Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Suduginrathe!
Mazhai Suduginrathe!
Mazhai Suduginrathe!
Ebook127 pages26 minutes

Mazhai Suduginrathe!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580128304742
Mazhai Suduginrathe!

Read more from Maheshwaran

Related to Mazhai Suduginrathe!

Related ebooks

Reviews for Mazhai Suduginrathe!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Suduginrathe! - Maheshwaran

    http://www.pustaka.co.in

    மழை சுடுகின்றதே!

    Mazhai Suduginrathe!

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    காவிரியாறு சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது. கரையின் இருபுறங்களிலும் கரும்பும் வாழையும், செழித்து வளர்ந்திருந்தன. வெற்றிலைக் கொடி பந்தல்களில்... அந்த அதிகாலைப் பொழுதின் பனியையும் பொருட்படுத்தாமல்.. முற்றிய வெற்றிலைகளை கிள்ளி மூங்கில் கூடைகளில் சேகரித்துக் கொண்டிருந்தனர் பெண்கள்.

    கரையோரம் இருந்தது அந்த தென்னந்தோப்பு.

    குறைந்தது இருநூறு மரங்களாவது இருக்கும். அடர்த்தியாய் நிறைய மட்டைகளுடன் எல்லா மரங்களுமே.. குடை விரித்திருந்தன். குலை குலையாய் காய்த்து தொங்கின. தென்னந்தோப்பின் நடுவில் இருந்தது அந்த ஓட்டு வீடு...

    சகல் வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த சற்றே பெரிய வீடு.. கையில் தூபக்காலோடு சாமியறையை விட்டு வெளியே வந்தாள் மணியரசி. தூபக்காலிலிருந்து வளையம் வளையமாய் கிளம்பிய சாம்பிராணி புகை அந்த வீட்டையே நிறைத்தது.

    செய்தித்தாளை புரட்டியபடி கூடத்தில் கிடந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ரகுராமன்.

    மணியரசி அவரைக் கடந்து சென்று கூடத்து சுவரில் மாட்டப்பட்டிருந்த கோகுல கண்ணனின் நாட்காட்டி படத்திற்கும் சாம்பிராணி புகையைக் காட்டினாள்.

    எப்பவும் ஆறரைமணிக்கு மேல் தான் படுக்கையை விட்டு எழுவாள் மணியரசி. ஆனால் இன்று அதிகாலையிலேயே எழுந்து, தோட்டத்து கிணற்றிலிருந்து நீர் இறைத்து குளித்து… எளிமையான நூல் சேலையைக் கட்டிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள்.

    பச்சைப்பயறு பாயசமும், தேங்காய் போண்டாவும் தயாரித்திருந்தாள். ரகுராமனுக்கு ஒன்றும் புரியவில்லை.

    'ஏதேனும் பண்டிகையோ, சாமிக்கு படைப்பதற்காக செய்கிறாளோ?' என்றுதான் முதலில் நினைத்தார்.

    ஆனால் நாட்காட்டியில் தேதியைப் பார்த்ததும் தான்.. சுரீரென்றிருந்தது. சகலமும் புரிந்தது.

    மணியரசியின் செய்கை அவருக்கு கோபத்தை வரவழைத்தது.

    'கழுத்தை வலிக்குது.. இடுப்பை வலிக்குது.. மூச்சே விட முடியலைங்கன்னு எதையாவது சொல்லிகிட்டு.. படுக்கையிலேயே இருக்கிறவ.. இன்னைக்கு சீக்கிரமாவே எழுந்ததுக்கு காரணம் இதுதானா?'

    கண்கள் சிவப்பேறியது.

    நாட்காட்டியிலிருந்து கிழித்த அன்றைய தாளை கசக்கி வீசினார். நரம்புகள் புடைத்தது. அவருடைய ஆத்திரத்தை உணர்ந்திடாத மணியரசி, முகமலர்ச்சியோடு நெருங்கி வந்தாள்.

    என்னங்க...

    ம்…

    சீக்கிரமா... போய் குளிச்சிட்டு வாங்க... ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்...

    கனிவும் சாந்தமும் பொங்க சொன்னாள்.

    என்ன திடீர்னு கோவிலுக்கு கூப்பிடறே.. இன்னைக்கு ஏதாவது பண்டிகையா...?

    மணியரசியின் முகத்தை ஊடுருவிப் பார்த்தார்.

    மணியரசியின் கண்களில் சட்டென்று ஒருவித பயம் பூத்தது.

    அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க...

    பின்ன என்னத்துக்கு கோவிலுக்கு கூப்பிடறே...? நா வரலை... நீயும் போக வேணாம்...

