Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannum Kannum Kalanthu...
Kannum Kannum Kalanthu...
Kannum Kannum Kalanthu...
Ebook117 pages43 minutes

Kannum Kannum Kalanthu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எல்லோரையும் நேசிக்கும் சுருதி என்ற இளம்பெண் தன் சித்தியின் கொடுமைகளை யெல்லாம் தாங்கிக் கொண்டு வாழ்கிறாள். சுருதியை ஒருதலையாய் நேசிக்கும் பணக்கார இளைஞன் அரவிந்தன். இதை அறியாமல் சுருதி சுயநலமிக்க சித்தார்த்தை காதலிக்கிறாள்.
சித்தார்த் வேறொரு பணக்காரவீட்டுப் பெண்ணோடு நிச்சியம் ஆனதை சுருதியிடம் தெரியப்படுத்துகிறான். தன் கல்யாணப்பத்திரிகையைக் கொடுத்து காயப்படுத்துக்கிறான்.
சித்தியால் வீட்டைவிட்டு விரட்டியடிக்கப் பட்ட சுருதி... திக்குத் தெரியாமல் தஞ்சாவூர் வீதியில் தடுமாறி தடுமாறி பசிமயக்கத்தோடு நடந்து... மயங்கிவிழுகிறாள்.
தாங்கிப்பிடித்தது ஒரு கரம்...!
கண்விழிக்கும் சுருதியைக் காதலோடு நோக்குகிறது ஒரு முகம்!
அது யார் முகம்? அந்த கண்கள் யாருடைய கண்கள்?
கண்ணும் கண்ணும் கலந்து விடை சொல்லும்
-மகேஷ்வரன்
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580128305804
Kannum Kannum Kalanthu...

Read more from Maheshwaran

Related to Kannum Kannum Kalanthu...

Related ebooks

Reviews for Kannum Kannum Kalanthu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannum Kannum Kalanthu... - Maheshwaran

    http://www.pustaka.co.in

    கண்ணும் கண்ணும் கலந்து...

    Kannum Kannum Kalanthu...

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    பரபரப்பான காலை எட்டுமணி.

    கை அகல சிறிய கண்ணாடியில் முகம் பார்த்து... நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டாள் சுருதி.

    சுவர்க்கடிகாரத்தில் மணி எட்டு முப்பது ஆகியிருந்தது.

    இன்னும் ஐந்து நிமிடத்தில் அவள், தெரு முனையிலிருக்கிற பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும். அப்போது தான் எட்டே முக்காலுக்கு வருகிற பஸ்சைப் பிடிக்க முடியும். அதைப் பிடித்தால்தான் சுருதியால் டூட்டிக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியும். இல்லாவிட்டால் ஒன்பது முப்பதுக்குத்தான் பஸ்...! அதில் ஏறினால்... டூட்டிக்குப் போய்ச் சேர பத்து மணியாகிவிடும்.

    சுருதி அடுக்களைப் பக்கம் மெதுவாய் எட்டிப் பார்த்தாள்.

    சித்தி... சாப்பிட ஏதாச்சும் கெடைக்குமா? நேரமாயிடுச்சு... எட்டே முக்கால் பஸ் போயிடப்போகுது...

    தயங்கி, பயமாய் சொன்னாள்.

    இப்பத்தான் இட்லி ஊத்தி வெச்சிருக்கேன்! உன்னோட அவசரத்துக்கு ஆகாது... ஊசியைக் சொருகுவது மாதிரி வெடுக்கென்று பேசினாள் நீலவேணி.

    பரவாயில்லை சித்தி... நா... போய்ட்டு வரேன்...

    பெரிய கலெக்டரு வேலைக்குப் போறே...? ஒரு நாளைக்கு லேட்டாப் போன ஒண்ணும் கழுத்தைப் புடிச்சு வெளில தள்ளிட மாட்டாங்க...!

    எட்டே முக்கால் பஸ்சை விட்டா அப்புறம் ஒன்பது முப்பதுக்குத்தான் சித்தி பஸ் வரும்...

    நீ பஸ்லதான் போகணும்னு யாராவது சட்டமா போட்டிருக்காங்க? நிக்கற நேரத்துக்கு நடந்தே போனின்னா கூட அரைமணி நேரத்துல போய்ச் சேர்ந்துடலாம்...!

    எல்லோருக்கும் வாய்க்குள் நாக்குதான் இருக்கும். ஆனால் நீலவேணிக்கு வாய்க்குள் இருப்பது நாக்கு அல்ல, கத்தி. கீறுவதும்... கிழிப்பதும்... குத்துவதும் கத்தியின் இயல்பு! அதனதன் இயல்பை மாற்ற யாரால் முடியும்?

    சுருதி சலனமே இல்லாமல் நின்றாள். சுருதியைவிட மூன்று வயது இளையவளான திவ்யா அப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தாள். காலேஜுக்குப் போற பொண்ணு இவ்வளவு லேட்டா எழுந்திரிச்சிருக்காளே! இனி... எப்பக் குளிச்சு எப்பக் கௌம்பி, எத்தனை மணிக்கு காலேஜுக்குப் போவா? ஒரு வேளை... இன்னைக்கு காலேஜை கட் அடிச்சுட்டு... ஃப்ரெண்ட்ஸுங்க கூட சினிமாவுக்குப் போறதா திட்டம் போட்டு வெச்சிருக்காளோ?

