Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodalazhagi - Part 2
Koodalazhagi - Part 2
Koodalazhagi - Part 2
Ebook824 pages5 hours

Koodalazhagi - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மலையமான் மாளிகையில் ஆதித்த கரிகாலனுடன் சேர்ந்து ஆபத்துகளும், மர்மங்களும் வளர்கின்றன. பல்வேறு சதிகளை முறியடித்து ஆதித்த கரிகாலன் திருமணம் புரிந்தானா? சோழர்கள் அரியணை ஏறக்கூடாது என்று கொலை செய்த கொலையாளர்களை மீறி, கூடலழகி தனது மணவாளனுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றினாளா?எனக் காண வாசிப்போம் கூடலழகி பாகம் 2.

Languageதமிழ்
Release dateMar 30, 2024
ISBN6580132110712
Koodalazhagi - Part 2

Read more from Kalachakram Narasimha

Related to Koodalazhagi - Part 2

Related ebooks

Related categories

Reviews for Koodalazhagi - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodalazhagi - Part 2 - Kalachakram Narasimha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூடலழகி - பாகம் 2

    (தொகுதி 2, 3, 4 அடங்கியது)

    Koodalazhagi - Part 2

    Author:

    காலச்சக்கரம் நரசிம்மா

    Kalachakram Narasimha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalachakram-narasimha

    பொருளடக்கம்

    முன்னுரை

    முதல் பாகம் கதைச் சுருக்கம்

    1. என்ன பார்வை உந்தன் பார்வை!

    2. கூடிடு கூடலி

    3. வீணையடி நீ எனக்கு!

    4. பிரணய கலவரம்

    5. மாருதத்தில் கணவன் அருவியில் மனைவி!

    6. மனம் என்னும் மாயக் கண்ணாடி!

    7. இரு மனம்! ஒரு மணம்

    8. பாலாறு பாலூட்ட, தென்பெண்ணை தாலாட்ட

    9. தோணியில் ஒரு ருத்ர தாண்டவம்

    10. கன்னல் வந்தாள்! கன்னம் வைத்தான்

    11. பத்ம வியூகம்

    12. குன்றத்தில் களேபரம்

    13. பறக்கும் பாவை!

    14. பைம்பொழிலின் சபதம்

    15. காலனை மீட்ட காரிகை

    16. மகர யாழில் ஒரு பத்திரம்

    17. இந்த நாடகம் அந்த மேடையில்

    18. திருமுக்கூடல் ஆதூர சாலை

    19. மலையருவியில் யாழ் மனிதன்

    20. நாத ஆதூரம்

    21. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து

    22. ஜல சமாதி

    23. யாழ் மனிதனைத் தேடி!

    24. கடம்ப வனத்தில் வாசம்

    25. யாழ் பதக்கம்

    26. காத்திருந்த நெஞ்சங்கள்

    27. யாழ்முறி பண்

    28. வேரிமயிர் பொங்க

    29. என்னை நான் சந்தித்தேன்

    30. பாவை நோன்பு

    31. படைவீட்டு தம்புராட்டி

    32. ஆணிவேர்

    33. சித்திரபாவையின் விசித்திர பார்வை

    34. வடக்கிலிருந்து

    35. ஔஷத பொட்டணத்தில் ஓர் ரகசியம்.

    36. வானவரம்பனின் வாக்குறுதி

    37. அறுபது வருட சீர்வரிசை

    38. மாலையில் ஒலித்த மர்ம பாடல்

    39. சொக்கர் பாணம்

    40. யானே அரசன், யானே கள்வன்

    கூடலழகி - பாகம் மூன்று

    41. கூட பிறந்தவளே கூட வா!

    42. வேதாளம் மீண்டும்...

    43. பொன் மாளிகையில் ஒரு வைர நெஞ்சம்

    44. கதிர்குலத்துக்கு ஓர் வாரிசு

    45. நிலமென்னும் நல்லாள் நகும்

    46. கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும்

    47. இனி வானமே எல்லை

    48. கொலையுண்டவன் விட்ட சவால்

    49. என்னை நோக்கி பாயும் அம்பு

    50. அபயம் அளித்த அவமுக்தம்

    கூடலழகி - இறுதி பாகம் நான்கு

    51. இலக்கை நோக்கி ஓர் அம்பு

    52. நரேந்திரன் கேட்ட பரிசு

    53. புள்ளி வைக்கிறாள்

    54. நியாயம் கிடைத்தது

    55. பாணர்களின் வஞ்சம்

    முன்னுரை

    "எப்போது ஒரு படைப்பு, அதனை படைத்தவரை காட்டிலும் புகழ் பெறுகிறதோ, அப்போது, அந்த எழுத்தாளருக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த படைப்பே அவருக்கு ஒரு விளம்பரத்தை தரும். ஆங்கிலத்தில் ‘Call Card’ என்பார்கள்.

    எனக்கு அத்திமலைத்தேவனும், கூடலழகியும், அத்தகைய ஒரு ‘Call Card’ ஆக விளங்குகின்றன. அத்திமலைத்தேவனை படித்துவிட்டு வெகுஜன பத்திரிகைகள் என்னை நாடி வர, கல்கியில் கூடலழகி என்னும் சரித்திர தொடரை எழுத வாய்ப்பு கிடைத்தது. தெய்வீக ஓவியங்களுடன், அதை சிலாகித்துப் படித்தவர்கள் அநேகம்.

    எனக்கு கூட ‘கூடலழகி’ புதினத்தை ஆர்ட் பேப்பரில், அற்புதமான ஓவியங்களுடன், கண்கவரும் விதத்தில் நூலை கொண்டு வந்தது குறித்து ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் குற்ற உணர்வு இதுவரையில் எனது நூல்கள் அனைத்துமே மிகவும் சாதாரணமாகத்தான் அச்சிடப்பட்டு, வாசகர்களை அடைந்துள்ளன.

    ஓவியர் தெய்வா, உங்கள் ‘கூடலழகி’ தொடருக்கு அற்புதமாக ஓவியம் வரைந்துள்ளார். கல்கி ரமணன் அவர்களும் நல்ல உயர்ந்த பேப்பரில் அந்த ஓவியங்களை அச்சிட வேண்டும் என்றார். தெய்வாவின் தெய்வீ ஓவியங்களுக்கு பெருமை சேர்க்கவே ஆர்ட்பேப்பரில் அச்சடித்தோம். உங்கள் அத்திமலைத் தேவன் மற்றும் இதர நாவல்கள் சாதாரண காகிதத்தில் ஆர்ட்படம் எதுவுமின்றிதான் அச்சிடப்பட்டன. கூடலழகி மட்டும் முழுக்க முழுக்க தெய்வாவின் ஓவியங்களை பெருமைப்படுத்துவதற்கே, அப்படி அச்சிடப்பட்டது. என்றார்.

    இதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. இதுவரை எனது புதினங்கள் எதுவுமே பகட்டும், படாடோபமும் கொண்டிருக்கவில்லை. இனியும் இருக்காது. எனது நூலின் காகிதம் சுமக்கும் விஷயங்களை பற்றித்தான் நான் கவலைப்படுவேனே தவிர, காகிதத்தின் தரம் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை.

    எதற்கு இந்த விளக்கம்?

    கூடலழகி முதல் பாகத்தை பார்த்துவிட்டு, இவருக்கு என்ன தான் ஒரு கல்கி என்கிற எண்ணமா? ஆர்ட் பேப்பரில் இப்படி ஒரு பகட்டுடன் நூல் கொண்டு வர வேண்டுமா என்று சிலர் கூறியதாக செவியில் விழுந்ததால், இந்த விளக்கம். முகநூலில் என்னை பின்தொடர்பவர்கள், அறிவார்கள். நான் என்னை தமிழ் நாவல் ஆசிரியன் என்று கூறிக்கொள்வதை விட, தி ஹிந்து பத்திரிகையாளனாகத்தான் என்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன். எனவே, கல்கியாக மட்டுமல்ல, என்னை நான் தமிழ் நாவலாசிரியனாகவே நினைத்துக் கொள்ளவில்லை.

    எனது தாய் நாவலாசியர் கமலா சடகோபன், தந்தை இயக்குநர், நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எனது ஆசான் கவிஞர் வாலி அவர்கள் ஆகியோர் வழியனுப்ப, சரித்திர விண்வெளியை நோக்கி செலுத்தப்பட்ட ஏவுகணையாக புறப்பட்டேன்.

    என்னை ஏவிவிட்டவர்கள் என்னிடம் எதை எதிர்பார்த்தார்களோ, அதை செய்துக்கொண்டு இருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

    புகுந்த வீட்டில் அல்லல்படும் ஒரு பெண், என்றாவது பிறந்த வீட்டிற்கு வந்து, உரிமையுடன் அப்பாடி என்று கட்டிலில் சாய்ந்து நிம்மதியாக உறங்குவது போன்று, தி ஹிந்து பணி மற்றும் இதர எழுத்து பணிகளின் நடுவே, நூலை வெளியிடுகிறேனோ இல்லையோ, சென்று டாக்டர் வானதி ராமநாதனின் முன்பாக அமர்ந்து, ஒரு தாயை போன்று, அவர், காபி வேண்டுமா, தேநீர் வேண்டுமா என்று கேட்கும்போது, அப்பாடி என்றுதான் உணர்வேன். பிறந்த வீட்டின் பரிவு எனக்கு அங்கே கிடைக்கும்.

