Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jakartavil 100 Naatkal
Jakartavil 100 Naatkal
Jakartavil 100 Naatkal
Ebook174 pages40 minutes

Jakartavil 100 Naatkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.

இந்தோநேஷியாவின்தலைநகரான ஜகார்த்தாவில் மிகச்சரியாக நூறு நாட்கள் மட்டுமே தங்கும்படியாயிற்று.

வேறு நாடு

வேறு மொழி

வேறு சூழல்

வேறு தட்டவெப்பம்

இப்படியான மாறுதலில் இந்தப்பயணம் தேவையா என்ற கேள்விக்கேயிடமின்றி என் மகளுக்காக போயே தீரவேண்டிய நிர்ப்பந்ததில் நான். என் உடல்நிலைக்கேற்ப ஒரு சில இடங்களைமட்டுமே தேர்வு செய்து விசிட் செய்தேன். அதிலும் சில இடங்கள் ரெனொவேஷனில் போய்விட பார்த்ததை ரசித்ததை மகிழ்ந்ததை என் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த நூல். இது வார்த்தையாகமட்டுமேயில்லாமல் வரிவடிவாக உங்கள் எண்ணங்களில் வண்ணம் தந்து சிந்தையில் விந்தையைப் பூசி களிப்புவகையை த் தருமாயின் அதுவே எனக்கு சந்தோஷம். ஆனாலும் உறுதி தருகிறேன் உங்களுக்கு ரசனைமிகு அனுபவமாகவே இருக்கும். வாருங்கள் "ஜாய்ஃபுல் ஜகார்த்தாவை" ரசிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580135409322
Jakartavil 100 Naatkal

Read more from J. Chellam Zarina

Related to Jakartavil 100 Naatkal

Related ebooks

Related categories

Reviews for Jakartavil 100 Naatkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jakartavil 100 Naatkal - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜகார்த்தாவில் 100 நாட்கள்

    Jakartavil 100 Naatkal

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.மழை! மழை!! முதல் மழை!!!

    2.பொன்னியின் செல்வன்

    3.தமன் சஃபாரியில் ஒரு ஜாலி சவாரி!

    4.தமன் சஃபாரி... தொடர் வலம்!

    5.தமன் சஃபாரியின் தொடர் வலம்!

    6.தமன் சபாரி சரணாலயம்!

    7.கதிட்ரல் சர்ச்சும் மெரீனாவும்

    8.நான் சிரித்தால் தீபாவளி

    9.கண்ணாடியில் மீன் விளையாடும்.

    10.விழா கோலாகலம்

    11.பழமைப் பொக்கிஷம்

    12.ஜோரான ஜோக்ஜா பயணம்

    13.ப்ரம்பனான் ஆலயம்

    14.மனதைக் கவர்ந்த பாலேட் நடனம்

    15.கடைவீதி குதூகலம்.

    16.மிதக்கும் சந்தை/பாண்டூங்

    17.புத்தம்புது இடமே! புத்துணர்வு உற்சவமே!

    18.ஆர்க்கிட் பூவனமே!

    19.எரிமலை எப்போது வெடிக்கும்?

    20. Hot Springs .ம் கம்பாபூமியும் (பூகம்பம்)

    21.ஜெரினா விசிட் அடித்த ஸரீனா.

    22.ருசி மிகுந்த கரகர பக்வான்

    23.பார்த்ததும் ரசித்ததும்

    1.மழை! மழை!! முதல் மழை!!!

    E:\Priya\Book Generation\Jakartavil 100 days\1-min.jpg

    விடியும் போது சூரியன் சூடாகவே ஹாய்! சொல்லி எழுப்பினார். பத்துமணியிருக்கும். சுகமானக் காற்று... மெதுவே இருள் பூசிக்கொண்டு சாம்பலாய் வெளிறிய வானம். கருமேகம் வேகமாய் விரைவு காட்ட காற்று அதனை கலைக்க... மேகமண்டபம் குழப்பத்தில் இருந்தது.

    சிறிது நேரத்தில்...

    ஆஹா...

    சலசல மழை!

    வேகமாகத் திரைபோல் மேலிருந்து கீழே... மரம் தேடும் மழைத்துளியாய் இலையோடு கிளைகளாடி வரவேற்க

    என் வீட்டு பால்கனிச் செடிகள் மழையில் தலை துவட்ட இடியுடன் மழைத் தாண்டவம். அழகோ அழகு...

    சாலையில் பளிச்சிடும்முகப்பு விளக்கோடு விரையும் வாகனங்கள். குடையுடன் நகரும் மக்கள்.

    இலைக்குடைகளுக்கு கீழே நகரும் சின்னஞ்சிறு விற்பனை வண்டிகள்.

    தாயின் தோளில் இருந்து கையைநீட்டி குடையில் வழியும் நீரை கையிலேந்தும் க்யூட்டி.

    மழை நிமிடத்தில் காட்சிகளையே மாற்றி விட்டது.

    என் ப்ரிய மழையே!

    நீதான் எத்தனை முகம் காட்டுகிறாய். மழை எப்போதுமே அழகு தான் இல்லையா...

    E:\Priya\Book Generation\Jakartavil 100 days\2-min.jpg

    இங்கிருந்து பார்க்க மழையின் வேகமும் பூமியைத் தழுவும் விரைவும் அப்பப்பா...

    சிறிது நேரம் கழித்து மழை நின்று விட்டது. மீண்டும் சாலையைப் பார்க்க...வீதியில் சொட்டுத் தண்ணீர் கூட நின்றிருக்கவில்லை.யாரோ ஈரத்துணியால் துடைத்து விட்டாற் போல் க்ளீன் & நீட்.

