Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaliyuga Deivam shirdi Sai
Kaliyuga Deivam shirdi Sai
Kaliyuga Deivam shirdi Sai
Ebook265 pages1 hour

Kaliyuga Deivam shirdi Sai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனிதனுக்குத் துன்பங்கள் பெருகி வரும்போதெல்லாம் இறைச் சிந்தனைகள் பெருக்கெடுப்பது இயல்பு. இப்பூவுலகில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மகான்கள் அவதரித்து மக்களின் துன்பங்களை அகற்றி, அவர்களை நெறிப்படுத்தி, வாழ்க்கையை முறைப்படுத்தி வந்ததை நாம் அறிவோம்.

அந்த வகையில் ஷீரடி எனும் புண்ணிய தலத்தில், துவாரக மாயியாய் வசித்து வரும் கலியுக தெய்வமாம் ஷீரடி சாயியின் அருமை, பெருமைகளை மிக எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580154608387
Kaliyuga Deivam shirdi Sai

Read more from Dr. Jayanthi Nagarajan

Related to Kaliyuga Deivam shirdi Sai

Related ebooks

Reviews for Kaliyuga Deivam shirdi Sai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaliyuga Deivam shirdi Sai - Dr. Jayanthi Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கலியுக தெய்வம் ஷீரடி சாயி

    Kaliyuga Deivam Shirdi Sai

    Author:

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    Dr. Jayanthi Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-jayanthi-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. குருவே சரணம்

    2. வேப்பமரத்தடியில்

    3. வா! சாயி!

    4. துவாரகமாயி

    5. பாபாவும் ஞானிகளும்

    6. பாபாவின் உடை மாற்றம்

    7. பாபாவின் பிட்சை எடுக்கும் முறை

    8. பிள்ளை வரம்

    9. விளக்கு விளக்கிய அற்புதம்

    10. ஜவஹர் அலி எனும் அம்பு

    11. அக்னி குண்டம்

    12. எங்கேயோ கேட்ட குரல்

    13. பாபாவின் பரந்த மனம்

    14. அம்மா என்றால் அன்ப

    15. தேவை விடாமுயற்சியும், நம்பிக்கையும்

    16. அடியாரின் உள்ளக் கிடக்கையை அறிந்த பாபா

    18. ஆசை நிறைவேறியது

    19. உழைப்பின் பெருமையைப் போற்றுதல்

    20. கனவில் அருளல்

    21. கனவில் கிடைத்த மாங்கனிகள்

    22. பாசமலர்

    23. சித்திரம் பேசுதடி

    24. திருவிழா

    25. யாரே அறிவர் சாயியின் உள்ளம்

    26. ஆடும் தெய்வம்

    27. பாபாவின் மகத்தான மருத்துவம்

    28. கருப்பு நாயும் தயிர் சாதமும்

    29. தாயினும் சாலப்பரிந்து

    30. அறுவை சிகிச்சையை அகற்றிய பாபா

    31. வித்தியாசமான சிகிச்சை

    32. அகற்றப்பட்ட புற்றுநோய்க்கட்டி

    33. மரணத்தின் பிடியில் இருந்து

    34. இனிக்கும் சாயி

    35. வா! வா! அன்புச் சகோதரி

    36. ராம சாயி

    37. கனவே கலையாதே

    38. வகுள மலரும் பாபாவும்

    39. எங்கும் நிறைந்தவர்

    40. உன்னோடு நான்

    41. எங்கே என் நிவேத்யம்?

    42. பழம் நீ அப்பா

    43. பாபாவும் பஞ்ச பூதங்களும்

    44. கங்கை யமுனை இங்குதான் சங்கமம்

    45. திரிசூலம்

    46. பண்டரிபுரம் செல்வோம்

    47. மாந்தர் துன்பத்தைத் தாங்கிக்கொள்பவர்

    48. செய்யும் தொழிலே தெய்வம்

    49. பாபாவின் மொழிகளே சட்டம்

    50. அந்தரங்க சாயி

    51. குருவின் வழியில்

    52. வேண்டாம் உண்ணாவிரதம்

    53. நற்கதியை அளிக்கும் உதி

    54. வேதப் பொருளோன்

    55. ஜெரு எடு

    56. அன்னபூரணி

    57. பாபாவின் சாவடி ஊர்வலம்

    58. பாபா இந்துவா?, முஸ்லீமா?