    கட்டளையிடுவதைப் போல அவரிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது. கலங்கிப் போனாள் மணியரசி.

    நீங்க வர வேணாம்... நா மட்டுமாச்சும் போய்ட்டு வர்றேங்க...

    உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? முறைப்பாய் பார்த்தார்.

    அதில்லீங்க... இன்னைக்கு.. நம்ம கவுதமோட பிறந்தநாள்..! அவன் பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்னு ஆசைப்படறேன்.. தப்பா....?

    கண்கள் குளமானது. கண்ணீர் கோடு கோடாய் வழிந்தது.

    தப்புதான்! ரெண்டு வருடத்துக்கு முந்தியே கவுதம் செத்துட்டான்! செத்துப்போனவங்க பேருக்கு யாராவது அர்ச்சனை பண்ணுவாங்களா?

    "என்னங்க… நல்ல நாளும் அதுவுமா... எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க....? பதறினாள்.

    அப்படித்தான் பேசுவேன்! என் வயிறு கொதிக்கிற கொதிப்பு எனக்குத்தான் தெரியும்...! அந்தப் பாவியால நா பட்ட அவமானத்தையும், எல்லோரும் எம்மொகத்துல காறித் துப்பினதையும் என்னால சாகற வரைக்கும் மறக்கவே முடியாது...

    ரகுராமனின் முகமே இருண்டு போயிருந்தது.

    ஆயிரம்தான் இருந்தாலும் கவுதம் நம்ம பிள்ளைங்க…

    இல்லை.. அவன் என் பிள்ளையே இல்லை…

    ரகுராமன் வெறுப்பும் கசப்புமாய் பேசினார்.

    அப்போது தொலைபேசி மணியடித்தது.

    ஓடிப்போய் ஒலிவாங்கியைக் கையிலெடுத்தாள் மணியரசி.

    அம்மா.... நல்லாயிருக்கியாம்மா? அப்பா நல்லா இருக்காரா?

    மறுமுனையிலிருந்து கலைமதி பேசினாள்.

    கலைமதி அவர்களுடைய ஒரே மகள். கல்லணையில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்.

    ம்…

    இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமாம்மா....?

    தெரியும்..

    மறக்காம கோவிலுக்குப் போய் கவுதம் அன்ணன் பேருக்கு அர்ச்சனை பண்ணிடு.. அண்ணன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்...

    கலைமதியால் பேச முடியவில்லை. தழுதழுத்தாள்.

    சரி... கலை...

    மணியரசியாலும் தொடர்ந்து பேச முடியவில்லை.

    ஒலிவாங்கியை அதன் இடத்தில் வைத்து தொடர்பைத் துண்டித்தாள்.

    கலை என்ன சொன்னா....?

    கோவிலுக்குப் போய் அண்ணனோட பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாம்மான்னு சொல்றா…

    அம்மாவுக்கும் பொண்ணுக்கும் பாசம் பொங்குதோ? உங்களையெல்லாம் நிக்க வெச்சு கன்னத்துல மாறி மாறி அறையணும்...

    தாராளமா என்னை அடிங்க… கொல்லுங்க…! ஆனா எம் புள்ளைக்கு மட்டும் சாபம் கொடுத்துடாதீங்க…! கண்ணீர் மல்க கைகளைக் குவித்தாள் மணியரசி.

    ரகுராமன் கையிலிருந்த செய்தித்தாளை கோபமாய் விட்டெறிந்து விட்டு வேகமாய் அங்கிருந்து நகர்ந்தார்.

    'கவுதம் நீ எங்கடா இருக்கே...?'

    'எல்லோரும் தலைகுனியறது மாதிரியான காரியத்தை ஏன்டா பண்ணினே…?'

    மணியரசியின் இதயம் வேதனையோடு துடித்தது.

    2

    திருப்பூரிலிருந்து வந்த அந்த பேருந்தினுள் இருந்து கீழே இறங்கினான் கவுதம். இந்த இரண்டு வருடத்தில்… தஞ்சாவூர் நிறைய மாறியிருந்த போதிலும் பழைய பேருந்து நிலையம் மட்டும் மாற்றம் எதுவும் இல்லாமல் அன்றைக்குப் பார்த்தது மாதிரியே இருந்தது.

    தஞ்சாவூருக்கே உரிய கதம்ப வாசனை… காற்றிலே கலந்து நாசியை வருடியது. கமலா பழத்தையும், கொய்யாப் பழத்தையும் கூடைகளில் வைத்துக் கொண்டு வியாபாரிகள் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி கூவிக் கொண்டிருந்தார்கள்.

    கவுதம் தனது தோள் பையை சுமந்தபடி நடந்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1