Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chithirai Nilave!
Chithirai Nilave!
Chithirai Nilave!
Ebook120 pages41 minutes

Chithirai Nilave!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்... தமிழ் போலவே இனிமை இளமை எளிமை எனும் இலக்கணத்திற்க்குரியவள். காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒருவனை நம்ப அவள் செய்த மனிதாபிமான உதவிகள் காளை மனதில் விபரிதம் விதைக்க மனதில் உண்மையான காதலோடு காத்திருக்கும் மாமன் மகனுக்கு என்ன பதிலை கூறப் போகிறாள்?

"சித்திரை நிலவே" அனைத்திற்கும் விடை வைத்திருக்கிறது. வாசித்து தான் பாருங்களேன்! ராணிமுத்து வில் வெளியாகி வாசகர்களின் ஏகோபித்த ஆதாரவை பெற்ற காதல் காவியம்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580135411115
Chithirai Nilave!

Read more from J. Chellam Zarina

Related to Chithirai Nilave!

Related ebooks

Reviews for Chithirai Nilave!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chithirai Nilave! - J. Chellam Zarina

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சித்திரை நிலவே!

    Chithirai Nilave!

    Author:

    ஜே. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    பொருளடக்கம்

    துளி :1

    துளி :2

    துளி :3

    துளி:4

    துளி :5

    துளி :6

    துளி :7

    துளி :8

    துளி :9

    துளி :10

    துளி :11

    துளி :1

    கையில் ட்ராலியுடனே வந்து நின்ற பெண்ணை ஏற இறங்கப் பார்த்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

    பேஷண்ட் நேம் சிவசாமி. எந்த ரூம்

    ஒரு நிமிஷம்

    அவள் கணிணியில் கண்களை ஓட்டிவிட்டு

    தேர்டு ப்ளோர் ரூம் நம்பர் 303

    தமிழ்மலர் வேகமாக லிப்ட் இருக்கும் பகுதிக்கு நகர்ந்தாள்.அப்பாவைத்தான் அட்மிட் பண்ணியிருக்கிறார்கள். ஏர் போர்ட்டிலிருந்து வீட்டுக்குக் கூட போகவில்லை. நேரே வந்திருந்தாள்.

    அம்மா...

    தமிழு...!வந்திட்டியா

    அப்பாவுக்கு என்னம்மா? இப்போ எப்படியிருக்கிறாங்க

    இப்போ பரவால்லைடா...என்னங்க...

    அம்மா தூங்கட்டும் எழுப்பாதே

    அதற்குள் அப்பா சந்தடியில் விழித்துப்பார்த்தார். கைகள் மகளின் பக்கம் உயர தமிழ் மலர் பாய்ந்து போய் கையை பிடித்துக் கொண்டாள். ஆளே மாறிப் போயிருந்தார். மெலிந்திருந்தது உடல்.

    வந்திட்டியா கண்ணு. எங்கே உன்னை பார்க்காமலே போயிடுவேனோன்னு பயந்திட்டேன்டா

    அப்படில்லாம் பேசாதீங்கப்பா

    மணிம்மா! புள்ளை நேரா இங்கேதான் வந்திருக்கு. காபி யிருந்தா குடேன். தொண்டை காஞ்சி கிடக்கும்ல

    இந்தா தாரேன்

    அம்மா! காபி இருக்கட்டும். டாக்டர் பேரை சொல்லும்மா. நான் விசாரிச்சுட்டு வரேன்

    கண்ணு! டாக்டர் வர நேரம்தான் காபியக் குடி... இப்போ எனக்கு ஒன்னுமில்லே ஒன்னை பார்த்திட்டேன்ல்ல...தெம்பு வந்திடுச்சுடா

    என்னப்பா? இப்படி இழுத்து விட்டுகிட்டீங்க. எனக்கு உசிரே போயிடுச்சுப்பா

    உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்த்துட்டா போதும் கண்ணு.

    எப்பவும் உங்கவலைதான் தமிழு

    அப்பா...ஏன்ப்பா...நான் நல்லாயிருக்கேன் கை நிறைய சம்பாதிக்கிறேன்

    பொம்பளைப்புள்ளைக்கு அது போதுமா தமிழு. ஊரே பேசுது. உன் சம்பாதனையிலே உக்கார்ந்து திங்கறோம்ன்னு. அதனாலதா... கல்யாணம் பேசலைன்னு. ஒரு நல்லது கெட்டதுக்கு போவ முடியலை...அவலு மெல்லுறாப் போல மென்னு துப்புறாங்க

    மணிம்மா! போதும் வந்து பத்து நிமிசம் ஆகலை...இப்போ இதெல்லாம் பேசனுமா

    அதற்குள்ளாக டாக்டர் வர பேச்சும் நின்றது.

    அப்பாவுக்கு ஆஞ்சியோ பண்ணனும் பிபி ரொம்பவும் அதிகமாருக்கு லெவலுக்கு கொண்டு வரனும் அடைப்பு இருக்கு. சர்ஜரி தேவைப்படும்

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டாள் தமிழ்மலர். பிபி சீரானதுமே சர்ஜரியை வைத்துக் கொள்ளலாம் என்றார் மருத்துவர்.

    ஊரை விட்டுப் போய் முழுதாக ஐந்து வருடமாகி விட்டது.பிஜிக்காக என்று டில்லிக்குப் போனாள் அங்கேயே வேலையும் கிடைத்து விட்டது ஆறே மாதத்தில் ஆன்சைட் கிடைத்து விட வெளிநாடு போனவள் தான் யூக்கே, கனடா,இப்போது ப்ரான்ஸ் போய் விட்டாள். இருமுறை தாய்தந்தையரை ஆறாறு மாதமென அங்கே வரவழைத்துக் கொண்டாள்.இவள் மட்டும் தாய்நாடு வருவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள். இரண்டு நாளுக்கு முன் வழக்கம்போலவே பேசத் துவங்க அம்மா அழுது விட்டாள். அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை என்று...

