Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vasam Naanillai...!
En Vasam Naanillai...!
En Vasam Naanillai...!
Ebook70 pages19 minutes

En Vasam Naanillai...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்பை புனிதமாய் நினைக்கும் ‘இன்பா...' நட்பை சந்தேகப்படும் 'ப்ரவிண்...' கள்ளமில்லா மனம் படைத்த 'திலீப்...' மூவருக்கும் மத்தியில் நடைபெறும் சுவையான சம்பவங்கள். இதில் நிகழும் திருப்பங்கள் என்ன? இன்பா எடுக்கும் அதிரடி முடிவு என்ன? இன்பா எடுத்த முடிவை வரவேற்றனரா? வாசித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateSep 10, 2022
ISBN6580128308591
En Vasam Naanillai...!

Read more from Maheshwaran

Related to En Vasam Naanillai...!

Related ebooks

Reviews for En Vasam Naanillai...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vasam Naanillai...! - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் வசம் நானில்லை...!

    En Vasam Naanillai...!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சுபாஷினி... டப்பிங் தியேட்டர்.

    ஏ.ஸி. அறையை விட்டு... வெளியே வந்தாள்... இன்பா. இருபது வயது இன்பாவுக்கு... அழகிய வட்ட முகம்... சுழலும்... அகலமான... கருவண்டு கண்கள்...! ரோஸ் நிற மார்பிள் கன்னங்கள்...! அணிந்திருந்த கிளிப் பச்சை வண்ண சுடிதார்... அவளது... அழகை... பலமடங்கு... அதிகப்படுத்திக் காட்டியது...

    இன்பா...

    திரைப்படத்துறையில்... வளர்ந்து வரும்... இளம் பின்னணி பாடகி... இதுவரைக்கும்... இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறாள்... அத்தனையும்... மிக இனிமையானவை... ஹிட்டானவை... பட்டிதொட்டிகளில் எல்லாம்... எந்த நேரமும்... விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பவை... குறிப்பாய்... சமீபத்தில்... ரிலீசான... ஒரு புதுப்படத்தில் இடம்பெற்ற... ‘நான் தரையில் நடக்கற ரோசா...!’ என்ற பாடல்தான்... கல்லூரி மாணவ மாணவிகளின்... தேசியகீதம்...

    இன்பாவுக்கென்று இருப்பது...

    வயதான அம்மா மட்டும்தான்...! இருவரும்... வாடகை வீட்டில்தான். வசித்து வருகிறார்கள்... இன்பாவின் குடும்பம்... நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது...! அப்பா... பள்ளிக்கூட வாத்தியார்! பணியில் இருக்கும்போதே... மாரடைப்பில் காலமானதால், அம்மாவுக்கு பென்ஷன்... வந்தது. அதைக் கொண்டுதான் இருவரும்... நாட்களை நகர்த்தினார்கள்...

    இன்பாவுக்கு... இயற்கையாகவே நல்ல குரல் வளம்... ப்ளஸ் டூ படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், உள்ளூர் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் சேர்ந்து... பாடிக் கொண்டிருந்தாள்... பிரபல வி.ஐ.பி. வீட்டு... மணி விழாவில்... நடந்த... ஆர்க்கெஸ்ட்ராவில்... இன்பா பாடிய பாடலைக் கேட்ட... மியூசிக் டைரக்டர்... இளம்பரிதி... சிலிர்த்துப் போனார்...

    இப்படி ஒரு தேன்மதுரக்குரலா...?

    ஆச்சர்யமாய் இன்பாவைப் பார்த்தார்... தனியே அழைத்துப் பாராட்டினார். தன்னுடைய புதுப்படத்தில்... ஒரே ஒரு பாடல் பாட வாய்ப்பளித்தார்...! இன்பாவின்... யோகம்... அந்தப்பாடல்... செம... ஹிட்டாகிவிட... அந்தப் பாடலுக்காகவே... ஆடியோகேஸட்... அமோக விற்பனை...

    Enjoying the preview?
    Page 1 of 1