Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Cinemavin Oli Oviyargal
Tamil Cinemavin Oli Oviyargal
Tamil Cinemavin Oli Oviyargal
Ebook215 pages1 hour

Tamil Cinemavin Oli Oviyargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முன்னோடி மெளனப்படத் தயாரிப்பாளர்கள் எல்லோரும் முதலில் கற்றுக்கொண்டது கேமராவை எப்படி இயக்குவது என்று தான்.லூமியே சகோதரர்களின் முதல் மெளனப் படம் 1896ல் பம்பாய நகரிலும் ,7-7-1897 அன்று சென்னையிலும் பின்னர் நாட்டின் பிற பகுதியிலும் திரையிடப்பட்டது.அப்போது அத்தகைய திரைப்படங்களை உருவாக்கும் ஆர்வம் நம் நாட்டினருக்கு ஏற்பட்டது.அவர்களில் பெரும்பாலானோர் புகைப்படக்காரர்களாகவே இருந்தனர். எட்வேர்டு மைபிரிட்ஜ் , வில்லியம் ஃப்ரீட்ஸ்கின் , லூமியே சகோதரர்கள் ஆகியோர் அடிப்படையிலேயே புகைப்படக் கலைஞர்கள்.இந்தியாவின் முதல் ஆவணப் (மெளன) படத் தயாரிப்பாளரான தஞ்சாவூர் மருதப்ப முதலியார்; ஹரிச்சந்திரா என்ற முதல் மெளனப் படத்தை 1913ல் உருவாக்கிய தாதாசாகிப் பால்கே ;மற்றும் தென்னிந்தியாவில் "கீசகவதம்" என்ற முதல் மெளனப் படத்தை 1916ல் உருவாக்கிய நடராஜ முதலியார் ஆகியோரும் புகைப்படக் கலை விற்பன்னர்களே.- இப்படி திரைத்துறையின் ஒளிப்பதிவு தோன்றிய வரலாற்றுச் செய்திகள் ,தமிழ்ப் படங்களில் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய 30 பேர் மற்றும் அவர்கள் பணியாற்றிய தமிழ்ப் படங்கள் குறித்த விவரமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136806085
Tamil Cinemavin Oli Oviyargal

Read more from Aranthai Manian

Related to Tamil Cinemavin Oli Oviyargal

Related ebooks

Reviews for Tamil Cinemavin Oli Oviyargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Cinemavin Oli Oviyargal - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள்

    Tamil Cinemavin Oli Oviyargal

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author//aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தொடக்க கால வரலாறு

    1. ஆர். பிரகாசா

    2. சுந்தர்ராவ் நட்கர்னி

    3. யூசுப் முல்ஜி

    4. கே. ராம்நாத்

    5. ஜித்தன் பானர்ஜி

    6. சைலேன் போஸ்

    7. கமல்கோஷ்

    8. பி.வி. கிருஷ்ண ஐயர்

    9. பொம்மன் இரானி

    10. பி. எல்லப்பன்

    11. மார்க்கஸ் பார்ட்லே

    12. ஆதி எம். இரானி

    13. டி.முத்துசாமி

    14. தம்பு

    15. ஜி.ஆர்.நாதன்

    16. எம். மஸ்தான்

    17. பி.ராமசாமி

    18. W.R.சுப்பாராவ்

    19. எம்.ஏ.ரஹ்மான்

    20. வி.குமாரதேவன்

    21. பி.எஸ்.செல்வராஜ்

    22. ஜே.ஜி.விஜயம்

    23. ஆர்.ஆர். சந்திரன்

    24. ஜி.விட்டல்ராவ்

    25. எஸ். மாருதிராவ்

    26. ஆர்.சம்பத்

    27. ஜி. கே. ராமு

    28. வி.ராமமூர்த்தி

    29. நிமாய் கோஷ்

    30. எம். கர்ணன்

    கேமரா கண்களில் தீட்டும் ஓவியம்

    திரைப்படங்கள், இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகத் திகழ்கின்றன. அப்படி உருவாகும் திரைப்படத்துக்காக, பல்வேறு துறையினரும் உழைக்கின்றனர். அவர்களில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு சிறப்பானது; முக்கியமானதும்கூட!

