Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinnathirai Varalaru
Chinnathirai Varalaru
Chinnathirai Varalaru
Ebook114 pages44 minutes

Chinnathirai Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்றைய நிலையில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளோ, தொலைக்காட்சியில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப் படங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்காதவர்களோ அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். நமது கைபேசியில் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி களைக் காணக்கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி வந்து விட்டது.
திரைப்படத்தின் நீட்சி (Extension) தான் சின்னத்திரை!
வாமன சின்னத்திரையின் வரலாறு பற்றி காண்போம்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806284
Chinnathirai Varalaru

Read more from Aranthai Manian

Related to Chinnathirai Varalaru

Reviews for Chinnathirai Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinnathirai Varalaru - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    சின்னத்திரை வரலாறு

    Chinnathirai Varalaru

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சின்னத்திரை வரலாறு

    ‘சின்னத்திரை சாதனையாளர்கள்’ – 1

    ‘சின்னத்திரை சாதனையாளர்கள்’ – 2

    சின்னத்திரை சாதனையாளர்கள் – 3

    சின்னத்திரை சாதனையாளர்கள் – 4

    சின்னத்திரை வரலாறு

    வாமன சின்னத்திரையின் விஸ்வரூபம்

    இன்றைய நிலையில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளோ, தொலைக்காட்சியில் செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப் படங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்காதவர்களோ அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். நமது கைபேசியில் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி களைக் காணக்கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி வந்து விட்டது.

    திரைப்படத்தின் நீட்சி (Extension) தான் சின்னத்திரை! இரண்டு தொழில் நுட்பங்களிலும் படம் பிடிக்கும் காமிரா உண்டு, படத்தொகுப்பு உண்டு; இசை-சேர்ப்பு உண்டு; ‘அனிமேஷன்’, ‘கிராபிக்ஸ்’ இரண்டிலும் பயன்படுகின்றன.

    வேறுபாடுகள் என்று பார்ப்போமானால், (பழைய) 35 எம்.எம்.பிலிம் சுருள் போட்டு இயக்கப் பட்ட 35 எம்.எம். காமிரா இயங்கிய வேகம் சாதாரணமாக வினாடிக்கு 24 சட்டகங்கள் (Frames); ஆனால், சின்னத்திரை காமிரா இயங்கும் வேகம் சாதாரணமாக 25 சட்டகங்கள் (Frames). இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அந்த வேறுபாடு கூட மறைந்து விட்டது. திரைப்படங்களில் ‘லாங்ஷாட்’, ‘மிட்ஷாட்’, ‘குளோஸ்-அப்’ போன்ற எல்லாவகை ஷாட்டுகளும் பயன் படுத்தப் படுகின்றன; ஆனால் சின்னத்திரையில் பெரும்பாலும் ‘குளோஸ்-அப்’ ஷாட்டுகளும், குறைந்த அளவில் பிற ஷாட்டுகளும் பயன் படுத்தப் படுகின்றன.

    விநியோகஸ்தர்கள் மூலமாகத் திரையரங்குகளை அடையும் திரைப் படங்கள், அங்கு பெரிய வெண்திரையில் திரையிடப்படுகின்றன. ஆனால்,சின்னத்திரை நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட்டு, அவை மின்னணு சமிக்ஞைகளாக ‘அப்-லிங்கிங்’ (up-linking) என்ற முறையில், விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கோள்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருக்கும் ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ (Transponders) மூலமாக அவை பரவலாகக் கீழே பூமிக்குத் திருப்பியனுப்பப் படுகின்றன. அந்த சமிக்கைகள் ‘டவுன்-லிங்க்கிங்’ (down-linking) என்ற முறையில் கீழே பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள ‘டிஷ்-ஆன்டனாக்கள்’ மூலமாக, ‘ரிசீவர்கள்’ (Receivers)

    எனப்படும் கருவிகளை அடைகின்றன. பின்னர் அந்த சமிக்கைகள் ‘கேபிள்கள்’ மூலமாக, ஆயிரக்கணக்கான வீடுகளில் உள்ள தொலைக் காட்சிப் பெட்டிகளை ஒளி-ஒலி அலைகளாக அடைகின்றன. அல்லது, ‘DIRECT TO HOME – DTH’ முறையில், நம் வீட்டு மொட்டை மாடியில் உள்ள ஒரு சிறிய வாணலி போன்ற ‘டிஷ்-ஆண்டனா’ அந்த சமிக்கைகளை நேரடியாக விண்கோளிலிருந்து பெற்று, நமது வீட்டினுள் உள்ள தொலைக்-காட்சிப் பெட்டிக்கு அனுப்புகிறது. இவ்வளவுதான் தொழில் நுட்பம்!

