Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalal Thudikirean...!
Kaadhalal Thudikirean...!
Kaadhalal Thudikirean...!
Ebook125 pages42 minutes

Kaadhalal Thudikirean...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலுக்காக தன் உறவுகளை இழந்து வீட்டை விட்டு வெளியேவரும் தென்றல். எதிர்பாராத விதமாக தன் காதலனையும் இழக்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில் உறவுகளை தேடி செல்ல முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு உதவிகரம் நீட்டுகிறான், ஆனந்த். யார் இந்த ஆனந்த்?தென்றல் வாழ்க்கையில் தேனாக தென்றல் வீசியதா? அல்லது புயல் அடித்ததா? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580128308590
Kaadhalal Thudikirean...!

Read more from Maheshwaran

Related to Kaadhalal Thudikirean...!

Related ebooks

Reviews for Kaadhalal Thudikirean...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalal Thudikirean...! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலால் துடிக்கிறேன்...!

    Kaadhalal Thudikirean...!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    சமர்ப்பணம்!

    என்மீது தாய்க்கு நிகரான...

    அன்பையும்...

    கனிவையும்...

    பரிவையும்.

    காட்டி வரும்... நண்பர்... மரியாதைக்குரிய...

    உயர்திரு. தி. அரவிந்தன் அவர்களுக்கும்...

    எனக்கு நல் ஆதரவு தந்து வரும் வாசகர்களுக்கும்...

    இக்குறுநாவல்கள் தொகுப்பு...

    சமர்ப்பணம்!!

    என்னுரை

    வணக்கம்!

    பல ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவினால், எழுத்துலகில் எனக்கென்று தனி இடத்தைப் பிடித்திருக்கிறேன்...!

    பதினேழு வயதில் எழுத ஆரம்பித்த நான், தொடர்ந்து நல்ல படைப்புகளை உருவாக்கி, வாசகர்களின் இதயங்களில், நீங்கா இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு எழுத்துக்களை சுவாசித்து வருகிறேன்! அழுத்தமான கருவை மையமாய் வைத்து, விறுவிறுப்பான நடையில் எழுதினால்... வாசகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

    இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள, குறு நாவல்களுமே விறுவிறுப்பானவை.

    ‘காதலால் துடிக்கிறேன்’ நாவலில் தென்றல் என்ற இளம்பெண் காதல் வயப்படுகிறாள். கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்தை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடிக்க நினைக்கிறாள். ஆனால் விதி காதலனை பறித்து விடுகிறது. நிர்க்கதியாய் நிற்கும்... அந்த இளம்பெண்... சோர்ந்து விடாமல்... தன்னம்பிக்கையோடு ஜெயிக்கிறாள்!’

    ஆனந்த் என்ற இளைஞனோடு காதல் இல்லாமல் கடைசி வரைக்கும் நட்புடனேயே பழகுகிறாள்! அவளது தைரியமும்... தன்னம்பிகையும்தான். இந்நாவல்!

    அடுத்து ‘என் வசம் நானில்லை’ குறுநாவல்!

    இன்பா… ப்ரவிண்… திலீப் மூவருக்கும் இடையே பின்னப்பட்ட காதல் கதை.

    கற்பை புனிதமாய் நினைக்கும் ‘இன்பா...’

    நட்பை சந்தேகப்படும் ‘ப்ரவிண்...’

    கள்ளமில்லா மனம் படைத்த ‘திலீப்’ மூவருக்கும் மத்தியில் நடைபெறும் சுவையான சம்பவங்கள் - திருப்பங்கள் இன்பா எடுக்கும் அதிரடி முடிவு… இதுதான் கதை!

    இன்பா எடுத்த முடிவை எல்லோருமே வரவேற்பீர்கள்!

    எனக்கு வாய்ப்பளித்து பிரபலமாக்கி வரும். வார, மாத இதழ்கள் அனைத்திற்கும். என்னுடைய குறுநாவல்களை தொகுப்பாக வெளியிட முன்வந்தவர்களுக்கு... எனது மனமார்ந்த நன்றியினை... தெரிவித்துக் கொள்கிறேன்!

    நன்றி!

    சினேகங்களுடன்

    தங்கள்

    வாழ்த்துக்களை எதிர்ப்பார்க்கும்

    க. மகேஷ்வரன்

    1

    காதல்...

    இதயத்தைக் கிழிக்கிற...

    கத்திக்கப்பல்.

    திருமண பதிவு அலுவலகம்.

    அலுவலகக் கட்டிடத்திற்கு... எதிரேயிருந்த வேப்ப மர நிழலில்... தவிப்பாய் நின்றிருந்தாள்... தென்றல். பங்குனி மாதம் பிற மரங்களுக்கு இலையுதிர்காலமாக இருந்தாலும்... வேப்பமரங்களுக்கு மட்டும்... அது குதூகலமான காலம்! பச்சைப் பச்சையாய்... இலைகள்... கொத்துக் கொத்தாய் பூக்கள்... புதுசாய் கல்யாணமானப் பெண்ணின் முகத்தில்... சிதறுமே... ஒரு... ரகசியப் புன்னகை... அதைப் போல... அந்த வேப்பமரமும்... புன்னகையோடு நின்றிருந்தது.

