Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraivanai Naadu!
Iraivanai Naadu!
Iraivanai Naadu!
Ebook470 pages2 hours

Iraivanai Naadu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு முறை இந்த நூலைப் படித்தோமானால், நாம் பல மகான்களின் நல்லுரைகளைக் கேட்டவர்களாகிறோம்; பல நூல்களோடு பரிச்சயம் கொண்டவர்களாகிறோம். ஆம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, தாயுமானவர், பட்டினத்தார், வள்ளலார், அருணகிரி, திருமூலர், தியாகையர், முத்துசாமி தீட்சிதர், புத்தர், சாயிபாபா போன்ற பலப்பல மகாங்களின் குரலைக் கேட்கலாம். யோகிவாசிட்டம், பகவத்கீதை போன்ற அரிய நூல்களின் சாரத்தைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், கூறவந்த கருத்துகளை மனதில் பதியவைக்க, அருமையான சம்பவங்கள், கதைகள் இவற்றைக் கையாள்கிறார். உதாரணமாக, இந்த நூலில் ராமாயண, மஹாபாரதக் காட்சிகளைக் காணலாம்; யோக வாசிட்டத்திலிருந்து ஒரு மின்னல் பறிக்கலாம்; கபீர் தாசர், ஸ்ரீ ராகவேந்திரர், அஷ்டாவக்ரர், திருநீலகண்டர், ரிபு ரிஷி, போகர், சைதன்யர் குறித்த பக்தியைத் தூண்டும் கதைகளைக் காணலாம்; அண்மையில் வாழ்ந்து நம் வாழ்கைக்கு ஒளி வழங்கிய அன்னதானம் சிவம், திருமுருக கிருபானந்த வாரியார், வினோபாவ பாவே, வீரப்ப சுவாமிகள் போன்றோரின் அருளுரைகளைக் கேட்கலாம்; அலெக்ஸாண்ட்ரை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய நமது முனிவர்களின் ஞானத்தை தரிசிக்கலாம். திரூமூலரிலிருந்து கண்ணதாசன் வரை, பலப்பல பாடல்களைப் படித்துப் பரவசம் எய்தலாம்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580141206520
Iraivanai Naadu!

Read more from Aroor R. Subramanian

Related to Iraivanai Naadu!

Related ebooks

Reviews for Iraivanai Naadu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraivanai Naadu! - Aroor R. Subramanian

    https://www.pustaka.co.in

    இறைவனை நாடு!

    Iraivanai Naadu!

    Author:

    ஆருர் ஆர். சுப்பிரமணியன்

    Aroor R. Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aroor-r-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt.  Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved.  This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    உலகெலாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த அலகிலா விளையாட்டுடையார், உமா தேவியாருடன் ஏகாந்தமாக அமர்ந்திருக்கையில் அத்தெய்வ வதனத்தில் ஒரு புன்னகைக்கீற்று தோன்றி மறைவதை தேவி பார்த்துத் திகைத்தாள். அதற்கான விடை சில மணித்துளிகளில் அம்பாளுக்குக் கிடைத்துவிட்டது.

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் ஞானமார்க்கம் மிகக் கேவலமான நிலைக்குப்போய், நாஸ்திக வாதங்கள் மக்களிடையே எழுந்து அவரவர்களுக்குள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டனர். தான்தோன்றித்தனமாய் தங்களுக்குத் தோன்றிய முரண்பாடான கொள்கைகளை உருவாக்கிக்கொண்டு தாங்கள் தான் குரு, தலைவன் என அறிவித்து, கோஷ்டி கோஷ்டியாக அலைந்து திரிந்தார்கள் அவர்கள்.

    இந்நிலை கண்டு, பதறிப்போன தேவர்களும் மகரிஷிகளும் தீர்வு காண கைலயங்கிரிக்கு வந்துகொண்டிருந்ததைத் தன் ஞானத்தால் அறிந்தே, அந்த பரமேசுவரன் புன்னகை செய்து தேவியைக் குழப்பத்தில் ஆழ்த்தினார், முன் கூறியபடி.

    தற்கால உலகப்போக்கைப்பற்றி தன்னை தரிசிக்க வந்தவர்கள் மனக் குறையுடன் முறையீடு செய்யவே, சர்வேசுவரன் அவர்களை ஆறுதல்படுத்தி, யாமே பூலோகத்தில் அவதரித்து தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மைகள் புரிவேன் என அப்போதே சங்கல்பம் செய்தார்.

    அதே சமயம் கேரளாவில் உள்ள காலடி சிற்றூரில் மகப்பேறு வேண்டி சதா, சிவநாமத்தை ஜெபித்து, திருச்சூர் வடக்கு நாதரை ஒரு மண்டலகாலமாக பூஜித்து வந்த அந்தணர் சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிகள் கனவில், கையிலைநாதன் தோன்றி, நானே உங்கள் புத்திரனாகப் பிறப்பேன் என அருளினார். இதனால் அத்தம்பதியர் ஆனந்தக்கடலில் மூழ்கினர்.