    தொடக்க காலங்களில், திரைப்படங்களையும், திரைப்படங்களில் வரும் ஆடல் பாடல் காட்சிகளையும் மட்டுமே நம்பி, தனக்கென ஒரு தனித் தன்மையையும், ரசனையும் வளர்த்துக்கொள்ளாமல் இருந்த தொலைக் காட்சித்துறை, இன்று திரைப்படங்களின் வெற்றி-தோல்விகளையே நிர்ணயிக்கும் ஊடகமாக வளர்ந்திருக்கிறது. இன்று இரண்டு துறைகளும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன.

    பெரும்பாலான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் இன்றளவில் மூன்று முக்கியப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. அவை; அ) செய்திகள் ஆ) திரைப்படங்கள் இ)நேயர்கள் பங்கு கொள்ளும் ஆடல்-பாடல் போட்டி நிகழ்ச்சிகள். பெரும்பாலான சேனல்களில் இன்று தொலைக்காட்சித் தொடர்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

    செய்திகளுக்கேன்றே இன்று பல்வேறு மொழிகளிலும் ஏராளமான சேனல்கள் வந்து விட்டன. அவை 24 மணி நேரமும் செய்திகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன.

    இன்றளவில் இந்தியாவில் மட்டும் மேற்சொன்ன பல்வேறு நிகழ்ச்சி களையும் உள்ளடக்கிய 520 சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.

    இத்தொழில் நுட்பம் எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தது?

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் ‘கம்பிவழித் தந்தி’ முறை, ‘கம்பியில்லாத் தந்தி முறை’, வானொலி ஆகிய தொழில் நுட்பங்கள் வளர்ந்து பிரபலமடைந்து வந்தன.

    ரேடியோ சிக்னல் மூலம் ஒலிபரப்பு மட்டுமே செய்யமுடிந்தது. திரைப் படங்களை திரையரங்குகளில் மட்டுமே காண முடிந்தது. ஆரம்ப கால-

    கட்டங்களில் அவையும் மௌனப்படங்களாகத்தான் இருந்தன. ஆகவே ரேடியோ தொழில் நுட்பம் போல, ஒளியையும் அலைவரிசைகளாக அனுப்ப, பல்வேறு நாடுகளிலும் ஏராளமான அறிவியலாளர்கள் முயன்று வந்தனர்.

    ‘செலினியம்’ (Seliniyam) என்ற மூலகம் ஒளியைக் கடத்தக் கூடியது என, ‘வில்லோபை ஸ்மித்’ (Willoby Smith) என்பவர் 1873 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். ‘செலினியத்தை’ப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்ய இயலும் என்பதை 1884 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ‘பால் ஜி.நிப்கோ’ (Paul G.Nibko) என்பவர் ஒரு ‘ஸ்கேன்-தட்டை’ உருவாக்கி நிரூபித்தார். அத்துடன் பிம்பங்களை ஸ்கேன் செய்து பிரதியெடுக்க முடியும் என்றும் கண்டுபிடித்தார். (இன்று பல்வேறு விதமான ஸ்கேன்கள் எடுக்கப் படுவதற்கு அவர்தான் முன்னோடி!). அவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை உருவாக்காவிட்டாலும், அந்தத் தொழில் நுட்பத்தை அவர்தான் காப்புரிமைப் பதிவு செய்தார். (Patent-registration).

    பிரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரீஸ் நகரில் 25-8-1900 அன்று நடந்த ஒரு ‘சர்வதேச வர்த்தகச் சந்தையில்’, மின்சாரம் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த ‘கான்ஸ்டாண்டின் பெர்ச்கி’ என்பவர், அந்தத் தொழில்-நுட்பத்தை முதன் முதலாக ‘டெலிவிஷன்’ என்று குறிப்பிட்டு, ‘விரைவில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஒரு பெட்டி உருவாக்கப்படுமென்றும், அதில் ஒலியைக் கேட்க முடிவதுடன் ஒளி பிம்பங்களைப் பார்க்கவும் முடியும்’ என்ற தம் யூகத்தையும் தெரிவித்தார்! (அது 1925-ல் அப்படியே நடந்தது!)

    அதே பாரீஸ் நகரில், 1910 ஆம் ஆண்டில், ‘அசையாத நிழல் பிம்பங்களை’ ஒரு சுழலும் கண்ணாடி-ட்ரம் மூலமாக ‘ஸ்கேன்’ செய்து, 64 செலினியம் பாட்டரி செல்கள் அடங்கிய ஒரு ‘ரிசீவருக்கு’ ஒளிபரப்பு செய்தனர், ஜார்ஜ் ரிக்னோ (George Rikno) மற்றும் ஏ.பௌர்னியர் (A.Bournier) என்ற இருவர்!

    ‘போரிஸ் ரோசிங்’ (Boris Rosing), விளாடிமிர் ஸ்வோரிகின் (Vlaadimir Sworikin) என்ற இரு ரஷ்யர்கள் 1911 ஆம் ஆண்டு, ‘BROWN TUBE’ அல்லது ‘CATHODE-RAY-TUBE’ என்று அழைக்கப்பட்ட ஒரு குழாய்க்கு, ஒரு கண்ணாடி-ட்ரம் மூலம் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1