Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagai Ulukkiya 75 Thiraipadangal
Ulagai Ulukkiya 75 Thiraipadangal
Ulagai Ulukkiya 75 Thiraipadangal
Ebook452 pages2 hours

Ulagai Ulukkiya 75 Thiraipadangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த புத்தகத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் படங்கள் எல்லாமே உலக அளவில் மெகா வெற்றி பெற்றுள்ள படங்கள். அதாவது, பல்வேறு கலாசாரம், சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் உள்ள மக்களின் ஒட்டுமொத்த ரசனையால் வெற்றி பெற்ற படங்கள். இந்த படங்கள் என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே உங்கள் மனதிலும் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் என்பதாலே, அனைவரும் இந்த படங்களை பார்த்தே தீரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

இன்னமும் நான்கு பாகங்கள் போடும் அளவுக்கு இந்த ரசனை பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. இந்த பாகம் ஆரம்பகால சினிமா ரசிகனுக்காக எழுதப்பட்டது. இந்த படங்களின் பட்டியலைப் படிக்கும்போதே, உங்கள் உதட்டில் ஒரு சந்தோஷம் தென்பட்டால், நீங்களும் என்னுடைய சினிமா இனம்தான். இனி, படியுங்கள், பாருங்கள், ரசியுங்கள்...

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580158409086
Ulagai Ulukkiya 75 Thiraipadangal

Related to Ulagai Ulukkiya 75 Thiraipadangal

Related ebooks

Reviews for Ulagai Ulukkiya 75 Thiraipadangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagai Ulukkiya 75 Thiraipadangal - M. Nirmal Murugan

    http://www.pustaka.co.in

    உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள்

    (ரசிக்காம செத்துடாதீங்க)

    Ulagai Ulukkiya 75 Thiraipadangal

    (Rasikkama Sethudaathenga)

    Author :

    எம். நிர்மல் முருகன்

    M. Nirmal Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-nirmal-murugan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் பக்கம்

    1. எ வாக் டு ரிமெம்பர்

    2. இன்செப்ஷன்

    3. பிளாக் ஸ்வான்

    4. சினிமா பாரடிசோ

    5. மெமண்டோ

    6. பி.எஸ் ஐ லவ் யூ:

    7. எக்ஸாம்

    8. சைபோர்க் கேர்ள் (ஜப்பான்)

    9. ஃபாரஸ்ட் கம்ப்

    10. த சஷாங் ரிடெம்ப்ஷன்

    11. அமெரிக்கன் பியூட்டி

    12. த ஹங்கர் கேம்ஸ்

    13. த சிக்ஸ்த் சென்ஸ்

    14. குங்ஃபூ பாண்டா

    15. ரியல் ஸ்டீல்

    16. த நோட்புக்

    17. லயன் ஆஃப் த டெஸர்ட்

    18. அப்

    19. தி பிளைண்ட் சைட்

    20. மில்லியன் டாலர் பேபி

    21. ஆர்பன்

    22. ஆகஸ்ட் ரஷ்

    23. ஃபைண்டிங் நிமோ

    24. த பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்:

    25. தாரே ஜமீன் பர் (ஹிந்தி)

    26. எ பியூட்டிஃபுல் மைன்ட்

    27. ஸ்பிரிட்டேட் அவே (ஜப்பான்)

    28. லியோன் தி புரொபஷனல் (பிரெஞ்ச்)

    29. பிக் ஃபிஷ்:

    30. ஃப்லிப்ட்:

    31. த கிரீன் மைல்

    32. ஹெய்தர்:

    33. கிங்ஸ்மேன்

    34. 17 அகெய்ன்

    35. கேட்ச் மி இஃப் யு கேன்:

    36. தி பிரஸ்டீஜ்

    37. பாக்காம விட்றாதீங்க - த சவுண்ட் ஆஃப் மியூசிக்:

    38. தி வாக்

    39. மேலிஃபிசன்ட்:

    40. ஹெவன்லி ஃபாரஸ்ட் (ஜப்பான்)

    41. பாக்காம விட்றாதீங்க - தி டாவின்சி கோட்:

    42. குட் வில் ஹன்டிங்

    43. சோர்ஸ் கோட்:

    44. லூப்பர்

    45. பாஜிராவ் மஸ்தானி

    46. அன்பிரேக்கபிள்:

    47. மிரக்கிள் இன் செல் நம்பர் 7 (கொரியன்)

    48. த இமிடேஷன் கேம்

    49. ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ்

    50. டங்கல் (ஹிந்தி)