    அந்த நன்னாளும் வந்தது, ஒரு வைகாசி மாதம் வளர்பிறை ஐந்தாம் நாளில் தனக்கு கந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஆண் குழந்தையாக பாக்கியம் பெற்ற அன்னை ஆர்யாம்பாளுக்குப் பிறந்தார் அந்த சர்வேசுவரன் - அவர் அவதாரம் புரிந்ததால், சிறப்புப் பெற்ற 'காலடி' தலத்தில்!

    சிவகுரு தம்பதிகள் அந்தக் குழந்தைக்கு 'சங்கரன்' என சிவனின் திருநாமத்தையே சூட்டினர். செல்வமுடன் வளர்க்கப்பட்ட அக்குழந்தையின் நான்காம் வயதில் விதி விளையாட தகப்பனாரை இழந்தான் சங்கரன். கணவனைப் பறிகொடுத்த ஆதரவற்ற ஒரு விதவைத் தாய் படும் அத்தனை கஷ்டங்களையும் பட்ட ஆர்யாம்பாள் எப்படியோ சங்கரனுக்கு உபநயனம் செய்து அவனை பிரம்மச்சாரி ஆக்கினாள்.

    தனது பால்ய பிராயத்திலேயே மிகுந்த தேஜஸுடனும் ஞானத்துடனும் திகழ்ந்த சங்கரன், பல அற்புதங்களை நிகழ்த்தி, மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.

    அப்போதைய காலகட்டத்தில் முன்னால் விவரித்தபடி, பூலோகம் எங்கும் தலை தூக்கிய நாஸ்திகவாதம், இந்து சமயத்தினரின் பண்பற்ற நிலைகளுடன், அக்காலத்தில் இந்து மதக் கொள்கைகள் பல கைவிடப்பட்டு புத்தமதம் துளிர்விட, பல பலகீனக்கொள்கைகளைக் கொண்ட 72 பல்வேறு மதங்கள் நாடெங்கும் தோன்றி மக்களிடையே சமயச் சச்சரவுகளை ஏற்படுத்தி, நம் தேசமே அமைதியை இழந்திருந்தது.

    அப்போது துறவறம் பூண்ட ஆதிசங்கரர், பிரமம் என்ற ஒரு பொருளே உள்ளது. 'உயிர்கள் பிரமமே' (த்வைதம் - இரண்டு, அ - இல்லை) என்ற அத்வைதக் கொள்கையை, நாடெங்கும் பயணித்து, பாமர மக்களைச் சந்தித்து, எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தினார். இதற்கு அவர் இயற்றித் தந்த வியாசரின் பிரம்மசூத்திரம், வேதரிஷிகளின் பத்து உபநிடதங்கள், பகவத் கீதை நூல் ஆகியவற்றுக்கான உரை நூற்களும் விவேக சூடாமணி, பஜகோவிந்தம் போன்ற பல நூற்களும் பேருதவியாக அமைந்தன.

    ஆதி சங்கரரின் அக்கால ஆன்மீக பிரவேசம், ஷீணித்துக் கொண்டிருந்த இந்து மதம் தழைக்க உயிர்ச்சத்தாக அமையவே அம்மகான் ‘இந்துமத விடிவெள்ளி’ என அழைக்கப்பட்டார்.

    ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் இயற்றி அருளிய பஜகோவிந்த நூல், அவர் இந்து மதம் தழைக்க எழுதிய அத்தனை நூல்களின் மகுடத்தில் பதித்த ரத்தினமாக ஜொலித்தது. அதன் காரணம், அதில் இடம்பெற்ற 31 செய்யுட்களும், எளியநடை, விரிந்த பொருள், இனிய இசைப் பின்னணியுடன் அமைந்த நூலாக உருவானதுதான்! அவை 'மோகமுத்கரா' என சிறப்பாகக் கூறப்பட்டன. (மோகத்தைத் தகர்க்கும் சம்மட்டி.)

    ஏன் 'பஜகோவிந்தம்' என்று சங்கரரின் நூல் அழைக்கப்பட்டது?

    பஜகோவிந்தமெனில் 'மேலானவனான அந்த கோவிந்தனுடன் உன்னை ஐக்கியமாக்கிக் கொள்' என்ற பொருளைத் தரும்.

    'கோவிந்தன்' என்ற பெயர் திருமாலைக் குறிப்பதாகும். அந்தப் பரம்பொருளை கோவிந்தன் எனும் பதத்தால் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம நூலில் இரண்டு இடங்களில் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளதாகச் சொல்வார்கள்.