    வானதியில் பணிபுரியும் சகோதரிகள் வாங்க! புத்தகம் பிரமாதமா போகுது என்று சொல்லும்போது, நோபல் பரிசே கிடைத்தது போல இருக்கும். அனைவருமே எனது நல விரும்பிகள்.

    அத்திமலைத்தேவன் ஐந்து பாகங்களை எழுதும்வரை ஒரு பகுதிநேர எழுத்தாளனாகத்தான் இருந்தேன். முழுநேர ஆங்கில பத்திரிகையாளனாக, நேரம் கிடைத்த பொழுதினில், எனது பணியின் அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு வடிகாலாகத்தான் எழுத்து துறையை எண்ணியிருந்தேன். பெரிய எழுத்தாளனாக வளைய வர வேண்டும், இலக்கியவாதியாக திகழ வேண்டும், எழுத்தை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்றல்லாம் இம்மியும் எண்ணங்கள் இல்லை. பணம்தான் குறிக்கோள் என்றால், தந்தை சித்ராலயா கோபுவின் உதவியோடு இளம்வயதிலேயே திரைப்படத்துறையில் நுழைந்திருக்கலாம். திரைப்படத்துறை கொடுக்காத புகழையும், பணத்தையுமா இலக்கிய துறை தந்துவிடப் போகிறது?

    2008-ஆம் ஆண்டு வரை எனக்கு எழுதும் எண்ணமே இல்லை. சின்னத்திரை தொடர்களுக்கு, எனது அலுவலக பணிக்கு ஊறுவிளைவிக்காதபடி அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று எப்போது புதினங்களை எழுதத் தொடங்கினேன்?

    அம்மா கமலா சடகோபன்தான் டிவி தொடர்களை எழுதினால் உனக்கு எவ்வித திருப்தியும் கிடைக்காது. புதினங்களை எழுத தொடங்கு என்று ஆலோசனை வழங்கினார். அப்போதுகூட எனக்கு எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவில்லை. ஒரு நாள் அலுவலகம் செல்லும் வழியில் அம்மாவின் புதினத்தை கொடுக்கும்போது, அப்பா, அம்மா இருவருமே எழுத்தாளர்கள்! அவர்களுக்கு வாரிசு இல்லையென்றால் எப்படி! உடனே ஒரு புதினத்தை எழுதி தா! என்று பெரியவர் வானதி திருநாவுக்கரசு உரிமையுடன் அன்பு கட்டளை இட, ஒரு அரசியல் கிசுகிசுவை புதினமாக எழுதினேன். அதுதான் எனது முதல் புதினம், காலச்சக்கரம்.

    அதன்பின் ரங்கராட்டினம், சங்கதாரா, பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா என்று பல புதினங்களை எழுதினாலும், எனது அடையாளமாகி போன புதினம், அத்திமலைத்தேவன். அத்திமலைத்தேவனின் ஐந்து பாகங்களையும் படித்து, உணர்ச்சி அடைந்து வாசகர்கள் இன்னமும் எனக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எனது மகன்கள், மகள்கள், உங்களது அத்திமலைத்தேவனை படித்துவிட்டு, மலைத்து போனார்கள். நமது சரித்திரங்களில் இவ்வளவு இருக்கின்றதா? எங்களுக்கு தெரியாமல் போனதே! என்று மீண்டும் மீண்டும் படிக்கின்றனர், என்று கூறியபோது, என் மனதில் உற்சாகம்.

    இளைய தலைமுறையினரை சரித்திரத்தின்பால் திருப்பி விட்டுள்ளோம் என்கிற பெருமை எனக்குப் போதாதா? இளைய தலைமுறையினரை குற்றம் சொல்லி பயனில்லை! காரணம், அவர்களிடம் தகுந்த விளக்கங்களுடன் சம்பவங்களை விவரித்தால், அவற்றினை ஏற்றுக்கொள்வார்கள். நாம்தான் அவர்களிடம் விளக்க தவறிவிட்டோம். சரியான லாஜிக்கை விளக்குவதற்கு நமக்கு தெரியவில்லை. அதனால், நமது இயலாமையை மறைக்க, அவர்களை போராளிகள் என்று நாமே முத்திரை குத்திவிட, அவர்களும் அதனை பற்றிக்கொள்கிறார்கள்.

    அத்திமலைத்தேவனில் நான் எழுதிய எல்லா சம்பவங்களுக்கும் ஆதார குறிப்புகளை தந்திருக்கிறேன். ஐயம் இருப்பவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து விளக்கங்களை பெற்று வருகிறார்கள்.

    அத்திமலைத்தேவன் என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று மேடையேற்றி உள்ளது. டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், பத்திரிகை பேட்டிகள் என்று பெரும் பரபரப்பிற்கு காரணமாக இருந்திருக்கிறது அத்திமலைத்தேவன்.

    குங்குமம் கே.என். சிவராமன் அத்திமலைத்தேவனை படித்துவிட்டு, குங்குமத்தில், என்னை பற்றி வெளியிட்ட கட்டுரை மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டு என்னை வெகுஜன பத்திரிகை உலகில் கொண்டு நிறுத்தியது. குமுதத்தில், மூவிடத்து வானரதம் கல்கியில் கூடலழகி, தொடர்கதைகளுக்காகவே தொடங்கப்பட்ட பிஞ்ஜ் செயலியில், மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி, மின்கைத்தடி வலையதளத்தில் பத்து மலை பந்தம்" என்று தொடர்களை எழுதி வருகிறேன்.

    ஆக,

    அத்திமலைத்தேவன் என்னை முழுநேர எழுத்தாளராக்கி விட்டான். நான் கனவிலும் நினைத்து பார்க்காத வாய்ப்பையும் நல்கிவிட்டான். பொன்னியின் செல்வன் வடித்த அமரர் கல்கியின் ராஜபாட்டையில். கூடலழகியை தொடராக வெளிவர செய்து, என்னை பெரிய நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டான்.

    கல்கி என்னும் சரித்திர கோட்டையில், சக்கரவர்த்தியாக கோலோச்சிய அமரர் கல்கி, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என்று பல உயர்ந்த கோபுரங்களை கட்டிவிட்டுச் சென்றார். அந்தக் கோட்டையினுள் என்னை அனுமதித்து, கூடலழகி என்கிற சிறு கோபுரத்தை எழுப்புவதற்கு அனுமதித்த, திரு. கல்கி ராஜேந்திரன், மற்றும் அவரது பெண்கள் மற்றும் மகன் ஆகியோருக்கு தலையல்லால் கைமாறிலனே.

    கல்கி அச்சிதழில் தொடராகத் தொடங்கிய கூடலழகி, பிறகு மின்னிதழிலும் தொடர்ந்தது. ஆனால் எனது வாசகர்கள் பெரும்பான்மையினர், உங்கள் வேகமான எழுத்துகளுக்கும், பரபரப்பு சம்பவங்களுக்கும், தொடர்கதை பொருத்தமாக இருக்காது. தயை கூர்ந்து நூல்களாகவே எழுதுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். குறிப்பாக முதிய வாசகர்கள், தங்களுக்கு மின்னிதழில் படிக்க இயலாது என்று கூறிய காரணத்தால், முதல் பாகத்தை கல்கியில் முடித்துக்கொண்டு, இரண்டாவது பாகத்தை நூலாகவே வெளியிடுகிறேன். பலர், தெய்வாவின் ஓவியங்களோடு நூலை கொண்டுவர யோசனை கூறியதால், முதல் பாகம் தெய்வாவின் தெய்வீக ஓவியங்களோடு வெளிவந்துள்ளது. இதனால் நூல் தயாரிப்புக்கு அதிகச் செலவானது.

    பொன்னியின் செல்வனுக்கு நிகராக மிகவும் உயர்ந்த ஆர்ட் பேப்பரில், அற்புத ஓவியங்களோடு, கூடலழகி முதல் பாகம் வெளிவந்துள்ளது. கூடலழகி நூல் இவ்வளவு அழகாக வந்திருப்பதற்கு காரணம். இவர்களுக்கு எங்ஙனம் நன்றி சொல்ல போகிறேன்? மேலும், திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கள், நான் நாவலை எழுதும்போதே, சமூக ஊடகங்களை, பராக்... பராக்... காலச்சக்கரத்தின் புதிய புதினம் வருகிறது என்று அறிவித்து விடுவார். அவருக்கு எனது சிறப்பு நன்றிகள். மற்றும் கூடலழகி முதல் பாகத்தை வாங்கி பாராட்டுதல்களை தெரிவித்த வாசகர்களுக்கு எனது நன்றி.

    கொரோனாவின் கோர தாண்டவத்தால், எனது ஆய்வு பயணங்களை செய்ய இயலவில்லை. எனவே இரண்டாம் பாகம் சற்று தாமதமானது. இதற்காக வாசகர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    மேலும் மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி, பத்து மலை பந்தம், என்ற தொடர்களை வேறு எழுதி வந்ததால், கூடலழகியை நிறைவு செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

    ஆதித்த கரிகாலன் என்னை பெரிய அளவில் பாதித்துவிட்டான் என்பதை நன்கு உணர்கிறேன். சங்கதாராவில் அவனது கொலையை பற்றி மட்டும் விவரித்தேன். அத்திமலைத்தேவனில் அவனுடைய காஞ்சி வாசத்தை பற்றி மட்டும் எழுதினேன். இதோ கூடலழகியில் அவன் பிறந்தது முதல், பால்யம், குமார பருவம், வாலிப பருவம் என்று அவனது மரணம் வரை எழுதியுள்ளேன்...