    51. கேஸ் 39

    52. டிரெயின் டு பூசான் (கொரியா)

    53. கோல்

    54. த டார்க் நைட்

    55. கிளாடியேட்டர்

    56. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (இத்தாலி)

    57. அபோகலிப்டோ

    58. தி பியானிஸ்ட்

    59. என்டர் த டிராகன்

    60. மாடர்ன் டைம்ஸ்

    61. ஜுராசிக் பார்க்

    62. Kill Bill

    63. Gandhi

    64. Wall – e

    65. தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர்

    66. 12 ஆங்ரி மென்

    67. அவதார்

    68. தி மேட்ரிக்ஸ்

    69. பிரேவ்ஹார்ட்

    70. ஹாரி பாட்டர்

    71. தி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன்

    72. மீட் ஜோ பிளாக்

    73. ஷிண்ட்லர் லிஸ்ட்

    74. கான் கேர்ள்

    75. லா லா லேண்ட்

    ஆசிரியர் பக்கம்

    சினிமா எனும் மாயஜாலம்

    இந்த உலகிலேயே சினிமாவைப் போன்று, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய கலை, வேறு எதுவுமில்லை. கூத்து, பாட்டு, நாடகம், பொம்மலாட்டம் போன்ற பல கலைகளை அடித்து நொறுக்கிவிட்டு, உலகத்தையே ஆட்சி புரிகிறது, சினிமா.

    தொலைக்காட்சி, ஓ.டி.டி. போன்ற மாற்றங்கள் வந்தபோதும், அதனை வென்று இன்னமும் வலிமையாக வாழ்கிறது சினிமா. உலகின் எங்கோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட திரைப்படம் சிறப்பாக இருந்துவிட்டால், ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான், தமிழ் படங்களைவிட, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில படங்கள் சிறப்பான வரவேற்பை பெறுகின்றன.

    ஆனால், நம் தமிழ் சினிமாக்கள் இன்னமும் உலக அளவில் மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. ஏனென்றால், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளைவிட தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் படங்கள் தயாராகின்றன. ஆனால், தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் படங்கள் எடுக்கப்படுகிறதே தவிர, உலக தரத்தில் படம் அமையவேண்டும் என்ற எண்ணம்கூட யாருக்கும் வரவில்லை.

    நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் எடுக்கப்படுவது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளும் தமிழில் கிடையாது. ஒரு சினிமா என்றால் நான்கு பாட்டு, இரண்டு சண்டை, பஞ்ச் டயலாக், சென்டிமென்ட், நகைச்சுவை போன்ற எல்லாமே கலந்து இருக்கவேண்டும் என்ற ஃபார்முலாவை தொடரவே ஆசைப்படுகிறார்கள். மக்கள் விரும்புவதைத்தான் கொடுக்கவேண்டும் என்று விளக்கம் சொல்லிக்கொள்கிறார்கள்.

    சினிமா என்பது நிச்சயம் ஒரு பொழுதுபோக்கு கலையே. அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. ஆனால், சினிமா பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் ஏதேனும் ஓர் அம்சம், பார்ப்பவர் உள்ளத்தைத் தொடும் வகையில் அமையவேண்டும். படம் பார்த்ததும் ஒரு திருப்தியும், மகிழ்ச்சியும், ஏதோ ஒன்றை புதிதாக புரிந்துகொண்ட உணர்வும் கிடைக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வது என்றால், ஒவ்வொரு படமும் ரசிகரின் ரசனையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். நிஜமும் கற்பனையும் ஒருசேர கலந்திருக்க வேண்டும். ஒரு திருப்தியான உணவை அனுபவித்து சாப்பிட்ட உணர்வை, ஒரு திரைப்படம் கொடுக்க வேண்டும்.

    சினிமா மட்டும் அதிகமான ரசிகர்களைக் கொண்டிருப்பது ஏன் தெரியுமா? சினிமா என்பது ஒரு தனிப்பட்ட கலை அல்ல, பல கலைகளின் கூட்டு அம்சம். இசை, ஒளிப்பதிவு, வசனம், பாடல், கதை, ஆடை, அலங்காரம், எடிட்டிங், நடனம், சண்டை என்று எத்தனையோ கலைகளின் கூடாரம். அத்தனை கலைகளையும் ஒருசேர ரசிக்கும் இடம்தான் சினிமா. ஆகவே, ஒவ்வொன்றையும் காணும்போது ரசிகனுக்குப் புதிய அனுபவம், ஆனந்தம் கிடைக்கிறது.