    இந்த பஜகோவிந்த நூலில் ஸ்ரீ சங்கர பகவத் பாதாள், மிகமிக அருமையாக, ஆண் - பெண் பாலர்களின் நிலையற்ற இளமை, நிலையில்லா செல்வம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை வரும் பிறவி கொண்ட உறவுகள், மனிதனுக்கு பிறப்பால் வரும் பாலியம், யௌவனம், விருத்தாப்பியம், எப்போதும் பற்றும் மரணபயம், நான் எனும் அகங்காரம், பகவத்கீதை, கங்காந்தி கொண்ட பிறப்புகள், குருமார்களின் விசேஷங்கள், துறவிகளின் நிலை, பிறப்பு - இறப்பின் சிறப்பு, தன்னைத்தானே உணரும் ஞானநிலை, இறுதியாக பகவான் பாதகமலங்களை அடையும் வழி... இப்படி வாழ்வியலின் அனைத்து அங்கங்களையும் மிக எளிய முறையில் புட்டுப்புட்டு வைக்க, அந்நூல் மகத்துவம் உள்ளதாகக் கருதப்படுகிறது. நேற்றும் இன்றும்! பஜகோவிந்தம் உருவாக அமைந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சியொன்று இந்நூலின் முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.

    பஜகோவிந்த நூலின் பாடல்களில் ஒரு சில பாடல்களின் கருத்து, வேறுசில அதேநூலின் பாடல்களுடன் ஒன்றுபடும்படியாக அமைந்துள்ளதால், அடியேன் சுவைகருதி அவைகளை இணைத்துள்ளேன் - கூறுவதை மீண்டும் கூறும் குற்றம் தவிர்க்கும் எண்ணமுடன்.

    பஜகோவிந்த பாடல்களின் கருத்துகளுக்கு ஏதுவாக அமைந்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், மகரிஷிகள், சரித்திர நாயகர்கள், தற்கால அறிஞர்கள், இவர்கள் அருளியவற்றையும், அந்தந்த அத்தியாயத்தின் தலைப்பு, கருத்துக்கு உகந்ததாக அமைந்த வரலாற்று நிகழ்ச்சிகள், உபகதைகள் ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். இதிலே மகான்கள் அருளிய பொன்மொழிகளும் பாசுரங்களும் பாடல்களும் செய்யுட்களும் கவிதைகளும் உரைகளும்கூட அடக்கம்!

    சுவையான திராட்சைப் பழத்தை உண்ணும் முறையில் அருளப்பட்ட பஜகோவிந்த நூலை, ஒரு யானையைத் தடவிப்பார்த்து நான்கு கண்கள் அற்ற மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்குத் தோன்றிய உருவாகக் கூறியதுபோலவே, நான் அந்நூலை உணர்ந்து கோவிந்தனை நாடத்தூண்டும், இந்த ‘இறைவனைநாடு’ நூலை ஆக்கியுள்ளேன். கண்கள் உள்ளோர் பொறுத்தருள்க - நான் யானை வேட்டைக்குச் சென்று முயலை வேட்டையாடியவனாகக்கூட இருக்கலாம்!

    இதற்கு முன்பே மகான் ராஜாஜி உட்பட்ட சில மேதைகளும், திரு. கண்ணதாசன் போன்ற சில கவிச்சக்கரவர்த்திகளும், சில அருளாளர்களும் பஜகோவிந்தம் நூலுக்குச் சிறப்பாக விரிவுரைகள் அளித்துள்ளனர். பட்டிதொட்டி எங்கும் பஜகோவிந்தம் பாடல் ஒலிக்கக் காரணமாக இருந்த அமரர் டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    ஆரம்பத்தில் இந்நூலை உருவாக்குகையில் எனக்கு மலைப்பாகவே இருந்தது. ஆனால் காஞ்சி மகானின் மானசீக ஆசிகள், எனக்கு பக்கபலமாக ஊக்கம் தந்த என் மனைவி கீதா சுப்பிரமணியன், பிள்ளைகள், ப்ரியா ரவிச்சந்திரன், லலிதா சாய்சந்திரன், தீபா பாலச்சந்தர், பேரன்-பேத்திகள், அந்த மலைப்பைப் போக்கினர்.

    மகான் ஆதிசங்கரரின் ஆதரவற்ற விதவை அன்னை ஆர்யாம்பாள் தன் புத்திரனை வளர்க்க எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை, எங்கள் தாயார் தங்கம்மாள் தன் இளம் வயதில் விதவையாகி நான் உட்பட மூன்று பிள்ளைகளை துணை கலெக்டர் அல்லது அதற்கு இணையான அரசு அந்தஸ்தில் (தமையனார்கள் திரு. ஆர். சுந்தரம், திரு. ஆர். நாராயணன்) அமரும் வகையில் ஆளாக்கி வளர்க்கையில் உணரமுடிந்தது! அந்த அன்புக்குரிய சகோதரர்களின் ஆசிகள் என்றும் தொடர்கின்றன எனக்கு.

