Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sangathara
Sangathara
Sangathara
Ebook484 pages5 hours

Sangathara

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் - என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!

பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியாள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.

சோழர் சரித்திரத்தில் துண்டு துண்டாக மர்மங்கள். சம்பவங்களுக்கு காரணகர்த்தா யார் என்று கூற இயலாதபடி அடுக்கடுக்காக பல நிகழ்வுகள்! இவற்றைக் கையாள பல எழுத்தாளர்கள் முன்வரவில்லை என்றே கருதுகிறேன். விஞ்ஞானம் உலகையே ஆளும் இன்று, MH-370 என்கிற மலேசிய விமானம் காணாமல் போய் விட்டது! விபத்து என்று கூற இயலாதபடி அதன் நொறுங்கிய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை. விஞ்ஞானமும், பகுத்தறிவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள இதே காலகட்டத்தில்தான், அமானுஷ்யமும், மர்மமும் வெற்றிகரமாக இன்னொரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் கூறுகிறேன்! சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ஆதித்த கரிகாலனின் கொலைதான்! பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்தப் பகுதிக்கு ‘சங்கதாரா’ என்னும் தோணியில் சென்றுவிட்டு, பத்திரமாக திரும்பி வந்திருக்கிறேன்.

விரைவில் இன்னும் பல சோழ மர்மங்களை விடுவிக்க எண்ணும்

அன்பன்,

‘காலச்சக்கரம்’ நரசிம்மா.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132105801
Sangathara

Read more from Kalachakram Narasimha

Related to Sangathara

Related ebooks

Related categories

Reviews for Sangathara

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sangathara - Kalachakram Narasimha

    http://www.pustaka.co.in

    சங்கதாரா

    Sangathara

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    முகவுரை

    ஆதித்த கரிகாலன் பேசுகிறேன்...

    1. அதிகாலை வந்த செய்தி கி.பி. 1025

    2. ஒரு பூ மலர்ந்தது கி.பி. 952

    3. பணயமானாள் விஜயரேகா கி.பி. 952

    4. சோழ சிலந்திகள் கி.பி. 952

    5. வஞ்சம் வளர்த்த வாலிபர்கள் கி.பி. 952

    6. தலைச்சங்கம்! கி.பி. 952

    7. ஒரு விச்சி... ஒரு பிச்சி கி.பி. 952

    8. மலையமான் மலைத்தார் கி.பி. 953

    9. காக்க வந்த கணையாழி கி.பி. 953

    10. விஷப்பரிட்சை கி.பி. 954

    11. கண்டரே கண்கண்ட தெய்வம் கி.பி. 955

    12. யார் தருவார் இந்த அரியாசனம்? கி.பி. 956

    13. தில்லை அழகி கி.பி. 955

    14. இரவிதாசன் கடத்தப்பட்டான் கி.பி. 955

    15. வந்து நின்றான் வைர வியாபாரி கி.பி. 955

    16. சங்கதாரா கி.பி. 955

    17. விச்சி திருமணம் கி.பி. 955

    18. சண்டி விரதம் கி.பி. 955

    19. அருண்மொழி பிறந்தான் கி.பி. 956

    20. ஆற்றில் விழுந்த குழந்தை கி.பி. 956

    21. பஞ்சரஸம் கி.பி. 956

    22. விச்சி மரணம் கி.பி. 956

    23. சாம்பவி வெறியாட்டம் கி.பி. 956

    24. பித்துப் பிடித்த ராணி கி.பி. 956

    25. பாண்டியன் கொண்டாட... கி.பி. 962

    26. முருக்கலா...? முருங்கலா...? கி.பி. 962

    27. பழிக்குப் பழி கி.பி. 962

    28. குந்தவை கேட்ட வரம் கி.பி. 966

    29. செம்பியன் ஏன் தேம்பி அழுதாள்? கி.பி. 967

    30. சம்புவரையர் வம்பு! கி.பி. 969

    31. மூன்றாவது கண் கி.பி. 969

    32. அழையாத விருந்தாளி கி.பி. 969

    33. சுந்தரர் கண்ட அகோர கனவு கி.பி. 969

    34. பயணம் போனாள்; பணயம் ஆனாள்! கி.பி. 969

    35. களஞ்சியத்தில் கலவரம் கி.பி. 969

    36. யார்? கி.பி. 969

    37. குந்தவை சபதம் கி.பி. 969

    38. பழவேட்டை காயானது! கி.பி. 969

    39. பொன் மாளிகையில் ஒரு வைர நெஞ்சம் கி.பி. 969

    40. சாம்பவி தந்த வெகுமதி கி.பி. 969

    41. அம்மனார் சொல்லுவார்

    42. சத்தியம்... சிவம்... சுந்தரம் கி.பி. 970

    43. சுகோதயன் துரோகம்! கி.பி. 970

    44. மக்கள் சக்தி கி.பி. 970

    45. யாரோ இவர் யாரோ?