    இரண்டாம் பாகத்தில், பல அதிர்ச்சி தரும் ஆதாரங்களை வழங்க இருக்கிறேன். ஆதித்த கரிகாலனுக்கு ஒரு மனைவி இருந்திருக்கிறாள். அவனுக்கு ஒரு ஆண் மகனும் பிறந்தது.

    முதல் பாகத்தின் முடிவில், பராந்தகனின் இறப்பு செய்தி வர, வானவரம்பனின் மனைவி பைம்பொழில், இனி ஆதித்த கரிகாலன் மலையமான் மாளிகையான மலையமாருதத்தில் வளரக் கூடாது. அவனை சோழ நாட்டிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகிறாள்.

    வானவரம்பனோ அவனை மீண்டும் அழைத்துவந்து திருக்கோவலூர் மனமாசு கெடிகையில் பகிரண்ட சித்தர் பொறுப்பில் விட்டு, அவனது மனநோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறான். மலையமானும் அதற்கு ஆதரவு தர, அவனை மனமாசு கெடிகையில் அனுமதிக்கும் எண்ணத்துடன் அனைவரும் சோழ பழையாறைக்கு செல்கிறார்கள். பராந்தகனின் இறுதி சடங்கில் கலந்துகொள்கிறார்கள். பராந்தகன் இறப்பதற்கு முன்பாக, தனது கையை வானவன்மாதேவியின் பக்கமாக சுட்டிக் காட்டிவிட்டு பிறகு இறப்பதால், இறுதிச்சடங்கில் அதைப்பற்றியே அனைவரும் விவாதிக்கிறார்கள்.

    அவரவர் எண்ணப்படி அதற்கு ஒரு காரணத்தை கற்பிக்க, அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் மட்டும் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்கிறாள்.

    வாசகர்கள், நலவிரும்பிகள் அனைவருக்கும் நன்றி.

    இனி இரண்டாம் பாகம் தொடக்கம்...

    ‘காலச்சக்கரம்’ நரசிம்மா.

    98417 61552

    tanthehindu@gmail.com

    முதல் பாகம் கதைச் சுருக்கம்

    சுந்தர சோழரின் மனைவி வானவன்மாதேவி ஆதித்த கரிகாலனை கர்ப்பத்தில் சுமந்திருக்க, மகப்பேறுக்கு தந்தை மலையமான் மாளிகைக்கு வருகிறார். சிறுவயதிலேயே தாயையும், நான்கு மூத்த சகோதரர்களை போரிலும் இழந்திருந்த வானவன்மாதேவியை இளைய தாய் அமுது முழுதுடையாளும், அவள் மகன் வானவரம்பனும், கண்ணை இமை காப்பது போன்று காக்கிறார்கள். மலையமானின் ஆசை தங்கை பெரிய நாயகி என்கிற மலையமநாட்டு தேவி, அவர்களின் பரம்பரை வைரியான ஓமயிந்தன் முந்நூற்றுவன், கரண மாணிக்க சம்புவராயரை காதலித்து அவனுடன் ஓடிச்செல்ல, அவளை தலைமுழுகி விடுகிறார் மலையமான்.

    தனது மாமன் மகள் பைம்பொழிலை வானவரம்பன் மணக்க, அவளது தோழி யாழ் மீட்டும் அர்களாவும், தந்தை பவமான பண்டிதருடன் மலையமாருதத்தில் வசிக்கிறார்கள்.

    ஆதித்த கரிகாலன் பிறக்கும்போது பல துர் சகுனங்கள் தோன்றுகின்றன. அவர்களது குலதெய்வ விராட்டேஸ்வர்கோவில் கோபுரம் இடிதாக்கி சேதமடைகிறது. ஆதித்த கரிகாலனின் ஜாதக சுவடியின்படி அவன் கெடிலத்தை கடந்து பழையாறைக்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் அபிஷேக நம்பியும், அவர்களது ஆலோசகர் பகிரண்ட சித்தரும் கூற, ஆதித்த கரிகாலனை திருக்கோவலூரிலேயே வளர்க்க முடிவு செய்கிறார்கள்.

    மலையமான் மாளிகையில், ஆதித்த கரிகாலனுடன் சேர்ந்து ஆபத்துகளும், மர்மங்களும் வளருகின்றன. மண்டை யாழ் மீட்டும் ஒருவன் மர்மமான முறையில் மலையமாருதத்தை சுற்றி வர, ஆதித்த கரிகாலன் பிறந்த சேதியை பழையாறைக்கு எடுத்துச்சென்ற நீலவண்ணன், தோழி பூம்பாவை, மற்றும் நான்கு காவலர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.

    ஆதித்த கரிகாலனுக்கு, மனரீதியாக பிரச்சனைகள் எழுகின்றன. அடிக்கடி மண்டை யாழின் இசையை கேட்கிறான். உறக்கத்தில் நடக்கும் நோய் அவனைப் பிடித்து வாட்டுகிறது.

    முதலில் அவனது பாதுகாப்பில் அக்கறை காட்டும் பைம்பொழில் அவனது நடவடிக்கைகளால் சிறிது சிறிதாக மனம் மாறுகிறாள். அவனால் தனக்கு பிறந்த மகள் கன்னலுக்கு ஆபத்து என்று நினைக்கிறாள்.

    விராட்டேஸ்வரர் கோவிலில் திருப்பதிகங்கள் பாடிய வல்லவன், அவனது பாட்டி தயாபரி மற்றும் அமராபரணன் என்கிற இளைஞன் மூவரையும் ஆதித்த கரிகாலனுக்கு துணைவர்களாக நியமிக்கிறார் மலையமான். அமராபரணனை ஆதித்த கரிகாலனின் ஆசானாகவும், தயாபரியை சேடியாகவும், வல்லவனை விளையாட்டுத் தோழனாகவும் வைக்கிறார்.

    விளையாடும்போது காணாமல் போன ஆதித்த கரிகாலன் வைணவ ஆசான் நாதமுனிகளால் பண்ணுருட்டி காட்டில், வனமகாதேவி ஆலயத்தில் கண்டெடுக்கப்படுகிறான். அவனை தேடிச்சென்ற விளையாட்டு தோழன் வல்லவனை அவன் கொன்றுவிட்டதாக, மலையமாருதத்திற்கு சேதி வருகிறது. அவன் கொலை வெறி பிடித்தவன் என்கிற எண்ணம் மெதுவாக பைம்பொழிலுக்குத் தோன்ற, அவனை வெறுக்கிறாள்.

    உத்தமசீலன், ராஜாதித்யன், பராந்தகன் என்று சோழத்தில் மரணங்கள் தொடர, பராந்தகன் தகனத்துக்கு அனைவரும் பழையாறை செல்ல, பைம்பொழில், ஆதித்த கரிகாலனை மீண்டும் திருக்கோவலூர் அழைத்துச் செல்லக்கூடாது என்று கணவன் குடும்பத்தாரிடமும், வானவரம்பனிடமும், போர்க்கொடி உயர்த்துகிறாள்.

    இனி...

    1. என்ன பார்வை உந்தன் பார்வை!

    கிபி 950...

    சோழர்களின் குலதெய்வமான கதிரவன், தனது குலத்தில் தொடர்ந்து நடைபெறும் மரணங்களை தன்னால் தடுக்க இயலவில்லையே என்கிற குற்ற உணர்வுடன், சற்று முன்னதாகவே மறைந்து கொண்டிருந்தான்.

    பராந்தகரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டி, பழையாறு தென்தளிக்கு அப்பால் இருந்த நந்திமேட்டில் வைக்கப்பட்டிருந்தது. அளப்பரிய பல பெரிய சாதனைகளை செய்தவர், அந்த பொட்டல் காட்டில் விறகு மற்றும் சந்தன கட்டைகளின்மீது கிடந்தார்.

    போதும்! பூவுலகில் நான் அனுபவித்த சோகங்கள். துயரங்களில், மிகக்கொடியது புத்திர சோகம்! அதனை ஒருமுறை அல்ல, இருமுறை அனுபவித்து விட்டேன்! மரணம் ஒருவழியாக எனக்கு மனநிம்மதியை அளித்துவிட்டது, என்பதுபோலக் கிடந்தார், பராந்தகன்.

    அங்கு குழுமியிருந்தோர் பலரது மனதினில் எதிரொலித்து கொண்டிருந்தது ஒரு கேள்வி, இறப்பதற்கு முன்பாக எதனால் பராந்தகன், தனது பெயரன் சுந்தர சோழரின் மனைவி வானவன்மாதேவியை சுட்டி காட்டினார்? என்பதுதான், அந்த கேள்வி.

    இதென்ன சோழ நாட்டுக்கு வந்த கேடு! தந்தையின் முடிவை மூத்த மகனின் ஜாதக அமைப்புகளும், தாயின் அமைப்பை கடைக்குட்டி மகனின் ஜாதக அமைப்புகளும்தான் நிர்ணயிக்கும் என்று கூறுவார்கள். பராந்தகனாருக்கு முன்பாகவே, மூத்த மகன் ராஜாதித்யனும், கடைக்குட்டி மகன் உத்தம சீலனும், இறந்து போக, இப்போது யாருடைய ஜாதகம் அவரது முடிவை நிர்ணயம் செய்தது? மலையமான் கூற, அவரை கலக்கத்துடன் நோக்கினார், பழுவேட்டரையர்.