    இதுதவிர, திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை, சோகம், கோபம், பயம், காதல், தன்னம்பிக்கை போன்ற எத்தனையோ உணர்வுகளையும் ரசிக்க முடியும். ஒரு நகைச்சுவை படத்தைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும்போது, இந்த உலகமே சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியும். சாகசப் படத்தைப் பார்க்கும்போது, ரத்தத்தில் ஒரு விறுவிறுப்பு ஏறுவதைக் காணமுடியும். நல்ல காதல் படத்தை ரசிக்கும்போது, மனசெல்லாம் காதல் மலரும்.

    தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகும் ஏதேனும் ஒரு தாக்கத்தை நம்மில் ஏற்படுத்த முடியும் என்றால், அதுவே சிறந்த படம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு குணம் உண்டு, ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி பிரச்னைகள் உண்டு. ஒவ்வொரு நபருக்கும் விதவிதமான அனுபவங்கள் உண்டு. இப்படி வித்தியாசமான மனிதர்கள் கூட்டத்தை ஏதேனும் ஒரு படம் ஒட்டுமொத்தமாக கவர்கின்றது என்றால், உலக அளவில் அதுவே சிறந்த படம்.

    ஆனால், நம் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டத்தை மனதில் வைத்தே படங்கள் எடுக்கப்படுவதாலே, உலக அளவில் சாதிக்க முடியாமல் போகிறது. அதேநேரம், நம் தமிழர்கள் தனிப்பட்ட முறையில் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ்சிவன், சாபுசிரில், கமல்ஹாசன், விக்ரம் போன்ற உலகத்தரத்திலான கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை இணைத்து சிறந்த படம் தரக்கூடிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இல்லை என்பதுதான் தமிழகத்து சோகம்.

    மேலும், தமிழ் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் ஒரு நல்ல படம் உருவாக்கும் அளவுக்கு எண்ணமும், பொறுமையும் கிடையாது. ஆனால், ஹாலிவுட் படங்கள் எல்லாமே பல வருடங்கள் உழைப்பில் உருவாகின்றான. பல்வேறு நபர்களின் கூட்டணியில் உருவாகிறது.

    ‘காந்தி’ படத்துக்காக அதன் இயக்குனர் ரிச்சர்ட் அட்டன்புரோ, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். இந்தியாவில் காந்தி எங்கெல்லாம் சென்றாரோ, அந்த இடங்களுக்கு எல்லாம் போய் ஆய்வு நடத்தியிருக்கிறார். ’அவதார்’ படத்துக்காக அதன் இயக்குனர் 10 ஆண்டுகள் உழைக்கிறார். எந்த ஒரு வகையிலான படம் என்றாலும், அதற்காக நுணுக்கமாக உழைக்கிறார்கள். அதனாலே, உலக அளவில் கவனத்தை ஈர்க்கிறார்கள். .

    ஆனால், இப்படி இந்த கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் எண்ணம் தம் தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லை என்பதுதான் சோகம். எனவே, குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் படங்கள் குறுகிய காலமே மக்கள் மனதில் தாக்குப்பிடிக்கிறது.

    இந்த புத்தகத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் படங்கள் எல்லாமே உலக அளவில் மெகா வெற்றி பெற்றுள்ள படங்கள். அதாவது, பல்வேறு கலாசாரம், சுற்றுச்சூழல், உணவுப்பழக்கம் உள்ள மக்களின் ஒட்டுமொத்த ரசனையால் வெற்றி பெற்ற படங்கள். இந்த படங்கள் என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே உங்கள் மனதிலும் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் என்பதாலே, அனைவரும் இந்த படங்களை பார்த்தே தீரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

    இன்னமும் நான்கு பாகங்கள் போடும் அளவுக்கு இந்த ரசனை பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. இந்த பாகம் ஆரம்பகால சினிமா ரசிகனுக்காக எழுதப்பட்டது. இந்த படங்களின் பட்டியலைப் படிக்கும்போதே, உங்கள் உதட்டில் ஒரு சந்தோஷம் தென்பட்டால், நீங்களும் என்னுடைய சினிமா இனம்தான்.

    இனி, படியுங்கள், பாருங்கள், ரசியுங்கள்.