    46. யானைக்கு பானை சரி! கி.பி. 970

    47. உத்தம சோழன் கி.பி. 970-984

    48. நந்தாவிளக்கு கி.பி. 984

    49. விளக்கு அணைந்தது கி.பி. 984

    50. பெரிய கோவில்; சிறிய புத்தி கி.பி. 985

    51. இராஜ இராஜன் ஆசை! கி.பி. 1012

    52. தேர் ஏறி விண்ணில் பயணம் கி.பி. 1018

    53. தெட்டக்கனி! தெவிட்டாக்கனி! கி.பி. 1018

    54. உண்மை சுடும் கி.பி. 1025

    55. கல்லிலே செதுக்கப்பட்ட மர்மங்கள் கி.பி. 2006

    56. மௌனம் சம்மதம் கி.பி. 2010

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    முகில் மறைத்த மதியென, சோபை இழந்து, அந்தகாரம் பரவியிருந்த அவ்வழகிய நேரிழையாளின் முகம், மதயானையைப் போன்று அந்த நந்தவனத்தில் பிரவேசித்த அக்கட்டழகு புவனைக் கண்ட நொடிப்பொழுதில், கிரகணம் விட்டொழித்த பூரண சந்திரனைப் போன்று பிரகாசித்தது. அப்போதுதான் அலர்ந்த செங்கமலத்தையொத்த அந்தப் பேரழகியைக் கண்ட மாத்திரத்தில், சாயங்கால செந்நிற வானத்தில் கருத்த மேகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது போல, வீரத்தழும்புகளால் கருத்திருந்த தன் சிவந்த மேனி துடிதுடிக்க, அவளை நோக்கி நடந்தான். மது உண்ண வந்த வண்டை, தென்றல் தாலாட்டும் மலர் அசைந்தாடி வரவேற்பது போல், அந்த நங்கை, செவ்விள நீர் போன்ற தனது கொங்கைகள் படபடக்க, அவனை நோக்கி தலையசைத்து வரவேற்றாள். மலைப்பாம்பை போன்ற தனது கரங்களால் அந்த புள்ளிமானை வளைத்து பிடித்த அவ்வீரன், போர்க்களத்தில் தொடர்ந்து சிம்மநாதம் செய்துவந்த காரணத்தால், தடித்திருந்த தனது உதடுகளால், அவளது இதழ்களை சிறைபிடிக்க, அதனால் சொக்கிப் போன அந்த நங்கை நீலோத்பல புஷ்பங்களைப் போன்ற தனது நேத்திரங்களை மூடினாள். அங்கே, ரதி-மன்மத கேளிக்கை அரங்கேற, அதைக் கண்டு, அங்கிருந்த தாமரையோடையில் நீந்திக்கொண்டிருந்த வெண்ணிற அம்ஸ பட்சிகள், தத்தம் பேடைகளை ஏக்கத்தோடு பார்க்க, அதனால் வெட்கி தலைகுனிந்த அப்பேடைகள் தம் தலைகளை இறக்கைகளில் புதைத்துக் கொண்டன.

    இம்மாதிரி பக்கம் பக்கமாக எழுத 'காலச்சக்கரம்' நரசிம்மா என்கிற அடியேனாலும் முடியும்! சரி... இப்படி எழுதுவதுதான் ஒரு சரித்திர நாவலாசிரியரின் இலக்கணம் என்றால், மன்னிக்கவும்! நான் ஒரு சரித்திர கதாசிரியர் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. ச்ருங்கார ரஸத்தில் தமிழ் சொற்களை, தோய்த்தெடுத்து, சரித்திரக்காலச் சம்பவம் என்னும் ஒரு நூலில் அச்சொற்களை மாலையாகக் கோர்த்து, தான் ஒரு சரித்திர நாவலாசிரியர் என்று கூறிக்கொள்பவர்களின் பட்டியலில் சேர நான் விரும்பவில்லை. அவரவர்களின் தமிழ் புலமையையும் கற்பனை திறனையும் பறைசாற்ற இத்தகைய எழுத்து நடை உதவுமே தவிர, அறியாமையினால் சரித்திரத்தையே தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினரிடம் உண்மைகளை விளக்கிக் கூற இத்தகைய எழுத்து நடை உதவாது!

    என்ன ஆச்சு?- ஹேய்... வாட்ஸ் அப்! இஸ் இட் ஸோ...?- என்று தங்க்லீஷில் பேசி வரும் இன்றைய தலைமுறையினரிடம், 'அந்த நேரிழையின் சந்திரபிம்ப வதனம்' என்று எழுதினால், ஸாரி! என்று எழுந்து சென்றுவிடுவார்கள். இத்தகைய இன்றைய சமுதாயத்தினரிடம், சரித்திரகால உண்மைகளை விளக்க வேண்டுவது நம் கடமையாகிறது!