    அதிகம் அறியப்படாத திறமை கொண்ட எழுத்தாளர்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்தி, மகிழ்ச்சிகொள்ளும், தசாவதாரம்போல் பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றிக்கொடி நாட்டிவரும் ஆன்மீகக் காவலர் திரிசக்தி டாக்டர் சுந்தர்ராமன் அவர்களும் அவருடைய துணைவியார் திருமதி. நளினி சுந்தர்ராமன் அவர்களும், எங்கள் குடும்பத்தினரின் நன்றிக்கு எப்போதும் உரியவர்கள். அவர்கள் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் சிறந்து வாழ, ஷீரடி மகானை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    என் முந்தைய ஆன்மீக நூலான ‘எத்தனை எத்தனை மனங்களை’ எப்படி அழகாக உருவாக்கி வெளியிட்டார்களோ, அதேபோல் இந்நூலையும் அமைத்த திரிசக்தி பப்ளிகேஷன்ஸுக்கும், அழகாக அச்சிட்டு, வண்ணமாகத் திகழச் செய்த திரிசக்தி அச்சுக்கூடத்தினருக்கும் என் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    என்னை எழுத்துத்துறையில் உற்சாகமூட்டி, என் வளர்ச்சியில் மகிழ்வு கொள்ளும், திரிசக்தி குழுமத்தினர் என்றுமே என் நினைவுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்!

    இனி வாசகர்களாகிய நீங்கள் இறைவனை நாடும் பாதையில் பயணிக்க, அன்புடன் வழிவிட்டு நிற்கின்றேன்.

    நன்றிகள்.

    - ஆரூர் ஆர். சுப்பிரமணியன்

    சமர்ப்பணம்

    அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத

    வயலூர் ஸ்ரீ சுப்ரமண்யஸ்வாமியையும்,

    அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியையும்,

    மகான்கள் ஸ்ரீ ஷீரடி, புட்டபர்த்தி பாபாக்களையும்

    மனதாரத் துதித்து,

    இந்த 'இறைவனை நாடு ' நூலை ஸ்ரீகாஞ்சி மகாப் பெரியவாள், காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் பாதகமலங்களில் பணிவான நமஸ்காரங்களுடன் சமர்ப்பிப்பதில் பெருமைப்படுகிறது எங்கள் குடும்பம்.

    பொருளடக்கம்

    நாடுவோம் அவரை

    மருவும் பெண்ணாசை

    பிறப்பும் இறப்பும்

    எது செல்வம்?

    பகவத் கீதையும் கங்கையும்

    நான் யார்? நான் யார்?

    பசி தரும் பாவம்

    ஆசையே அலை போலே...

    நிலையாமை

    நிலையானவை

    ஞானிகள் தரும் ஞானம்!

    ஆனந்தம்! பரமானந்தம்!!

    ஸ்ரீ சங்கராச்சார்யர் அருளிய ஸ்ரீ பஜகோவிந்தம்

    1. பஜ கோவிந்தம் பஜகோவிந்தம்

    கோவிந்தம் பஜ மூடமதே|

    ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

    நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே||

    2. முடஜஹீஹி தனாகம தருஷ்ணாம்

    குரு ஸத் புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்|

    யல்ல பஸே நிஜ கர்மோபாத்தம்

    வித்தம் தேந விநோதய சித்தம்||

    3. நாரீஸ்தனபர நாபீ தேசம்

    த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்|

    ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்

    மனஸி விசிந்தய வாரம் வாரம்||

    4. நளினி தளகத ஜலமதிதரளம்

    தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்|

    வித்தி வ்யாதி அபிமான க்ரஸ்தம்

    லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம்||

    5. யாவத் வித்தோ பார்ஜன ஸக்த:

    தாவத் நிஜபரிவாரோ ரக்த:|

    பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே

    வார்த்தாம் கோ (அ)பி ந ப்ருச்சதி கேஹோ||

    6. யாவத் பவநோ நிவஸதி தேஹே

    தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே|

    கதவதி வாயௌ தேஹாபாயே

    பார்யா பிப்யதி தஸ்மின் காயே||

    7. பால: தாவத் க்ரீடா ஸக்த:

    தருண: தாவத் தருணீ ஸக்த:|

    விருத்த: தாவத் சிந்தா ஸக்த:

    பரே ப்ரஹ்மணி கோ (அ)பி ந ஸக்த:||

    8. காதே காந்தா கஸ்தே புத்ர:

    ஸம்ஸாரோ (அ)யம் அதீவ விசித்ர:|

    கஸ்ய த்வம் க: குத ஆயாத:

    தத்வம் சிந்தய யதிதம் ப்ராத:||

    9. ஸத்ஸங்கத்வே நிஸங்கத்வம்

    நி:ஸங்கத்வே நிர்மோஹத்வம்|

    நிர்மோஹத்வே நிச்சலிதத்வம்

    நிச்சலிதத்வே ஜீவன் முக்தி:||

    10. வயஸி கதே க: காமவிகார:

    சுஷ்கே நீரே க: காஸார்: ||

    க்ஷணே வித்தே க: பரிவார:

    ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார் ||

    11. மாகுரு தனஜன யௌவன கர்வம்

    ஹரதி நிமோஷாத் கால: ஸர்வம்|

    மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா

    ப்ரஹ்ம பதம் தவம் ப்ரவிச விதித்வா||

    12. தின யாமின்யௌ ஸாயம் ப்ராத:

