Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Shirdi Baba
Shirdi Baba
Shirdi Baba
Ebook208 pages1 hour

Shirdi Baba

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைவருக்கும் பணிவான நமஸ்காரம்.
எனது ‘ஷீர்டி பாபா’ என்கிற புது நூல் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எத்தனையோ நூல்கள் வெளி வந்தாலும், ஒவ்வொரு நூல் வெளியாகும்போதும் ஒரு விதமான உற்சாகம்தான். திருவிழாதான். ‘எழுத்தும் ஒரு பிரசவம்தான்’ என்று முதன்முதலாக யார் சொன்னார்களோ தெரியவில்லை... ஆனால், சத்தியம்!
எழுத்துலக வாழ்க்கையில் வெள்ளி விழாவைத் தாண்டி விட்டேன். ஆம்! 25 வருடங்கள் ஓடி விட்டன.
ஆனந்த விகடன் குழுமத்தின் ஆன்மிக இதழான ‘சக்தி விகடன்’ இதழுக்குப் பொறுப்பு ஏற்று, அந்த இதழின் துவக்க நாளில் இருந்து பணி புரியும்போது பேச்சு, மூச்சு எல்லாமே கோயில்களும் மகான்களுமாக ஆகிப் போனது. இதற்கு முன்வரை அனைத்து துறை அன்பர்களையும் பிரபலங்களையும் பேட்டி கண்டும், ஆசிரியர் இலாகாவின் பலதரப்பட்ட பணிகளிலும் இருந்து வந்த என்னை இறைவனே ‘ஆன்மிகத் துறை‘க்கென்று தேர்ந்தெடுத்து ஆட்கொண்டான் போலும்!
சக்தி விகடனில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘திருவடியே சரணம்’, ‘சதுரகிரி யாத்திரை’ உட்பட பல முத்திரைத் தொடர்களை எழுதினேன்.
அதன் பின் பணியாற்றிய ‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’, ‘பர்வத மலை யாத்திரை’, ‘மகா அவதார் பாபாஜி’ போன்ற பேர் சொல்லும் பல தொடர்களை எழுதினேன்.
இவை அனைத்தும் சேர்ந்து ‘ஆன்மிக எழுத்தாளர்’ என்கிற ஒரு முத்திரையை எனக்குப் பெற்றுத் தந்தன. நான் பணி புரிந்த காலத்தில் என்னை ஊக்குவித்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக - அதாவது ஒரு பரிமாண வளர்ச்சியாக தற்போது ‘ஆன்மிக சொற்பொழிவாளர்’ ஆகி உள்ளேன். ‘மகா பெரியவா மகிமை’ உட்பட எண்ணற்ற ஆன்மிகத் தலைப்புகளில் பேசி வருகிறேன். எந்தக் காலத்தில் யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நம் கையில் இல்லை. படைத்தவனுக்குத்தான் எல்லா உரிமையும்.
ஆன்மிகம் மட்டுமே எழுதுகின்ற பெரும் பேறு கிடைத்தபோது பக்தி உணர்வையும், இறை நம்பிக்கையையும் எப்படி எல்லாம் வாசகர்கள் மனதில் தூண்டிவிட முடியும் என்று யோசித்தபோது எழுந்தவைதான் மேலே சொன்ன தொடர்கள்.
‘திருவடி தரிசனம்’ தொடருக்காக பல மகான்களின் சரிதத்தையும் படிக்க நேர்ந்தது. ஷீர்டி பாபாவும் அப்படிதான் எனக்குள் புகுந்தார். பாபாவின் அருளாசியுடன் இந்த ‘ஷீர்டி பாபா’ நூலை ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
உலகெங்கும் இருக்கக் கூடிய அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்படக் கூடிய மகான்களுள் ஷீர்டி பாபாவும் ஒருவர். ‘ஹலோ’ சொல்வதற்கு பதிலாக ‘சாய்ராம்’ என்று சொல்பவர்கள் இன்று அதிகம்.
பாபா வாழ்ந்த காலத்தில் ‘ஷீர்டி’ என்பது ஒரு சாதாரண குக்கிராமம். வானம் பார்த்த பூமி. பாபா அப்போதே கிராமவாசிகளிடம் நெகிழ்வுடன் சொல்வார்: ‘ஒரு நாள் இது பெரிய ஊர் ஆகப் போகிறது. உலகெங்கும் உள்ளவர்கள் இங்கு வரப் போகிறார்கள். இந்த இடம் அனைவரது கவனிப்புக்கும் உள்ளாகப் போகிறது’ என்று. கிராமவாசிகள் அப்போது பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாமல் கேலியாகப் பார்த்து விட்டுப் போவார்களாம். ஆனால், இன்று பாபாவின் வார்த்தைகள் மெய்யாகி, உலகமே ஷீர்டியை நோக்கிப் படை எடுக்கிறது. அந்த மகானுக்கென்று ஷீர்டியில் அமைந்த கோயில்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வருமானம் வரும் கோயில் (முதலாவது திருமலை திருப்பதி என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும்).
அத்தகைய மகானின் வாழ்க்கை பற்றி - அவரது வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை என் எழுத்து நடையில் தந்திருக்கிறேன். ஷீர்டி பாபாவைப் பற்றி எத்தனையோ அன்பர்கள் காலம் காலமாக எழுதி வருகிறார்கள். அத்தகைய பக்தர்களின் உழைப்புக்கும் பக்திக்கும் தலை வணங்கி, இந்த நூலை அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138306233
Shirdi Baba

