Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Nadaga Varalaru
Tamil Nadaga Varalaru
Tamil Nadaga Varalaru
Ebook246 pages1 hour

Tamil Nadaga Varalaru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாடகங்களின் உரையாடல்கள் பேச்சு நடையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்மைக் காலங்களில்தான் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1891 ஆம் ஆண்டு 'பம்மல்' சம்பந்த முதலியார் தொடங்கிய 'சுகுண – விலாச - சபா' என்ற குழுவினர் அரங்கேற்றிய நாடகங்களிலிருந்துதான்!
சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய அனேகமாக அத்தனை நாடகங்களிலும் ஏராளமான பாடல்களும், செய்யுள் வடிவும், வசன-நடையும் கலந்தேதான் இருந்தன.
சம்பந்த முதலியாரின் 'பாணி' 'பரிதிமாற்கலைஞர்', ' ஏகை சிவஷண்முகம் பிள்ளை', எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், தெ.போ.கிருஷ்ணஸ்வாமி பாவலர், 'கந்தசுவாமி முதலியார்', ப.நீலகண்டன், என்று தொடர்ந்து இன்றைய 'அமெச்சூர்' நாடக ஆசிரியர்கள்' வரை வளர்ந்திருக்கிறது.
இந்தப் பிரபல நாடக ஆசிரியர்களின் பங்களிப்பைத் தனித்தனியாகப் பின்னர் வரும் பக்கங்களில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்த 'சமஸ்கிருத நாடகங்களின்’ வரலாற்றிலிருந்து தொடங்குவோம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136806259
Tamil Nadaga Varalaru

Read more from Aranthai Manian

Related to Tamil Nadaga Varalaru

Related ebooks

Reviews for Tamil Nadaga Varalaru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Nadaga Varalaru - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    தமிழ் நாடக வரலாறு

    Tamil Nadaga Varalaru

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தமிழ் நாடக வரலாறு

    2. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)

    3. சம்பந்தனாரும் தமிழ்த் திரையுலகும்

    4. 'தசாவதாரம்' கன்னையா

    5. எம்.எஸ். முத்துகிருஷ்ணன்

    6. கும்பகோணம் பாலாமணி அம்மையார்

    7. 'நவாப்' டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை

    8. 'ஆசிரியர்' எம். கந்தசாமி முதலியார்

    9. தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்

    10. 'இசை அரசர்', ஏழிசை வள்ளல்', 'கந்தர்வகான' எஸ்.ஜி. கிட்டப்பா (1906 - 1933)

    11. கே.பி.சுந்தராம்பாள்

    12. முத்தமிழ்க் கலா வித்வ ரத்தினம்' டி.கே.சண்முகம்

    13. டி.கே. எஸ்.நாடக சபா (1950 முதல் 1967 வரை)

    14. 'சினிமா ராணி' டி.பி.ராஜலட்சுமி

    15. 'தியாகச் செம்மல்' எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

    16. எஸ்.வி.சஹஸ்ரநாமம்

    17. ஏ.எல்.ராகவன்

    18. திருமதி எம்.என்.ராஜம்

    19. 'நடிகவேள்' எம்.ஆர்.ராதா

    20. கொத்தமங்கலம் சீனு

    21. டி.ஆர்.மகாலிங்கம்

    22. டி.ஆர்.ராமச்சந்திரன்...

    23. என்.என்.கண்ணப்பா...

    24. எஸ்.வி. வெங்கடராமன்

    25. ஆர்.எஸ்.மனோகர்

    26. ஏ.பி.நாகராஜன்

    27. 'கோமல் சுவாமிநாதன்'

    முன்னுரை

    'நாடகமே உலகம், மாந்தரெல்லாம் நடிகர்கள்' - என்றான் ஆங்கில நாடக ஆசிரியன் வில்லியம் ஷேக்ஸ்பியர்!

    நடிப்பு என்பது நாம் தாயின் கருவிலிருந்து வெளிவந்த உடனேயே தொடங்கி விடுகிறது..! 'முகம் பார்த்துச் சிரிக்கும் குழந்தை', 'நிலாவைப் பிடிக்கத்தூண்டும் ஆவல்', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு...', 'ஆனை ஆனை; 'கைவீசம்மா கைவீசு...' என்று பாடும் தாயின் குரலுக்குக் குழந்தை குதியாட்டம் போடுவது... 'கண்ணாமூச்சி விளையாடுவது...' வரை எல்லாமே நாடகம்தான், நடிப்புதான்!