    59. முரளீதரன் சிலை

    60. திரும்பப் பெற்ற ஹுண்டி

    61. விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை

    62. தேவி காட்டிய பாபா

    63. பிரம்ம ஞானம்

    64. கீதையை விளக்கிய பாபா

    65. கதை கேளு கதை கேளு

    66. கண்ணுபடப் போகுதே

    67. ஒற்றை நாணயம்

    68. மரண ஒத்திகை

    69. உடைந்த செங்கல்

    70. சாயி அன்பர்களின் அனுபவங்கள்

    என்னுரை

    மிகப் பெரிய பேரண்டத்தைப் படைத்தும், காத்தும், விளையாடியும் வருபவன் இறைவனே. அதனால்தான் அவனை அலகிலா விளையாட்டுடையான் என்று போற்றுகிறார் கம்பர் பெருமான்.

    மனிதனுள் இறைச் சிந்தனை தோன்றிய காலம் குறித்த செய்திகள் சரியாகத் தெரியாதபோதும், அவன் ஆதியில் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோதே அது தோன்றிவிட்டது என்று எண்ண இடமுண்டு. பண்டைய காலத்தில் நிலங்களை ஐவகையாகப் பகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுளை வணங்கி வந்ததை அறிகிறோம். அச்சம் காரணமாக வந்த இறையுணர்வு பின் படிப்படியாக உயர் பக்தி நிலையைத் தொட்டது. இறைச் சிந்தனையுடன், இசையும் இணைந்து வளரத் தொடங்கியது.

    மனிதனின் உடலுக்கு உணவு எப்படி அவசியமான ஒன்றோ அதுபோல் அவனுடைய ஆன்மாவிற்கு இறைச் சிந்தனை மிக மிக அவசியம். இறைச் சிந்தனை வந்துவிட்டால் இறைவனைப் பற்றிய எண்ணங்களே இமைப் பொழுதும் நீங்காமல் இருக்கும்.

    அத்தகைய இறைச் சிந்தனைகள் நமக்குள் தோன்றுவதற்கும் இறை அருளே தேவை.

    மனிதனுக்குத் துன்பங்கள் பெருகி வரும்போதெல்லாம் இறைச் சிந்தனைகள் பெருக்கெடுப்பது இயல்பு. இப்பூவுலகில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மகான்கள் அவதரித்து மக்களின் துன்பங்களை அகற்றி, அவர்களை நெறிப்படுத்தி, வாழ்க்கையை முறைப்படுத்தி வந்ததை நாம் அறிவோம்.

    "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு."

    எனும் ஐயன் வள்ளுவன் வாய் மொழிக்கேற்ப அன்பர்கள் பலரும் அருளாளர்களை இறுகப் பற்றியவாறு தங்கள் ஊழ்வலியைப் போக்கிக் கொண்டதை அவர்களின் சத் சரிதம் நமக்குச் சொல்கிறது.

    அந்த வகையில் ஷீரடி எனும் புண்ணிய தலத்தில், துவாரக மாயியாய் வசித்து வரும் கலியுக தெய்வமாம் ஷீரடி சாயியின் அருமை, பெருமைகளை மிக எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன்.

    பகவான் ஷீரடி சாயியின் பெருமைகளைப் பேசும் நூல்கள் பல இருக்கையில் இந்நூல் எதற்கு எனும் வினா பலரது உள்ளத்துள் எழலாம். இந்நூலை எழுதுமாறு பாபாவே எனக்குக் கட்டளை இட்டார். ஓர் அறுவை சிகிச்சைக்கு நான் ஆட்பட்டபோது ஒவ்வொரு நொடியிலும் எனக்கு முன்பாக பாபா விரைந்து வந்து என் வலியை, வேதனையை, மனக்கவலையை ஆற்றியதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன். அறுவைச் சிகிச்சையின் போது எனது நெருங்கிய உறவினர் ஷீரடியில் இருந்து உதியைத் தந்தபோது மெய் சிலிர்த்துப்போனேன். இப்பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்தியது பாபாவே!

