Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulaga Pugazh Petra Porgal
Ulaga Pugazh Petra Porgal
Ulaga Pugazh Petra Porgal
Ebook176 pages1 hour

Ulaga Pugazh Petra Porgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மக்களும், நாடுகளும் ஏன் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்? போர் என்பது ஓர் அவசியத் தேவைதானா? மனித உள்ளுணர்வின் மோசமான வெளிப்பாடுதான் சண்டையா? அல்லது இயற்கையின் நியதியான ‘வலியதுதான் வெல்லும்’ என்பதன் நிரூபணம் தான் சண்டையா?
“போர்தான் இயற்கையானது; அமைதிதான் இயற்கைக்குப் புறம்பானது” என்று சொல்லப்படுவது உண்மைதானா?
மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதென்றால், சண்டைகள் தீமையானவை, தேவையற்றவை, என்று தவிர்க்கப் படவேண்டும் அல்லவா?
பகுத்தறிவுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், எதிரானவை சண்டைகள் என்று தெரிந்திருந்தும் சண்டையிடும் ஒவ்வொரு நாடும், மற்றவனைக் கொன்று தள்ளும் ஒவ்வொரு மனிதனும்தான் ஏதோ விலைமதிக்கவொண்ணா பாரம்பரியப் பெருமையையும் மனித உணர்வுகளையும் காப்பதற்காகப் போரிடுவதாகத்தான் எண்ணுகிறார்கள்.
பின்வரும் பக்கங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘போர்களின் வரலாறு’ போர்களின் நோக்கம் எப்படியாவது எதிரியைத் தோற்கடிப்பது தான் என்பதை எடுத்துரைக்கும். பல இலட்சக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும், போர்க்கருவிகளுக்காக எல்லையில்லாத அளவிற்கு செய்யப்பட்ட செலவுகளுக்கும், எண்ணிலடங்காத நாடுகள், நகரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட நாசத்திற்கும், எவ்வாறு போர்கள் காரணமாயிருந்திருக்கின்றன என்பதை விளக்கும்!
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136806069
Ulaga Pugazh Petra Porgal

Read more from Aranthai Manian

Related to Ulaga Pugazh Petra Porgal

Related ebooks

Reviews for Ulaga Pugazh Petra Porgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulaga Pugazh Petra Porgal - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    உலகப் புகழ் பெற்ற போர்கள்

    Ulaga Pugazh Petra Porgal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. டிராய் நகரச் சண்டை

