Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagin Prabala Cinnathirai Serialgal!
Ulagin Prabala Cinnathirai Serialgal!
Ulagin Prabala Cinnathirai Serialgal!
Ebook161 pages1 hour

Ulagin Prabala Cinnathirai Serialgal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சின்னத்திரை பத்திரிகையில் 2007ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இதில் குறிப்பிடப்படும் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தும் மேலை நாட்டுத் தொலைக்காட்சிகளில் பல லட்சக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தவை.

பெரும்பாலும் 2007-இல் பிரபலமானவற்றைப் பற்றிய தொடர்களை இந்தக் கட்டுரைகள் குறிப்பிட்டாலும் தொடர்களின் ஆரம்பம், அதில் உள்ள முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை என்றைக்குப் படித்தாலும் ரசிக்க முடியும் என்பதால் இந்த இரண்டாம் பதிப்பு வெளி வருகிறது. உலக அழகி போட்டியில் எப்படி அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், கின்னஸ் ரிகார்டு எப்படி ஆரம்பமானது, டாம் அண்ட் ஜெர்ரி தொடரின் ஆரம்பம், வன விலங்குகளையும், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றையும் கவர்ச்சிகரமாக பார்க்கும் விதத்தில் எப்படி படம் எடுக்க முடிகிறது, அபாயகரமான சாகஸ செயல்களை எப்படி யார் செய்தனர் என்பன போன்ற தொடர்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆகவே இந்தக் கட்டுரைகளை இன்று படித்தாலும் அடிப்படையான நிறைய விஷயங்களை அறிந்து ரசிக்க முடியும்...

தமிழில் உலகத் தரத்திற்கு பல்வேறு விஷயங்களில் தொடர்களை எடுக்க உத்வேகம் கொள்ளவும் பார்த்து ரசிக்கவும் இப்படிப் பட்ட அக்கரைத் தொடர்களைப் பற்றி அறிய வேண்டுவது அவசியம்! தினமும் தொலைக்காட்சி முன்னர் அமரும் பல்லாயிரக்கணக்கானோருக்கான புத்தகம் இது!

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580151010234
Ulagin Prabala Cinnathirai Serialgal!

Read more from S. Nagarajan

Related to Ulagin Prabala Cinnathirai Serialgal!

Related ebooks

Reviews for Ulagin Prabala Cinnathirai Serialgal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagin Prabala Cinnathirai Serialgal! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்!

    (அக்கரை சின்னத்திரை)

    Ulagin Prabala Cinnathirai Serialgal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. எப்படிப் படம் எடுக்கிறார்கள்?

    2. கொஞ்சம் நடனம் ஆட ஆசைப்படுறீகளா?

    3. அதிரடிப் பெண்களின் அட்டகாச சீரியல்!

    4. மொழிச்சுவை தரும் நகைச்சுவை!

    5. உலகைச் சிரிக்க வைக்கும் எலியும் பூனையும் - டாம் அண்ட் ஜெர்ரி!

    6. ஸ்டார் வார்ஸ் - புதிய தொடர் வருகிறது!

    7. உலகைக் கலக்கும் ஸ்பைடர்மேன்!

    8. இரண்டு திரைகளிலும் மின்னும் ஒரே சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான்!

    9. பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலக சாதனைகள்!

    10. ஃபார்முலா ஒன் பார்க்காத கண் என்ன, கண்ணே!

    11. உயிரைப் பணயம் வைத்து எடுத்த அதிசயத் தொடர்!

    12. அற்புதம்… அதிசயம்…, அமானுஷ்ய சக்தி படைத்த ஹீரோஸ்!

    13. ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா! ரெஸில் மேனியா!

    14. அபாய இடங்களிலிருந்து தப்பிக்கும் உலகின் ஒரே சூப்பர்மேன்!

    15. உங்கள் வீட்டில் உலா வரும் உலக அழகிகள்!

    16. கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் சீண்டல், கொஞ்சம் சீறல்!

    17. மீண்டும் தொலைக்காட்சிக்கு வரும் ‘பெரிய்…ய்…ய’ கவர்ச்சி மங்கை!

    18. நம்பினால் நம்புங்கள்! நம்பாவிட்டால்.? இந்தத் தொடரை பாருங்கள்!

    19. சான்யா மேனியா!

    20. அச்சமற்றவருக்கு 50000 டாலர் பரிசு!

    21. நிஜங்களைக் காட்டும் நிழல் காட்சிகள்!

    22. நிழலுக்குப் பின்னால் உள்ள நிஜங்கள்!

    23. உலகின் நம்பர் ஒன் டாக்-ஷோ ராணி!

    24. உண்மைகளைத் தேடும் ஒரு ஒப்பற்ற தொடர்

    25. உலகின் மிக நீண்ட மெகா மெகா மெகா சீரியல்

    26. டி.வி.யில் தொடங்கி விசுவரூபம் எடுத்த ஹாலிவுட் கனவுக் கன்னிகள்! - 1

    27. டி.வி.யில் தொடங்கி விசுவரூபம் எடுத்த ஹாலிவுட் கனவுக் கன்னிகள்! - 2

    28. டி.வி.யில் தொடங்கி விசுவரூபம் எடுத்த நடிகர்கள்!