    அன்புடன்

    எம்.நிர்மல்

    yemnirmal@gmail.com

    1. எ வாக் டு ரிமெம்பர்

    இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது என்று சொல்லப்படும் காதலுக்கு அற்புதமான உதாரணம் எ வாக் டு ரிமெம்பர். டீன் ஏஜ் பருவத்தினரை மட்டுமின்றி கடுகடு முதியோரையும் மயக்கிவிடும் அளவுக்கு இந்தப் படத்தில் காதல் தளும்பித் தளும்பி வழிகிறது.

    பள்ளியிலேயே கெத்துப் பையன் என்றால் லேண்டன் மட்டும்தான். அவனுடன் சேர்ந்து சுற்றுவதற்கு பெண்கள் மட்டுமின்றி பையன்களும் தவம் கிடக்கிறார்கள், அவன் என்ன சொன்னாலும் செய்யத் துடிக்கிறார்கள். அப்படி கொண்டாட்டமும் கும்மாளமுமாய் திரியும் அந்தக் கும்பலின் அட்டகாசம் காரணமாக, ஒரு நாள் எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்கிறது. அதற்குத் தண்டனையாக மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித்தரவும், இசை நாடகத்தில் நடிக்கவும் லேண்டன் அனுப்பப்படுகிறான். அலுப்பூட்டும் இந்த விஷயங்களைச் செய்வதற்காக வகுப்பில் படிக்கும் ஜெமியின் உதவியை நாடுகிறான் லேண்டன்.

    அழுக்குப்பெண், முட்டாள், அழகில்லாதவள், பழகத்தெரியாதவள் என்று சக மாணவ, மாணவியரால் ஒதுக்கப்பட்டவள் தான் அந்த ஜெமி. அவள் பக்கத்தில் வந்தாலே அனைவரும் விலகிப் போய்விடுவார்கள். அப்படிப்பட்ட ஜெமியிடம் போய் வேண்டாவெறுபுடன் நிற்கிறான் லேண்டன்.

    உடனே அவள் அவனிடம் கேட்பது என்ன தெரியுமா? ‘உனக்கு நான் உதவ வேண்டும் என்றால் நீ என்னை எப்போதும் காதலிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்துதர வேண்டும்’ என்கிறாள். கொலைவெறிக்கு ஆளாகிறான் நாயகன் லேண்டன். ஏனென்றால் அவனுக்குப் பின்னே நாக்கைத் தொங்கப்போட்டு சுற்றும் பேரழகிகளையும், செல்வச்சீமாட்டிகளையுமே அவன் மதிப்பதில்லை. ஆனாலும் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட கடுப்பை மனதில் மறைத்துக்கொண்டு சம்மதம் சொல்கிறான்.

    அதன்பிறகு இருவரும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால், பழகத் தொடங்குகிறார்கள். அவளது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுப்புது அர்த்தத்தையும் அழகுணர்ச்சியையும் கண்டு வியக்கிறான் லேண்டன். யாருக்கும் தெரியாமல் ஜெமி தனக்குள் ஏராளமான அழகையும் திறமையையும் புதைத்து வைத்திருப்பதை அறிகிறான். உச்சகட்டமாக நாடகம் அரங்கேறும்போது அவளது அழகையும் குரலையும் கண்டு மெய்சிலிர்த்து தன்னை மீறி முத்தமிட்டு விடுகிறான். தன்னை அறியாமல் அவளிடம் காதலில் விழுந்துவிட்டதை உணர்ந்து, அதை உணர்வுபூர்வமாகச் சொல்கிறான் லேண்டான். ஆனால் கடுமையாக கோபப்படுகிறாள் ஜெமி. நீ நமது ஒரே ஒப்பந்தத்தை மீறிவிட்டாய் என்று அவனிடம் இருந்து விலகிச்செல்கிறாள்.

    ஜெமி விலகிச் செல்லும் ஒவ்வொரு நொடியும் காதலுடன் நெருங்குகிறான் லேண்டன். ஜெமியின் தந்தையிடம் தைரியமாகச் சென்று காதல் விஷயத்தைச் சொல்ல, அவரும் இவர்களது காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் ஜெமியின் காதலைப் பெற முயற்சிக்கிறான். ஜெமியின் வித்தியாசமான பல ஆசைகளை நிறைவேற்றி ஜெமியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.