    என்னை இயக்கியவரும் அவரே! நான் வெரும் கருவி மட்டுமே! வியாழன் தரிசனம் விடியல் நிதர்சனம் என்பதற்கேற்ப அறுவை சிகிச்சை முடிந்த ஆறாம் நாளில் பாபாவிற்கு உகந்த வியாழக் கிழமையில் இதனை எழுதத் தொடங்கினேன்.

    உலகெலாம் ஓதுதற்கு என்று சிவபெருமான் சேக்கிழார் பெருமானுக்கு அடி எடுத்துக் கொடுக்கிறார். குமரகுருபர சுவாமிகளுக்குப் பேசும் ஆற்றலை அளித்ததோடு, தன் கையில் வைத்திருந்த பூவைக் காட்டி பூமேவு செங்கமலப்புத்தேளும் என்று முருகப் பெருமான் பாட வைத்தார். அது போல இந்நூலுக்கும்கலியுக தெய்வம் ஷீரடி சாயி என்ற தலைப்பினைப் பாபாவே எடுத்துக் கொடுத்துள்ளார்

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிறையில் அவதரித்தார்; இயேசு கிறித்து மாட்டுத் தொழுவத்தில் தோன்றினார். மகான்களான நாமதேவர் கோணாயியால் பிம்ராதி ஆற்றிலும், கபீர்தாசர் தமால் என்பவரால் பாகீரதி ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டனர்.

    சாயிபாபா திடீரென உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். 16 வயது இளைஞனாக, ஷீரடியில் உள்ள வேப்ப மரத்தடியில் அவர் முதலில் தோன்றினார். மாயையை அவர் உதறித் தள்ளினாலும் அன்பர்கள் மீது பரிவு கொண்டார். ஞானம் நிரம்பியவராய், கருணை உடையவராய் அவர் திகழ்ந்தார்.

    அன்னாரின் வாழ்வை அறிந்து கொள்வதன் மூலம் மனதிற்கு நிம்மதியும், நிறைவும் உண்டாவது திண்ணம். எண்ணிய எண்ணம் யாவும் ஈடேறும்.

    அவர் புரிந்த அற்புதங்கள் எண்ணற்றவை. தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார்; மகப்பேறு அல்லாதவர்களுக்கு அச்செல்வம் பெற அருள் வழங்கினார். வேலையற்றவர்களுக்கு வேலை கிடைக்க ஆசி வழங்கினார். பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கினார். வாழ்வியல் அறங்களை, வாழ்வியல் விழுமியங்களை மக்களுக்குப் போதித்தார். அத்தகைய கலியுக தெய்வமான ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றைப் பக்தியுடன் படிப்போர்க்கு வேண்டியன யாவும் கிடைக்கும் என்பது உறுதி.

    வாருங்கள்! அவரது அருள் மழையில் நனையுங்கள்!

    ஆனந்தமே சாயி நாமமே!

    அற்புதமே சாயி கீதமே!

    அகண்டமே ஜோதிர்மயமே!

    சுந்தரமே சாயி ரூபமே!

    முனைவர் ஜெயந்தி நாகராஜன்

    ஊரப்பாக்கம், சென்னை 603210

    அலைபேசி எண் 9551717721

    1. குருவே சரணம்

    "நீ என்னை அடைந்தால் நான்

    உன்னைக் கடாக்ஷிக்கிறேன்"

    மஹாராஷ்ட்ராவில் உள்ளது சேலு எனும் சிற்றூர். அவ்வூரில் வெங்கூசா எனும் அந்தணர் வசித்து வந்தார். அன்று அவர் நிலை கொள்ளாமல் இருந்தார். யாரோ ஒருவரை இன்று நான் தரிசிக்கப் போகிறேன் என்பதை வெங்கூசா புரிந்து கொண்டார். வெங்கூசாவிற்குக் கோபால்ராவ் தேஷ்முக் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அவர் வெங்கடேசப் பெருமான் மீது மட்டற்ற பக்தி உடையவர். வெங்கடேச தாசன் என்றே அவர் அன்புடன் அழைக்கப்பெற்றார். பின்னர் அதுவே நாளடைவில் மருவி வெங்கூசா என்றானது என்பர்.