    சிசிர வஸந்தௌ புநராயாத:|

    கால: கிரீடதி கச்சத் யாயு:

    ததபி ந முஞ்சதி ஆசா வாயு:||

    13. கா தே காந்தா தனகத சிந்தா

    வாதுல கிம்தவ நாஸ்தி நியந்தா|

    தரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதி: ஏகா

    பவதி பவார்ணவ தரணே நௌகா||

    14. ஐடிலோ முண்டீ லஞ்சித கேச :

    காஷாயம்பர பஹுக்ருத வேஷ:|

    பச்யந்நபி ச ந பச்யதி மூடோ

    ஹயுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:||

    15. அங்கம் கலிதம் பலிதம் முண்டம்

    தசன விஹீனம் ஜாதம் துண்டம்|

    வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்

    ததபி ந முஞ்சதி ஆசா பிண்டம்||

    16. அக்ரே வஹ்நி : ப்ருஷ்ட்டே பாநு:

    ராத்ரெள சுபுக ஸமர்ப்பித ஜாநு:|

    கரதல பிக்ஷஸ் தருதல வாஸ:

    ததபி ந முஞ்சதி ஆசாபாச:||

    17. குருதே கங்கா ஸாகர கமனம்

    ப்ரதபரிபாலனம் அதவா தானம்|

    ஜ்ஞான விஹீன: ஸர்வமதேன

    முக்திம் ந பஜதி ஜன்ம சதேன||

    18. ஸுர மந்திர தருமூல நிவாஸ:

    சய்யா பூதலம் அஜினம் வாஸ:

    ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:

    கஸ்ய ஸுகம் ந கரோதி விராக:||

    19. யோகரதோ வா போகரதோ வா

    ஸங்கரதோ வா ஸங்கவிஹீன:|

    யஸ்யப்ரஹ்மணி ரமதே சித்தம்

    நந்ததி நந்ததி நந்தத்யேவா||

    20. பகவத்கீதா கிஞ்சித்தீதா

    கங்கா ஜலலவ கணிகாபீதா|

    ஸக்ருதபி யேநமுராரி ஸமர்ச்சா

    க்ரியதே தஸ்ய யமேந் ந சர்ச்சா||

    21. புநரபி ஜனனம் புநரபி மரணம்

    புநரபி ஜனனீ ஜடரே சயனம்|

    இஹ ஸம்ஸாரே பஹுதுஸ்தாரே

    க்ருபயா பாரே பாஹிமுராரே||

    22. ரத்யா கர்பட விரசித கந்த:

    புண்யா புண்ய விவர்ஜித பந்த:|

    யோகீ யோக நியோஜித சித்தோ

    ரமதே பாலோந்மத்த வதேவ

    23. கஸ்த்வம் கோ(அ)ஹம் குத ஆயாத:

    கா மே ஜனனீ கோ மே தாத:|

    இதி பரி பாவய ஸர்வம் அஸாரம்

    விச்வம் த்யக்த்வா ஸ்வப்ந விசாரம்||

    24. த்வயி மயி ச அந்யத்ரைகோ விஷ்ணு:

    வ்யர்த்தம் குப்யஸி மயி அஸஹிஷ்ணு:|

    ஸர்வஸ்மின்னபி பச்யாத்மானம்

    ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேத ஜ்ஞானம்||(பஜ...)

    25. சத்ரௌமித்ரே புத்ரே பந்தௌ

    மா குரு யத்னம் விக்ரஹ ஸந்தௌ|

    பவ ஸமாசித்த: ஸர்வத்ர த்வம்

    வாஞ்ச்சஸ்ய சிராத் யதி விஷ்ணுத்வம்||

    26. காமம் க்ரோதம் லோபம் மோஹம்

    த்யக்த்வாத் மானம் பாவய கோ(அ)ஹம்|

    ஆத்மஜ்ஞான விஹீனாமூடா:

    தே பச்யந்தே நரக நிகூடா:||(பஜ...)

    27. கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்

    த்யேயம் ஸ்ரீபதி ரூப மஜஸ்ரம்

    நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்

    தேயம் தீன ஜநாய ச வித்தம்||

    28. ஸுகத: க்ரியதே ராமாபோக:

    பச்சாத் தந்த சரீரே ரோக:|

    யத்யபி லோகே மரணம் சரணம்

    ததபி ந முஞ்சதி பாபாசரணம்||

    29. அர்த்தமநர்த்தம் பாவய நித்யம்

    நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்|

    புத்ராதபி தநபாஜாம் பீதி:

    ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:||

    30. ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்

    நித்யாநித்ய விவேக விசாரம்|

    ஜாப்ய ஸமேத ஸமாதி விதாநம்

    குர்வவதானம் மஹதவதானம்||

    31. குருசரணாம்புஜ நிர்பர பக்த:

    ஸம்ஸாராத சிராத்பவ முக்த|

    ஸேந்த்ரிய மானஸ நியமாதேவ

    த்ரக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்த்தம் தேவம்||

    நாடுவோம் அவரை

    திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் செஞ்சொற்

    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

    ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

    காதலால் கூப்புவர் தம் கை

    உலகில் உள்ள எல்லா மக்களுமே இறை சிந்தனை கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் கொண்ட பக்தி வகைதான் வேறுபாடு கொண்டிருக்கும். அவரவர்கள் நம்பும் சமயம் காட்டும் வழியில், தங்கள் பக்தியை அவர்கள் வெளிக்காட்டுவார்கள்.