    இன்றைய செய்தி தான் நாளைய சரித்திரம்! செய்திகள் மலர்களைப் போன்றவை! ஒரே நாளில் வாடிவிடும்! எனவே, செய்திகளை உடனடியாக பதப்படுத்தி, அதற்கு அழியாத்தன்மை தரும்போது, அது ஒரு உண்மை சரித்திரமாக மாறுகிறது.

    இன்றைய தலைவர்கள் பலர் ஊழல் வழக்கை சந்திக்கின்றனர்! ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கை சரிதத்தை எழுதும்போது, அந்த வழக்குகள் பற்றி குறிப்பிடமாட்டார்கள். அதற்காக, சரித்திர சாதனையாளர்கள் எல்லோருமே உத்தமர்கள் என்று கூறிவிட முடியுமா? ஹிட்லரிடம் நல்ல குணங்களே இல்லை என்றும் கூறிவிட முடியாது!

    எனவேதான் -

    சங்கதாராவை படிப்பதற்கு முன்பாக, இதர நாவலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை படிப்பதற்காக வழங்கியிருந்த '3D' கண்ணாடிகளை கழற்றிவிட்டு, இதனைப் படிக்கும்படி வேண்டினேன்!

    உங்களையெல்லாம் திடுக்கிடவும், பரபரப்பு அடையவும் செய்த சங்கதாரா, தனது இரண்டாவது பதிப்பை காண்கிறது என்பதே, எனது நிலைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

    என் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் படை எடுத்து வந்து என்னிடம் பாராட்டு தெரிவித்தவர்கள் பலர். அலைபேசி, தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் என்னிடம் தொடர்பு கொண்டு பாராட்டியவர்கள் பலர். மொத்தத்தில், 'சங்கதாரா' பெரும் உணர்வு அலைகளை எழுப்பி, இலக்கிய உலகை ஒரு சுனாமியாக தாக்கிவிட்டது என்று 'பகத்சிங்' என்கிற வாசகர் கருத்து தெரிவித்தார்! இராகவேந்திர ராவ் என்பவர் என் நாவல் உண்மையில் ஒரு சி.பி.ஐ. ரிப்போர்ட் என்றே குறிப்பிட்டார். சங்கதாராவை படித்த பிறகு, பல வாசகர்கள் என்னிடம் 'இப்படிதான் நடந்திருக்க முடியும்' என்கிற எனது 'லாஜிக்'கை தாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை ஏற்காதவர்கள் கூட 'சங்கதாராவை கையில் எடுத்ததும், கீழே வைக்க முடியவில்லை' என்று கூறி, நான் பல முறை படித்துவிட்டேன் என்கின்றனர்.

    இப்படி தைரியமாக முடிவை கூறியுள்ளீர்களே! உங்களுக்கு ஆதாரம் என்ன என்று கேட்பவர்களிடம், ஒன்றை மட்டும் தான் என்னால் கூற முடியும்!

    என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் - என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம் சொன்னால், எதை ஆதாரமாக வைத்து இப்படிக் கூறுகிறீர்கள் என்று நம்மைக் கேட்டால், நாம் என்ன பதில் கூறமுடியும்!

    பொன்னியின் செல்வன் படித்து சோழர்குல செம்மல்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று உருவகப்படுத்திக் கொண்டு விட்டவர்கள் பலர்! பத்மினியை குந்தவையாகவும், வைஜெயந்தி மாலாவை நந்தினியாகவும் இருத்தியிருக்கிறேன் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்! வக்கீல் என்றால் வரதாச்சாரி, க்ளப் டான்சர் என்றால் ரீட்டா, அடியாள் என்றால் ஜம்பு என்று தமிழ் திரையுலகம் நமக்கு போதித்து விட்டது! வரதாச்சாரி என்று அடியாள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! ஜம்பு, முனியன் என்று வக்கீல்கள் வந்தாலும் ஏற்க மாட்டோம்! இப்படிப்பட்ட வாசகர்களுக்காக சங்கதாரா எழுதப்படவில்லை.

    சோழர் சரித்திரத்தில் துண்டு துண்டாக மர்மங்கள். சம்பவங்களுக்கு காரணகர்த்தா யார் என்று கூற இயலாதபடி அடுக்கடுக்காக பல நிகழ்வுகள்! இவற்றைக் கையாள பல எழுத்தாளர்கள் முன்வரவில்லை என்றே கருதுகிறேன். விஞ்ஞானம் உலகையே ஆளும் இன்று, MH-370 என்கிற மலேசிய விமானம் காணாமல் போய் விட்டது! விபத்து என்று கூற இயலாதபடி அதன் நொறுங்கிய உதிரி பாகங்களும் கிடைக்கவில்லை. விஞ்ஞானமும், பகுத்தறிவும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள இதே காலகட்டத்தில்தான், அமானுஷ்யமும், மர்மமும் வெற்றிகரமாக இன்னொரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

    மீண்டும் கூறுகிறேன்! சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) ஆதித்த கரிகாலனின் கொலைதான்! பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்தப் பகுதிக்கு 'சங்கதாரா' என்னும் தோணியில் சென்றுவிட்டு, பத்திரமாக திரும்பி வந்திருக்கிறேன்.