    அதனால் மனம் நெகிழும் ஜெமி, ‘நான் இப்போது கடவுள் மீது பெரும் கோபத்தில் இருக்கிறேன். நானும் உன்னை காதலிக்கிறேன். ஆனால் என்னால் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க முடியாது. புற்றுநோய் முற்றிவிட்டது’ என்று, இத்தனை நாள் மறுப்பு தெரிவித்ததற்கு காரணத்தைப் போட்டு உடைக்கிறாள். அதிர்ச்சி அடைந்தாலும் ஜெனியைக் காப்பாற்ற பெருமுயற்சிகள் செய்கிறான் லேண்டன். வசதியான தன் தந்தையின் உதவியை நாடுகிறான். எதுவும் வேண்டாம் என்று ஏற்க மறுக்கிறாள் ஜெனி. மரணம் நிச்சயம் என்றாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

    காலம் மாறுகிறது. மேற்படிப்பு முடிந்து ஒரு மருத்துவராக ஜெனி வீட்டுக்குத் திரும்பவருகிறான் லேண்டன். ‘உன்னுடைய நிறைய ஆசைகளை நிறைவேற்றினேன். ஆனால் வாழ்நாளில் ஏதேனும் ஓர் அதிசயத்தை நிகழ்த்த நீ ஆசைப்பட்டாய். அதுதான் நடக்கவில்லை’ என்று வருத்தப்படுகிறான்.

    அதைக் கேட்கும் ஜெனியின் அப்பா, ’அதுவும் நடந்துவிட்டது. நீதான் அந்த அதிசயம். லட்சியமற்ற இளைஞனாக இருந்த உன்னை உன்னத மனிதனாக ஜெனி மாற்றியிருக்கிறாள்’ என்கிறார். அதனை உணரும் லேண்டன் ஜெனியின் புகைப்படத்தைப்பார்க்க, கண்ணீர் திரையிட்டு படம் முடிகிறது. காதலை விரும்புபவர்களின் பைபிள் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்.

    ஐ.எம்.டி.பி : 7.4

    நமது மதிப்பெண் : 68

    பின்குறிப்பு :

    1. நிக்கோலஸ் பார்க்கஸ் எழுதிய கதையைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டது. நிக்கோலஸின் சகோதரி உண்மையிலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது நிஜ வாழ்க்கையைத்தான் நாவலில் எழுதியிருந்தார். சினிமா திரைக்கதைக்காக நிறைய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    2. 2002-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது. 1950ம் ஆண்டு கதை நடப்பது போன்று முடிவு செய்யப்பட்டு இருந்தது என்றாலும், கடைசியாக 1990ம் ஆண்டு நடப்பதாக படமாக்கப்பட்டுள்ளது.

    3. நடிப்பு என்று தெரியாதபடி நிஜமாகவே வாழ்ந்துகாட்டிய நாயகன் ஸென்வெஸ்ட், நாயகி மேண்டிமோர் ஆகியோருக்கு இந்தப் படம் ஏராளமான விருதுகளை அள்ளிக்கொடுத்தது.

    4. இந்தப்படத்தைஇயக்கிய ஆடம்சாங்க்மென் நடிகராகவும் டான்ஸராகவும் புகழ் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

    5. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து பாடல்கள் இன்றும் ரசிக்கப்படும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளன.

    2. இன்செப்ஷன்

    ஜக்கம்மா சொல்லும் கனவுகளையும் அதன் பலனையும் வைத்து தமிழில் படம் எடுக்கும்போது, கனவு பற்றி எக்குத்தப்பாக ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத சிந்தனையே கதை. அப்படி ஒரு விபரீதத்தை படமாக்கும் துணிச்சல் நோலனுக்கு மட்டுமே சொந்தம். புதுமையான கதைக்களன் என்ற வகையில் இன்செப்ஷன் மிகவும் முக்கியமான படம்.

    காதல் திருடன் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில், டைட்டானிக் பட நாயகன் லியோனார்டோ டி காப்ரியோ கனவுத்திருடனாக நடித்திருக்கிறார். பிறருடைய கனவுக்குள் நுழைந்து, அவர்களின் மூளைக்குள் இருக்கும் ரகசியங்களைத் திருடிவரும் குட்டியூண்டு(?) திருடனாக இருக்கிறார். ஒரு வரியில் சொல்வது போல் கனவுக்குள் நுழைவது அப்படியொன்றும் எளிதான வேலை அல்ல. இந்தப் பணியில் இறங்கியதால், ஆசை மனைவியை இழந்து சட்டச்சிக்கலிலும் மாட்டியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் ஒரு கும்பல் இவரிடம் பேரம் பேசுகிறது.