    முதல் முறை ஒரு துக்கம் நேர்ந்தால், அது சோகம்! இரண்டாவது முறையும் துக்கம் நேர்ந்தால் அது, தற்செயல். ஆனால் ஒரு குடும்பத்தில் தொடர்ந்து துக்கங்கள் நேர்ந்து கொண்டிருந்தால், எங்கோ யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியுள்ளது!

    பழுவேட்டரையர் கூற, அருகில் நின்று அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த, வானவரம்பனின் சிந்தனைகள் மீண்டும் திருக்கோவலூரை நோக்கி நழுவியது. மலையமானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் கிடையாது. எல்லா நாடுகளுடனும் நல்லுறவுதான் வைத்திருக்கிறார், அவனுடைய தந்தை... ஆனால் தங்களது வலிமையால் சோழர்கள், பல எதிரிகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களில் யாரோதான் சோழர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இவனது மருமகன் ஆதித்த கரிகாலனுக்கு அபாயங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ‘யாழ் மனிதன் அவனையே சுற்றி வருகிறான். அதோடு அவனை பண்ணுருட்டி வனமகாதேவி ஆலயத்திற்கும் கடத்தி சென்றிருக்கிறான். நல்ல வேளையாக, வைணவ ஆசான் நாதமுனிகள் அவனை கண்டெடுத்தார். இனி காலதாமதம் செய்தால், சோழ குடும்பத்தில் இன்னும் பல உயிர்கள் பறிபோகலாம். நாம் இன்னும் விரைந்து செயல்பட்டு சோழ குடும்பத்திற்கு கெடுதிகளை விளைவிக்கும் அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டி அவர்களை வேரறுக்க வேண்டும்,’ வானவரம்பன் மனதினுள் தீர்மானித்தான்.

    ஆனால் ஒவ்வொரு முறை இவன் அவர்களை நெருங்கும்போது, புதிய குழப்பங்களும், கலவரங்களையும், நிகழ்த்தி, இவன் அவர்களை பின்தொடர இயலாதவாறு செய்து விடுகிறார்கள். இவர்களுடைய மலையமாருதம் மாளிகையில் நிகழ்ந்த கொலைகளில் ஒன்றைக்கூட இவர்களால் தவிர்க்க முடியவில்லை. அதற்கு காரணகர்த்தர்களையும் பிடிக்க இயலவில்லை.

    பூம்... பூம்... பூம்...

    பஞ்சவன் சங்கு ஒலிக்கப்பட, வானவரம்பனின் கவனம் சிதறியது.

    பராந்தகனின் நான்கு புதல்வர்களில் எஞ்சியிருந்த இரண்டு மகன்கள். கண்டராதித்தனும், அரிஞ்சயனும் முடிகொண்டான் ஆறு, பழையாறு ஆகிய இரு ஆறுகளிலும் முங்கி எழுந்தவர்கள், நந்தி மேட்டில் ஏறி தகன மேடையை நோக்கி நடந்தார்கள், கையில் தீப்பந்தத்துடன், மன்னரின் சிதையை நோக்கி நடந்தான் கண்டராதித்தன்.

    சிவனருட்செல்வரான கண்டராதித்யன்தான் சோழ மன்னன், என்பதை நினைத்த மாத்திரத்தில் பழுவேட்டரையரின் அடிவயிற்றில் அமிலம் பாய்ந்தது. இன்னது என்று கூற இயலாதபடி ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டது. தன்னையும் அறியாமல் முகத்தை அவர் திருப்பிக்கொள்ள, அவரது பார்வை மலையமானின் கண்களை நோக்கின.

    சோழ அரியணையின் ஆன்மா இப்படி ஒரு திருவிளையாடலை அரங்கேற்றுகிறது. ராஜாதித்யனை அரியணைக்காக தயார்படுத்தினார், பராந்தகனார். ராஜாதித்யர் போர்கலைகளில் வல்லவராக திகழ்ந்தார். பராந்தகனார் நிறைவேற்றாமல் விட்ட பணிகளை ராஜாதித்யர் செய்வார் என்று நாம் நினைத்திருக்க, அவர் தக்கன் ஓலத்தில் (தக்கோலம்) வீர மரணம் அடைந்தார். நாம் சற்றும் எதிர்பார்த்திராத, கண்டராதித்தர்தான் அரியணை ஏற போகிறார்... மலையமான் கூற, ஒருவித சலிப்புடன், மீண்டும் தகன மேடையை நோக்கினார் பழுவேட்டரையர்.

    கண்டராதித்தனாவது மன்னராக நிலைக்கட்டும். உத்தமசீலன், ராஜாதித்யன், பராந்தகனார் என்று வரிசையாக நந்தி மேட்டுக்கு தொடர்ந்து வந்து, மனம் மரத்து போய்விட்டது பழுவேட்டரையர் கூறினார்.

    கண்டராதித்தன் சிதைக்கு தீ வைக்க, அந்த மாலை நேர காற்றில் தீ கொழுந்துவிட்டெறிந்து, பராந்தகனின் பூத உடலை பஸ்பம் செய்யத் தொடங்கியது. மனநிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்த பராந்தகனுக்கு ஒரு வழியாக பரிபூரண அமைதி கிட்டியது.

    சிதையிலிருந்து சுருள் சுருளாக புறப்பட்ட புகை, விண்ணை நோக்கி எழும்ப அதனை அனைவருமே கண்களில் கண்ணீருடன் நோக்கிக்கொண்டிருந்தனர்.

    சிதைக்கு தீ மூட்டிய இளவரசர் கண்டராதித்தன். கையில் பந்தத்துடன் அதனையே வெறித்துப் பார்த்தபடி நிற்க, உடன் அரிஞ்சயன் மேலே எழும்பிச்சென்ற புகையை பார்த்தபடி நின்றான். சுழன்று உயர்ந்த புகை மூட்டத்தின் இடையே, தந்தை தென்படுகிறாரா என்பதை பார்ப்பதுபோல தோன்றியது, அவன் புகை மூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

    பராந்தகனின் சிதை எரிந்து கொண்டிருக்க, பராந்தக சக்கரவர்த்தியின் புகழ் ஓங்குக என்று அனைவரும் கூறிவிட்டு, நீராடுவதற்காக ஆற்றை நோக்கி நடந்தனர்.

    பழையாறையின் நால்பிரிவுகளான வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளியில், தென்தளி அருகே உள்ள முடிகொண்டான் ஆற்றுக்கும், பழையாறுக்கும் இடையே இயற்கையே அமைத்து கொடுத்த ‘நந்தி மேடு’1 என்கிற திட்டில்தான் சோழ அரச குடும்பத்தின் அந்திம கிரியைகள் நடைபெறுவது வழக்கம். இங்கிருந்து தொடங்கி, மறைந்த அரசர்களின் பள்ளிப்படைகள் அமைக்கப்படும்.

    பொதுவாக, மன்னர்கள் இறந்த இடங்கள் அல்லது அவர்கள் கடைசியாக வசித்த இடங்களில்தான் அவர்களுக்கு பள்ளிப்படைகள்² அமைக்கப்படும்.

    அரச குடும்பத்து பெண்களும், பராந்தகனின் தகனத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அமருவதற்கென்று தனியாகப் பந்தல் போடப்பட்டு அதில், இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அமருவதற்கென்று இருக்கைகள் போடப்பட்டிருக்க, பராந்தகனின் மனைவி கோக்கிழானடிகள் மையத்தில் அமர்ந்திருந்தாள். அவளது வலப்புறமாக அரிஞ்சயனின் நாலு மனைவியர், வீமன் குந்தவை, பூதி ஆதி பிடாரி, கோதை பிராட்டி, மற்றும் வைதும்பர கல்யாணி ஆகியோர் அமர்ந்திருக்க, கோக்கிழான் இடப்புறத்தில், அற்புதவல்லி, செம்பியன்மாதேவி, வானவன்மாதேவி, அமுது முழுதுடையாள் மற்றும் அவளது மருமகள் பைம்பொழில் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

    அனைவரது பார்வையும் தகன மேடையில் கொழுந்து விட்டெரியும், பராந்தகனின் சிதையிலேயே பதிந்திருக்க அரிஞ்சயனின் மனைவிகளில் கடையவள், கல்யாணி, எரியும் சிதையையும், கோக்கிழானடிகளின் இடப்புறமாக அமர்ந்திருந்த வானவன்மாதேவியையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.

    சற்று முன்னே சாய்ந்து, கல்யாணி வானவன்மாதேவியை தனது கண்களால் உறுத்துப்பார்க்க, வானவன்மாதேவியும் தற்செயலாக அவளது கண்களை நோக்கியிருந்தாள்! இரண்டு, மூன்று முறை தனது மாமியார் கல்யாணி தன்னையே வெறித்து நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும், வானவன்மாதேவிக்கு மனதில் ஒருவித நெருடல் ஏற்பட்டது.

    எதற்காக தனது மாமியார் இவளையே வெறித்துக் கொண்டிருக்கிறார்? இப்போதுதான் என்று இல்லை. பராந்தகனார் மரண படுக்கையில் இருந்தபோது, அவரது ஆன்மா நிம்மதியுடன் பிரிய வேண்டும் என்பதற்காக கல்யாணி வீணையையும், இவள் மகர யாழையும் இசைத்தார்களே. அப்போது மன்னர், இவளை சுட்டிக்காட்டியபடி உயிரை விட்டாரே! அது முதலாகதான் கல்யாணி இவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்! கல்யாணி மட்டுமில்லை. அரச குடும்பத்தை சேர்ந்த பலரும், அவ்வப்போது இவளுக்கு தெரியாமல் இவளை வெறித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ஆனால் மற்றவர்கள் இவளை வெறிப்பதற்கும், கல்யாணி இவளை வெறிப்பதற்கும், வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இவள் அறியாவண்ணம், இவளது முதுகுக்கு பின்பாகத்தான் தங்களது பார்வைகளால் இவளை துளைக்கின்றனர். ஆனால், கல்யாணியோ இவள் கவனிப்பதைகூட பொருட்படுத்தாமல், இவளையே வெறிக்கிறாள்.