    வாசகர்களின் கேள்விக்கு இன்றுவரை நான் பதிலளித்தபடிதான் உள்ளேன்! இம் முன்னுரையில் அந்த பதில்களை தவிர்த்திருக்கிறேன்! புத்தகத்தை மற்றவர்கள் படிக்க வேண்டுமல்லவா?

    இந்த நாவலை நான் எழுதியவுடன் முதலில் படித்த என் தாய், கமலா சடகோபன் அவர்கள், இது பரபரப்பாக விற்பனையாகும் என்றார்! அவர் வாக்கு பலித்தது. என் ஆராய்ச்சிகளுக்கு உதவிய என் மனைவி சுதாவிற்கு இந்த வெற்றியில் பங்கு உண்டு!

    'சங்கதாரா' - சரித்திர நாவல் உருவாகுவதற்கு உதவிய அனைவருக்கும் என் நன்றி!

    விரைவில் இன்னும் பல சோழ மர்மங்களை விடுவிக்க எண்ணும்

    அன்பன்,

    'காலச்சக்கரம்' நரசிம்மா.

    முகவுரை

    ஆதித்த கரிகாலன் பேசுகிறேன்...

    உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்கும்! நான்தான் ஆதித்த கரிகாலன். சுந்தர சோழனின் மூத்த மகன்! என்ன... விழிக்கிறீர்கள்? பாண்டியன் தலையைக் கொய்த மாவீரன்... என்பார்கள்... என்னை! இன்னுமா புரியவில்லை!! அட! நான்தான் அருண்மொழி, அதாவது உங்கள் ராஜராஜ சோழனின் அண்ணன்!... இன்னுமா தெரியவில்லை?... எப்படி சொன்னால்... உங்களுக்கு விளங்கும்? இப்போதாவது தெரிகிறதா பார்ப்போம்! நான் தான் குந்தவையின் அண்ணன்!... அப்பாடி!... ஒரு வழியாகப் புரிந்துகொண்டீர்களா!...

    என்ன செய்வது! பெண்கள் பெயரைச் சொல்லி, அன்னாருடைய தந்தை, சகோதரன், கணவன், மகன் என்று கூறினால்தானே தமிழர்கள் இனம் புரிந்துகொள்கின்றனர். காரணம், தமிழர்களின் வாழ்வே பெண்களைச் சுற்றித்தானே அமைந்திருக்கிறது. கண்ணகிக்கு அடுத்தபடியாக, ஒளவை பாட்டிக்கு பின்பாக, என் தங்கைதானே உங்களுக்கு அதிகம் அறிமுகமானவள்.

    என்னைப் பற்றிய கதைக்கு என்னையே முகவுரை எழுதச் சொல்லிப் பணித்திருக்கிறார் நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா! இலக்கியவாதிகள் மீதும் சரித்திர பேராசிரியர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

    ஐயா! அம்மணிகாள்! நான் கடம்பூர் மாளிகையில் கொலை செய்யப்பட்டதாகக் கூறி என்னைப் பற்றிய உண்மைகளை அவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். என்னைக் கொலை செய்தது இன்னார் என்று ஆயிரம் வருடங்கள் மேலாகியும், இன்னும் யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதனால் இந்த உலகத்தின் மீதே நம்பிக்கை இழந்து, மனபாரம் தாங்காமல், நிம்மதியின்றி உழன்று கொண்டிருக்கின்றேன். மனம் இன்னும் அமைதி அடையவில்லை.

    என் கொலை வழக்கு ஒரு 'தோலா வழக்கு.' ஓ...! தற்காலத் தமிழர்களான உங்களுக்கு தோலா வழக்கு என்றால் தெரியாதல்லவா!

    சொல்கிறேன்! தோலா வழக்கு என்றால், நிலுவையில் உள்ள, முடியவே முடியாத, தீரவே தீராத வழக்கு! ஒரு சம்பவம் பற்றி கூறுகிறேன்! கேளுங்கள்!

    கள்வனாக இருந்து வைணவ அடியாராக மாறிய திருமங்கை மன்னன், ஒருமுறை திருவரங்க கோவில் மதில் சுவரை கட்ட வேண்டி, நாகை புத்த விஹாரத்திலிருந்து, சுவர்ண புத்த விக்கிரகத்தைக் களவாடி சென்றாராம். திருக்கண்ணங்குடி என்ற ஊரை அடைந்தபோது இரவு படர்ந்துவிட்டது. புளியமரம் ஒன்றின் கீழ் அன்றைய இரவை கழிக்க நினைத்த திருமங்கை மன்னன், அருகில் இருந்த வயல்வெளி ஒன்றில் சுவர்ண புத்த விக்ரகத்தை புதைத்துவிட்டு, அந்தப் புளியமரத்தைப் பார்த்து:

    ஏ... புளியமரமே! இந்த விக்கிரகத்துக்கு நீதான் காவல்! அது காணாமல் போனால் அதற்கு நீயே பொறுப்பு- என்று கூறிவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றுவிட்டார்.