    மரக்கிளைகளில்... பச்சைக்கிளிகள் இரண்டு... காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன... மயிற்பீலியினால்... வீசுவதைப் போல... மெல்லிய... காற்றை... பிரசவித்துக் கொண்டிருந்தது... அந்த வேப்பமரம்...

    காதல்ஜோடி ஒன்று... பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாய்... சிரிப்பும்... குதூகலமாய்... நண்பர்கள் புடை சூழ... அலுவலக கட்டிடத்திற்குள்ளிலிருந்து... வெளிப்பட்டார்கள்.

    ஆகாய நீலப்பட்டுச்சேலை... அதே நிற ப்ளவுஸ்... தலைநிறைய மல்லிகைப்பூ... வட்டமான அழகிய முகத்தின்... துறு துறு கண்களில் மை பூசி... காதுகளில் குடைஜிமிக்கி அணிந்து... புதுமணப்பெண் கோலத்தில்... தனித்து நின்ற... தென்றலைப் பார்த்து... தங்களுக்குள்... என்னமோ... கிசுகிசுப்பாய்... பேசிக்கொண்டு... நகர்ந்தார்கள்.

    தென்றல் தலையைக் குனிந்து கொண்டாள்...

    வியர்ப்பதை போல உணர்ந்தாள்... அடிக்கடி கைக்கடிகாரத்தில்... மணிபார்ப்பதும்... நிமிர்வதுமாக இருந்தாள்.

    இந்தப் பரணிக்கு என்னாயிற்று...? ஏன்... இன்னும் வரவில்லை? கடைசி நேரத்தில்... மனசு மாறிவிட்டாரா...? பாசத்திற்கு கட்டுப்பட்டு... பயந்து... கோழையாகிவிட்டாரா...? பரணி அப்படிபட்டவர் இல்லையே? மனசு மாறவேமாட்டாரே...! அவர் கோழை கிடையாதே...! நானும்... பரணியும்... இன்று பதிவுத் திருமணம்... செய்து கொள்ளப் போவது... அவருடைய வீட்டிற்கு... தெரிந்து போய்... அவரைப் போக விடாமல்... தடுத்து நிறுத்தி விட்டார்களோ...?

    தென்றலுக்கு அந்த நினைப்பே கசந்தது... முள் படுக்கையில் படுத்திருப்பது போன்ற அவஸ்தையை... ஏற்படுத்தியது.

    ‘தன் கைப்பட எழுதி... நான்காய் மடித்து... சாமிப்படத்திற்கு... முன்பு... வைத்துவிட்டு வந்திருக்கும்... கடிதத்தை... அம்மா பார்த்திருப்பாளா? அப்பாவின் கையில் கொடுத்திருப்பாளா...! தன் வீட்டில்... ஒரு கடும்புயல்... உற்பத்தியாகி வீசிக் கொண்டிருக்குமா...?’

    அந்தப் பயம் வேறு... இதயத்தின் இன்னொரு பக்கமாய்... கிளம்பி... இதயத்துடிப்பை... அதிகரித்துக் கொண்டிருந்தது... சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்கு வருவதாய் சொல்லியிருந்த... ஆருயிற் சினேகிதி... சுபாஷினியும்... இன்னும்... வந்து சேரவில்லை.

    தென்றலுக்கு... அழுகை வரும்போல இருந்தது.

    ***

    தென்றலும் பரணியும்... கடந்த இரண்டு வருடங்களாகவே... தீவிரமாக காதலித்து வருகிறார்கள். தென்றலின் அப்பா... சௌந்தர்ராஜன். மிடில் ஸ்கூல் ஹெட்மாஸ்டர். மிகமிக கண்டிப்பானவர்! வறட்டு கவுரவம்... பிடித்தவர்! மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசவேமாட்டார்! மனைவி அன்னமாக இருந்தாலும் சரி... மகள் தென்றலாக இருந்தாலும் சரி. மகன் ராகுலாக இருந்தாலும் சரி... கடைக்குட்டி மகள்... மிதிலாவாக இருந்தாலும் சரி... இதுவரைக்கும்... யாருமே அவருடைய பேச்சை மீறியது இல்லை. விழிகளை உருட்டி... முறைப்பாய் பார்த்தார் என்றால்... அத்தனைப் பேருமே... அமைதியாகி விடுவார்கள். மாணவர்களைப் பள்ளியில்... பிரம்பால் அடிக்கிறாரோ... இல்லையோ... வீட்டில் அத்தனைப் பேரையும்... வார்த்தைகளாலேயே... அடித்து துவைத்து விடுவார். அவர் நினைத்ததைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும்... அவருக்குப் பிடிக்காததை... யாராவது செய்ய நினைத்தால்... தொலைந்தார்கள்.

    டி.வி.யில் காதல் காட்சிகள் ஒலிபரப்புவதைக்கூட... அவருக்கு முன்னால் யாரும்... பார்க்க முடியாது... ஆஃப் பண்ணிவிடுவார்! ராகுல்தான் அந்தக் குடும்பத்தின் மூத்தப்பிள்ளை... ஒரு பிரைவேட் கம்பெனியில்... கை நிறைய... சம்பாதிக்கிற கண்ணியமான... உத்தியோகத்தில் இருக்கிறான். அவருடைய அனுமதி

    Enjoying the preview?
    Page 1 of 1