985ஆம் ஆண்டு திரு K. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘சிந்துபைரவி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில், சங்கீத மேடைகளில் நமது வித்வான்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட வேண்டியதன் அவசியம் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டிருந்தது. அதாவது, என்னதான் இசைத் திறமையிருந்தாலும், கேட்பவர்களுக்குப் புரியாத மொழியில் பாடல்களைப் பாடும்போது பாடப்படும் மொழி தெரியாத நிலையில் அப்பாடல்களை ரசிக்க முடியாமல் போய் விடுகிறது.

    பாடலும் இசையும் முதலில் காதுக்கு இனிமையாக இருக்க வேண்டும். பாடல் கேட்பவர்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டும். அதற்குப் பிறகு தான் பாடகரின் திறமை எல்லாம்!

    இத்தகைய தன்மைகள் இல்லாத காரணத்தால் தான் நமது 'கர்நாடக' இசை நிகழ்ச்சிகளை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. அந்த இசை ஏதோ மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமே என்பது போன்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது.

    இனிமையும் எளிமையும் கொண்டு, கேட்பவர்களுக்குப் புரியும் மொழியில் இருப்பதனாலேயே நமது தமிழ்த்திரைப்படப் பாடல்கள் மிகவும் பிரபலமாகி உள்ளன.

    அப்படியும் நமது பாரம்பரிய இசை மரபு இன்று வரை தொடருகிறதே, அது எப்படி எனில்... அங்கு தான் நமது தமிழ்ப்படப் பாடல்களின் சீரிய தொண்டின் அருமை வெளிப்படுகிறது.

    1931ல் வெளிவந்த காளிதாஸ் என்ற படத்தில் தொடங்கி 2004 டிசம்பர் மாதம் முப்பத்தொன்று வரை 5,965 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இத்தனை படங்களிலுமாக ஐம்பதாயிரத்துக்கும் மேலான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மிகவும் பிரபலமான சிரஞ்சீவித்துவம் பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்களின் வெற்றிக்கான முக்கிய காரணம் தென்னிந்திய மற்றும் வட இந்திய இசைராகங்களில் அவை இசையமைக்கப்பட்டிருந்தது தான்!

    உலகில் எண்பத்தைந்து நாடுகளில் திரைப்படத்துறை இயங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான மொழிகளில் படங்கள் உருவாகின்றன. ஆனால் இந்தியா போன்ற மிகச் சில நாடுகளில் தான் படங்களில் பாடல்களும் பாடல் காட்சிகளும் இடம் பெறுகின்றன. சொல்லப் போனால் இத்தகைய பாடல்களாலும் பாடல் காட்சிகளாலும் திரைக்கதை ஓட்டத்துக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்றும் அத்தகைய காட்சிகளின் போது படத்தின் இயல்பான கதை சொல்லும் பாணி, தேக்கமடைகிறதென்றும் உலகளாவிய திரைப்பட விமரிசகர்கள் கருதுகின்றனர்.

    ஆனால் தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை பாடல்களால், திரைக்கதையோட்டம் தேக்கமடைகிறது என்றே வைத்துக் கொண்டாலும், - மறைமுகப் பயனாக, திரைப்பாடல்கள், பாரம்பரிய இசை மரபு இன்றளவும் தொடர்ந்து நிலவி வருவதற்கு கிரியா ஊக்கியாகப் பயன்பட்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை !

    அது எப்படி சாத்தியமானது என்பதை விளக்குவதுதான் இந்நூலின் நோக்கம். அதாவது பாரம்பரிய இசை ராகங்களின் அடிப்படையில் இசையமைக்கப்பட்ட படப் பாடல்கள், மக்களிடம் பிரபலமானதன் காரணமாக, நமது இசை மரபு காப்பாற்றப்பட, அவற்றின் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்பதை நிறுவுவது!

    நூற்றுக்கணக்கான பாடகர்களும் பாடகிகளும் மரபு சார்ந்த இசையை மட்டும், ராகங்களின் அடிப்படையில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களிலும், அரண்மனைகளிலும், இசை அரங்குகளிலும் பாடி வருகிறார்கள். ஆனால் அப்பாடல்கள் புரியாத மொழிகளில் இருந்தது மட்டுமல்லாது அவற்றில் ’பக்திச்சுவை' தவிர வேறெந்த சுவையும் அனேகமாக இருந்ததில்லை. (நடன நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட பாடல்களில் பக்தியுடன், சிருங்கார பாவமுள்ள பாடல்கள் மட்டுமே இருந்தன, இருக்கின்றன)

    ஆனால் திரைப்படங்களில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் மக்களுக்குப் புரியும் மொழியில் இருந்ததுடன் பல்வேறு சுவைகளையும் சமூகக் கருத்துகளையும், இலக்குகளையும் கொண்டதாக இருந்தன. பக்தி, பாசம், அன்பு, காதல், வீரம், பயம், சோகம், நகைச்சுவை போன்ற பல்வேறு உணர்வுகளையும் படப் பாடல்களில் கலந்து பரிமாறினார்கள் இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும்! இந்த 'வெரைட்டி' (Variety) யால் தான் ரசிகர்களையும் கவர்ந்திழுக்க முடிந்தது.

    பெரும்பாலான தமிழ்ப்படங்கள் பாடல்களினாலேயே வர்த்தக ரீதியில் வெற்றிபெற்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

    பிரமாதமான நடிப்புத் திறமை கொண்டவர் என்று சொல்ல முடியாத நிலையிலும், M.K. தியாகராஜ பாகவதர், தொடர்ந்து ஒன்பது வெற்றிப் படங்களில் நடித்து முன்னணிக் கதா நாயகராக உயர்ந்தது அவரது பாடும் திறமையால் தான்! அவர் பாடி நடித்த அத்தனை பாடல்களும் பாரம்பரிய இசை ராகங்களை அடிப்படையாகக் கொண்டவையே! அந்தப் பாடல்களைப் பெரும்பாலும் இயற்றி இசையமைத்தவர் பாபநாசம் சிவன் அவர்களே! அவர்களிருவருக்கும் பின்புலமாக இருந்தது இசைப் பாரம்பரியம் தான்! பாபநாசம் சிவனைத் தொடர்ந்து எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, சுப்பராமன், G. ராமநாதன் போன்றோரும், பின்னால் வந்த கே.வி. மகாதேவன் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி அடுத்து வந்த இளையராஜா, இன்றைய ஏ.ஆர். ரஹ்மான் வரை, பாரம்பரிய இசை ராகங்களின் அடிப்படையில் பாடல்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

    அவர்களது வெற்றிக்கு பாபநாசம் சிவன், கு.மா. பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ண மூர்த்தி , மருதகாசி, சுந்தர வாத்தியார், கே.பி. காமாட்சி சுந்தரம், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, முத்துலிங்கம், புலமைப் பித்தன், வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் பெருமளவில் உதவியிருக்கிறார்கள்.

    ஆரம்ப ஆண்டுகளில் உரையாடலே இல்லையோ என்று எண்ணும் அளவில் ஒவ்வொரு படத்திலும் ஐம்பது அறுபது பாடல்கள் பாரம்பரிய இசை ராகங்களில் புனையப்பட்டு, பாகவதர், சின்னப்பா, T.R. மகாலிங்கம், K.R. ராமசாமி போன்ற பாடக - நடிகர்களாலும், பின்னர் M.M. மாரியப்பா, தண்டபாணி தேசிகர், திருச்சி லோகநாதன்,

    Enjoying the preview?
    Page 1 of 1