    புராண காலத்தில் வாழ்ந்தவர்கள் இரண்டு குணங்களைப் பெற்றிருந்தார்கள். ஒன்று தெய்வ குணம்; மற்றொன்று அசுர குணம். தெய்வகுணம் கொண்டவர்கள் தேவர்களானார்கள்; அசுரகுணமுடையோர் அரக்கர்கள், அசுரர்கள் என அழைக்கப்பட்டனர்.

    நிலையற்ற புத்தி கொண்ட அசுரர்கள் தேவர்களை நாடி வேண்டி வித்தியாசமான வரங்களைப் பெற்று, ‘வரம் கொடுத்தவன் தலை மீதே’ கை வைக்கும் நன்றி கொன்றவர்களாகத் திகழ்ந்து, தர்மம் விதித்த வழிப்படி அழிந்தும் போனார்கள்.

    இல்லறத்தை நல்லறமாக நடத்தி, இறை வழிபாடு பூண்டு வாழ்ந்து, முக்தி பெற்றோர் பலரிருக்க, பிரம்மசர்ய விரதம் பூண்டு, வனத்தில் கடுமையாகத் தவம்புரிந்து இறுதியில் பகவானின் திருப்பாதங்களை அடைந்த, அனேகருமுண்டு.

    உலகத்தில் ஒரு கட்டத்தில் அதர்மத்தின் கை ஓங்கியிருந்தது. இதன் விளைவால் இந்துமதக் கோட்பாட்டைக் கடைபிடித்துக் கொண்டிருந்த பலர், புதிதாகத் தோன்றிய சில மதகுருமார்களின் உபதேசங்களால் கவரப்பட்டு, அம்மதங்களைத் தழுவும் நிலை ஏற்பட்டது. இதனால் புராதன இந்து மதம் க்ஷீணித்துவிடுமோ என்ற பயம் சான்றோர்களுக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

    இந்தக் காலகட்டத்தில்தான் மகான் ஸ்ரீ ஆதி சங்கரர் காலடி புண்ணியபூமியில் அவதரித்தார். ஆதி சங்கரர் தன் கரத்தில் ‘அத்வைத பிரம்மம்’ என்ற ஒளிவிளக்கை ஏந்தி இருண்டு கொண்டிருந்த இந்துமத உலகில் பிரவேசித்தார். அதன்பிறகோ அவர் காலடியில் உலகமே!

    பூலோகத்தில் குறைந்த ஆயுளே கொண்டு வாழ்ந்த சங்கரர், உலகத்தோர் நிறைவான வாழ்வு பெற, ஆற்றிய இந்துமதத் தொண்டுகள் கணக்கற்றவை!

    ஆதிசங்கரர் பல அரும்பெறும் நூல்களைப் படைத்திருந்தாலும் அவற்றில் தலை சிறந்து விளங்கும் நூலாகத் திகழ்வது 'மோக முத்தரா' ஆகும்.

    'மோகத்திலிருந்து மீளல்' என்ற சிறப்பு அடைமொழி கொண்ட 'பஜ கோவிந்தம்' நூல் சங்கரரால் இயற்றப்படுவதற்கு சுவாரசியமான ஒரு பின்னணி அமைந்துவிட்டது இப்படி.

    ஒருநாள் ஆதிசங்கரர் தம்முடைய 14 சீடர்கள் புடைசூழ காசித்தலத்தில் சுற்றுப்பயணமாக நடந்து வந்துகொண்டிருந்தார். தற்செயலாக ஒரு இடத்தில் அவர் பார்வை சென்றபோது, அங்கே ஒரு வடமொழிப்புலவர் சில இலக்கண விதிகளை வாய்விட்டுக் கூறி மனப்பாடம் செய்துகொண்டிருந்ததைக் காண நேர்ந்தது.

    புன்னகையுடன் அந்தப் புலவரை அணுகிய சங்கரர், எதற்கு இந்த பயனற்ற வேலை? உனது திறமையைப் பறை சாற்றிக்கொள்ளவே உதவும் இது; சாவு உன்னை நெருங்கும் வேளையில் இந்த இலக்கணம் உன்னைக் காக்காது. எனவே வாழும் காலத்திலேயே, பகவானின் பெருமைகளை உணர்ந்து 'அவரை' நாடி, முக்திப்பேறு அடையும் வழியைப் பார் என அருளினார். அக்கணமே தெளிவு பெற்ற அப்புலவர், சங்கரரை நமஸ்கரித்து விடைபெற்றார்.