    கோடீஸ்வர அப்பா சாகக் கிடப்பதால் அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் இளைஞனின் கனவில் புகுந்து, ‘இந்த பிசினஸ் இனி சரிப்படாது’ என்று இழுத்து மூடுவதற்கான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்ற வேலையை செய்யச்சொல்லிக் கேட்கிறார்கள். அப்படிச் செய்தால் காப்ரியோவுக்கு இருக்கும் அத்தனை சிக்கல்களில் இருந்தும் காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறார்கள்.

    இளைஞனின் கனவுக்குள் நுழைந்தால் மட்டுமே போதாது, கனவுக்குள் நுழைந்து அவரைத் தூங்கச்செய்து அடுத்த கனவு வரவழைத்து அந்தக் கனவுக்குள் நுழைந்து (தலை சுற்றுகிறதா?) மூளையில் எண்ணங்களை விதைக்க வேண்டும். இதனை எல்லாம் ஒரு விமானப்பயணத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் எனும் கடினமான இலக்கு என்றாலும் ஒப்புக்கொள்கிறான் காப்ரியோ.

    கனவுக்குள் நுழைவதைவிட, கனவில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம். கனவுக்குள் இறந்துவிட்டால் அல்லது அடிபட்டால் நிஜவாழ்க்கையில் விழிப்பு வந்துவிடும். கனவுலகில் இருக்கிறோமா அல்லது நிஜவுலகில் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்காக கையில் ஒரு பொருளுடன் கனவுக்குள் நுழையவேண்டும். ஆனாலும் கனவில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டத்தில் நுழையும்போது மரணம் ஏற்பட்டால் நிஜவாழ்க்கையில் கோமாவை சந்திக்கவேண்டி வரலாம். கனவுக்குள் செல்லவேண்டிய இடங்கள் குறித்து வரைபடம் வரைந்துதரும் தோழி எலன் பேஜ் மற்றும் டாம் ஹார்டியுடன் இணைந்து காரியத்தில் இறங்குகிறான் டிகாப்ரியோ.

    காப்ரியோ இளம் தொழிலதிபர் கனவுக்குள் நுழைந்து அவனை அடுத்தகட்ட கனவுக்குள் அழைத்துச்செல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அவன் வித்தகனுக்கு எல்லாம் வித்தனாக இருக்கிறான் அந்த தொழிலதிபரின் மகன். ஆம், கனவுக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு காவலன் வைத்திருக்கிறான். கனவுக்குள் நுழைந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து, ஒரு காவலன் நிறுத்தியிருக்கிறான் என்றால், அவன் எப்பேர்ப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும்?

    அந்த காவலனை மீறி அந்த இளைஞனின் கனவுக்குள் நுழைந்து நினைத்ததை சாதித்தானா என்ற பதைபதைப்பு ஒரு பக்கம் இருக்கும்போது, கனவுக்குள் நுழைந்துவிட்ட காப்ரியோ, இதுதான் நிஜம் என்று ஒரு கட்டத்தில் வாழத்தொடங்கி விடுகிறான். அவனுக்குள் கனவு என்ற நிஜத்தை விதைத்து மீண்டும் நிஜ வாழ்க்கைக்கு இழுத்துவர தோழியும் காதலியுமான எலன் செய்யும் முயற்சிகள் வெற்றி அடைந்ததா என்பதை பதைபதைப்புடன் படத்தைப் பாருங்கள்.

    இந்தப் படத்தின் திரைக்கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருப்பதை எல்லோருமே கவனிக்க முடியும் என்றாலும் படத்தின் விறுவிறுப்பில் அவை மாயமாய் மறைந்துவிடுகின்றன. நீங்களும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் கனவுக்குள் நுழைந்துபாருங்கள், புதிய சினிமா தரிசனம் கிடைக்கும்.

    சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். உண்மையிலேயே பிறர் கனவுக்குள் நுழைய முடிந்தால் எப்படியிருக்கும் என்று இந்த படம் பார்த்ததும் கற்பனை செய்யாமல் இருக்கமுடியாது. மனைவியை தினமும் கால் அமுக்கி விடும்படி உத்தரவு போட முடியும், முதலாளியை விரும்பும் நேரத்தில் எல்லாம் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கொடுக்கச்செய்ய முடியும். இதையெல்லாம்விட ஆசைப்பட்டவர்களை எல்லாம் ‘ஐ லவ் யூ’ சொல்ல வைக்கலாம். இப்படி சிந்திக்க வைப்பதுதான் புதுமையான சினிமா.