    ‘எதற்கு மாமி என்னை இப்படி வெறிக்கின்றீர்?’ என்று அவளிடமே கேட்டுவிடலாமா என்றுகூட நினைத்தாள். ஆனால் அனைவரும் துயர்பட்டுக் கொண்டிருக்கும் அந்த மாலை வேளையில், ஈமக்கிரியைகள் நடக்கும்போது பிரச்சனைகள் வேண்டாம் என்று வாளாயிருந்து விட்டாள் வானவன்மாதேவி.

    தகனம் முடிந்தது

    நந்தி மேடு, பம்பைப்படையூர்³ பகுதியை சேர்ந்திருந்ததால், தகனத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும், பம்பைப்படையூர் தலைவன், செண்பக ஜெகநாதன் செய்திருந்தான்.

    பொற் குடங்களில் பராந்தகரின் அஸ்தியை சேகரித்த கண்டராதித்தரும், அரிஞ்சயனும், அதனை ஆற்றில் கரைத்துவிட்டு, நீராடுவதற்காக, நந்தி திட்டின் வடக்கே ஓடிய பழையாற்றை நோக்கி நடக்க, அரச குடும்பத்து பெண்கள், நந்திதிட்டின் தெற்காக ஓடிய முடிகொண்டான் ஆற்றை நோக்கி நடந்தனர்.

    கோக்கிழானடிகளும், மற்ற அந்தப்புரப் பெண்களும் முடிகொண்டான் ஆற்றை நோக்கி நடக்க, அவர்கள் பின்பாக வானவன்மாதேவியும், பராந்தகனின் கடைக்குட்டி மகன், உத்தம சீலனின் மனைவி அற்புதவல்லியும், வானவரம்பனின் மனைவி பைம்பொழிலும் நடந்தார்கள்.

    அரிஞ்சயரின் மனைவிகள் வீமன் குந்தவை, பூதி ஆதிபிடாரி, கோதை பிடாரி மற்றும் வைதும்ப கல்யாணி என்று அரண்மனை அந்தப்புரங்களில் அரசிகளுக்கும், இளவரசிகளுக்கும் பஞ்சமில்லை.

    இளம் வயதிலேயே கணவன் உத்தம சீலனை இழந்து தனித்திருந்த அற்புதவல்லியின் மீது அதிக அனுதாபம் கொண்டிருந்தாள் வானவன்மாதேவி. அற்புதவல்லியின் மீது அவள் கொண்டிருந்த அனுதாபங்கள் அனைத்தும், நட்பாக மாற, இருவரிடையே ஒரு நெருக்கம் உண்டாகியிருந்தது.

    கோக்கிழானடிகள், அமுது முழுதுடையாள் போன்ற முதியவர்களிடம் இருந்து ஒதுங்கி, இளவயது நங்கையரான வானவன்மாதேவி, உத்தம சீலனின் மனைவி அற்புதவல்லி மற்றும் பைம்பொழில் ஆகியோர் முடிகொண்டான் ஆற்றின் ஒரு பக்கமாக இறங்கி நீராடத்தொடங்கினர்.

    நீராடும்போதும், கல்யாணியின் பார்வை வானவன்மாதேவியின் மீது அவ்வப்போது பதிந்துகொண்டுதான் இருந்தது.

    அற்புதவல்லி! உடனே திரும்பி நோக்காதே! தற்செயலாக காண்பது போன்று, சாடையாக திரும்பி பார்!! அரிஞ்சயரின் பிரிய மனைவியும் எனது மாமியாரான, கல்யாணி என்னையே வெறித்துக் கொண்டிருக்கிறார். கவனித்தாயா? வானவன்மாதேவி கூற, தற்செயலாக அந்த பக்கமாக திரும்புவது போன்று, கல்யாணியை நோக்கினாள், அற்புதவல்லி.

    எதற்காக என்னை இப்படி வெறிக்க வேண்டும்! பராந்தகனாரின் முன்பாக யாழை இசைத்த போதினில், அவர் என்னை சுட்டிக் காட்டியபடி இறந்து போனார் அல்லவா? அதன் பிறகுதான் கல்யாணி தேவியார் இப்படி என்னை வெறிக்கிறார்! யாராவது இப்படி தொடர்ந்து வெறித்துக்கொண்டே இருப்பார்களா? எனக்கு முதுகுத்தண்டு சில்லிட்டு போகிறது. பயமாக இருக்கிறது. கண்கள் என்னும் புலன்கள், இரவு வேளைகளில் காண்பதற்கு அச்சுறுத்தும். நேற்று முழுவதும், பராந்தகரின் உடல் அருகே அமர்ந்திருந்த போதும் இப்படித்தான் என்னை வெறித்துக்கொண்டே இருந்தார். மனதில் ஏதாவது இருந்தால், என்னிடம் கேட்டுவிடலாம் அல்லவா? எதற்காக கூரிய விழிகளால் எனது நெஞ்சை சுட்டெரிக்க வேண்டும்? சற்றே எரிச்சலுடன் கூறினாள் வானவன்மாதேவி.

    வானவன்மாதேவி, அற்புதவல்லியின் செவியை நோக்கி குனிந்து மெல்லிய குரலில் பேசினாலும், வானவன்மாதேவியின் பின்பாக நீராடி கொண்டிருந்த வானவரம்பனின் மனைவி பைம்பொழிலின் செவிகளில் அந்தப் பேச்சு தெளிவாகக் கேட்டது.

    ‘உன் மாமியார் கல்யாணி உன்னை வெறிப்பது இருக்கட்டும். உன் மகன் ஆதித்த கரிகாலனும், என்னை அப்படிதான் வெறிக்கிறான்! வெறிப்பது உங்கள் சோழ குடும்பத்தின் நோய் போலும்! ஒரு நாள் இரவு கணவனுக்காக எனது பள்ளியறையில் நான் காத்திருந்தபோது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் உனது மகன் ஆதித்த கரிகாலன் உறக்கத்தில் நடந்து வந்து அங்கே நிற்கிறான். கல்யாணியை போன்றே என்னை வெறித்து பார்த்தபடியே ஆடாமல் அசையாமல் நின்றான். அந்த இரவு வேளையில், தனியொருவளாக அறையில் இருந்த எனக்கு எப்படி இருக்கும்? அவனது பார்வைக்கு முன், கல்யாணியின் பார்வை ஒன்றுமில்லை!’ என்று வானவன்மாதேவியிடம் கூற துடித்த தனது நாவினை அடக்கிக்கொண்டாள் பைம்பொழில்.

    உண்மைதான்! நம்மையே வெறிக்கும் பார்வை நமது மனத்தில் அச்சத்தை உண்டாக்கும். இம்மாதிரி பார்வையை வைத்தே, மன்னர்கள் பல ஒற்றர்களிடம் இருந்து ரகசியங்களை கறந்துவிடுவார்கள். கண்கள் என்பவை நவரசத்தை சேமித்து வைத்திருக்கும் இரு கலயங்கள். காதல், கோபம், சிருங்காரம், ஹாஸ்யம், சாந்தம், சோகம், வீரம் என்று அவை வெளிப்படுத்தாத ரசம் கிடையாது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, சில பார்வைகள் நம்மை பீதியடைய செய்யும். அதுவும் இரவு வேளைகளில், சிலரது அமானுட பார்வை, அப்பப்பா! குலையே ஒடுங்கி போகும். பல இரவுகளில், இம்மாதிரி பார்வையை நான் நோக்கியிருக்கிறேன். அதுவும், உறக்கத்தில் நடப்பவர்கள் கண்திறந்து பார்க்கும் பார்வை... என்று சட்டென்று அவர்கள் இடையே புகுந்து தனது கருத்தை பதிவு செய்தாள் பைம்பொழில். பிறகு அதிகம் பேசிவிட்டோமோ என்கிற கவலையில், பேசுவதை சட்டென்று நிறுத்தினாள்.

    அவள் பார்வை தொலைவில், சிறுவன் ஆதித்த கரிகாலனின் கரத்தைப் பற்றியபடி, நீராடுவதற்குச் சென்றுக்கொண்டிருந்த வானவரம்பனின் மீது பதிந்தது.

    யாருடைய பார்வையை நீ அப்படி நோக்கினாய், பைம்பொழில்? திகைப்புடன் கேட்டாள் வானவன்மாதேவி.

    இல்லையக்கா! தமனகம் என்கிற ஒரு தாதி மலையமாருத மாளிகையில் இருக்கிறாள். இரவு வேளைகளில் அவளது பார்வை மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும். அதைத்தான் சொன்னேன்! என்ற பைம்பொழில் நீந்தியபடி சென்று தனது அத்தை அமுது முழுதுடையாளுடன் சேர்த்துக் கொண்டாள்.

    மீண்டும் அற்புதவல்லி அவளது தோளில் தட்டினாள்.

    பார் வானவன்மாதேவி! மீண்டும் உன்னை கல்யாணி தேவியார், வெறிக்கிறார் என்றதும், வானவன்மாதேவி அவள் பக்கமாக நோக்கினாள்.