Read more from P. Swaminathan

Related to Shirdi Baba

Related ebooks

Reviews for Shirdi Baba

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Shirdi Baba - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    ஷீர்டி பாபா

    Shirdi Baba

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கொடுத்து வைத்த ஷீர்டி!

    2. பாபாவும் அவரது குருநாதரும்!

    3. பாபாவின் முதல் தோற்றம்!

    4. பாபாவின் நண்பர்கள்!

    5. ஷீர்டிக்கு பாபா திரும்பிய கதை!

    6. மசூதியில் தங்கிய சாய்பாபா!

    7. பாபா உருவாக்கிய பூந்தோட்டம்!

    8. பாபாவும் மல்யுத்தமும்!

    9. தண்ணீரில் எரிந்த விளக்குகள்!

    10. கோதுமையும் பாபாவும்!

    11. போலீஸ்காரர், பிரசங்கம் செய்த கதை!

    12. பாபாவும் யோகக் கலையும்!

    13. பாபாவும் ஊஞ்சலும்!

    14. ஷாமாவும் பாம்புக் கடியும்!

    15. எங்கும் நிறைந்திருக்கும் பாபா!

    16. பல்லிகள் பேசும் பாஷை!

    17. பேய் மழையை நிறுத்திய பாபா!

    18. மூலே சாஸ்திரிக்கு காட்சி தந்தார்!

    19. நாய்க்குத் தயிர்சாதம்!

    20. பேதியை நிறுத்திய கடலைப் பருப்பு!

    21. மேகாவின் உண்மையான பக்தி!

    22. ஹரித்வார் பக்தரின் சந்தேகம்!

    23. ‘இறப்பு குறித்து வருந்துவானேன்?’

    24. பாபா இந்துவா? முஸ்லிமா?

    25. பாபாவின் இறுதிக் காலம்!

    26. பாபாவின் அமுத மொழிகள்!

    27. கடவுளை தரிசிக்க பாபா சொன்ன வழி!

    28. பிரசித்தி பெற்ற ஷீர்டி

    என்னுரை

    அனைவருக்கும் பணிவான நமஸ்காரம்.