    பள்ளிச்சிறுவர்கள் 'அப்பா - அம்மா விளையாட்டு' விளையாடுவது; பள்ளியில் ஆண்டு விழாக்களில் பலர் காண நடிப்பது; பின்னர் வளர்ந்ததும் கல்லூரியிலும், வெளியிலும், 'தொழில் - முறையில்லாத' நாடகங்களில் நடிப்பது.. என்று, இந்த 'பாலபாடம்' தொடர்கிறது!

    பலர் 'தொழில்-முறை' நடிகர்களாக நாடகமேடைக்குப் போக இன்று தயங்கினாலும், 'அமெச்சூர்' நடிகர்களாகவாவது நடித்துப் புகழ் பெறவேண்டுமென இத்துறைக்கு வரத் தயாராக இருப்பதிலிருந்தே, நாடகத்திற்கு என்றுமே அழிவு இல்லை என்பதை நாம் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில், பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான 'தொடர்-நாடகங்களில்' நடிக்கும் நடிகர்களில் பெரும்பாலானோர் ' அமெச்சூர்' நடிகர்களே!

    எத்தனையோ திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள், 'Web-series', 'Internet', 'whatsApp', Laptop'..என்று அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக வளர்ந்திருக்கும் இக்கால கட்டத்திலும், அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள 'பிராட்வே' என்ற வீதியில் நிரவி நிற்கும் ஏராளமான நாடக அரங்குகளில் தினசரி கூட்டம் குறையாத காட்சிகளாக நாடகங்கள் நடத்தப்பட்டுத்தான் வருகின்றன.

    நமது நாட்டிலும், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மேடை நாடகக் கலை அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் சொல்லப் போனால், திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு பிரபலமான ஆரம்ப ஆண்டுகளில், நாடக நடிகர்கள், 'சாரா பெர்ன்ஹார்ட்' போன்ற மேடை நடிகைகள் - அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் - திரைப்படங்களில் நடிப்பதைக் கேவலமாக எண்ணி மறுத்து வந்ததாக மௌனப் படங்களின் வரலாறு கூறுகிறது!

    (ஆனால், பின்னாட்களில் மௌனப்பட - சகாப்தம் முடிவுற்று, பேசும் படங்கள் வரத் தொடங்கியபோது, உலகெங்கும் நாடக நடிகர்-நடிகையர் தான் சினிமா உலகை ஆக்ரமித்துக் கொண்டதாக, பேசும் பட வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்!)

    'இயலும், 'இசையும்' 'நாட்டியமும்' சேர்ந்ததுதான் நாடகம். பரதமுனி எழுதிய 'நாட்டிய சாஸ்திரம்' என்ற நூல் கூட 'நாட்டியம்' என்று குறிப்பிடுவது 'நாடகம்' தான்! (நடனத்தை 'நிருத்தியம்' என்று குறிப்பிடுகிறது அந்நூல்) சாத்தனாரின் 'கூத்தநூல்' என்ற தமிழ் நூலும் அவ்வாறே!

    எப்படி அந்நாளைய இலக்கியங்கள், கவிதை-வடிவில் இருந்தனவோ, அப்படியே அந்நாளைய நாடகங்கள் 'நாட்டிய-நாடகங்களாகத்' தான் இருந்திருக்கின்றன.

    சமஸ்கிருத நாடகங்கள் எல்லாமே அநேகமாகக் 'காவிய' நடையிலேயே இருந்திருக்கின்றன. பிற மொழி நாடகங்கள் கூட, பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதிவரை 'நாட்டிய-நாடகங்கள்'தான்!

    (கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய 'நந்தனார்' மற்றும் சுந்தரனார் எழுதிய 'மனோன்மணியம்' இரண்டும் கூட 'காவிய நாடகங்கள்'தான்!)

    நாடகங்களின் உரையாடல்கள் பேச்சு நடையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அண்மைக் காலங்களில்தான் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1891 ஆம் ஆண்டு 'பம்மல்' சம்பந்த முதலியார் தொடங்கிய 'சுகுண – விலாச - சபா' என்ற குழுவினர் அரங்கேற்றிய நாடகங்களிலிருந்துதான்!

    சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய அனேகமாக அத்தனை நாடகங்களிலும் ஏராளமான பாடல்களும், செய்யுள் வடிவும், வசன-நடையும் கலந்தேதான் இருந்தன.

    சம்பந்த முதலியாரின் 'பாணி' 'பரிதிமாற்கலைஞர்', ' ஏகை சிவஷண்முகம் பிள்ளை', எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், தெ.போ.கிருஷ்ணஸ்வாமி பாவலர், 'கந்தசுவாமி முதலியார்', ப.நீலகண்டன், என்று தொடர்ந்து இன்றைய 'அமெச்சூர்' நாடக ஆசிரியர்கள்' வரை வளர்ந்திருக்கிறது.