    2. மராத்தான் சண்டை

    3. தெர்மோபைலி சண்டை

    4. ஏதென்ஸ்-ஸ்பார்ட்டா சண்டை

    5. அலெக்சாண்டர் - புருஷோத்தமன் மோதல்

    6. செல்யூகஸின் படையெடுப்பு

    7. பியூனிக் சண்டைகள்

    8. பிரிட்டன் மீது ரோமாபுரிப் பேரரசின் படையெடுப்பு

    9. சிலுவைப் போர்கள்

    10. நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த சண்டைகள்

    11. முப்பதாண்டுப் போர்

    12. ஏழாண்டுப் போர்

    13. டிரஃபால்கர் முனையில் நடந்த ஜிப்ரால்டர் கடற்போர்

    14. ஆஸ்டர்லிட்ஸ் போர் அல்லது மூன்று பேரரசுகளின் போர்

    15. சலமான்கா போர்

    16. வாட்டர்லூ போர்

    17. கிரைமின் போர்

    18. பிரெஞ்சு-பிரஷ்யன் போர்

    19. இரஷ்ய-ஜப்பாணிய போர்

    20. பால்கன் போர்கள்

    21. முதலாம் உலகப் போர்

    22. ஜப்பான்-சைனா போர்

    23. இத்தாலி-எத்தியோப்பா போர்

    24. ஜெர்மனி-ஆஸ்திரியா போர்

    25. இரண்டாம் உலகப் போர்

    26. அரேபிய-இஸ்ரேல் போர்கள்

    27. கொரியா போர்

    28. வியட்நாம் போர்

    29. இந்தியா-சைனா போர்

    30. பாரத-பாகிஸ்தான் போர்கள்

    31. ஈரான். இராக் போர்

    முன்னுரை

    மக்களும், நாடுகளும் ஏன் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்? போர் என்பது ஓர் அவசியத் தேவைதானா? மனித உள்ளுணர்வின் மோசமான வெளிப்பாடுதான் சண்டையா? அல்லது இயற்கையின் நியதியான 'வலியதுதான் வெல்லும்' என்பதன் நிரூபணம் தான் சண்டையா?

    போர்தான் இயற்கையானது; அமைதிதான் இயற்கைக்குப் புறம்பானது என்று சொல்லப்படுவது உண்மைதானா?

    மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதென்றால், சண்டைகள் தீமையானவை, தேவையற்றவை, என்று தவிர்க்கப் படவேண்டும் அல்லவா?

    பகுத்தறிவுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், எதிரானவை சண்டைகள் என்று தெரிந்திருந்தும் சண்டையிடும் ஒவ்வொரு நாடும், மற்றவனைக் கொன்று தள்ளும் ஒவ்வொரு மனிதனும்தான் ஏதோ விலைமதிக்கவொண்ணா பாரம்பரியப் பெருமையையும் மனித உணர்வுகளையும் காப்பதற்காகப் போரிடுவதாகத்தான் எண்ணுகிறார்கள்.

    தங்கள் தாய்நாட்டிற்காகப் போரிடுவதாக சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் மற்றொரு நாட்டின் அழிவுக்குக் காரணமாகிறார்கள்.

    மனித இனம் வரலாற்றிலிருந்து எதையுமே புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அப்படிக் கற்றுக்கொண்டிருந்தால் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள எத்தனையோ போர்கள் தவிர்க்கப்பட்டிருக்குமே!

    தொற்று நோய்கள் அவ்வப்போது பரவுவது போல, போர்களும் அவ்வப்போது நடந்து கொண்டேயிருக்கின்றன என்றுதான் வரலாறு கூறுகிறது.

    சம்பவாமி யுகே யுகே... என்று கண்ணபிரான் பகவத்கீதையில் கூறியது போல,

    சண்டையாமி யுகே யுகே என்பதுதான் மாற்ற முடியாத உண்மையோ?

    போர்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் சில பெரியவை, பல சிறியவை. மதம், எல்லைத் தகராறு, வீண் ஜம்பம், வரட்டுப் பிடிவாதம், சுயநலம், பேராசை, பழிவாங்கல், நாம் தான் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை மற்றும் நாட்டின் எல்லையை விரிவு படுத்திக்கொள்ளும் வீணாசை ஆகியவைதான் முக்கியமான காரணங்களாக இருந்திருக்கின்றன.

    இப்படிப்பட்ட போர்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு மிக அவசியம் என்று கருதுவோரும் உண்டு! மனிதன் சோம்பேறியாக, வலுவற்றவனாக, உதவாக்கரையாக மாறிவிடாமல் இருக்க இத்தகைய போர்கள் வந்து கோண்டே இருக்க வேண்டுமென அவர்கள் கருதுகிறார்கள்!

    போர்கள் மனிதனின் வீரம், நாட்டுப்பற்று, உடல் வலு, மனவலிமை ஆகியவற்றை வளர்ப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். மனிதனுக்குள்ளே இருக்கும் 'தெய்வீகத் தன்மை'யும் போருக்குப் பின்னே தான் வெளிப் படுகிறதாம்!

    சண்டைகளுக்கெதிராக எத்தனையோ வாதங்கள் வைக்கப்பட்டாலும், இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு போர்களும், அவற்றின் அவசியமும் தான் பெருமளவில் காரணங்களாயிருந்திருக்கின்றனவாம்.