    எனது ‘ஷீர்டி பாபா’ என்கிற புது நூல் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    எத்தனையோ நூல்கள் வெளி வந்தாலும், ஒவ்வொரு நூல் வெளியாகும்போதும் ஒரு விதமான உற்சாகம்தான். திருவிழாதான். ‘எழுத்தும் ஒரு பிரசவம்தான்’ என்று முதன்முதலாக யார் சொன்னார்களோ தெரியவில்லை... ஆனால், சத்தியம்!

    எழுத்துலக வாழ்க்கையில் வெள்ளி விழாவைத் தாண்டி விட்டேன். ஆம்! 25 வருடங்கள் ஓடி விட்டன.

    ஆனந்த விகடன் குழுமத்தின் ஆன்மிக இதழான ‘சக்தி விகடன்’ இதழுக்குப் பொறுப்பு ஏற்று, அந்த இதழின் துவக்க நாளில் இருந்து பணி புரியும்போது பேச்சு, மூச்சு எல்லாமே கோயில்களும் மகான்களுமாக ஆகிப் போனது. இதற்கு முன்வரை அனைத்து துறை அன்பர்களையும் பிரபலங்களையும் பேட்டி கண்டும், ஆசிரியர் இலாகாவின் பலதரப்பட்ட பணிகளிலும் இருந்து வந்த என்னை இறைவனே ‘ஆன்மிகத் துறை‘க்கென்று தேர்ந்தெடுத்து ஆட்கொண்டான் போலும்!

    சக்தி விகடனில் ‘ஆலயம் தேடுவோம்’, ‘திருவடியே சரணம்’, ‘சதுரகிரி யாத்திரை’ உட்பட பல முத்திரைத் தொடர்களை எழுதினேன்.

    அதன் பின் பணியாற்றிய ‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’, ‘பர்வத மலை யாத்திரை’, ‘மகா அவதார் பாபாஜி’ போன்ற பேர் சொல்லும் பல தொடர்களை எழுதினேன்.

    இவை அனைத்தும் சேர்ந்து ‘ஆன்மிக எழுத்தாளர்’ என்கிற ஒரு முத்திரையை எனக்குப் பெற்றுத் தந்தன. நான் பணி புரிந்த காலத்தில் என்னை ஊக்குவித்த இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்த எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக - அதாவது ஒரு பரிமாண வளர்ச்சியாக தற்போது ‘ஆன்மிக சொற்பொழிவாளர்’ ஆகி உள்ளேன். ‘மகா பெரியவா மகிமை’ உட்பட எண்ணற்ற ஆன்மிகத் தலைப்புகளில் பேசி வருகிறேன். எந்தக் காலத்தில் யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நம் கையில் இல்லை. படைத்தவனுக்குத்தான் எல்லா உரிமையும்.

    ஆன்மிகம் மட்டுமே எழுதுகின்ற பெரும் பேறு கிடைத்தபோது பக்தி உணர்வையும், இறை நம்பிக்கையையும் எப்படி எல்லாம் வாசகர்கள் மனதில் தூண்டிவிட முடியும் என்று யோசித்தபோது எழுந்தவைதான் மேலே சொன்ன தொடர்கள்.

    ‘திருவடி தரிசனம்’ தொடருக்காக பல மகான்களின் சரிதத்தையும் படிக்க நேர்ந்தது. ஷீர்டி பாபாவும் அப்படிதான் எனக்குள் புகுந்தார். பாபாவின் அருளாசியுடன் இந்த ‘ஷீர்டி பாபா’ நூலை ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    உலகெங்கும் இருக்கக் கூடிய அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்படக் கூடிய மகான்களுள் ஷீர்டி பாபாவும் ஒருவர். ‘ஹலோ’ சொல்வதற்கு பதிலாக ‘சாய்ராம்’ என்று சொல்பவர்கள் இன்று அதிகம்.