    மறுநாள் காலை, திருமங்கை மன்னன் எழுவதற்கு முன்பே, வயலுக்கு உரிமையாளன் தன் நிலத்தை உழ ஆரம்பிக்க, காவல் இருந்த உறங்கா புளியமரம், தன் இலைகளை திருமங்கை மன்னன் மீது உதிர்த்து அவரை எழுப்பியது.

    நிலைமையை கண்டுகொண்ட திருமங்கை மன்னன், விக்கிரகம் வயலின் உரிமையாளன் கண்களில் பட்டால், அவன் அதற்கு உரிமை கொண்டாடுவானே என்று கவலை கொண்டு, அவனிடம் போய் மல்லுக்கு நின்றார்.

    இந்த நிலம் என்னுடையது! இதில் நீ எப்படி உழலாம்? என்று அவனை அதட்ட, திடுக்கிட்டு போன அந்த வயலுக்குச் சொந்தக்காரன், இவரிடம் எதிர்வாதம் புரிய,

    இது என் நிலம்! உன்னிடம் ஆதாரம் இருந்தால் என் மீது வழக்கு தொடுத்து, இது உன்னுடையது என்று நிருபணம் செய்- என்று திருமங்கை மன்னன் கூறினார்.

    வயலின் உரிமையாளனும், உடனடியாக ஊருக்குள் சென்று, தகுந்த ஆதாரங்களுடன் திருமங்கை மன்னன் மீது வழக்குத் தொடர்ந்தான்.

    அதற்குள்ளாக திருமங்கை மன்னன் வயலில் ஒளித்து வைத்திருந்த சுவர்ண விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தன் வழியே சென்றுவிட்டார். அதற்குப்பிறகு அவர் திருக்கண்ணங்குடி பக்கமே போகவில்லை. அவர் மீது வயலுக்குச் சொந்தக்காரன் தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

    முடியவே முடியாத, தீரவே தீராத வழக்கினை தோலா வழக்கு என்று கூறுவார்கள். இப்போது புரிகிறதா? - என் கொலை வழக்கை ஏன் தோலா வழக்கு என்று நான் கூறுகிறேன் என்று!

    என் மரணத்தை (?) பற்றிய சரித்திரக் குறிப்புகளைக் கேட்க வேதனையாக உள்ளது.

    வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது என்று திருவாலங்காட்டு செப்பேடுகளில் என் மரணத்தைப்பற்றி... தவறு... என் கொலையைப்பற்றி குறிப்பிட்டிருப்பதாக அறிந்தேன்.

    இதென்ன அபத்தம்! அனைவருக்கும் சோழ நாட்டின் மீது ஆசை! எனக்கு மட்டும் வானுலகம் மீது ஆசையா?

    பாண்டியன் தலையைக் கொய்தவன் என்று சோழ மக்களால் போற்றப்பட்டு, நான் அரியணையில் ஏறும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த என் அன்பான குடிமக்களை விட்டு, நான் ஏன் வானுலகப் பதவி மீது நாட்டம் கொள்ள வேண்டும்?

    எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கடந்த 1000 வருடங்களுக்கு மேலாக நீதி கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்! சரித்திரப் பேராசிரியர்கள் பலர் என்னை மிகவும் கேவலமான முறையில் ஏமாற்றிவிட்டனர். என் நெஞ்சம் குமுறுகிறது. அருண்மொழியின் வீரத்தை இமயமளவுக்கு எழுதி, எனது வீரத்தை எள்ளளவாக்கி, எனக்கு நியாயம் கிடைக்காமல் செய்து விட்டனர்.

    ஏதோ, நான் பாண்டியனின் தலையைக் கொய்து விட்டதால், அந்த நாட்டு ஆபத்துதவிகள் பழிவாங்க, என்னைக் கொன்று விட்டனர் என்கிறார்கள்! ஏன்? நான் என் சிறிய பாட்டன் உத்தமசீலியின் தலையை பந்தாடிய வீரபாண்டியனின் தலையைக் கொய்தே தீருவேன் என்கிற என் சபதத்தைத்தானே நிறைவேற்றினேன்! அதைப் பற்றி ஏன் எந்த சரித்திரப் பேராசிரியரும் மூச்சு விடவில்லை?

    நான் மிகவும் எதிர்பார்த்த அமரர் கல்கியும் என் மரணத்தை மேலோடு குறிப்பிட்டுவிட்டு, அந்தக் கொலைப்பழியை பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் மீது போட்டுவிட்டார்.

    பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு என்னைவிட அருண்மொழியைக் கொல்வதுதானே எளிது! அவன் பாண்டிய நாட்டை ஆதரித்த ஈழத்தில் அல்லவா வெகு காலம் தங்கியிருந்தான்!

    இரவிதாஸன் என்பவனை பாண்டிய நாட்டு ஆபத்துதவி என்று கூறி அவன்தான் கொலைகாரன் என்று தீர்ப்பு கூறி, அவசரமாக என் கொலைவழக்கை முடித்து விட்டார்கள். இரவிதாஸன் பாண்டிய நாட்ட ஆபத்துதவி என்றால், உடையார் கோவில் கல்வெட்டில் (முதல் யாத்திரை) ஆதித்த கரிகாலனை (என்னை) கொன்றதைப் பற்றி குறிப்பிடுகையில்:

    துரோகிகளான இரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராயன், அவன் உடன்பிறந்தோன் சோமன் சாம்பவன்... என்று செதுக்கப்பட்டுள்ளதே! இதற்கு என்ன பொருள்?

    ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டைச் சேர்ந்தவன்தான் துரோகம் செய்ய முடியும். அண்டை நாட்டுக்காரன் எப்படி ஒரு நாட்டுக்கு துரோகியாவான்? அவன் பகைவன் அல்லது விரோதி என்ற பெயரை அல்லவா தாங்கி நிற்பான்! விரோதம் வேறு, துரோகம் வேறு என்பதை நான் வேறு உங்களுக்கு விளக்க வேண்டுமா என்ன?

    அப்படி இரவிதாஸன்தான் என்னைக் கொலை செய்தான் என்றால், அநிருத்தர் பிரும்மராயர் ஓய்வு பெற்ற பிறகு, எதற்காக அவனுக்கு சோழ அரசில் பெரும் பதவி அளிக்கப்பட்டது? இரவிதாஸன் 'பஞ்சவன் பிரும்மாதிராயன்' என்று பெருமையுடன் அல்லவோ விளிக்கப்பட்டான். பிரும்மாதிராயன் என்பது சோழ அரசில் பெரும் பதவியில் உள்ள அந்தணர்களைத்தானே குறிக்கும்! அநிருத்தரும் பிரும்மாதிராயன் என்றுதானே அழைக்கப்பட்டார். என்னைக் கொலை செய்தவனாகக் கருதப்படும் ரவிதாஸனுக்கு எதற்காக பிரும்மாதிராயன் பட்டம் தரப்பட்டது?

    சரி! ரவிதாஸன் அந்தணன்! அந்தணர்களுக்கு சோழ நாட்டின் நீதிப்படி மரணதண்டனை கிடையாது என்றும், அதனால்தான் 'என்னைக் கொன்ற' இரவிதாஸன் என்கிற அந்தணனுக்கு மரணதண்டனை விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார், சரித்திரத்தை கரைத்துக் குடித்த ஒரு மேதாவி! அப்படியென்றால், சோழர்கள் படை எடுத்துச் சென்றபோதெல்லாம் அண்டைநாட்டு அந்தணர்களையும், பெண்களையும் கொன்று குவித்து, சோழ அரச குடும்பத்தினர் செய்த தகாத செயல்கள் விரும்பத்தக்கவையல்ல என்று அதே சரித்திரப் பேராசிரியரே மற்றோர் இடத்தில் சான்றுகளுடன் தெரிவித்திருக்கின்றாரே! அந்தணர்களைக் கொன்றதால் ஏற்பட்ட 'சோழ பிரும்ம ஹத்தி' என்கிற பாபத்தை கழிக்கத்தானே, அரச குடும்பத்தினர் பல விண்ணகரங்களையும், சிவாலயங்களையும் எழுப்பினோம்?

    சோழ நாட்டு அந்தணர்களைத்தான் கொல்லக் கூடாது! எதிரி நாட்டு அந்தணர்களைக் கொல்லலாம் என்று வேறு யாராவது மேதாவி கூறினாலும் கூறுவார். அப்படியென்றால் நீங்கள் தானே கூறுகின்றீர், இரவிதாஸன் பாண்டியநாட்டு ஆபத்துதவி என்று. பாண்டிய நாட்டு அந்தணன் ஆன அவனுக்கு மரண தண்டனை விதித்தால் என்ன தவறு? அவனுக்கு மரண தண்டனைக்கு பதிலாக, பதவிதானே தரப்பட்டது! இந்த இரவிதாஸன் யார் என்று எனக்குத் தெரியும்! உங்களுக்குத் தெரியுமா?