    நமது புராணங்களிலிருந்து கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் நோக்கினால் ஒரு மறுக்க முடியாத அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.

    அதாவது, 'கந்த புராணம்' விளக்குவதுபோல் முருகனுக்கும், சூரபதுமனுக்குமான யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்ததாம்!

    வால் மீகி இராமாயணம் இராமனுக்கும், இராவணனுக்கும் பதினெட்டு மாதங்கள் போர் நடந்ததாக விவரிக்கிறது.

    வியாசரின் 'மகாபாரதம்' பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் நடந்த சண்டை பதினெட்டு நாட்களில் முடிந்துவிட்டதாகக் கூறுகிறது.

    அதாவது யுகங்கள் முன்னேற முன்னேற அறிவியல் வளர்ச்சி அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது. போர்க் கருவிகளின் சக்தியும், வேகமும், தாக்கும் திறனும் அதிகமாக அதிகமாக சண்டையிடும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

    இன்று ஓர் அணு ஆயுதப்போர் மூளுமானால் பதினெட்டு மணிநேரத்தில் இந்த உலகம் முழுதும் புல், பூண்டு கூட அற்றுப் போய் மிகப் பெரிய சுடுகாடாக மாறிவிடும்!

    போர்களின் விளைவாக ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியே, இன்று மேலும் போர்களுக்கும், அவற்றின் காரணமாக ஏற்படக் கூடிய பலத்த அழிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

    பின்வரும் பக்கங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் 'போர்களின் வரலாறு' போர்களின் நோக்கம் எப்படியாவது எதிரியைத் தோற்கடிப்பது தான் என்பதை எடுத்துரைக்கும். பல இலட்சக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும், போர்க்கருவிகளுக்காக எல்லையில்லாத அளவிற்கு செய்யப்பட்ட செலவுகளுக்கும், எண்ணிலடங்காத நாடுகள், நகரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட நாசத்திற்கும், எவ்வாறு போர்கள் காரணமாயிருந்திருக்கின்றன என்பதை விளக்கும்!

    1. டிராய் நகரச் சண்டை

    The Trojan War

    நமது நாட்டுப் புராண காவியங்களான 'வால்மீகி இராமாயணம்,' 'வியாசரின் மகாபாரதம்' ஆகியவற்றுக்கு இணையாகப் பேசப்படும் கிரேக்க காவியம் 'இலியாது' ஆகும்! கிரேக்க மகாகவி 'ஹோமர்' எழுதிய பேரிலக்கியமான 'இலியாது' விவரிப்பதுதான் 'டிராய் நகரச் சண்டை'யாகும்!

    சென்ற நூற்றாண்டு வரை, 'இலியாது' ஒரு கற்பனைக் காவியம், 'டிராய் நகரச் சண்டை' என்பது ஹோமரின் கற்பனையில் உருவான போர், என்று தான் உலகம் முழுதும் நம்பப்பட்டது. ஆனால் 1870 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டு அகழ்வாராய்ச்சியாளர் 'ஹென்ரிச் ஷ்லீமென்' கிரேக்க நாட்டில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் செய்து மண்ணுக்குள் புதைந்திருந்த 'டிராய்' நகரத்தின் இடிபாடுகளை உலகின் பார்வைக்கு வெளிக்கொணர்ந்தார்.

    அப்போதிருந்து 'இலியாது' வெறும் கற்பனைக் காவியமல்ல, வரலாற்றை விவரிக்கும் இலக்கியம் என்று உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    நமது இராம-இராவண யுத்தமும், மகாபாரதப் போரும், எல்லோரும் நன்கறிந்ததே! ஆதலின், அப்போர்களைப் பற்றி இந்நூலில் விவரிக்க அவசியமில்லை. ஆனால், அவற்றிற்கு இணையாக வைத்துப் பேசப்படும் 'டிராய் நகரச் சண்டை' தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லாதது. ஆகவே இங்கு விளக்குதல் அவசியமாகிறது.