    இவள் அதிர்ஷ்டம்

    போனவாரம் தான் புரொஜெக்ட் வொர்க் முடித்திருந்தாள் வெற்றிகரமாக. இன்னும் அடுத்தது வரும்வரை ரிலாக்ஸ்டாக இருக்கலாம். பத்து நாளோ அடுத்தவாரமோ உடனேயும் கூட வரலாம். அம்மாவின் போன் பேச்சில் அடுத்த ப்ளைட்டைப் பிடித்து விட்டாள் தமிழ் மலர்...

    மனசெல்லாம் பயத்தில் சுழன்றது. தான் அருகில் இல்லாதது குற்றவுணர்வாய் இருந்தது. அவளும் தான் என்ன செய்வாள்.? அவளுடைய மனசிலிருந்து எதையும் தூக்கியெறிய முடியாமல் தானே ஒளிந்து கொண்டிருக்கிறாள். இதை எப்படி பெற்றோரிடம் சொல்வது?

    மனம் முழுக்க ரணமாகித்தானே நாட்டை விட்டே ஓடினாள்...

    இங்கேயே இருந்தால் எங்கே வெடித்து தூள்தூளாகி விடுவோமோ என்று பயந்து தானே ஊரைவிட்டு...நாட்டை விட்டே ஓடினாள். ஆனால்...

    மனதிலிருந்து எதையும் பிடுங்கி எறிய முடியாமல் தவித்துத் தான் போனாள்.இப்போதுதான் மனம் கொஞ்சம் சமனப்பட்டாற் போலிருந்தது. இந்தியாவுக்குப் போய்வந்தாலென்ன? அம்மா அப்பாவை சுற்றங்களைப் பார்த்து விட்டு வந்தாலென்ன என்ற இருமனமாய் உழலும் போதுதான் அம்மாவிடமிருந்து போன். அடித்துபிடித்துக் கொண்டு வந்தாயிற்று...

    அப்பா சொன்னார். ‘நீ வீட்டுக்குப் போயிட்டு தூங்கி எழுந்து வாம்மா’ என்று அவளுக்குமே ஜெட்லாக் ஒருமாதிரியாகத்தானிருந்தது.

    ட்ராலியை இழுத்துக் கொண்டு கதவைத் திறக்கும் சமயம்... யாரோ அந்தப்புறமிருந்து தள்ள தடுமாறியவளை ஒரு வலிமையான கரம் தாங்கியது.

    வா...வாப்பா கதிரு...

    கூடவே செங்கமலம் அத்தையும்

    வா வா...செங்கு

    ஹேய் நீ எப்போ வந்தே

    இப்போதான் செல்வாத்தான். வாங்க அத்தை

    குசலம் விசாரித்து நலம் விசாரித்து...

    ஸாரி அத்தே. நீங்க போன் பண்ணப்போ நானும் அப்பாவும் வெளியூர்ல மாட்டிக்கிட்டோம். அம்மாவுக்கு தனியா வரத் தெரியாது. அப்பாதான் நான் பார்த்துக்கிடுறேன். நீ அம்மாவை கூட்டிட்டு ப்போ மணியத்தை கஷ்டப்படும் ஒண்டியாளான்னு சொல்லி விரட்டிட்டாங்க

    பரவால்லை கதிரு. திடிர்னு நெஞ்சு வலிக்குதுன்னு இவர் சொன்னதுமே ஒன்னுமே புரியலை. பக்கத்துலே இருக்கிறவங்கதான் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி...இங்கே வந்தோம். தமிழு காலையிலே வந்தா. இன்னும் வீட்டுக்கு கூட போகலை அதான் போகச் சொன்னேன்.

    சரி அத்தை! நான் இங்கே இருக்கேன். நீங்க மூனுபேரும் வீட்டுக்குப் போயிட்டு வாங்க

    சட்டென்று முடிவெடுத்து பெண்களை அனுப்பி வைத்தான்.

    தமிழ்மலர் அவனிடம் தலையசைத்து விடை பெற்றாள்.இன்னுமே அழகேறி நிறமாகியிருந்தாள்.ஏனோ... தன்னுடைய நிறத்தை குனிந்து பார்த்துக் கொண்டான் கதிர்ச் செல்வன்.

    ஏற்கெனவே மாநிறம்...இப்போது வயலிலும் வரப்பிலும் வெயிலில் காய்ந்து மேலும் கருத்துப் போயிருந்தான்.

    உழைத்து உரமேறிய உடல். நல்ல உயரம் அதற்கேற்ற உடல்கட்டு.திண்டுக்கல் அருகே உள்ள சேந்தனூர்தான்...அப்பா அயவந்திநாதன் விவசாயி.ஏழெட்டு ஏக்கர் நிலம். கல்லு வீடு.இதுதான் அவர் ஆஸ்தி. அவரும் நல்ல உழைப்பாளி. ஒரேமகன் கதிர்ச் செல்வன்.

    அவனும் விவசாயம் படித்து நிலத்தில் பாடுபட சந்தோஷம் தான். செங்கமலத்துக்கு மட்டும் ஒரே மகன் பெரியபடிப்பு படித்துவிட்டு ஆபிசராக வேண்டுமென்று கனவு இருந்ததுதான்... ஆனால் மகனின் விருப்பம் தெரிந்ததுமே அதை புதைத்துக் கொண்டார்.

    ஆனாலும் அம்மாவின் ஆசை புரியாதவனா என்ன...

    அக்ரியில் மேற்படிப்பையும் முடித்து விவசாய

    Enjoying the preview?
    Page 1 of 1