    இந்தப் பிரபல நாடக ஆசிரியர்களின் பங்களிப்பைத் தனித்தனியாகப் பின்னர் வரும் பக்கங்களில் தெரிந்து கொள்வோம்.

    முதலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்த 'சமஸ்கிருத நாடகங்களின்' வரலாற்றிலிருந்து தொடங்குவோம்.

    சமஸ்கிருத நாடகங்கள்

    பண்டைய சமஸ்கிருத இலக்கியங்களில் நாடகங்களுக்கு பெரும் பங்குண்டு. (திரு பம்மல் சம்பந்த முதலியார் கூட, பல சமஸ்கிருத நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து மேடையில் அரங்கேற்றியிருக்கிறார்.)

    நமது நாட்டின் பல்வேறு மொழி இலக்கியங்களை ஆய்வு செய்தால், பண்டைய நாடகக்கலை குறித்த செய்திகளும், நாடகங்களும் சம்ஸ்கிருதத்தில்தான் அதிகமாகக் கிடைக்கின்றன.

    வேதங்களிலேயே இசை குறித்தும், நாடகங்கள் குறித்தும் பல செய்திகள் காணப்படுகின்றன. நாடகங்களுக்குத் தேவையான இலக்கியங்கள் 'ரிக்' வேதத்திலிருந்தும், இசை 'சாம' வேதத்திலிருந்தும், அபிநயம் 'யஜூர்' வேதத்திலிருந்தும், 'சுவை' 'அதர்வண' வேதத்திலிருந்தும் கிடைக்கப் பெற்றதாக பரதமுனி தமது 'நாட்டிய-சாஸ்திர'த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    எழுதப்பட்ட சம்பவங்களை அப்படியே மேடையில் நடித்துக்காட்டும் கலைக்கு 'அனுகரணம்' என்று பெயரிட்டிருக்கிறார் அவர்.

    கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே, 'பாணினி' என்பவர் தம்முடைய 'வியாகரண-சூத்திரங்கள்' என்ற நூலில், நாடகக் கலைஞர்களுக்கு ஒரு 'பயிற்சி-நூலாக' இரண்டு முனிவர்கள் 'நாடக-சூத்திரங்கள்' என்பதை தொகுத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    'நாட்டிய-சாஸ்திரம்' சமஸ்கிருதத்தில் எழுதி நடிக்கப்பட்ட இரு நாடகங்களை விவரிக்கிறது. முதலாவது 'அமிர்த மதனம்'; அதில் 'பாற்கடலைக்கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரித்துக்கொடுக்கும் பாவனையில், திருமால் 'மோகினி' அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கி ஏமாற்றியதும், தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை வழங்கியதும், நாடகமாக நடிக்கப்பட்டதாம்!

    இரண்டாவது நாடகம்: 'திரிபுராந்தகம்'. அதில் 'திரிபுராசூரர்கள் என்ற மூவர், மூன்று பிரம்மாண்ட மலைகளாக உருவெடுத்து பறந்து வந்து ஆங்காங்கே 'சட்' என்று இறங்கி, அடியில் மாட்டிக் கொண்டவர்களை நசுக்கிக் கொன்றார்கள் என்பதையும், சிவபெருமான் எவ்வாறு அந்த மூன்று அசுரர்களை தமது புன்னகை மூலம் எரித்து அழித்தார் என்பதையும் நாடகமாக நடிப்பார்களாம்! அக்கால நாடகங்களிலேயே, 'தந்திரக் காட்சிகள்' இருந்திருக்கும் என்று தோன்றுகிறது!

    இவ்வாறு, நடந்ததாக நம்பப்பட்ட இரு சம்பவங்களை 'அனுகரணம்' என்ற வகையில் மேடையில் நடித்தார்கள்.

    இத்தகைய நாடகங்கள் ஏழு வகைப்பட்டன. அவை:-

    1. 'சம்ஹாரம்' - வீரரசம் பொருந்திய 'திரிபுராந்தகம்' போன்ற நாடகங்கள்.

    2. 'டிமம்' - 'சிருங்காரம், மதி-மயக்கம் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட 'அமிர்த மதனம்' போன்ற நாடகங்கள்.

    3. 'வயாயோஹம்' - போர்க்களத்தில் நடந்தவற்றை அப்படியே நடித்துக்காடுவது

    4. 'ஈஹாம்ருஹம்' - ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டவை.