    ஐ.எம்.டி.பி. - 8.8

    நமது மதிப்பெண் - 70

    பின்குறிப்பு :

    1. 2001-ம் ஆண்டு ‘இன்செப்ஷன்’ படத்தின் கதையை எழுதிவிட்டாலும், இதனை மேலும் மேலும் மெருகேற்றி படமாக்கி வெளியிட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் நோலன்.

    2. இந்தக் கதையின் மீது லியோனார்டோ டி காப்ரியோவுக்கு ஆரம்பத்தில் பெரிய நம்பிக்கை இல்லையாம். கதை விவாதத்தில் அமர்ந்ததும், கதைக்குள் மூழ்கி விவாதத்தில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.

    3. இந்தப் படத்தில் எலன் பேஜ் அழகுப் பொம்மையாக வந்திருந்தாலும், நோலனின் தேர்வு இவர் அல்ல. எமிலி பிளன்ட், ரேய்ச்சல் மெக் ஆடம்ஸ், டெய்லர் ஸ்விப்ட், எம்மா ராபர்ட்ஸ், ஜெஸ்ஸி ஷெரோம் ஆகிய நடிகைகளை எல்லாம் தேடிவிட்டு கடைசியாகத்தான் எலன் பேஜ் செட்டானார்.

    4. இந்தப் படம் புதுமையாகத் தெரியவேண்டும் என்பதற்காக அனமார்பிக் ஃபார்மெட் முறையில் 35 எம்.எம். ஃபிலிமிலும், முக்கியமான காட்சிகளை 65 எம்.எம். ஃபிலிமிலும் படமாக்கினார் நோலன். இல்லூசன் எனப்படும் பரிமாணக் காட்சிகளே இந்தப் படத்துக்கு ஆதாரம் என்கிறார்.

    5. ஏராளமான குறைகள் படத்தில் தென்பட்டாலும் பிரபல ஆங்கில சினிமா விமர்சகர்களின் டாப் 10 பட்டியலில் இந்தப் படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

    3. பிளாக் ஸ்வான்

    ஒரு கலையின் உச்சச்தைத் தொடுவதற்கு எத்தனை மன உறுதியும் வெறியும் இருக்கவேண்டும் என்பதை இத்தனை வலியுடன் சொன்ன திரைப்படம் எதுவுமே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். எந்த ஓர் உச்சத்தை அடைவதற்கும் கடுமையான போராட்டம் அவசியம் என்றாலும், அந்த முதல் இடத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் அதைவிடக் கொடுமையானது என்பதையும் இந்தப் படம் பட்டியலிடுகிறது. எந்த ஒன்றின் மீதும் அளவுக்கு மீறி ஆசை வைப்பதால் ஏற்படும் விளைவுகளை சொல்வதுதான், பிளாக் ஸ்வான்.

    நினா சாயர்ஸ் கதாபாத்திரத்தில் வரும் நாடலி போர்ட்மென் திறமையான பாலே நடன மங்கையாக இருக்கிறாள். அவளது அம்மாவும் முன்னாள் பாலே நடனக் கலைஞர் என்பதால், மகள் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். மகள் உயர்வுக்காக ஒவ்வொரு நொடியும் உழைக்கிறாள். அப்போது, ‘ஸ்வான் லேக் என்றொரு புதிய பிரமாண்டமான டான்ஸ் ஷோ நடத்துவதற்கு திட்டமிடுகிறான் தாமஸ். அந்த ஷோவில் இன்றைய முன்னணி பாலே நட்சத்திரமாக இருக்கும் பெத் மெக்கன்டருக்குப் பதிலாக புதியவளைத் தேர்வு செய்ய நினைக்கிறான். அவன் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக கடுமையாக பயிற்சி எடுக்கிறார்கள்.

    அந்த நாடகத்தின் கதையைச் சொல்கிறான் தாமஸ். நாட்டின் இளவசரனுக்கு ஒயிட் ஸ்வான் மீது காதல் வருகிறது. அவளும் இளவரசன் காதலை ஏற்கிறாள். இவர்கள் உறவு இனிமையாக போகிறது. இந்த நேரத்தில் ஒயிட் ஸ்வானின் சகோதரி பிளாக் ஸ்வான் வருகிறாள். தனது சகோதரியிடம் இருந்து இளவரசனைப் பிரித்து, தன்னுடைய காதல் வலையில் விழவைக்கிறாள். இளவசரனும் கண்மூடித்தனமாக பிளாக் ஸ்வான் மீது காதல் கொள்கிறான். தன்னுடைய காதலனை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஒயிட் ஸ்வான், இனியும் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த நாடகத்தில் ஒயிட் ஸ்வான் மற்றும் பிளாக் ஸ்வான் ஆகிய வேடங்களையும் ஒரே பெண் ஏற்று நடிக்கவேண்டும் என்பதுதான் சவால்.