    அற்புதவல்லி கூறியது உண்மைதான். வைதும்பர கல்யாணி தேவியார், தனது புஜங்களை தேய்த்தபடி, இவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவள் தன்னை கவனிப்பதை கண்டதும், தனது பார்வையை திருப்பிக்கொண்டு, வீமன் குந்தவையிடம் ஏதோ பேசுவதோபோல பாவனை செய்தாள்.

    ஆனால் வானவன்மாதேவி கல்யாணியின் பக்கமாக திரும்பும் போதெல்லாம், அவள் நீராடிக்கொண்டே தன்னை உறுத்து பார்ப்பதை கவனித்தாள் வானவன்மாதேவி.

    எதற்காக இந்த பார்வை? தனக்குள் அவள் முணுமுணுக்க, அற்புதவல்லி சிரித்தாள்...

    ஒருவேளை, அதி ரூபவதியான தனது பேரழகுக்கு சவால் விடும் அழகை கொண்டிருப்பதால், உன்னையே வெறிக்கிறாரோ? அற்புதவல்லி சிரித்தாள்!

    நகைச்சுவைக்கு கூட அப்படி சொல்லாதே? சோழ மண்டலத்தில் மட்டும் இல்லை. தட்சிண பிரதேசத்தில் உள்ள நாடுகளில் கூட, எனது மாமி கல்யாணி தேவியாருக்கு இணையான அழகை கொண்ட பெண் எவளுமில்லை. அவளது அழகில் மயங்கித்தானே, வைதும்பர நாட்டிற்கு சென்று, ஆலயத்தில் வீணையை மீட்டுவதற்காக சென்று கொண்டிருந்த கல்யாணி தேவியாரை கடத்தி வந்து மணம் புரிந்து கொண்டார், எனது மாமனார் அரிஞ்சயன். கல்யாணி தேவியாரின் அழகு அப்படியே எனது கணவர் சுந்தர சோழரிடமும், மகள் குந்தவையிடமும், பிரதிபலிக்கின்றதே! ஆதித்த கரிகாலன் மட்டும்தான் வடிவில் என்னை கொண்டிருக்கிறான் வானவன்மாதேவி கூற, அற்புதவல்லி புன்னகைத்தாள்.

    ஒரு பட்டத்து இளவரசனுக்கு, அழகும், கம்பீரத்தையும் விட, வீரமும், ராஜதந்திரமும் மிக அவசியம், மாதேவி! அது உன் மூத்த மகனுக்கு நிரம்பவே உள்ளது! அற்புதவல்லி கூற, சட்டென்று வானவன்மாதேவியின் நினைவுகள், முந்தைய இரவு, சிற்றன்னை அமுது முழுதுடையாள் கூறியிருந்த சில தகவல்களை பற்றி நினைத்துப் பார்த்தது.

    மகளே! சிறிது காலமாகவே பைம்பொழிலின் நடவடிக்கைகளில், மாற்றத்தை காண்கிறேன். இப்போதெல்லாம் அவள் நம் குடும்பத்தினருடன் சகஜமாக இருப்பதில்லை. ஆதித்த கரிகாலன் திருக்கோவலூரில் எங்களுடன் வசிப்பதையே அவள் விரும்பவில்லை. வானவரம்பன் நிற்கும் இடத்தில் இவள் நிற்பதில்லை. தனது மகள் கன்னல் ஆதித்த கரிகாலனுக்குத்தான் மனையாளாக போகிறாள், என்று கடல் அலைகளை போன்று ஓயாமல் ஆர்ப்பரித்து கொண்டிருப்பவள், இப்போதெல்லாம் அதை பற்றி பேசுவதேயில்லை. அதற்கு காரணமாக அவள் கூறுவது, ஆதித்த கரிகாலனை சுற்றி நிகழும் மர்ம சம்பவங்கள்தான். யாழ் மனிதன் எவனோ அன்றாடம் ஆதித்த கரிகாலனை சுற்றி வருகிறான். ஆதித்த கரிகாலனை பாதுகாப்பில் வைத்தால், உடனே மலையமாருதத்தில் துர்மரணங்கள் நிகழ்கின்றன. மேலும், உனது மகன் உறக்கத்தில் நடப்பதாக அறிகிறோம். அவன் உடலில் எந்த உபாதையும் இல்லை. அவனை தங்கள் வசப்படுத்த யாழ் மனிதர்கள் செய்யும் யுக்தியே என்று வானவரம்பன் கருதுகிறான். வானவரம்பனுக்கும், பைம்பொழிலுக்கும், இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது. இருவரும் பேசிக்கொள்வதில்லை. மீண்டும் திருவாவடுதுறைக்கு சென்றுவிடப் போவதாகத் தனது தோழி அர்களாவிடம் கூறினாள் பைம்பொழில். அர்களா இதனை என்னிடம் தெரிவித்து அவளது மனநிலையை எப்படியாவது மாற்றும்படி கூறினாள். நான் என்ன செய்வேன் வானவன்மாதேவி! பைம்பொழிலின் கோபத்திற்கும், வானவரம்பனின் பிடிவாதத்திற்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கிறேன். ஆதித்த கரிகாலன் காணாமல்போய், பண்ணுருட்டி வனமகாதேவி ஆலயத்தில் கண்டெடுக்கப்படும் வரையில் நான் பட்ட தவிப்பு என்று கண்ணீர் சிந்தினாள்.

    வானவன்மாதேவிக்குச் சினம் அதிகரித்தது.

    "நானா என் மகனை உங்கள் வசம் ஒப்புவித்தேன்? உப்பரிகை கூட்டத்தில், தந்தையார் திருக்கோவலூர் வேந்தர்தானே, எனக்கு பக்குவம் சொல்லி, என் மகனை தான் வைத்துக்கொள்வதாக கூறினார். கெடிலத்தை கடந்தால் என் மகனுக்கு கேடு, என்று உரைத்துதானே, அவனை என்னிடம் இருந்து பிரித்தார். இப்போது உங்கள் குடும்பம், பிளவுப்பட்டு நிற்பதற்கு என் மகன்தான் காரணம் என்பது போன்று பேசினால் நான் என்ன செய்ய முடியும்? தேவையில்லை இனி! என் மகனுக்கு கேடு விளைந்தால் அது என்னுடன் இருக்கும்போதே நடக்கட்டும். அவன் இனி திருக்கோவலூரில் இருக்க வேண்டியதில்லை. அவனை இனி உங்களுடன் அனுப்ப போவதில்லை, என்று தீர்மானமாகக் கூறினாள்.

    அமுது முழுதுடையாள் அவளை எச்சரிக்கையுடன் நோக்கினாள்.

    மகளே! இது நீயாக எடுத்த முடிவாக இருக்கட்டும். நான் உன்னிடம், இந்த தகவல்களையெல்லாம் கூறினேன் என்று தந்தையாரிடமோ, வானவரம்பனிடமோ கூற வேண்டாம்! தயக்கத்துடன் அமுது முழுதுடையாள் கூற, வானவன்மாதேவியின் உள்ளத்தில் மளுக்கென்று ஏதோ முறிந்தது.

    "என்ன இருந்தாலும், அமுது முழுதுடையார் சிற்றன்னை தானே! இவளது பெற்ற தாயாக இருந்தால் இப்படி பேசியிருப்பாளா! இவளுடன் பிறந்த நான்கு அண்ணன்களையும் போரில் பறிகொடுத்துவிட்ட ஏக்கத்தில் இவளது தாய் இறந்துவிட, சிறுமியான இவளை பார்த்துக்கொள்ள ஒரு தாய் தேவை என்று கூறியே, திருவாவடுதுறை சென்று அமுது முழுதுடையாளை மணந்திருந்தார் மலையமான். இன்று அவளுக்கு தனது மகனின் வாழ்க்கைதான் பெரிதாகத் தெரிகிறது.

    பைம்பொழில் குறிப்பிட்டு பேசியது, தமனகத்தை அல்ல, தனது மகனைத்தான் என்பதை புரிந்து கொள்ளாமலா இருப்பாள் வானவன்மாதேவி.

    ‘உன்னிடம் சிறுமைப்பட்டுக்கொண்டு, எனது மகன் திருக்கோவலூரில் இருக்க வேண்டிய தேவையில்லை!’ மனதினுள் நினைத்துக்கொண்டாள் வானவன்மாதேவி.

    தனது சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தபடி நீராடிக்கொண்டிருந்த, வானவன்மாதேவியின் செவியில் மீண்டும் அற்புதவல்லி கிசுகிசுத்தாள்.

    பார்! மீண்டும், கல்யாணி தேவியார் உன்னையே வெறித்துக் கொண்டிருக்கிறார். அற்புதவல்லி கூற, அந்தப்பக்கமாக நோக்கினாள் வானவன்மாதேவி.

    வைதும்பர இளவரசி கல்யாணியை பலவந்தமாக கடத்தி வந்திருந்தான் அரிஞ்சய சோழன். பெரும்பாணப்பாடி போரில் தோல்வியுற்ற விஜயாதித்த பாணனுக்கு அடைக்கலம் கொடுத்ததால், வைதும்பர்கள் மீது சினம் கொண்ட அரிஞ்சயன், கல்யாணி ஆலயத்தில் வீணை வாசிக்க சென்றபோது, புகழ்பெற்ற அவளது வைதும்பர வீணையுடன் அவளை கடத்தி வந்தான். அந்த வீணையை தனது வெற்றி சின்னமாக கருதினான். அந்த வீணையை மீட்டிதான் கல்யாணி பராந்தகனின் முன்பாக பாடியிருந்தாள். பேரழகியான கல்யாணி திருமுனைப்பாடி இளவரசன் ஒருவனை காதலிப்பது தெரிந்திருந்தும், அவளை பலவந்தமாகக் கடத்தி வந்து மணந்திருந்தான் அரிஞ்சயன்.