    பாபா வாழ்ந்த காலத்தில் ‘ஷீர்டி’ என்பது ஒரு சாதாரண குக்கிராமம். வானம் பார்த்த பூமி. பாபா அப்போதே கிராமவாசிகளிடம் நெகிழ்வுடன் சொல்வார்: ‘ஒரு நாள் இது பெரிய ஊர் ஆகப் போகிறது. உலகெங்கும் உள்ளவர்கள் இங்கு வரப் போகிறார்கள். இந்த இடம் அனைவரது கவனிப்புக்கும் உள்ளாகப் போகிறது’ என்று. கிராமவாசிகள் அப்போது பாபாவின் மேல் நம்பிக்கை இல்லாமல் கேலியாகப் பார்த்து விட்டுப் போவார்களாம். ஆனால், இன்று பாபாவின் வார்த்தைகள் மெய்யாகி, உலகமே ஷீர்டியை நோக்கிப் படை எடுக்கிறது. அந்த மகானுக்கென்று ஷீர்டியில் அமைந்த கோயில்தான் இன்றைக்கு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வருமானம் வரும் கோயில் (முதலாவது திருமலை திருப்பதி என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும்).

    அத்தகைய மகானின் வாழ்க்கை பற்றி - அவரது வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை என் எழுத்து நடையில் தந்திருக்கிறேன். ஷீர்டி பாபாவைப் பற்றி எத்தனையோ அன்பர்கள் காலம் காலமாக எழுதி வருகிறார்கள். அத்தகைய பக்தர்களின் உழைப்புக்கும் பக்திக்கும் தலை வணங்கி, இந்த நூலை அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    email: swami1964@gmail.com

    https://www.facebook.com/swami1964

    http://pswaminathan.in

    1. கொடுத்து வைத்த ஷீர்டி!

    ஷீர்டி ஸ்ரீசாய்பாபாவைப் பற்றி எத்தனையோ நூல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் சாயி பக்தர்களின் இறை தாகத்தைப் போக்கி விட முடியாது. சாயி பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஷீர்டி பாபாவை பிரதானமாக பிரதிஷ்டை செய்யும் ஆலயங்களும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஷீர்டி மகானின் தரிசனத்துக்காகத் தங்கள் வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று வரும் பக்தர்கள் கூடிக் கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த நூற்றாண்டை - அதாவது இருபதாம் நூற்றாண்டை ‘இந்திய மகான்களின் நூற்றாண்டு’ என்றே நாம் கொண்டாடலாம். அந்த அளவுக்கு கி.பி. 1900-ஆம் ஆண்டில் துவங்கி, நம் தமிழகம் உட்பட இந்திய தேசத்தை எண்ணற்ற மகான்கள் - சத் புருஷர்கள் - சித்தர் பெருமக்கள் தங்களது சாத்வீகத் தன்மையால் ஆண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். எண்ணற்ற மெய்யன்பர்களுக்கு அருள் மழை பொழிந்திருக்கிறார்கள். தங்களது தரிசனம் தேடி எங்கெங்கிருந்தோ வரும் பக்தர்களை ஆசிர்வதித்து, அவர்தம் பிணிகளைத் தீர்த்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    இன்றைக்கு சாமியார்களைத் தேடி அலையும் கூட்டம்தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டமும் அனுகூலமும் இருந்து உண்மையான - தகுதியான சாமியார்களைத் தேடிப் போனால் பிரச்னை இல்லை. அப்படிப்பட்ட உண்மையான சாமியார்களிடம், நாம் எதைத் தேடி அவர்களிடம் போனோமோ அது கிடைத்து விடுகிறது.

    விதி வசத்தால், போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்டால், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இழந்து, கூடுதல் கவலைகளையும் வேதனைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகி விடுகிறது. எப்படி யோக்கியமான ஒரு நல்ல மனிதரை இன்று தேடிக் கண்டுபிடிப்பது சிரமமோ, அதுபோல் இறையருள் பெற்ற - லௌகீகத்துக்கு ஆசைப்படாத ஒரு நல்ல சாமியாரைத் தேடிப் பிடிப்பதும் சிரமமே!