    தேர்வு நடக்கும்போது அத்தனை பேரையும் மீறி அழகாக நடனமாடுகிறாள் நினா. ஒயிட் ஸ்வான் வேடத்துக்கு அவளைவிட்டால், யாருமே இல்லை எனும் அளவுக்கு தனித்தன்மையுடன் மிளிர்கிறாள். ஆனால் நினாவால் பிளாக் ஸ்வான் வேடத்தில் ஜொலிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால் நினா அடிப்படையில் மிகவும் சாதுவான, நியாயமான பெண். 28 வயதானபோதும் பாலே நடனத்தில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் காதல், செக்ஸ் போன்ற விவகாரத்தில் ஈடுபடாதவள். இன்னும் சொல்லப்போனால் யாருடனும் கோபப்படவும் சண்டை போடவும் தெரியாதவளாக இருக்கிறாள்.

    இப்படியொரு குணத்துடன் இருக்கும் உன்னால் நிச்சயம் பிளாக் ஸ்வான் வேடத்தில் ஜொலிக்க முடியாது. ஒயிட் ஸ்வானை மிஞ்சும் வகையில் ஆர்ப்பாட்டமாகவும், வித்தியாசமாகவும் டான்ஸ் ஆடவேண்டும் என்கிறான் தாமஸ். நிச்சயம் நான் இதனை செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள் நினா. அப்படியென்றால் முதலில் உன் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை அறிந்துகொள் என்று முத்தம் கொடுக்க முயல, கடித்து வைக்கிறாள். ஆனாலும் நினாவின் ஆர்வத்துக்காகவும் திறமைக்காகவும் அவளை அடுத்த ஸ்டாராக அறிவிக்கிறான் தாமஸ். இந்தத் தகவலை அம்மாவிடம் உணர்ச்சிக்கொந்தளிப்புடன் நினா பகிர்ந்துகொள்ளும் காட்சி ஒன்றே போதும், இவர் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகை என்பதை நிரூபணம் செய்வதற்கு. அந்த சில நொடிகளில் ஆயிரம் பாவனைகளைக் காட்டி அசத்திவிடுகிறார்.

    இப்போது நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கும் பெத், இந்தத் தகவல் தெரிந்து ஆவேசமாகிறாள். வேண்டுமென்றே ஒரு விபத்தில் சிக்கி தன் கால்களை உடைத்துக்கொள்கிறாள். இது நினாவை அதிர வைக்கிறது. ஆனாலும் பிளாக் ஸ்வானாக மாறுவதற்காக கடுமையிலும் கடுமையாக உழைக்கிறாள். ஒல்லிப்பிச்சானாக இருந்தால்தான் கால் பெருவிரலை உயர்த்தி ஆடமுடியும் என்பதற்காக சாப்பாட்டைத் துறக்கிறாள். அதனால் சத்துக்குறைபாடு ஏற்பட்டு உடலில் சிக்கல் உண்டாகிறது. அவற்றை எல்லாம் தாயிடம் இருந்தும் மறைக்கத் தொடங்குகிறாள்.

    எத்தனை முறை ஆடினாலும் பிளாக் ஸ்வான் வேடத்திற்கான தகுதியைப் பெறமுடியாமல் தவிக்கிறாள் நினா. இந்த நேரத்தில் அவளது தோழி லிலி, மிகவும் அனாசயமாக பிளாக் ஸ்வான் நடனம் ஆடுவதைப் பார்க்கிறாள். உண்மையில் லிலியின் குணமே அப்படிப்பட்டது என்பதை அறிகிறாள். எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் சுதந்திர வாழ்க்கை வாழும் லிலி, விரும்பிய நபர்களுடன் எல்லாம் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதும், பிடித்ததை எல்லாம் செய்யும் மனநிலையில் வாழ்பவள். லிலி தனக்குப் போட்டியாக வந்துவிடுவாள் என்று பயப்படுகிறாள் நினா. முதன்முறையாக அவள் மனதில் கோபமும் பொறாமையும் வருகிறது.

    நாளை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஆனாலும் தாமஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1