    அரிஞ்சயனை வீழ்த்திய இரு தாமரை தடாகங்களாக காணப்பட்ட அந்த இரு விழிகளால் இப்போது, வானவன்மாதேவியை வெறித்துக்கொண்டிருந்தாள் கல்யாணி.

    அவளது பார்வையைச் சந்தித்துவிட்டு, சங்கடத்துடன் அற்புதவல்லியின் பக்கமாக வானவன்மாதேவி முகத்தைத் திருப்பினாள்.

    எதற்கு என்னை அப்படி வெறிக்கிறார், எனது மாமியார்? வானவன்மாதேவி தனக்குள் முணுமுணுத்தாள்.

    அவரையே கேட்டுவிடுங்களேன்! அற்புதவல்லி கூற, வானவன்மாதேவி தலையசைத்தாள்.

    அது முறையாகாது! அவர் எனது மாமியார்! எதற்கு என்னை வெறிக்கிறீர்கள் என்று அவ்வளவு எளிதாக கேட்டுவிட முடியுமா? நான் எங்கே உன்னை வெறிக்கிறேன்? என்று கூறிவிட்டால்? என்று கூறிக்கொண்டிருந்த போதே, சட்டென்று ஆற்றுக்குள் முழுகிக் காணாமல் போனாள் கல்யாணி.

    கல்யாணி நீராடிக்கொண்டிருந்த இடம், இப்போது வெறுமையாக காணப்பட, வானவன்மாதேவி குழப்பத்துடன், ஆற்று நீரில் மிதந்து கொண்டிருந்தாள்.

    ***

    ¹. நந்தன் மேடு முன்பு பழையாறு மேடு என்று அழைக்கப்பட்டது. நந்திவர்ம பல்லவன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இங்கே நந்திபுர விண்ணகரம் ஆலயத்தில் பதுங்கி இருந்தான். நந்திபுர விண்ணகரம் என்பதால் பழையாறு மேடு நந்தி மேடு என்று பின்னர் அழைக்கப்பட்டிருக்கலாம். (முடிகொண்டான் ஆறு தற்போது திம்மராயன் பட்டணம் ஆறு என்று அழைக்கப்படுகிறது.) இது காரைக்கால் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. திம்மராயன் திருமலைராயன் என்கிற மன்னன் ஆண்ட பகுதி என்பதால் இந்த பெயர் பெற்றிருக்கலாம். இவரது அரசவை புலவராக இருந்தவர் காளமேக புலவர்.

    ² ராஜராஜன் நோய்வாய்ப்பட்டு தனது இறுதிக்காலத்தில் தஞ்சையை விட்டு நீங்கி, பழையாறைக்கு அருகே உள்ள உடையலூர் என்கிற பகுதியில் தங்கியிருந்ததால் அவனுக்கு அங்கே பள்ளிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் இப்போது ஒரு தனியாரின் வசம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    ³கும்பகோணத்திலிருந்து ஏழு கிமீ தொலைவில் உள்ள பழையாறையில்தான் சோழ மன்னர்களது மாளிகைகள் இருந்துள்ளன. காளமேக புலவர் இங்குள்ள நந்திபுர விண்ணகரத்தில் (நாதன் கோவிலில்) பிறந்தார். இதே ஊரில்தான் சோழ பிரதம அமைச்சர், அநிருத்த பிரம்மராயரும் பிறந்தார். அந்த பகுதியே இன்றும் சோழ மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சோழர் படைகளை நான்கு பிரிவாக பிரித்து இங்கே நிறுத்தியிருந்தார்கள். அப்படைகள் இருந்த இடங்களே ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மடைப்படையூர் என்று இன்றும் வழங்கி வருகிறது. பழையாறைப் பகுதி நான்கு சிறு பிரிவுகளுக்கு உட்பட்டிருக்கிறது. பழையாறை வடதளி, மேற்றளி, கீழ்த்தளி, தென்தளி என்று. தளி என்றால் கோயில் என்று பொருள். தாராசுரத்திலிருந்து தெற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது வடதளி. பழையாறை வடதளி என்று பகுதியில் இருக்கும் மாடக்கோயில் இடிந்து சிதிலமான நிலையில் இருக்கும். இது கொச்செங்கணான் கட்டிய கோயிலாக இருக்கலாம். வடதளியிலிருந்து பம்பைப்படையூர் சென்று தெற்கே திருமலைராயன் ஆற்றைக் (முகில் ஆறு) கடந்து பழையாறை கீழ்தளிக்குச் செல்லலாம். கீற்றளி, மேற்றளி என்றெல்லாம் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. இதுவே இன்று பழையாறை என்று வழங்குகிறது. இங்குள்ள சோமேசர் லோகாம்பிகை கோயில் பெரிய கோயில்.

    2. கூடிடு கூடலி

    ராஜாதித்யனின் கரிக்கோல ஊர்வலம், கருட குன்ற கிராமத்தின் தனது இல்லத்தின் வழியாக கடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரகதப்பாவையும், நற்குண நங்கையும், அந்த குதிரை வீரன் தங்களை பரபரப்புடன் வெறிப்பதைப் பார்த்ததுமே எச்சரிக்கை அடைந்தனர். அடிப்பாவிகளா! நீங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறீர்களா? என்று அந்த குதிரை வீரன் முணுமுணுத்ததை, அவனது உதட்டசைவின் மூலமே யூகித்த மரகதப்பாவை உடனேயே, மகள் நற்குண நங்கையுடனும் மற்றும் பெயர்த்தி கூடலழகியுடனும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.

    ‘போதும் இந்த தலைமறைவு வாழ்க்கை! எங்கேயாவது நிரந்தரமான மனநிம்மதியுடன் வாழ வேண்டும்’ என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தாள். ராஜாதித்யன் இவளது வீடு இருந்த வழியாக கரிக்கோல ஊர்வலம் போனபோது, இவளை தேடிக்கொண்டிருக்கும் எதிரிகள் பார்த்துவிட்டிருந்ததால், தப்பித்தோம், பிழைத்தோம் என்று திருக்கோவலூர் ஓடிவந்திருந்தார்கள். திருக்கோவலூர் ஆலய பட்டர் ஒருவரின் இல்லத்தின் பின்பாக இருந்த தோட்டத்தில் குடில் அமைத்து தங்கியிருந்தார்கள் மரகதப்பாவையும், மகள் நற்குண நங்கையும், குழந்தை கூடலழகியும். ஆனால் சற்றும் எதிர்பாராமல், இவளுக்கு பாதகம் செய்ய துடிக்கும் எதிரியே சோழ படைகளின் தளபதியாக நியமிக்கப்பட, இனியும் திருக்கோவலூரில் இருப்பது ஆபத்து என்றுதான் காஞ்சிக்குத் தப்பி வந்திருந்தாள்.

    கடம்பூரில் இருந்து கர்ப்பவதியான மகளுடன் தப்பிச் சென்றபோது எங்கே செல்வது என்கிற பெரிய வினா இவளது இதயத்தில் எதிரொலித்திருந்தது. ஆனால் இப்போது, தெளிவாக எங்கே செல்ல வேண்டும் என்கிற தீர்மானத்தோடுதான் இருவரும் தப்பித்துச் சென்றனர்.

    காஞ்சியில் உள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் உள்ள ஆதூர சாலைதான் இந்த முறையும் இவர்களுக்கு புகலிடமாக விளங்க போகின்றது. ஆலயத்தின் பின்புறம், அடர்ந்த மரங்களிடையே, ஒதுக்குபுறமாக இருந்த அந்த ஆதூர சாலைக்கு நோயுற்றவர்களை தவிர வேறு யாரும் வருவதில்லை. அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமல், அமைதியாக இருக்கும் இடம். இவர்கள் பதுங்கிகொள்ள தகுந்த இடம்.

    முன்பு கடம்பூரில் இருந்து உயிர் தப்பி வந்திருந்த போதும், திருமுக்கூடல் ஆதூர சாலைதான் இவளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. திருமுக்கூடல் ஆதூர சாலை⁴யில் அடைக்கலம் பெற்ற அந்த மழை பெய்த இரவு, இன்னும் மரகதப்பாவையின் நினைவில் பசுமையாக உள்ளது.

    கடம்பூரில் இருந்து தப்பித்த இவளை குதிரை வீரர்கள் விரட்டி வர, காஞ்சிக்குச் சென்ற ஒரு பக்தர்கள் கூட்டத்தில் இணைந்து, கர்ப்பவதியான நற்குண நங்கையுடன் போவதற்கு இடமில்லாமல், அப்பன் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நங்கையுடன் நின்றிருக்க, அப்போது ஒரு முதியவர் சன்னிதியில் இருந்து வெளிவந்தார். நெற்றியில் ஊர்த்துவ புண்டரமும், முகத்தில் அமைதியான புன்னகையையும் கொண்டிருந்த அவர் கையில் ஓர் மண்கலயத்தைச் சுமந்திருந்தார்.