    29. அக்கரையிலும் ஒரு தசாவதாரம் - பென் டென்!

    30. தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்த மேதை!

    31. தொலைக்காட்சியைப் பார்க்க விடாதீர்கள்!

    32. திரைப்படங்களோ திரைப்படங்கள் - காண்பதற்கு நேரமே இல்லையே!

    33. ஆயிரம் எபிசோடு எழுதும் அபூர்வ ‘சிந்தா’மணி

    34. சிரித்து மகிழுங்கள்! சிறப்புடன் வாழுங்கள்!

    35. சின்னத்திரை - அன்றும் இன்றும்!

    36. முடிவுரை

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ஞான ஆலயம் குழுமத்தின் சார்பாக வெளியிடப்பட்டு வந்த பத்திரிகைகளான ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளில் 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ளேன்.

    இந்த வகையில் சின்னத்திரை பத்திரிகையில் 2007ஆம் ஆண்டு பல கட்டுரைகளை அக்கரை சின்னத்திரை பற்றி எழுதி வந்தேன்.

    இந்த தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தும் மேலை நாட்டுத் தொலைக்காட்சிகளில் பல லட்சக்கணக்கானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தவை.

    இந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவம் கருதி இதை நிலாச்சாரல் அதிபர் லண்டன் திருமதி நிர்மலா ராஜு அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்.

    பெரும்பாலும் 2007இல் பிரபலமானவற்றைப் பற்றிய தொடர்களை இந்தக் கட்டுரைகள் குறிப்பிட்டாலும் தொடர்களின் ஆரம்பம், அதில் உள்ள முக்கிய அம்சங்கள் ஆகியவற்றை என்றைக்குப் படித்தாலும் ரசிக்க முடியும் என்பதால் இந்த இரண்டாம் பதிப்பு வெளி வருகிறது.

    உலக அழகி போட்டியில் எப்படி அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், கின்னஸ் ரிகார்டு எப்படி ஆரம்பமானது, வன விலங்குகளையும், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றையும் கவர்ச்சிகரமாக பார்க்கும் விதத்தில் எப்படி படம் எடுக்க முடிகிறது, அபாயகரமான சாகஸ செயல்களை எப்படி யார் செய்தனர் என்பன போன்ற தொடர்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

    ஆகவே இந்தக் கட்டுரைகளை இன்று படித்தாலும் அடிப்படையான நிறைய விஷயங்களை அறிந்து ரசிக்க முடியும்.

    இன்றும் இதே அடிப்படையில் ஏபிசியில் ஒளிபரப்பாகும் ஷார்க் டேங்க் போன்ற நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர்.

    தமிழில் உலகத் தரத்திற்கு பல்வேறு விஷயங்களில் தொடர்களை எடுக்க உத்வேகம் கொள்ளவும் பார்த்து ரசிக்கவும் இப்படிப் பட்ட அக்கரைத் தொடர்களைப் பற்றி அறிய வேண்டுவது அவசியம்!

    இதை சின்னத்திரை இதழில் தொடராக வெளியிட்ட திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் நூலாக வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    முதல் பதிப்பு வெளியாகி ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் இந்தப் புத்தகம் இப்போது மின்னணு நூலாகவும் அச்சுப் பதிப்பாகவும் வெளி வருகிறது.

    டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் இதை மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆண்டாண்டு காலமாக எனது எழுத்துப் பணிகளுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    பங்களூர்

    ச. நாகராஜன்

    4-9-2023

    1. எப்படிப் படம் எடுக்கிறார்கள்?

    (விலங்குகள் உலகம்: நேஷனல் ஜியாகரபிக் சானல்)

    தொலைக்காட்சியில் அறிவியல் சானல்களில் விலங்குகளையும் பறவைகளையும் மிக அருகில் பார்க்கிறோம். அவற்றின் எல்லாச் செயல்பாடுகளையும் மிக்க வியப்புடன் நோக்குகிறோம். இப்படிப்படம் பிடிப்பது எப்படி சாத்தியமாகிறது? அச்சமூட்டும் விலங்குகளைப் படம் எடுக்க அச்சமில்லாமல் இருப்பது எப்படி? அச்சப்பட்டு விலகும் பறவை போன்றவற்றையும் சிறு மிருகங்களையும் பயப்படாமல் இருக்க வைத்துப் படம் எடுப்பது எப்படி என்று யோசனை தோன்றுகிறது.

    வேகமாக ஓடும் சிறுத்தை, மான், பாய்ந்து இரையை அடிக்கும் புலி, சிங்கம், வானில் உயரப் பறக்கும் குட்டிப் பறவைகள் - இவை அனைத்தும் தங்களுடன் சிறிய கேமராக்களைக் கட்டிக் கொள்வதாலேயே படப்பிடிப்பு அனைத்தும் எடுப்பது சாத்தியமாகிறது.