    திரைப்படத்துக்காக கேமராவில் படம் பிடிப்பது, ஒளிப்பதிவு. கேமராவை இயக்கி படம் பிடிப்பவர் ஒளிப்பதிவாளர். இரு பரிமாணப் பார்வையில் தூரிகை கொண்டு தீட்டும் ஓவியம் போல் காட்சி பதிவாவதால், ஒளிப்பதிவாளர்களை ஒளி ஓவியர்கள் என்று சொல்வதும் நியாயமே.

    நூற்றாண்டு கடந்து சாதித்துக் கொண்டிருக்கும் சினிமா துறையில், இந்த ஒளி ஓவியர்கள் எண்ணற்றோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி, தமிழ் சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த கேமராமேன்கள் பற்றிய தொகுப்பே இந்த நூல். இதில், முக்கியமான சில கேமராமேன்களின் வாழ்க்கையும், அவர்களின் பணியும் பற்றிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்வில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அவர்கள் எந்தப் படங்களில் பணியாற்றினார்கள் என்ற தகவல்களும் சுவைபடத் தொகுக்கப்பட்டுள்ளது.

    கேமராவை எந்தக் கோணத்தில் வைத்துப் படம் பிடித்தால் காட்சி அழகுபெறும்; ஒளிப்பதிவில் உள்ள தனித்தன்மை; யார் யார் எந்தெந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அழியாப் புகழ் பெற்றனர்; மந்திர தந்திர காட்சிகளின் மூலம் ரசிகர்களை சீட்டிலேயே கட்டிப்போட்டிருந்தது எப்படி; ஒளிப்பதிவு செய்வதில் அக்காலம் முதல் இக்காலம் வரை உள்ள சூத்திரங்கள் ஆகியவற்றை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

    சினிமா குறித்த ஆர்வமும் கலையுணர்வும் கொண்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒளி ஓவியர் கனவில் வளரும் கலைஞர்களுக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

    - ஆசிரியர்

    என்னுரை

    படம் பிடிக்கும் கருவியான 'கேமரா' இல்லையெனில் திரைப்படமே இல்லை! நிகழ்வுகளைக் கேமராவின் மூலமாகப் படமெடுத்து அதை கச்சா ஃபிலிம் சுருள்களில் தொடர்ச்சியாகப் பதிவு செய்வதன் மூலமே திரைப்படம் உருவாகிறது.

    அசையா ஓவியங்களை அசைய வைக்கும் முயற்சி பதினாறாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. ஓவியங்களாக வரையப்பட்ட மனித பாத்திரங்களை மெல்லிய பலகைகளில் பதித்து (CUT-OUTS) அவற்றை ஒரு நீண்ட கழியின் மூலமாகக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு விளக்கின் முன் காட்டினால், அதற்கும் முன்னால் உள்ள வெண்திரையில் அந்த ஓவியப் பாத்திரங்களின் நிழல்கள் விழும்.

    பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தக் கலை ஒரு பரிணாம வளர்ச்சி பெற்றது. சின்னச்சின்ன சதுரக் கண்ணாடித் தட்டுகளில் அழகிய ஓவியங்களை வரைந்து கொண்டு, ஒவ்வொன்றாக, ஒரு விளக்கின் முன்பாக விரைந்து காட்டினால், விளக்கின் ஒளி கண்ணாடியில் ஊடுருவி, அதற்கும் முன்னால் உள்ள திரையில் நிழலாகத் தெரியும். விரைவாகச் செயல்படும்போது அந்த ஓவியங்கள் அடுத்தடுத்து தோன்றுவதன் காரணத்தால் அவை ‘அசைவது' அல்லது 'நகர்வது’ போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டது. ஆகவே, இம்முறையானது 'மாயவிளக்கு' (MAGIC LANTERN) என்று அழைக்கப்பட்டது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்கூட உலகின் பல நாடுகளில் இத்தகைய ‘மாயவிளக்கு' பொழுதுபோக்கு பரவலாக இருந்தது. 1850-களில் 'புகைப்படக்கலை' தோன்றி வளர்ச்சி பெற்றது. உடனே 'அசையாத' அந்த புகைப்பட பிம்பங்களை 'அசைய' வைக்கும் முயற்சியும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