    ஸ்வாமி! எனது மகள் கர்ப்பவதியாக இருக்கிறாள், தங்கள் கையில் பெருமாள் அமுது செய்த பிரசாதம் இருந்தால் சற்று கொடுங்கள். காலையில் இருந்து அவள் ஒன்றுமே உண்ணவில்லை! மரகதப்பாவை அந்த முதியவரிடம் கேட்டபோது கூனி குறுகினாள். ஒரு பெரிய நாட்டின் அருமை மகளான தான் ஒருவேளை உணவுக்காக ஒருவரிடம் இறைஞ்ச வேண்டிய தனது துர்பாக்கிய நிலையை நினைத்து, அவளது இதயமே வெடித்துவிடும் போல இருந்தது.

    அந்த முதியவர் சட்டென்று நின்று அவளை பரிதாபமாக பார்த்தார்.

    அம்மா! இந்த மண் கலயத்தில் தன்வந்திரி லேகியம் மட்டுமே உள்ளது. இதோ, இந்த ஆலயத்தின் பின்பாக ஒரு ஆதூர சாலை உள்ளது. நான்தான் அதனை நடத்தி வருகிறேன். எனது பெயர் நிரஞ்சன ஜனநாதன் எனது நீளமான பெயரை உச்சரிக்க இயலாமல், இப்பகுதி மக்கள் என்னை அப்பன் சித்தன் என்று அழைப்பார்கள். எனது ஆதூர சாலையில் எழுந்தருளியிருக்கும் தன்வந்திரி, இங்கு கோவில் கொண்டிருக்கும், திருவேங்கமுடையானுக்காக அன்றாடம் லேகியம் செய்து அனுப்புவார். அதனை இறைவன் ஒவ்வொரு இரவும் உண்பதாக இந்த கோவில் புராணம் கூறுகிறது. அதன்படி அன்றாடம் நான் லேகியம் எடுத்து வருகிறேன். நீயும், உனது மகளும், எனது ஆதூர சாலைக்கு வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அங்கு உணவு படைக்கிறேன் என்று சொல்ல, மரகதப்பாவையும், நற்குண நங்கையும் அவருடன் சென்றனர்.

    அவர் வழங்கிய உணவை அருந்தி அங்கேயே இரவை கழித்தனர். மறுநாள் அப்பன் சித்தரிடம் விடைபெற்றபோது, அவர்தான் அந்தக் கேள்வியை எழுப்பினார்.

    எங்கு போவீர்கள்? என்று அப்பன் சித்தன் கேட்டதும், திகைத்தாள்.

    தெரியவில்லை சுவாமி! கால்போன போக்கில் சென்று எங்காவது அடைக்கலம் தேட வேண்டியதுதான்! என்றதும் அப்பன் சித்தர் ஜனநாதர் புன்னகைத்தார்.

    ஏன்? அந்த அடைக்கலத்தை அப்பன் வெங்கடேசன் வழங்க மாட்டானா? நீ இங்கே எனது ஆதூலர் சாலையிலேயே தங்கி கொள்ளலாம். மூலிகை அரைக்கவும், நோய்வாய்பட்டவர்களுக்கு பணிவிடை செய்யவும், எவ்வளவு ஆட்கள் இருந்தாலும் போதாது. மேலும் சல்லியகிரியை செய்யும்போது உதவியாளர் தேவைப்படுகிறது. மேலும் கர்ப்பவதியான உனது மகளும், இந்த ஆதூலர் சாலையிலேயே பிள்ளையை பெறலாம்! நீயும், உனது மகளும், இங்கேயே தங்கலாம் என்றதுமே, அவருக்கு தனது கைகளைக் குவித்து நன்றியைத் தெரிவித்திருந்தாள்.

    தாயும், மகளும் ஆதூலர் சாலையிலேயே தங்கி, ஜனநாதருக்கு நோயுற்றவர்களை கவனிப்பதில் உதவிசெய்து வந்தனர். மூலிகை மருந்துகளை அரைப்பது, லேகியம் கிண்டுவது, நோயாளிகளுக்கு சூரணங்களை புகட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டதால், மனநிம்மதியும், மனநிறைவும் ஒருங்கே அவர்களுக்கு கிட்டின.

    அவ்வப்போது ஆதூர சாலையில் உணவு தயாரிக்கும், அம்மங்கை என்கிற பெண்ணுக்கு உதவி செய்துவந்தாள் மரகதப்பாவை.

    நற்குண நங்கையும், ஆதூர சாலையிலேயே ஒரு பெண் மகவை பெற்றெடுத்தாள். திருமுக்கூடலில் பிறந்ததால், அப்பன் சித்தன்தான் அவளுக்கு, கூடலழகி என்று பெயரிட சொன்னார்.

    நற்குணநங்கை தனது மகளுக்கு பூங்கோவல்லி என்று பெயரிட்டபோது, மரகதப்பாவை அவளை எச்சரித்தாள்.

    அந்த பெயரில் நீ உன் மகளை அழைத்தால், அவளது உயிருக்கு ஆபத்து நேரிடலாம். கூடலழகி என்றே, உனது மகளை அழைத்து வா! என்று மரகதப்பாவை சொல்ல, கூடலழகி என்றே மகளை அழைக்க தொடங்கி இருந்தாள். திருக்கோவலூரை காண வேண்டும் என்கிற ஆர்வத்தில்தான், அவர்கள் கருடக் குன்றத்தில் வசிக்கத் தொடங்கினார்கள்.

    நிம்மதியாகத்தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. தக்கோலம் போர் திடீரென்று மூளும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்களா என்ன? ராஜாதித்யனின் படைகள் இவள் வீட்டு வழியாக சென்றபோது யார் கண்ணில் படக்கூடாது என்று காலமெல்லாம் அஞ்ஞாதவாசம் செய்து வந்தார்களோ, அவர்களே இவளை பார்த்துவிட, திருக்கோவலூர் பட்டர் வீட்டின் பின்பாக தலைமறைவாக குடில் அமைத்து வசித்தனர். ஆனால் சோழர்கள், திருக்கோவலூரிலேயே பாசறை அமைக்க, இனியும் திருக்கோவலூரில் இருப்பது ஆபத்து, என்று மீண்டும் புறப்பட்ட இடமான காஞ்சிக்கே தாயும், மகளும் விரைந்தனர்.

    இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தன்னை எதிரிகள் மறந்திருப்பார்கள் என்கிற எண்ணத்தில், அப்பன் சித்தரிடம் பிரியா விடைபெற்று கொண்டு மீண்டும் கடம்பூர் சென்றிருந்தாள்.

    ஆனால் முன்பை காட்டிலும், இன்னும் அதிக தீவிரத்துடன் எதிரிகள் இவளை தாக்க வர, நெகிழ்வேலி, (நெய்வேலி) பண்ணுருட்டி (பண்ருட்டி) கருட குன்றம் (தற்போது அந்திலி) மற்றும் திருக்கோவலூர் என்று அலைந்து இப்போது மீண்டும், காஞ்சி திருமுக்கூடல் கடிகைக்கே திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

    பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி, திருமுக்கூடலாக கூடிய ஸ்ரீவரம் (தற்போது பழைய சீவரம்) குன்றை கடந்து அப்பன் வெங்கடேச பெருமாள் ஆலயத்தை நோக்கி நடந்தனர். இவர்கள் மீண்டும் திருமுக்கூடல் ஆதூர சாலைக்கு சென்றபோது, அப்பன் சித்தர் காலமாகிவிட்டிருந்தார். அவரது சீடன் ஜனார்த்தனன்தான் ஆதூர சாலையை நடத்திக்கொண்டிருந்தார். மரகதப்பாவையை அவர் முன்பே அறிவார் என்பதால் அடைக்கலம் பெறுவதில் அவளுக்கு பிரச்சனை ஏதும் இருக்கவில்லை.

    நீங்கள் இருவரும் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுங்கள்! என்று கூறியிருந்தார், ஜனார்தனர்.

    மரகதப்பாவைக்கும், நற்குண நங்கைக்கும் மீண்டும் ஆதூலர் சாலை பணிகள், தங்கள் துயரங்களை மறக்க கைகொடுத்தன. இம்முறை கூடலழகியும், தனது அழகிய சிரிப்பாலும், துடிப்பான மழலைப் பேச்சாலும், நோயாளிகளுக்கு இதமளித்து வந்தாள்.

    இந்த அமைதியான வாழ்க்கையே போதும்! இனி ராஜாங்க ரீதியான பிரச்சனைகளை சந்திக்கவே வேண்டாம் என்கிற தீர்மானத்திற்கு மரகதப்பாவையும், நற்குண நங்கையும் வந்திருந்தனர்.

    அப்போதுதான் ஒருநாள்,

    நற்குண நங்கை, மூலிகை கலவையை உரலில் அரைத்துக் கொண்டிருக்க, குடுவையில் மூலிகை கஷாயத்துடன், மரகதப்பாவை, ஆதூர சாலையின் படுக்கைகள் உள்ள அறைக்கு சென்றாள். ஒவ்வொரு நோயாளியின் வசமும் ஒரு பாக்கு மர குடுவை வைக்கப்பட்டிருக்கும். அதில் கஷாயத்தை நிரப்ப வேண்டும். அமைதியான நித்திரைக்கு வழிவகுக்கும் கஷாயம் அது.

    நோயாளிகளின் அறைக்குள் நுழைந்த மரகதப்பாவை திடுக்கிட்டாள். முதிய நோயாளி ஒருவரின் அருகே கூடலழகி அமர்ந்திருக்க, அவர் அவளது இடதுகையை பற்றி கைரேகைகளை படித்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு ஜோதிடர். மரகதப்பாவையை பார்த்ததும் அவர் முகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1