    மரங்கள் மட்டுமே காற்றில் தம் இலை கிளைகளை அசைத்து மழைநீரை விசிறின. மற்றபடி...மழை வந்த சுவட்டைக் காணோம். ப்ரமிப்பாய் இருந்தது எனக்கு.

    E:\Priya\Book Generation\Jakartavil 100 days\3-min.jpg

    2.பொன்னியின் செல்வன்

    முதல்மழை தரிசனமான பின்பு. ஜகார்த்தாவில் நான் பார்த்த முதல் சினிமா பற்றி எழுத வேண்டாமா?

    தமிழறிந்த அனைவருமே ஆவலோடு காண்பதற்கு காத்திருந்த படமாயிற்றே... அந்த அனுபவம் வேண்டி நானும் புறப்பட்டேன்.

    மழை வருமுன்னான ஈரமும் ஈரமுமல்லாத காற்று வீசும் இரவு... எங்கள் வீட்டிலிருந்து கூப்பிடு தூரம் Citra towers.

    தெருவின் இருபக்கமும் சென்னை பர்மாபஜார் போன்று ரோட்டோரகக் கடைகள்! அளவாய் ஒளி சிந்தும் விளக்குகள்.கையேந்தி பவன்கள் போல நிறைய சின்ன கடைகள். நடமாடும் உணவகங்கள். மக்கள்... மக்கள்... எல்லாவற்றிலுமே! ரசித்து உண்பவர்கள்! வேடிக்கை பார்ப்பவர்கள் சாலையோரமாய் அமர்ந்து வம்பளப்பவர்கள்! நண்பர்களோடு சீரியஸாய் பேசும் இளவட்டங்கள்!

    இளஞ்சோடிகள்! குண்டுகன்னமும் குறுமணிக் கண்களுமாய் குழந்தைகள்!

    பார்க்கத் திகட்டவில்லை! உள்ளுக்குள்ளே அலையடிக்கிறான் பொன்னியின் செல்வன்.! வெளியே இந்தக் காட்சிகளெல்லாம் கலைநயமாய்!

    நேற்று தான் இங்கே ரிலிஸ். அதுவும் மூன்று நாட்களுக்கு மட்டுமே! மூன்று காட்சிகள் மட்டுமே.

    இங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் முயற்சியும் சேவையும்!

    (பாராட்டுக்குரிய விஷயம் இன்னும் கூட இது போல நான் இங்கு வந்த நாளில் நடந்த பின்னணி பாடகி சித்ராம்மாவின் மியுசிக் நைட் ஆண்டு விழா மலர் வெளியீடு இதெல்லாம் பிறிதொரு பதிவில்)

    அழகான சுத்தமான சத்தமில்லாத லாபி! அருகருகே Screen 1 முதல் 4 வரை!

    தள்ளுமுள்ளு இல்லை...கசகச இல்லை அழகாய் இயல்பாய்... உள்ளே போனோம். லாபியிலும் ஹாலிலும் மந்திர ஸ்தாயியாய் பேசும் ஒலி மட்டுமே ஓங்கி ஒலிக்கும் குரலோ அவுட்டுச் சிரிப்போ... எதுவுமின்றி அழகியலான உயிர்ப்போடு மிளிர்ந்தது.

    எங்கள் வரிசையில் அமர்ந்தாகி விட்டது.பிரம்மாண்ட திரையில் பிரமாண்டமாக கல்கியின் பிரம்மாண்ட கற்பனை இன்னும் பிரம்மாண்டத்துடன்...

    உயிர்ப்போடு வெறியோடு... ரத்தக்களறியோடு இசையோடு நாட்டியங்களோடு அலையோசையோடு புரவிக்குளம்படியோசையோடு... வேழத்தின் பிளிறலோடு...

    கண்ணைக் கட்டிப்போட்டது.

    நான் கல்கியை சற்றே மனதில் தள்ளி வைத்து விட்டு திரையில் வந்த பொ.செ வை மனதிலேற்றி எந்த ஒப்பீட்டுக்குள்ளும் போகாமல் அப்படியே ரசித்தேன். அவ்வப்போது அருகிலிருந்த என் பேரனுக்கும் ரன்னிங் கமெண்டரி தந்து கொண்டே!

    பொ.செ வை மணிரத்னம் அறிவிப்பு வந்தபின்பு சமிபத்தில் படித்து முடித்த என் மகளோ கொஞ்சம் தடுமாறினாள். இதென்ன இப்படி? இவர்கள் சந்திப்பு இப்படியில்லையே? ஆ...என்ன ஆதித்யன் ஸ்டாட்ர்ட்டிங்கில் எப்படி வரப்போச்சுது! குடந்தை ஜோசியரை எங்கே என்று.

    திரைக்கதை வடிவம் சிதைவின்றி யிருப்பதே பெரும் விஷயம் என்று நினைத்துக் கொண்டேன்.

    படம் முடிந்த போது திருப்தியோடும் மணிரத்னம் டீமுக்கு நன்றியோடும் எழுந்தேன்.

    புதினத்தை குலைத்து விடாமல் படைத்திருந்தமைக்கு.

    மனமார்ந்த நன்றி!

    இசை தான் கொஞ்சம் நெருடல். சின்னசின்ன ஆசையும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலியும் கண்ணாளனே வும் ஏனோ நினைவில் எழுந்து முரண்டின.

    சமுத்திர குமாரி பாடும் பாடலை கல்கியே எழுதியிருக்க அதையே பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் தோன்றியது.

    "பூங்குழலியின் பாடல்

    அலை கடலும் ஓய்ந்திருக்க

    அகக் கடல்தான் பொங்குவதேன்?

    நிலமகளும் துயிலுகையில்

    Enjoying the preview?
    Page 1 of 1