    ஒரு வட்ட வடிவ உருளையின் பக்கவாட்டுப் பகுதியில் ஓவியங்களை வரிசையாக வரைந்து, அந்த உருளையை ஒரு மைய அச்சில் பொருத்தி சுழலச் செய்தால், சுழலும் வேகத்தின் காரணமாக அந்த ஓவியங்கள் ‘நகர்வது' போன்ற பிரமை ஏற்பட்டது. அதையே சற்று மாறுதல் செய்து, ஒரு வட்டத் தகட்டின் ஓரங்களில் மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் ஓவியங்களை வரைந்து, அந்தத் தகட்டை ஒரு மைய அச்சில் பொருத்தி சுழற்றினால், அந்தச் சுழற்சி வேகத்தின் காரணமாக அந்த மிருகங்களும் பறவைகளும் நகர்வது போன்ற மாயத்தோற்றம் கிடைத்தது. இதெல்லாம் புகைப்படக் கலை தோன்றுவதற்கு முன்பே உருவான கருவிகள்.

    'எட்வர்டு மைபிரிட்ஜ்' என்பவர் இதில் மேலும் ஒருபடி முன்னேறி, பதினாறு 'ஸ்டில்' கேமராக்களை, ஒரு பாதையின் இரு பக்கங்களிலும், பக்கத்திற்கு எட்டாக, தள்ளித்தள்ளி தரையில் வைத்து, அவற்றை மெல்லிய நூல்களால் பிணைத்தார். அந்த நூல்களின் முனைகள், ‘ஸ்டில்' கேமராக்களின் விசையில் (TRIGGER) முடிச்சிடப்பட்டிருந்தன. அவரது நண்பர் ஒருவர் ஒரு குதிரையின் மீது அமர்ந்து அந்தப் பாதையின் நடுவே அதை ஓட்டி வந்தார். குதிரையின் கால்கள் பட்டு அந்த நூல்கள் அசைந்து அந்தப் பதினாறு கேமராக்களின் விசையையும் தட்டி அவற்றை இயங்க வைத்தன.

    பின்னர் அந்தப் பதினாறு கேமராக்களிலும் இருந்த ‘நெகட்டிவ்'களைக் கழுவிப் பிரதியெடுத்துப் பார்த்தபோது, குதிரையின் பாய்ச்சல் பதினாறு புகைப்படங்களாகக் கிடைத்தது. அவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்தி வரிசையாக அடுக்கிப் பார்த்தபோது குதிரையின் பாய்ச்சல் இரண்டு கோணங்களில் அழகாக அசைவது போன்று ஒரு 'படம்' கிடைத்தது. அவற்றை ஒரு தகட்டில் பதித்து, மைய அச்சின் விசையை வேகமாகச் சுழற்றியபோது குதிரை பக்கவாட்டில் விரைவது போன்ற 'மாயத் தோற்றம்' கிடைத்தது. ஆக, அசையாத புகைப்படங்கள் முதன் முதலாக 'அசைந்தன'.

    இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் ஃப்ரிஸ்க்ரீன்' (WILLIAM FRISKRIN) என்பவர் 'மேஜிக் லேண்டர்ன்' கருவியில் சதுரக் கண்ணாடிகளில் ஓவியங்களை வரைவதற்கு பதிலாக, செல்லுலாய்டு புகைப்படங்களை ஒட்டி விளக்குக்கு முன்னால் காட்டினால் எதிரில் உள்ள திரையில் அந்தப் புகைப்படங்களில் இருந்த பிம்பங்கள் நிழலாகத் தெரியும் என்பதைக் கண்டுபிடித்தார். அதை விரைந்து செயலாற்றினால் 'அசைவுகள்' அல்லது 'நகர்வுகள்' கிடைக்கும் என்பதையும் கண்டறிந்தார். தமது முறைக்கு 'கினிமாட்டோகிராஃப்' (KINEMATOGRAPH) என்று பெயரிட்டார்.