    இப்படித்தான் பஜகோவிந்தம் நூல் உருவானதாகச் சொல்லப்படுகிறது. 31 மாணிக்க சுலோகங்களைக் கொண்ட பஜகோவிந்தம், மனித வாழ்க்கையில் உண்டாகும் பலவித வினோதங்களை நமக்கு எடுத்துக்காட்டி, ஆண்டவனின் பாதக் கமலங்களை அடையும் நல்ல வழியைச் சுட்டிக் காட்டுகிறது.

    இந்த பஜ கோவிந்த புனித நூலை வழங்கிய இந்த ஞானிக்கு எம் சிரம் தாழ்ந்த கோடி நமஸ்காரங்கள்!

    குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மஹேச்வர:

    குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

    பஜகோவிந்த நூலில் காணப்படும் கருத்துகளுடன் ஒன்றுபடும் அநேக பக்தி நூல்கள், புராணம், உபநிஷதங்கள், வரலாறுகள், உண்மைச் சம்பவங்கள் இவற்றை மையமாகக்கொண்டே இந்நூல் உருவாகியுள்ளது.

    வெவ்வேறு தலைப்புகளில் பின்வரும் அத்தியாயங்களில் விஷயங்கள் இடம் பெற்றாலும், பஜகோவிந்தத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுலோகங்கள் கொண்டுள்ள அர்த்தங்கள் ஒரே தன்மையைக் கொண்டிருந்தால், தலைப்புக்குப் பொருந்தும்படி அவை பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பஜ கோவிந்த நுலில் உள்ள வரிசைகிரமம் இங்கே கையாளப்படவில்லை.

    தனது காசிப் பயணத்தில் கண்ட சமஸ்கிருத வித்வானைக் கருத்தினிற்கொண்டு ஆதிசங்கரர் இயற்றிய முதலாம் சுலோகமிது:

    ‘பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்

    கோவிந்தம் பஜ மூடமதே|

    ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

    நஹி நஹிரட்சதி டுக்ருஞ்கரணே||’

    (பஜகோவிந்தம் சுலோகம் - 1)

    'ஏ மூடா! உனக்கு விதி மரண நாளை நிச்சயிக்க, அது உன்னை நெருங்கும் நேரம், இலக்கண விதிகள் உன்னைக் காக்காது! எனவே அந்த கோவிந்தனை, அந்த கோவிந்தனை நாடு! அவனுக்கு உனது வாக்காலும் உடலாலும் சேவை செய்' என்ற திரண்ட கருத்தை அது கொண்டுள்ளது.

    இப்பாடல் தொடங்கி, கடைசிப்பாடல் முடிய பாமரன் ‘இறைவனை நாடவேண்டும்; அதன் பலன்களை உய்விக்கவேண்டும்’ எனத் தெளிவாக அருளியுள்ளார் காலடி வழங்கிய அந்த அவதார புருஷர்!

    பரமாத்மாவை நாடுபவனின் உள்ளம் ‘அவரிடமே லயித்துக் கிடக்கும். இதனால் உலக விஷயங்கள் யாவும் அவனுக்கு அற்பமே! 'சத்சித் ஆனந்த நிலை' அவனுடையதாக, துறவிக்கு வேந்தனும் துரும்பாகிவிடுகிறான்.

    'இறைவனை நாடுபவனுக்கு சம்சாரக் கடலிலிருந்து விடுதலை எளிதில் கிட்டும்; தன்னை அவன் கடைத்தேற்றிக்கொண்டு அக்கரை சேரமுடியும்; எனவே இத்தகையவன் கடவுளை அடைந்து செய்யவேண்டியதைச் செய்து மனநிறைவு பெற்று தனக்குத்தானே தோழன் ஆக முடிகிறது' என பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயமான ‘ஆத்ம ஸம்யம யோகம்’ நமக்குப் புலப்படுத்தும்.

    மெய்ப்பொருளை அடைய விரும்புவோர்களுக்கு ஆசையற்ற தூயநிலை கிட்டும் என்பதை திருவள்ளுவர் இக்குறள் மூலம் எடுத்துச் சொல்ல, அந்தத் தூயநிலையின் முடிவே, பரமாத்மாவின் திருவடி தரிசனமாகிறது.

    ‘தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

    வாஅய்மை வேண்ட வரும்.'

    (குறள் எண் 364)

    நாம் ஓரடி இறைவன் பக்கம் எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி 1000 அடிகள் எடுத்து வைப்பார் என்பதை வரும் இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டும்!

    திருவஞ்சை களம் என்ற நாட்டைத் தன் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான் அரசன் சேரமான் பெருமாள். சிவபிரானின் தீவிர பக்தனாகிய அவனுக்குத் திடீரென வாழ்க்கையில் வெறுப்பு தோன்றிவிட்டது. இனி கைலாய நாதனின் பாதக் கமலமே தனக்கு கதி எனத் தீர்மானித்து அவன் தினமும் நெக்குருக பரமசிவனை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தான்.