    'பஞ்சவன்' இரவிதாஸ பிரும்மாதிராயன் பாண்டிய நாட்டவன் இல்லை! பஞ்சவன் என்பது சோழநாட்டு அரசகுடும்பத்து அடைமொழியாகும். அரச குடும்பத்து அடைமொழியான 'பஞ்சவன்' எதற்காக பாண்டிய நாட்டு ஆபத்துதவிக்கு வழங்கப்பட்டது? 'பஞ்சவன்' என்று எதற்காக சோழ அரச குடும்பத்தின் சில உறுப்பினர்களுக்கு அடைமொழி தரப்பட்டது? இதன் மூல காரணத்தை ஆராய்ந்தாலே போதும்; என்னைக் கொலை செய்த நபரை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்! ஆனால், யாருமே அதைச் செய்ய முற்படவில்லையே-!

    அடுத்ததாக, என் தந்தை சுந்தர சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த கண்டராதித்த தேவரின் மகன் உத்தம சோழன்தான் என்னை ஆளை வைத்துக் கொன்றுவிட்டதாக சிலர் கூறுகின்றனர். சரி! அப்படியே வைத்துக்கொள்வோம்! அவனுக்குப் பிறகு பதவிக்கு வந்த என் அருமைத் தம்பி அருண்மொழி (ராஜராஜ சோழன்) என்னைக் கொன்ற இரவிதாஸனுக்கும் மற்றவர்களுக்கும் ஏன் மரண தண்டனை விதிக்கவில்லை? அவன் சொத்துகளைப் பறித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேற்றினானேயன்றி, என் மீது உண்மையான சகோதர வாஞ்சை கொண்டிருந்தால், உண்மையில் அவன் ரவிதாஸனைக் கொன்றிருக்க வேண்டாமா?

    இரவிதாஸனைக் கொண்டு உத்தம சோழன் என்னைக் கொலை செய்தான் என்றால், தான் பதவிக்கு வந்ததும் அவனுக்கு அரசில் பதவி கொடுத்து மரியாதை செய்வானா? இதனால் மக்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டிருக்காதா?

    இரவிதாஸன் அந்தணனாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருப்பின், அவனால் 'பஞ்சவன்' என்கிற அரச குடும்பத்து அடைமொழியை வைத்திருக்க முடியாது. சோழ நாட்டு அரசகுடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே உரித்தான 'பஞ்சவன்' என்கிற அடைமொழி இரவிதாஸனுக்கு எதற்காக வழங்கப்பட்டது? 'ரவி' என்கிற வடமொழி சொல்லுக்கு ஆதித்தன், கதிரவன், பிங்களன் என்று பல அர்த்தங்கள் உண்டு.

    என்னை உண்மையில் கொன்றது யார்?

    என் கொலை எங்கே நடந்தது?

    பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளால் என் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து கொண்ட சோழ அரசு, வேளக்கார படைக்கு நிகரான ஒரு பாதுகாப்புப் படையை எனக்கு ஏன் வழங்கவில்லை?

    என்கிற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை! இலக்கியவாதிகளும், சரித்திரப் பேராசிரியர்களும், தங்கள் எண்ணப்படி எழுதி பல உண்மைகளைத் திரித்து, எனக்கு நீதி கிடைக்காமல் செய்துவிட்டனர்.

    உண்மையை கண்டுபிடிக்க அமரர் கல்கியும் பிரயத்தனப்படவில்லை! 'நமக்கு எதற்கு வம்பு' என்று பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் மீது பழிபோட்டுவிட்டு நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்று தனது கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி, தனது 'பொன்னியின் செல்வனை' மிக அழகாக எழுதிவிட்டார்.

    ஆனால் அன்னாருக்கு அனந்த கோடி வந்தனங்கள். அவர் மட்டும் பொன்னியின் செல்வனில் என்னைப் பற்றி குறிப்பிடாமல் போயிருந்தால், நான் கொலை செய்யப்பட்ட விவரமே, அனேகம் பேருக்குத் தெரியாமல் போயிருக்கும். யாராவது ஒருவர் உண்மைக் கொலையாளியைக் கண்டுபிடிப்பாரா என்று கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்கிறேன்! ஐயா! கொலை செய்த நபரைக் கூட கண்டுபிடிக்க வேண்டாம்! நான் எதற்காக கொலை செய்யப்பட்டேன் என்கிற உண்மையை தெரிவித்தால் கூட போதும்! மனபாரம் நீங்கியவனாய், என் ஆன்மா கடைத்தேறும் வழியை நான் பார்த்திருப்பேன்! ஆனால் ஒரு அனுமானம் செய்யக்கூட யாருக்கும் துணிவில்லையே!

    நான் பதினாறு வயதில் கொல்லப்பட்டு விட்டதாக சிலர் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர். எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை! என்னைவிட என் தங்கை குந்தவை இரண்டு வயது இளையவள். அவள் அருண்மொழியை விட நான்கு வயது பெரியவள் என்றும் தவறாகக் குறிப்பிட்டு உள்ளனர். அருண்மொழியை வளர்க்கும் பொறுப்பை குந்தவை முழுவதுமாக ஏற்றாள் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும்! அப்படியென்றால் நான்கு வயதிலா குந்தவை தன் தம்பி அருண்மொழியை கவனித்துக்கொண்டாள்! நான்கு வயது சிறுமியால் ஒரு கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா?