    உலகப் புகழ்பெற்ற அமெரிக்க அறிவியல் மேதையான ‘தாமஸ் ஆல்வா எடிசன்' இதில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். ஐம்பது அடி நீளமுள்ள ‘செல்லுலாயிட் ஃபிலிம்' சுருளை, மேலும் கீழுமாக இருந்த இரு உருளைகளில் செங்குத்தாகப் பொருத்தி, அதை மேலும் கீழும் சுழலச் செய்தால், அந்த ஐம்பதடி நீள ஃபிலிமில் இருந்த பிம்பங்கள் அடுத்தடுத்து நகர்வதன் மூலம் ஒரு தொடர்ச்சியான 'அசையும் தோற்றம்’ (MOVING IMAGE) கிடைக்கும் எனக் கண்டுபிடித்தார்.

    இன்றைய சினிமாவுக்கான முன்னோடிக் கண்டுபிடிப்பு அதுவே. இதனால் 'திரைப்படங்களின் தந்தை' என்று தாமஸ் ஆல்வா எடிசன் போற்றப்படுகிறார். அவர் கண்டுபிடித்த அந்தப் படம் காட்டும் கருவிக்கு 'கினிட்டாஸ்கோப்' (KINITOSCOPE) என்று பெயரிட்டார். அந்த கூண்டு போன்ற பெட்டியின் இரண்டு பக்கங்களில் இருவர் பார்க்கக்கூடிய வகையில் இரு 'திறப்புகள்' (PEEPING HOLES) இருக்கும். கூண்டின் மையத்தில் இருக்கும் ஒரு விளக்கின் இரு புறத்திலும் மேலும் கீழும் போய் வருமாறு ஒரு ஃபிலிம் சுருள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த ஐம்பதடி சுருளை அப்பெட்டியின் வெளிப்புறத்திலுள்ள ஒரு விசையைத் திருப்புவதன் மூலம், மேலும் கீழும் போய் வரும்படி செய்ய முடியும். தொடர்ந்து ஒரே வேகத்தில் விசையை சுழற்றுவதன் மூலம், காட்சிகள் கோவையாக பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியும்.

    இக்கருவியைத்தான் நமது நாட்டில் ‘பயாஸ்கோப்' என்று அழைத்தனர். அதன் உரிமையாளர் தெருத் தெருவாக அந்தக் கூண்டை சுமந்து சென்று, ஆங்காங்கே நிற்க வைத்து, தமது கையில் வைத்துள்ள ஒரு சலங்கையை அந்தப் பெட்டி மீது தட்டித் தாளமிட்டுக் கொண்டே 'பாரு பாரு பயாஸ்கோப்பு படத்தைப் பாரு...' என்ற பாட்டைப் பாடத் தொடங்குவார். உடனே சிறுவர்கள் ஓடிவந்து அவரிடம் காசைக் கொடுத்துவிட்டு, ஒரு சமயத்தில் இரண்டு பேர் என்ற முறையில் கூண்டினுள் தெரியும் 'சினிமா'வைப் பார்த்து ரசிப்பார்கள்.

    திரும்பத் திரும்பப் பார்ப்பார்கள், திகட்டும் வரை பார்ப்பார்கள். இன்னும் கூட நமது ஊர் கிராமத்து சந்தை நாட்களில் அத்தகைய 'பயாஸ்கோப்' கூண்டையும், அதைச் சூழ்ந்து நிற்கும் சிறுவர்களையும் காணலாம். தாமஸ் ஆல்வா எடிசன் 1889 முதல் 1895 வரை தமது 'கினிடாஸ்கோப்' கருவிகளை ஏராளமாகத் தயாரித்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து ஏராளமாகப் பொருள் ஈட்டினார். அமெரிக்காவில் பல நகரங்களில் பெரும் அரங்குகளில் பத்து, இருபது என்று அத்தகைய கூண்டுகளை நிறுத்தி வைத்து ஒரே சமயத்தில் நாற்பது, ஐம்பது பேர் பார்க்கும்படி செய்திருந்தார்கள்.

    துவக்கத்தில் பிரபலமடைந்த அத்தகைய பெட்டிகள் நாளடைவில் மதிப்பிழந்தன. படங்கள் சிறிய அளவில் தெரிந்தது, அவை ஐம்பதடி நீளம் மட்டுமிருந்தது,

    Enjoying the preview?
    Page 1 of 1