    அதே சமயம் கி.பி. 1900-த்தின் துவக்கத்தில் வாழ்ந்து வந்த நம் முன்னோர்கள் பாக்கியசாலிகள். புண்ணியம் செய்தவர்கள். எண்ணற்ற சித்த புருஷர்களை சந்திக்கும் பாக்கியமும், அவர்களிடம் இருந்து ஆசி பெறும் சந்தர்ப்பமும் போன நூற்றாண்டுவாசிகளுக்கு தாராளமாகவே கிடைத்திருக்கிறது (இதனால்தானோ என்னவோ, குற்றங்களும் கொடுமைகளும் அப்போது குறைவாகவே இருந்திருக்கின்றன. எவரும் பிறர் பொருளுக்கு ஆசைப்படவில்லை). மகான்களின் புனிதமான தரிசனம் பெற்று, தங்கள் பிணிகளையும் கஷ்டங்களையும் அவர்களிடம் சொல்லி, அதற்கு உரிய நிவாரணம் பெற்று நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். இதை எல்லாம் பெரிய கொடுப்பினை என்றும் கிடைத்தற்கரிய ஆறுதல் என்றும்தான் சொல்ல வேண்டும்.

    பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி மகா ஸ்வாமிகள், விசிறி சாமியார், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஞானானந்தகிரி ஸ்வாமிகள், பாம்பன் சுவாமிகள், பாடகச்சேரி சுவாமிகள், புரவிப்பாளையம் கோடி சுவாமிகள், வல்லநாடு சித்தர், மானூர் சுவாமிகள், தங்கவேல் சுவாமிகள், மௌன குரு சுவாமிகள், மாயம்மா, ஜட்ஜ் சுவாமிகள், சாந்தானந்த ஸ்வாமிகள் என்று கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழகத்தைக் கட்டி ஆண்ட மகான்கள் திருப்பெயர்களைப் பட்டியலிடத் தொடங்கினால், அவ்வளவு சுலபமாக அந்த வரிசை முடிந்து விடாது. நீண்டு கொண்டேதான் போகும். இறை அருளால் அவதரித்த இந்த மகான்கள், நேர்மையையும் நீதியையும் மக்களிடத்தே போதித்தார்கள். பக்தியின் அவசியத்தைச் சொல்லி, தெய்வ வழிபாட்டைப் பெருக்கினார்கள். அன்பே அனைத்தும் ஆதாரம் என்பதை அன்றாடம் உபதேசித்தார்கள்.

    இறைவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து அவன் செய்ய வேண்டிய அருட்பணிகளைத் திறம்பட நடத்துவதற்காக இந்த மண்ணுலகில் அவதாரம் எடுத்தவர்களே மகான்கள். இத்தகைய மகான்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டதில்லை. அனைத்தையும் துறந்தவர்கள்தானே மகான்கள்! உணவையும் உடையையும் தேடியதில்லை. தினம்தோறும் பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று பிட்சை எடுத்து, அதை உண்டார்கள். காஷாய வஸ்திரத்தை அணிந்து கொண்டார்கள். இன்னும் சிலர் அவதூதராகவே (ஆடை ஏதும் அணியாமல்) திரிந்தார்கள்.

    தங்களைத் தேடி வந்த ஒவ்வொரு பக்தரையும் நல்வழிப்படுத்தினார்கள். யார் யாருக்கு - அவரவர்களது கர்ம வினைகளுக்கு உட்பட்டு என்னென்ன அருள முடியுமோ, அதை அருளினார்கள். தேசாந்திரம் முழுக்கப் பயணம் செய்தார்கள். இறைவன் அனுமதித்த காலம் வரை வாழ்ந்தார்கள். தங்களது அவதார நோக்கம் பூர்த்தியான வேளை அறிந்தததும், இந்த மண்ணுலகைத் துறந்தார்கள். முன்கூட்டியே அதை பக்தர்களுக்கும் அறிவித்தார்கள்.