    அவர் கண்கள் அடிக்கடி வாசலையே பார்த்த வண்ணம் இருந்தன.

    வேத சாஸ்திரங்களில் அதீத புலமை பெற்ற அவரிடம் பல மாணாக்கர்கள் பாடம் பயின்று வந்தனர். அவர்களுக்கும் தம் குருவின் பரபரப்பு ஓர் ஆவலை உண்டாக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொள்வதும், கண்களால் என்ன சேதி என்றும் மௌன பாஷை அங்கே அரங்கேறியதை குருநாதரும் காணத் தவறவில்லை.

    அப்போது ஓர் இஸ்லாமியப் பெண்மணி ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு அவ்வீட்டின் முன் நிற்பதை அறிந்த சில மாணவர்கள் அவரைத் தம் குருநாதரிடம் அழைத்துச் சென்றனர்.

    வெங்கூசாவைப் பார்த்ததும் அப்பெண்மணி பணிந்து வணங்கினார். பெரும் ஞானியான அவரது அருள் பார்வை அச்சிறுவன் மேல்பட்டது. இஸ்லாமியப் பெண்மணியுடன் வந்தாலும் உண்மையில் அச்சிறுவன் ஓர் அந்தணக் குழந்தை என்பதைப் புரிந்து கொண்டார். அச்சிறுவனின் பிறப்பின் இரகசியம் அவர் மனக் கண்ணில் விரிந்தது.

    மஹாராஷ்ட்ராவில் நிஜாம் மன்னர்கள் ஆண்ட அக்காலத்தில் அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரி எனும் ஊரும் ஒன்று. அவ்வூரில் ஹரிசாதே எனும் அந்தணர் தம் மனைவி லக்ஷ்மியுடன் வாழ்ந்து வந்தார். (கங்காபவாஜ்யா தேவகிரி அம்மாள் என்று சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) அவர்கள் சிறந்த சிவபக்தர்கள். சதாசிவனை, சதாகாலமும் பூஜித்து வந்தனர்.

    வேதங்களில் கரை கண்ட அவருக்குப் புத்திரப் பேறு இல்லாதது பெருங் குறையாகவே இருந்து வந்தது. அதற்காக அவர்கள் வேண்டாத தெய்வம் இல்லை; போகாத கோவிலும் இல்லை.

    இறையருளால் லக்ஷ்மி அம்மாள் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். சீரோடும், சிறப்போடும் அக்குழந்தையை அவர்கள் வளர்த்து வரும் வேளையில் ஹரிசாதேயின் குடும்ப நண்பர் ஒருவர் அக்குழந்தையைப் பார்க்க வந்தார். அவர் ஜோதிடக் கலையிலும் வல்லவர். குழந்தையின் ஜாதகத்தைக் கணித்தார். இது சாதாரணக் குழந்தை அல்ல; தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்பதைப் புரிந்து கொண்டார்.

    இன்னும் பலவற்றையும் அவர் உணர்ந்து கொண்டார். அக்குழந்தையின் பெற்றோர் விரைவில் வீடு பேற்றை அடைவதோடு, அக்குழந்தை வேறு ஓர் இடத்தில், புதியதொரு சூழலில் வளரும்; பேரும், புகழும் அடையும் என்பதைத் தம் நண்பருக்கும் தெரிவித்துவிட்டார்.

    இதனைக் கேள்விப்பட்ட தினத்திலிருந்து அவர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆசை ஆசையாகப் பெற்ற குழந்தை அனாதை ஆகிவிடுமே என்று எண்ணி எண்ணி மருகினர்.

    ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி, அவர்களது கவலையைப் போக்கினார். இந்தக் குழந்தை கலியுகத்தைக் காக்கவே பிறந்த குழந்தை என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.