    சேரமான் பெருமாளின் பக்குவநிலையை சிவனார் அறிந்து கொண்டு, அந்த மன்னனை சகல மரியாதைகளுடன் தேவலோக ஐராவத யானையில் ஊர்வலமாக, தன்னிடம் அழைத்து வரும்படி, தன் சிவகணங்களுக்கு ஆக்ஞையிட்டார். இதுவரை எவரும் கைலாய நாதன் இருப்பிடத்திற்கு இப்படிச் சிறப்பாக அழைக்கப்படவில்லை என்பதை அறிந்து, முப்பத்து முக்கோடி தேவர்களும் அதுபற்றி வியப்புடன் பேசி மகிழ்ந்தனர். இதற்குக் காரணமாக அமைந்தது திருமாக்கோதையார் என்ற மறுபெயர் கொண்ட அவ்வரசன் பூண்ட பக்திதான்!

    உபநிடதத்தில் 'வரர்' என்று மனிதர்களிலேயே உத்தம நிலையை அடைந்த குருமார்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த 'வரர்' உதவியின்றியே வி.ஐ.பி. அந்தஸ்து என்பதை 'பரமேசுவரர்' தயவால் முக்தி என்ற பிரமோஷனைப் பெற்ற மன்னன் சேரமான் பெருமாள், பாக்கியசாலியே!

    நான் என்பது அகங்கார நிலை; நாம் என்பது பரமாத்மா. இதை உணரும் நாம், ஈசுவரன் மீது பக்தி செலுத்த 'சாயுஜ்ய முக்தி ' கிட்டும்.

    அது என்ன சாயுஜ்ய முக்தி?

    காவிரி நதி ஓடும் வரை அது காவிரிதான். அந்நீர் கடலில் சங்கமிக்கையில் காவிரி என்ற பெயர் போயே போய்விடும்.

    மனம் என்பது எதைத் தாங்குகிறதோ அதற்கு 'ஜீவி' என்று பெயர். பரமாத்மாவான பிரம்மத்துடன் ஐக்கியப்பட்ட பிறகு எந்தத் தனிக்குணமும் வாசனையும் ‘ஜீவி’க்குக் கிடையாது. இதைத்தான் 'சாயுஜ்ய முக்தி' என்பார்கள்.

    இறைநாடி பக்தி செலுத்தவேண்டும் என்று மகான்கள் வலியுறுத்துவதுபோலவே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தன் கருத்தை இக்கவிதை வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

    'பக்தியுடையோர் காரியத்திற் பதறார்!

    மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும்

    தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்' என்று.

    பக்தி இதயபூர்வமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் அது வீணே!

    என் பக்தி பெரிதா?

    உன் பக்தி பெரிதா?

    இந்தப் போட்டி எழுந்த இடம் ஸ்ரீவைகுண்டத்தில்தான். ருக்மணி, சத்யபாமா இருவரிடையே எழுந்த இந்த வாதத்தில் தீர்ப்பளிக்க அவர்கள் தங்கள் கணவர் கண்ணனை அணுகினர்.

    வாருங்கள் இருவரும்! நதியில் ஸ்நானம் செய்துவிட்டு பிறகு, இதற்கான சரியான விடைதருகிறேன் என கிருஷ்ணன் அவர்களை அருகில் உள்ள புண்ணியந்திக்கு அழைத்துச் சென்றார். அங்கு தற்செயலாக வருகை புரிந்திருந்த ராதையைக் கண்டு ருக்மணியும் சத்யபாமாவும் மகிழ்ச்சி அடைந்து ராதைக்கு சுவை மிகுந்த சூடான பாலை அன்புடன் கொடுத்தனர். ராதையும் ஆனந்தமுடன் கடகடவென அப்பாலை அருந்தினாள்.

    நதிநீராடல் முடிந்து தங்கள் அரண்மனைக்குத் திரும்பி வந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், ஏகாந்த நிலையில் வீற்றிருந்த பரமாத்மாவைக் கண்ட இரண்டு பத்தினிகளும் திடுக்கிட்டுப் பதறினர். காரணம், கண்ணனின் பாதக்கமலங்கள் இரண்டும் கொப்பளித்திருந்ததுதான். இரண்டு பேருமே தங்கள் கண்களிலிருந்து ஆறுபோன்று நீரைப் பெருக்கியவாறே, ஸ்வாமி, ஏன் இப்படி? என அவரைக் கேட்டனர். அதற்கான விளக்கத்தை அந்த வைகுண்டநாதன் இப்படிச் சொன்னார்.

    "அன்புள்ளங்களே! ராதையும் உங்களைப் போன்றே என் மீது அன்பும் பக்தியும் பூண்டவள். எப்போதுமே என் திருவடிகளைத் தனது நெஞ்சில் நிலையாக வைத்து பூஜிப்பவள். அவளுக்கு நதி தீரத்தில் சூடான பாலை அருந்த நீங்கள் கொடுத்தீர்கள் அல்லவா? அவளுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1