Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharatanatyam
Bharatanatyam
Bharatanatyam
Ebook49 pages13 minutes

Bharatanatyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழமையான நுண்கலைகளுள் நாட்டியக் கலையும் ஒன்று.

எக்கலையையும் அதன் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே ரசிக்க இயலும். ஆயினும், ஓரளவு அதன் வரலாற்றையும், வளர்ச்சியையும், சிறப்பியல்புகளையும் தெரிந்து கொண்டால் ரசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும் எளிதாக இருக்குமென்பதால், பரதக் கலையைப் புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக அமையும்படி இச்சிறு நூல் படைக்கப்பட்டுள்ளது.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136806094
Bharatanatyam

Read more from Aranthai Manian

Related to Bharatanatyam

Related ebooks

Reviews for Bharatanatyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharatanatyam - Aranthai Manian

    http://www.pustaka.co.in

    பரதநாட்டியம்

    Bharatanatyam

    Author:

    அறந்தை மணியன்

    Aranthai Manian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/aranthai-manian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நாட்டிய வரலாறு

    முக்கிய குறிப்பு

    ஆடற்கலை இலக்கணம் பரதம்

    தாண்டவம்

    நாட்டியத்தில் கால்கள் மற்றும் பாதங்களின் பங்கு:

    மண்டலம் (Standing Postures with hand-gestures)

    ப்ரமரீ (Various ways of Moving Round)

    சாரி (Gait)

    கரணங்கள்

    சதங்கைகள்

    நாட்டிய நிகழ்ச்சி

    நாட்டிய வரலாறு

    இந்த அகிலம் முழுதும் எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கிறது. அண்ட கோளங்கள் எல்லாம் ஓய்வின்றிச் சுழன்று கொண்டேயிருக்கின்றன. சூழ்ந்திருக்கும் வானகமும், சூரியனும், சந்திரனும், பிற கோள்களும், விண்மீன்களும் அசையும் அழகோவியங்களே! இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவும் தாளம் தவறாமல் இயங்குகிறது. அதனால்தான் உயிரினம் வாழ முடிகிறது. உயிரினங்களின் உட்கூறான 'செல்'லின் அணுக்களான 'புரோட்டானும்,' 'நியூட்ரானும்,' 'எலெக்ட்ரானும்', லயம்பிசகாமல் அசைந்து கொண்டே தான் இருக்கின்றன.

    இந்தப் பிரபஞ்ச நாட்டியம், தனது ஒழுங்கில் சிறிது தவறினாலும், இயற்கையின் அமைப்பு நிலைகுலைந்து போகும். தாளம் சிறிது பிசகினாலும் அகிலம் தூள் தூளாகிவிடும். தாளம் தவறாத லயக்கோலத்தில் நாதத்தின் ஒன்றிப்பில் பஞ்சபூதங்களும் ஒருங்கே செயல்பட, இப்பிரபஞ்சம் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

    அதைப் போலவே, தாளம் தவறாத நாட்டியக் கலையில், மனித வாழ்வும் மறுமலர்ச்சி பெறுகிறது. மனக்கிளர்ச்சியடைகிறது. அக்கிளர்ச்சியினால் புதுத்தெம்பு கிடைக்கிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1