    எப்படி, முற்பிறவியில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, பின் அந்தண குடும்பத்தில் வளர்ந்து ராமநாமம் எனும் தாரக மந்திரத்தை உலகெங்கும் கபீர்தாசர் பரப்பினாரோ, அப்படி இப்பிறவியில் அல்லா மாலிக் எனும் உயரிய தத்துவத்தைச் சொல்ல உனக்கு மகனாகப் பிறந்துள்ளார். இது ஓர் அவதாரக் குழந்தை. சிவனின் அம்சமாய் உனக்குப் பிறந்த அம்சமான குழந்தை.

    இனி, இக்குழந்தை இஸ்லாமியரால் வளர்க்கப்படவேண்டும். உலகம் உய்யும் பொருட்டு இத்தியாகம் அவசியம். வருங்காலத்தில் இக்குழந்தை கலியுக தெய்வமாய், தம்மை நாடி வந்தோரையும், தேடி வந்தோரையும் காத்து அருளப் போகிறது, பலப்பல அற்புதங்களை ஆற்றப் போகிறது. எனவே கவலையை விடுங்கள்.

    நாளை காலை ஒரு பக்கீர் வந்து உங்கள் குழந்தையைக் கேட்பார்; அவரிடம் இக்குழந்தையைத் தந்துவிடுங்கள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, வேறு ஒருத்தி மகனாய் வளரப் போகும் உங்கள் குழந்தை அந்த மாயக் கண்ணனை நினைவூட்டுவான்" என்று கூறி மறைந்தார்.

    தந்தை இதனால் மன அமைதி அடைந்தார். ஆனால் தாயோ கண்களில் நீர் பெருக, குழந்தையை அணைத்தபடி உறங்காமல் இருந்தாள். உறங்காவிட்டால் பொழுது விடியாதா என்ன? மறு நாள் பொழுது விடிய, இறைவன் கூறியபடியே ரோஷன் ஷா என்ற ஒரு பக்கீர் அவரது வீட்டு வாயிலில் நின்றார்.

    குழந்தையோ காலைப் பொழுதில் இருந்து ஓயாமல் வீறிட்டு அழுது கொண்டிருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதை எண்ணியா அல்லது இன்னும் தன்னை அழைக்க வராததை எண்ணியா என்பதை அக்குழந்தையின் தாயால் யூகிக்க முடியவில்லை.

    ஆனால் என்ன ஆச்சர்யம்? பக்கீரைப் பார்த்ததும் அதுவரை அழுது கொண்டிருந்த குழந்தை தன் பொக்கை வாயைக் காட்டி சிரித்தது. அழுத காரணத்தைத் தாயார் உணர்ந்து கொண்டு தன் மனதைத் தேற்றிக் கொண்டார். ஒன்றும் கூறாமல் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். குழந்தைப் பேறு இல்லாத அத்தம்பதியர் அக்குழந்தையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணி வளர்த்து வந்தனர்.

    குழந்தைக்கு மஜிதா என்று பெயரிட்டு அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.

    வருடங்கள் உருண்டன. அந்த பக்கீர் வயோதிகத்தால் உடல் நலிந்தார். தன் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்த அவர் தன் மனைவியை அழைத்தார். தன் இறப்பிற்குப் பிறகு குழந்தையை வெங்கூசா எனும் ஞானி வசம் ஒப்படைக்க வேண்டினார்.

    இதோ! அவரது மனைவி, தன் கணவரின் கடைசி வார்த்தையை நிறைவேற்றும் பொருட்டு வெங்கூசாவின் முன் நிற்கிறார். எல்லாவற்றையும் உணர்ந்த அவ்வறிஞர் அக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பினை மகிழ்வோடு ஏற்கிறார். அந்த முகமதியப் பெண் தங்குவதற்கும் ஓர் ஏற்பாட்டைச் செய்து தருகிறார்.

    புதிய சீடனுக்குப் பலவற்றை அவர் கற்றுத் தருகிறார். அப்பாலகனும் அனைத்தையும் விரைவில் கற்றுத் தேர்ந்துவிடுகிறான். அவனை எப்போதும் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு சகலத்தையும் கற்பிக்கிறார். நேற்று வந்த புதிய சீடனுக்குக் குரு காட்டும் பரிவும், பிரியமும் மற்ற மாணாக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் பொறாமை சூழ் கொண்டது.

    Enjoying the preview?
    Page 1 of 1