    5. ''பிரஹசனம்' - (SPOOF or PARODY) ஏற்கனவே பிரபலமான ஒரு கதையை அல்லது சம்பவத்தை, நகைச்சுவையுடன் கிண்டல் செய்யும் வகையில் மாற்றி நடித்துக் காட்டுவது. ('ராமாயணம்' 'கீமாயணம்' என்றும் 'நந்தனார்; 'கிந்தனார்' என்றும் மாற்றி எழுதி நடிக்கப்பட்டது இந்த வகையில்தான்!) (இந்த ஐந்து வகை நாடகங்களும் பல நடிக-நடிகையர் சேர்ந்து நடிப்பவை)

    6. 'வீதி' - (இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே மேடையில் தோன்றி 'வாதப்-பிரதிவாதங்கள்' செய்வது. பாட்டு-எசைப்பாட்டு, (லாவணி) கேள்வி -பதில் போன்றவை. (தற்கால 'நவீன-நாடகங்கள்' என்ற பெயரில் அத்தகைய 'வீதி-நாடகங்கள்' நடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.)

    7. 'பாணம்' - ஒரே ஒரு நடிகர் மேடையில் தோன்றி, பல்வேறு கதாபாத்திரங்களை அவர் மட்டுமே நடித்துக்காட்டுவது (Mono-Acting, Stand-up Comedy) இதிலிருந்து, இன்றைய நவீன நாடக மேடைகளில் நடிக்கப்படும் எல்லா வகை நாடகங்களும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது நாட்டில் வழக்கத்தில் இருந்திருக்கின்றன என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலே விவரிக்கப்பட்ட ஏழு வகை நாடகங்களும் ஓரிரு மணி நேரத்தில் நடிக்கப்பட்டவையாம்! சில கதைகள் 'ஓரங்க நாடகங்களாகவும்' நடந்தனவாம்!

    இவற்றைத்தவிர இரண்டு வகையான 'முழு-இரவு' நாடகங்களும் நடிக்கப் பட்டனவாம். அவை:-

    1. 'நாடகம்' (வகையின் பெயரே இதுதான்) (Full-fledged-dramas) எனலாம்- புராண, சரித்திரக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட. 'Heroic-plays. ஏராளமான பாத்திரப்படைப்புகள், நிகழ்வுகள், வீர-ரசம், சிருங்கார-ரசம் ஆகியவற்றைக் கலந்து, எழுதப்பட்டவை'. 'இசை-நாடகம்', 'நாட்டிய-நாடகம்' என்பவை இந்தவகையை சேர்ந்தவை.

    2. 'பிரகர்ணம்' - சமகாலக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட 'சமூக நாடகங்கள் (Social-plays). இவற்றில், சோக ரசம், நகைச்சுவை, வீரதீரம் ஆகிய சுவைகளும் இருந்தனவாம்!

    சமஸ்கிருத இலக்கியங்களில் முதன் முதலாக நமக்குத் தெரிய வரும் நாடகம்: 'வாஸவதத்தா-நாட்டியதாரா' என்பதாகும். அதை எழுதியவர் 'ஸுபந்து' என்ற கவியாகும். அவர் கி.மு.நான்காம் நூற்றாண்டில் 'மௌரியப் பேரரசு' காலத்தில், அமைச்சராகப் பணியாற்றியவராம். அந்த நாடக நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. அரண்மனையில் உண்மையில் நடந்த சில நிகழ்வுகளுடன் கற்பனை கலந்து எழுதப்பட்ட 'உதயணன்-வாசவதத்தை' கதையாம் அது.

    கவி ஸுபந்துவுக்கு அடுத்து வந்த மாபெரும் கவிஞர் 'பாஸர்' என்பவர். அவர் பல நாடகங்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் மிக உயர்ந்த படைப்பு எனில் 'ஸ்வப்ன-வாசவதத்தம்' என்று சொல்லலாம். அதே 'உதயணன்-வாசவதத்தை' கதைதான் இதுவும், ஆனால் முழுமையாகக் கிடைத்துள்ளது.

    கவி பாஸரைத் தொடர்ந்து 'ஸோமில்லன்' 'கவிபுத்திரன்' என்ற இரு கவிகள் பல நாடகங்களை இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. (ஆனால் அவர்களின் படைப்புகள் இன்று கிடைக்கவில்லை) அவர்கள் இருவரையும் மஹாகவி காளிதாசனே தமது நூலில் புகழ்ந்து எழுதியுள்ளார்.