    என்னைக் கேளுங்கள்! வீரபாண்டியன் தலையைக் கொய்தபோதே, எனக்கு இருபத்தாறு பிராயங்கள் பூர்த்தியாகிவிட்டன. வடபுல சேனநாயகனாக இருந்த நான் கொலை செய்யப்பட்டபோது எனக்கு இருபத்தெட்டு பிராயங்கள் முடிந்துவிட்டன. என்னைவிட இரண்டு வயது இளையவள் குந்தவை என்றால் நான் இறக்கும் போது அவள் இருபத்தாறு பிராயங்களைக் கடந்திருக்க வேண்டும்! நான் இறக்கும்போது அருண்மொழி பதினான்கு பிராயங்களைக் கடந்திருந்தான்.

    நானும் அருண்மொழியும் சந்தித்துக்கொண்டதே அரிது. அவன் கைக்குழந்தையாக இருந்தபோது அவனைப் பார்த்திருக்கிறேன். அவன் ஈழத்தில் தானே பெரும்பாலும் தங்கியிருந்தான்.

    அருண்மொழியை கதாநாயகனாகப் போற்ற வேண்டி என்னை மூர்க்கனாகவும், குரூபியாகவும் சித்தரித்து விட்டனர் இலக்கியவாதிகள். சற்று கருமையாக இருந்தாலும், நானும் கம்பீரமாக இருப்பேன்- என் தாய் மலையமான் மகள் வானவன்மாதேவியைப் போல!

    குந்தவையும் அருண்மொழியும் என் தந்தை சுந்தர சோழனின் அழகைக் கொண்டிருந்தனர். என் பாட்டியும், சுந்தர சோழனின் தாயுமான வைதும்பராயர் மகள் கல்யாணி, அதிரூபவதி!

    நான் சுத்த வீரன்! என் வீரம் அருண்மொழியின் வீரத்துக்கு சளைத்ததல்ல. என்னைக் கண்டு பாண்டியரும், சாளுக்கியரும் நடுங்கினர். ஆனால் என்ன காரணத்தாலோ, சரித்திரப் பேராசிரியர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.

    நம்பிக்கையை நான் அனேகமாக இழந்துவிட்ட நிலையில், ஒரு பத்திரிகையாளரான இந்த நாவலாசிரியர் என் தோலா வழக்கை முடித்து வைக்க முற்பட்டிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்!

    இளவரசிகளின் அங்கங்களை வருணிப்பது, குதிரை சவாரியில் கதாநாயகனை அறிமுகப்படுத்தி அவனைப் போற்றி புகழ்வது, குளம்படி சத்தம், வாட்கள் உரசும் ஒலி என்று வழக்கமான சரித்திர ஆசிரியர்கள் கடைப் பிடிக்கும் நியதிகளை விட்டொழித்து, ஆதாரங்களைத் தேடியலைந்து எனக்கு நீதி கிட்ட வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டுள்ளார். வழக்கமான கதாசிரியர்கள் போல, ஒரு கதாநாயகன் கதாநாயகியை உருவாக்கி, அவர்களை சுத்த சத்துவப் பொருளாக்கி, அவர்களை மையமாக வைத்து, ஒருதலை பட்சமாகக் கதை புனையவில்லை இவர்.

    இவருடைய இந்தக் கதையை ஒரு புதினமாகப் பார்க்காதீர்கள். ஒரு புனிதமான முயற்சியாகப் பாருங்கள்! ஒரு பத்திரிகையாளனாக உண்மையைச் சேகரித்திருக்கின்றார்! அவ்வளவே!

    அவரது கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம்! அவர் எனக்காக இந்த உண்மைகளை எழுதியிருக்கின்றாரே தவிர, உங்களுக்காக அல்ல!

    - கடைசி நம்பிக்கையுடன்

    ஆதித்த கரிகாலன்

    1. அதிகாலை வந்த செய்தி

    கி.பி. 1025

    தூக்கிவாரிப்போட, அரிந்தவன் மாதேவி உறக்கத்திலிருந்து மீண்டாள். அறையில் ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் அனைத்துமே எண்ணெய் தீர்ந்துவிட்டிருந்தபடியால், அணைந்திருந்தன. சாளரத்தின் வழியே வெளியே நோக்கினாள், மாதேவி.

    கோவில் மணி ஒன்று எங்கோ ஒலித்தது. மார்கழி மாத விடியற்காலை நேரத்துக்குரிய தெய்வீகமணம், ஒரு ரம்மியமான சூழ்நிலையை வாரிக்கொட்டியிருந்தது.

    இவ்வளவு விடியற்காலையில் அவள் கண்விழிக்கும் வழக்கமில்லை. இன்று மட்டும் எப்படி உறக்கத்திலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1