    இத்தகைய காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் ஷீர்டி என்கிற குக்கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட ஸ்ரீசாய்பாபா, முக்கியமான அவதார புருஷர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது அகமது நகர் மாவட்டம். அங்குள்ள ஒரு தாலூகா - கோபர்கான். இந்த தாலூகாவில் அமைந்துள்ள பல கிராமங்களுள் ஷீர்டியும் ஒன்று. வெறும் மண் குடிசைகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட அந்த குக்கிராமம், இன்று உலகையே தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது என்றால், அது பாபாவின் அருள் இன்றி வேறு இல்லை.

    ஷீர்டி அமைந்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நிவ்ருத்தி, ஞானதேவர், முக்தாபாய், நாமதேவர், கோரா, ஏக்நாத், துக்காராம், நரஹரி, ராமதாஸர் போன்ற எண்ணற்ற மகான்கள் அவதாரம் செய்துள்ளனர்.

    பாபாவின் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை (சிலர் சில தகவல்களைச் சொன்னாலும், அதை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை). ஷீர்டி பாபாவின் பெற்றோர் யார், எந்த ஆண்டில், எந்த ஊரில் அவதரித்தனர் என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. தெய்வ அவதாரங்களின்போது ஆதாரத்தையும் வாழ்க்கைக் குறிப்புகளையும் வலியப் போய்த் தேடக் கூடாது.

    ஷீர்டி சாய்பாபா... பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவரது பக்தர்களுக்கு உடலெங்கும் சிலிர்க்கும். அவரது அவதாரமும், அருள்கின்ற மகிமையும் அப்படிப்பட்டது. தன் பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் - பிரார்த்தித்த மாத்திரத்தில் அவர்களது எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்கிறார் பாபா.

    இன்றைக்கு உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ள மாபெரும் அவதார புருஷர் - ஷீர்டி சாய்பாபா. ‘சாயி’ என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். ஷீர்டி - இவரது திருவுடல் அடங்கி இருக்கின்ற இடம் என்றாலும், நம் தேசத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் இவருக்கு அநேகமாகத் திருக்கோயில் அமைந்திருக்கிறது. ஷீர்டியில் பாபாவின் சமாதிக்கு எப்படி வழிபாடுகள் நடக்கின்றனவோ, அதுபோல் ஒவ்வொரு ஊர்களில் அமைந்திருக்கின்ற பாபாவின் திருக்கோயிலிலும் அதே வழிமுறைகளைப் பின்பற்றி பூஜைகள் நடந்து வருகின்றன.

    சென்னையை எடுத்துக் கொண்டால், பாபாவின் திருக்கோயில்கள் அமைந்திராத இடமே இல்லை என்று சொல்லலாம். அனுதினமும் இந்த மகானின் திருச்சந்நிதி சென்று அவரைத் தொழுது விட்டுத் தங்கள் அன்றாடப் பணிகளைத் துவக்குபவர்கள் அதிகம் இருக்கின்றார்கள். தங்கள் வீட்டு பூஜையறையில் பாபாவுக்கு என்று ஒரு முக்கிய இடம் கொடுத்து வழிபட்டு வரும் அன்பர்கள் பல லட்சக்கணக்கானோர் உண்டு. தவிர, வாகனங்களில் ஸ்டிக்கர் படத்தையும், சட்டை பாக்கெட்டுகளில் அவரது திருவுருவப் படத்தையும், தங்கள் கைப்பைகளில் பாபாவின் அவதார வாழ்வு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு எந்நேரமும் தன்னையே சுவாசித்துக் கொண்டிருக்கும் பக்தகோடிகளுக்கு இன்றளவும்

    Enjoying the preview?
    Page 1 of 1