    அடுத்து வந்தவர் மஹாகவி காளிதாஸ். அவர் சில காவியங்களையும் மூன்று நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். 'அபிக்ஞான-சாகுந்தலம்', 'விக்கிரம-ஊர்வசியம்', மாளவிகா-அக்னிமித்ரம்' என்ற அந்த மூன்று நாடகங்களும் மிகப்புகழ் பெற்றவை. அதிலும் 'அபிக்ஞான-சாகுந்தலம்' இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டதுடன், நாடகமாகவும், திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 'சகுந்தலை' இரண்டு முறை தமிழில் படமாக்கப்பட்டுள்ளது.

    'துஷ்யந்தன்-சகுந்தலை' கதை அனேகமாக அனைவரும் அறிந்ததே. (அவருடைய ;காவியங்களில் சில: 'மேகசந்தேசம்' 'குமாரசம்பவம்') 'வருணனைக்கு ஒரு காளிதாசன்' என்று சிறப்பித்துக் கூறப்படுபவர் காளிதாசன்.

    காளிதாசனுக்குப் பின் வந்த பல இந்திய மொழிக் கவிஞர்களும், புலவர்களும், நாடக-ஆசிரியர்களும் அவரது பாணியைப் பின்பற்றியே தங்களது படைப்புகளை எழுதினார்கள் என்று சொன்னால் மிகையில்லை.

    மத்திய ஆசியாவிலுள்ள ஒரு புதைந்து போன பௌத்த மடாலயம் அகழ்வாராய்ச்சியின்போது தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த பல பழம்பொருள்களில் 'ஸாரிபுத்திரப் பிரகரணம்' என்ற சமஸ்கிருத நாடகப் பிரதியும் அடங்கும்.(ஜெர்மானிய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நாடகப் பிரதி அது.)

    'சாந்த ரசத்தை' முக்கிய சுவையாகக் கொண்டு எழுதப்பட்ட கவுதம-புத்தரின் வாழ்க்கை வரலாறுதான் அந்த நாடகம். 'அஸ்வகோஷர்' என்ற பௌத்தத்துறவி எழுதிய அந்த நாடகம்தான், ஒரு மதத்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட முதல் நாடகமாகும்.

    காளிதாசருக்கு அடுத்து வந்தவர் 'சூத்ரகர்' என்ற கவிஞர். அவர் அவரது சமகால வரலாற்றையும், மக்களையும் (மன்னர்களைப் பற்றி இல்லாமல்) வைத்து, எழுதிய 'மிருச்ச-கடிகம்' (Clay-Cart) என்ற 'சமூக ' நாடகத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இன்றும் கூட, நமது நாட்டின் பல மொழிகளிலும், ஏராளமான நாடகக் குழுக்கள் அந்நாடகத்தை நடத்தி வருகிறார்கள். சூழ்ச்சி, பொறாமை, வஞ்சகம், புகழ்ச்சி, இகழ்ச்சி, காதல், வீரம், சோகம், நகைச்சுவை ஆகிய அத்தனை சுவைகளுடன், திருடன் போன்ற கதாபாத்திரங்களும் கொண்ட நாடகம் அது.

    காளிதாசன், சூத்ரகர், இருவருக்கும் பிறகு தோன்றியவர் 'பவபூதி' என்ற கவிஞர். அவர்தான், வால்மீகிக்குப் பிறகு, 'உத்தரராம-சரிதத்தை ஒரு நாடக வடிவில் எழுதியவர். அதன் பெயர்:.மஹாவீர-சரிதம்' என்பதாகும். (சமண தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் இந்த நாடகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை). இது சீதை, லவ-குசர்கள், ராமனின் இறுதிக்காலம் ஆகியவற்றை சோக ரசத்துடன் விவரிக்கும் நாடகமாகும். பவபூதி ஒரு சமூக-நாடகத்தையும் எழுதியுள்ளார். அதன் பெயர்: 'மாலதீ-மாதவம்'.

    அந்நாடகம் சூத்ரகரின் 'மிருச்சகடிகம்' போலப் புகழ்பெறவில்லை. ஆயினும் இரண்டாவது 'சமூக-நாடகம்' என்று பதிவு பெற்றிருக்கிறது.

    அடுத்து வந்தவர் ஓர் அரசகுடும்பத்தை சேர்ந்த 'விசாகதத்தன்' என்பவர். அவர் எழுதிய இரண்டு நாடகங்கள் மூலம் தான் நாம் ''சந்திரகுப்தர்', 'சாணக்கியர்', அக்கால அரசியல் ஆகியவை குறித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவை: -

    Enjoying the preview?
    Page 1 of 1