    ஹோமர் தமது, 'இலியாதில்' விவரிக்கும் வரலாறாவது:

    பண்டைய கிரேக்கம் ஒரே நாடாக இருந்ததில்லை. நகரங்களை மையமாகக் கொண்ட பல சிற்றரசுகளின் கூட்டமாக இருந்தது. ஒவ்வொரு நகரமும் ஒரு சிற்றரசாக (City-State)த் திகழ்ந்தது. அப்படிப் புகழ்பெற்ற நகரங்களாக விளங்கியவை ஏதென்ஸ், ஸ்பார்டா, டிராய் ஆகியன.

    ஸ்பார்ட்டாவை ஆண்ட மன்னனின் பெயர் 'மெனெலாஸ்' என்பதாகும். 'பிரியம்' என்பவன் டிராய் நகர மன்னன். அவனது மகன் 'பாரிஸ்' அழகிய இளைஞன், வீரன், அறிவிற் சிறந்தவன். மூன்று தேவதைகளிடையே தங்களுக்குள் யார் அழகி என்ற போட்டி எழுந்தது. 'பாரிஸ்' நடுவராக இருந்து ஒரு தேவதையை 'அழகி' என அறிவித்தான். அதனால் அந்த தேவதை மகிழ்ந்து மண்ணுலகில் சிறந்த அழகி ஸ்பார்ட்டா மன்னன் மெனெலாஸின் மனைவி ஹெலன்தான் என்று பாரிஸிக்குக் காட்டியது. கண்டதும் ஹெலன் மீது காதல் கொண்ட பாரிஸ், அவள் வேற்று நாட்டு வேந்தனின் மனைவியாயிற்றே என்று கூடத் தயங்காமல் அவளை அந்த தேவதையின் உதவியுடன் டிராய் நகரத்திற்குக் கடத்தி வந்து விடுகிறான். முதலில் அவனை வெறுக்கும் ஹெலன் நாளடைவில் பாரிஸை ஏற்றுக் கொண்டு விடுகிறாள்.

    வெகுண்டெழுந்த ஸ்பார்ட்டா நாட்டரசன் மெனெலாஸ் படை திரட்டி வந்து டிராய் நகரை முற்றுகையிடுகிறான். பத்தாண்டுகள் முற்றுகையிட்டும் டிராய் நகரக் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. கோட்டைக்குள் பாரிஸும், ஹெலனும் இன்பவாழ்வு வாழ்கின்றனர். மெனெலாஸ் வெளியே குமுறிக் கொண்டிருக்கிறான்.

    அவனது தளபதிகளுள் ஒருவனான 'ஓடிஸியஸ்' என்பவன் ஓர் யோசனை சொல்கிறான். அவனது திட்டப்படி ஒரு மிகப் பெரிய மரக்குதிரை செய்யப்படுகிறது. அதனுள்ளே நூறு வீரர்கள் ஒளிந்திருக்க வசதியாக அமைக்கப்படுகிறது. அம்மரக் குதிரையினுள் நூறு ஸ்பார்ட்டா வீரர்களை மறைத்துவைத்து டிராய் நகரக் கோட்டை வாயிலருகே நிற்க வைத்துவிட்டு விலகிச் செல்கின்றனர் ஸ்பார்ட்டா படையினர்.

    ஒடிஸியஸ் திட்டப்படியே, டிராய் நகர மக்கள், எதிரிகள் அந்த மரக்குதிரையை பரிசாக விட்டுவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடிவிட்டதாக நம்புகிறார்கள். கோட்டை வாயில் திறக்கப்பட்டு அந்த மரக்குதிரை உள்ளே தள்ளிவரப்படுகிறது. அதற்குள் வீரர்கள் மறைந்திருப்பதை டிராய் நகர வீரர்கள் கண்டுபிடிப்பதில்லை. இரவுவருகிறது. ஊரடங்கிய வேளையில் அந்த நூறு வீரர்களும் குதிரைக்குள்ளிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1