    மனதினுள் எண்ணியபடி மவுனமாய் நின்ற சுருதியை...

    மசமசன்னு நிக்காம இந்தச் சட்னியை அம்மியில அரைச்சு வெச்சுட்டுப் போ! எனக்குக் கையில சுளுக்கு... அதட்டினாள் நீலவேணி. எண்ணெய்யில் வதக்கி வைத்திருந்த மிளகாயையும், உளுத்தம்பருப்பையும் அம்மியில் கொட்டி... அவசர அவசரமாய் தேங்காயைத் துருவி... உப்பு, புளி சேர்த்து... விழுது மாதிரி சட்னியை அரைக்கத் தொடங்கினாள் சுருதி.

    சுருதியைக் கண்டாலே நீலவேணிக்கு ஆகாது. எரிந்து எரிந்து விழுவாள். தொட்ட தொண்ணூறுக்கும் கரித்துக் கொட்டுவாள். சுருதி எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஏதேனும் குறையிருக்கிறதா என்று கண்களில் விளக்கெண்ணெய்யை விட்டுக் கொண்டு பார்ப்பது அவளது சுபாவம்.

    ஆனால், திவ்யா விஷயத்தில்... நீலவேணி எதிர்மாறாய் நடந்துகொள்வாள். திவ்யா திமிர்க்காரி... ஆணவக்காரி! யாரையும் மதிக்க மாட்டாள். நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றால்... அதற்காக எதையும் செய்வாள்! நீலவேணியின் கண்களுக்கு திவ்யாவின் தவறுகள் தெரியவே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கண்டு கொள்ளமாட்டாள். திவ்யாவிடம் பாகாய் உருகுவாள்... காரணம், அவளுடைய வயிற்றில் பிறந்தவள் திவ்யா! அதனால்தான் அந்த வேறுபாடு!

    நடராஜனின் முதல் மனைவி சரஸ்வதி. அவளுடைய வயிற்றில் நல்முத்துதான் சுருதி. சுருதியை மண்ணில் ஈன்ற கையோடு விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டாள் சரஸ்வதி. நடராஜனுக்கு அரசாங்க அலுவலகம் ஒன்றில் க்ளார்க் வேலை! கைக்குழந்தை சுருதியை வைத்துக் கொண்டு தனிமையில் அல்லாடியவரை உறவினர்களும் நண்பர்களும் வற்புறுத்தித்தான் இரண்டாவது திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்தார்கள். நீலவேணி பரம ஏழை வீட்டுப்பெண். அமைதியாகத் தெரிந்தாள். சுருதிக்கு அவள் ஒரு நல்ல தாயாக இருப்பாள் என்று முழுமனதோடு நம்பித்தான் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார் நடராஜன்.

    ஆரம்பத்தில் சுருதியின் மீது அன்பைப் பொழிந்த நீலவேணி. நாளடைவில் கர்ப்பமாகி தானும் தாயான பிறகு சுருதியின் விஷயத்தில் பேயாக மாறிப்போனாள். வெறுப்பையும், வேறுபாட்டையும் காட்டத் தொடங்கினாள்.

    சுருதியும் வளர்ந்தாள். திவ்யாவும் வளர்ந்தாள். நீலவேணியின் குரூரக் குணமும் ஓரவஞ்சனையும் கூடவே வளர்ந்து கொண்டுதானிருந்தது. ஓரளவுக்கு மேல், நடராஜனால் நீலவேணியைக் கண்டிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நீலவேணியின் ராஜ்ஜியம் ஆரம்பமானது. வார்த்தைகளாலேயே சுட்டுப் பொசுக்கி நடராஜனின் மனதையும் கருக வைத்திருந்தாள். ஆண்களில் சிலர் பெண்களை அடக்கி வாழ்வார்கள். நடராஜன் அடங்கி வாழ்கிற ரகம். குடும்பத்தில் வீணான சண்டைகளைத் தவிர்ப்பதற்காகவே அடங்கி பொறுமையாக இருக்கப் பழக்கிக் கொண்டார்.

    இப்போது நடராஜன் ரிட்டையர்டும் ஆகிவிட்டார். மாதா மாதம் பென்ஷனை நம்பி வாழ்க்கை சுழல்வதால் வீடே கதியாகக் கிடக்கிறார். நீலவேணியின் சுடு சொற்களைக் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை.

    சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித்தாளை விரித்துவிட்டார் என்றால் எதுவுமே காதில் விழாது.

    சில சமயங்களில் கோபத்தைக் குறைக்க மவுனம்தான் மருந்தாகிறது.

    சுருதி சட்னியை அரைத்து முடித்து கிண்ணத்தில் அள்ளினாள்.

    சட்னி அரைச்சுட்டேன் சித்தி...! நா கௌம்பட்டுமா?

    ம்... ம்...

    அலட்சியமாய் தலையை ஆட்டினாள் நீலவேணி. இட்லி வெந்து போயிருந்தது. மல்லிகைப்பூ போன்ற இட்லிகளை இட்லித் தட்டிலிருந்து வேறொரு தட்டில் கொட்டுவதில் மும்முரமாய் இருந்த நீலவேணி, 'இட்லி தான் வெந்துடுச்சே. சாப்பிட்டுப் போயேன்...' என ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை கூறவில்லை. சுருதியும் அதைப் பெரிதாய்

    Enjoying the preview?
    Page 1 of 1