    இந்தத் துறையில் வல்லுநரான படத் தயாரிப்பாளர் டேவிட் வாலஸ் கேமராவின் சைஸ், பாட்டரி உழைக்கும் கால அளவு, எடுக்கப்பட்ட படம் இன்னொரு இடத்திற்கு அனுப்பப்படும் டிரான்ஸ்மிஷன் எனப்படுவது ஆகிய அனைத்தையும் மனதில் கொண்டே படம் எடுக்கப்படுகிறது என்கிறார்.

    அத்தோடு ஒவ்வொரு விலங்கு அல்லது பறவைக்கு ஏற்றபடி கேமராக்கள் வடிவமைக்கப்படும் என்கிறார் அவர்!

    சரி, சிறிய காமராக்களை எப்படிக் கண்டு பிடிப்பது? ஓற்றர்கள் கடைக்குப் போகவேண்டும் என்கிறார் அவர்.

    பல தேசங்களின் ஒற்று வேலைக்கான உளவாளிகளுக்கென ஏராளமான சிறிய சிறிய காமராக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

    அவற்றைச் சற்று மாற்றி ஒவ்வொரு விலங்கையும் படமெடுப்பதற்குத் தக்கபடி காமராவை வடிவமைக்க வேண்டுமாம்!

    உதாரணமாக ஒரு பருந்து தன் இரையைத் தின்றவுடன் மிகவும் கனமாக ஆகிப் பறப்பதையே விரும்பாது. ஆகவே அது எளிதில் சுமந்து செல்லத் தக்கவாறு எடை மிகவும் குறைந்த கேமரா அதனுடன் கட்டப்பட்டாலேயே அது இரை பிடிப்பதை நாம் காண முடியும்.

    சிறுத்தை, ஓநாய், சுறாமீன், பருந்து ஆகியவற்றிற்கு ஏற்றபடி தனித்தனி

    கேமராக்கள் வடிவமைக்கப்படுகின்றன! குறிப்பாக சிறிய பறவையுடன் பொருத்தப்படும் கேமராக்கள் அதிக வலுவுள்ளதாக செய்யப்படுகிறது. ஏனெனில் 50 அடி உயரத்திலிருந்து மணிக்கு 60 மைல் வேகத்தில் அது தரையை நோக்கிப் பாய்கிறது.

    காமிரா எப்படி கட்டப் படுகிறது? 11 அடி நீளமுள்ள ஆபத்தான முதலை காலை நேரத்தில் சோம்பேறியாக தூங்கும். அந்தச் சமயம் கேமராவைப் பொருத்துகின்றனர்!

    மதிய நேரத்தில் கேமராவை வேகமாக எடுக்கும் க்விக் ரிலீஸ் முறையில் எடுக்க ஒரு நீண்ட கம்பை உபயோகப்படுத்துகின்றனர்.

    சிறுத்தையின் கழுத்துப் பட்டையில் கேமரா கட்டப்படுகிறது. அது முதல் மூன்று வினாடிகளிலேயே மணிக்கு 50 மைல் வேகத்தை எட்டுகிறது.

    தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாகஸமாகப் படம் எடுக்கும் கேமரா வீரர்கள் இருப்பதால் தான் அற்புதமான விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களைப் பார்க்கிறோம். அவற்றின் பின்னால் அவர்களின் சாகஸம் தெரிகிறது!

    தின்ன வரும் புலியையும் அன்பொடு

    சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே

    என்ற மகாகவி பாரதியாரின் அற்புதச் சொற்களை நினைத்தவாறே விலங்குகள் உலகின் விந்தைகளை அருகில் இருந்து காமரா மூலம் பார்க்கும் போது அவற்றின் வாழ்க்கையிலும் ஒரு லயம், ஒரு உணர்வு, ஒரு அன்பு இருப்பதை உணர முடிகிறது. அவற்றிற்கும் இந்த பூமியில் இடம் உண்டு; அவற்றை வாழ வைக்க வேண்டியதும் அறிவு சார்ந்த மனித இனத்தின் கடமை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    அழுகை சீரியல்களுக்கு அதிகமான நேரத்தை ஒதுக்குவதை விட்டு விட்டு சில நிமிடங்கள் நேஷனல் ஜியாகரபிக் சானலுக்கும் ஒதுக்கலாம் இல்லையா?

    2. கொஞ்சம் நடனம் ஆட ஆசைப்படுறீகளா?

    ஆடத் தெரிந்தவர்களுக்கு உலகெங்கும் மவுசு தான்! தமிழக சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டங்களை ஏற்பாடு செய்து கும்மாளம் போடுகின்றன; பார்ப்பவர்களையும் போட வைக்கின்றன!

    ஆனால் நிஜமான கலை உணர்வுடன் கூடிய நாட்டியத்தைப் பார்க்க விரும்புவோருக்கு AXN சேனலில் ஒளிபரப்பாகும் So You think You can Dance நிகழ்ச்சியை யார் வேண்டுமானாலும் பலமாக சிபாரிசு செய்யலாம்.

    உலகின் எல்லாப் பகுதிகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் இப்போது ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்காவில் இதற்காக மட்டுமே பாக்ஸ் டிவி போன்றவை தோன்றி

    Enjoying the preview?
    Page 1 of 1