Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paadu Pappa
Paadu Pappa
Paadu Pappa
Ebook59 pages11 minutes

Paadu Pappa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Children's Rhymes Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Paadu Pappa

Related to Paadu Pappa

Related ebooks

Reviews for Paadu Pappa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paadu Pappa - V.Thamilzhagan

    54

    இயற்கை நம் கை

    இயற்கை மனிதரின், இன்னொரு கையென

    இணைந்தால் நமக்குப் பயன்தானே!

    இயற்கை வாழ்க்கை அமைந்தவர் வாழ்க்கை

    இன்றும் என்றும் பொன் தானே!

    செயற்கைக் கோளினைச் செய்து அனுப்பி

    செகமே மகிழ்ந்து களித் தோமே

    செயற்கையும் இயற்கையில் கலந்தால் தானே

    செயலதன் வெற்றி; மறந்தோமே!

    உயிர்(க்)காய் வாழ்ந்திடும் மரமும் காடும்;

    மழை மண்; என்பதை நினைப் போமே

    உடலாய் வாழ்ந்திடும் மரங்களை வெட்டுவோர்

    தலையினை வெட்டித் தணிப் போமே!

    மடலாய் விரிந்து மலர்களின் நறுமணம்

    மணக்கும் காட்டினை அழிக்கணுமா?

    மாடாய் உழைக்க மழைதரும் சூழலை

    மாசு படுத்தியே ஒழிக்கணுமா?

    கடலாய் இருந்து அலையென வீசி

    காடு வளத்தைக் காப்போமே!

    கடனுக்காக வாழ்கிற மனிதனின்

    கயமையைத் தட்டிக் கேட்போமே!

    இயற்கை இயற்கை இதுவே நம் கை

    கைகளை வெட்டிடத் துணிவோமா?

    இயற்கை அழிப்போன் உறுப்பினைக் கோர்த்து

    அணிமணியாக அணிவோமா?

    இயற்கை வாழ்ந்தால் உலகம் வாழும்

    இதய முள்ளவர் கேளுங்கள்!

    இயற்கை அழிந்தால் இயற்கை எய்துவீர்

    என்பதை எண்ணி வாழுங்கள்!

    வான அழகு

    மின்னல் மின்னும் வானிலே

    மீன்கள் பூத்துச் சிரிக்குதே!

    மீன்கள் ஜொலிக்கும் அழகுதான்

    மீண்டும் மனதைப் பறிக்குதே!

    கன்னங் கரிய இரவிலே

    காயும் நிலா சிரிக்குதே!

    காயும் நிலா மாயமாய்க்

    கண்ணைக் கண்ணைப் பறிக்குதே!

    சின்னச் சின்ன மேகமோ

    சிறகு உலர்த்திக் கிடக்குதே!

    சிறகு உலர்த்தும் அழகுதான்

    சினுங்கிக் கருத்தைக் கவருதே!

    வண்ண நீலம், வெண்மையில்

    வழிந்து குழைந்து இருக்குதே!

    வான அழகைப் பார்க்கையில்

    வாசக் கவிதை பிறக்குதே!

    Enjoying the preview?
    Page 1 of 1