Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chuttigale, Koyilukku Pogalama?
Chuttigale, Koyilukku Pogalama?
Chuttigale, Koyilukku Pogalama?
Ebook168 pages1 hour

Chuttigale, Koyilukku Pogalama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோயிலுக்கு ஏன் போகவேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள், அங்கிருக்கும் கடவுளர்கள், அவர்களுடைய தாத்பர்யங்கள், சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம். பெரியவர்களுடைய சில சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.

கோயிலுக்குள் போவதற்கு முன்னால்......

கோயில் இல்லா ஊரே இப்போது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். பக்தர்களின் எண்ணிக்கையும் இப்போது கோயில்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆன்மிக விஷயங்களைப் பற்றி பல பெரியவர்கள் வழி வழியாகத் தமக்குத் தெரிந்த தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற பலவகை தகவல் தொடர்பு சாதனங்கள் பிற எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்குவதுபோல ஆன்மிக விஷயங்களையும் விரிவாகவே அலசுகின்றன.

புராணம் என்பது நமக்கெல்லாம் முந்தைய பல நூறு ஆண்டகளுக்கு முன்பு நடந்திருக்கக் கூடிய சம்பவங்களைப் பற்றிய வர்ணனைதான். ஆனால், பெரும்பாலும் வாய்வழியாகவே இந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டு வந்திருப்பதால், ஒவ்வொருவரும் தாம் கேள்விப்படட அந்தத் தகவல்களை அடுத்தவருக்குத் தெரிவிக்கும்போது தம் ஊகங்களுடனும், அந்தந்த காலத்திற்கு ஏற்ற முறையில் மாறுதல்களுடனும் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக, இப்படிச் சொல்லப்பட்டவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக, தனிமனித மன வளர்ச்சிக்காக, பொதுவான சமுதாய முன்னேற்றத்துகாகவே உதவின.

இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம். உணவு, இருப்பிடம், படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் என்று எல்லாவற்றையும் நாம் சமுதாயத்திடமிருந்துதான் பெறுகிறோம். தனி மனிதனாக நம்மால் இதையெல்லாம் சாதிக்கவே முடியாது. ஒவ்வொருவரும், எதற்காகவாவது யாரையாவது சார்ந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இப்படி நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சமுதாயத்திற்கு நாம் பிரதி உபகாரமாக எதையாவது செய்கிறோம்.- அதாவது நமக்குக் கிடைக்கும் வசதிகள் பிறருக்கும கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், நாம் ஏதாவது ஒரு வகையில் பணமாகவோ, பொருளாகவோ, உடல் உழைப்பாகவோ கொடுக்கிறோம். இது ஒரு வகையில் நம் சமுதாயத்துக்கு நாம் காட்டும் நன்றி உணர்வின் வெளிப்பாடுதான்.

அதே போலதான் கடவுளும். நமக்குப் பிறவி கொடுத்து, உயிர் கொடுத்து, உடல் கொடுத்து, இந்த சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக வாழ வழி செய்து கொடுத்த அந்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? அந்த நன்றி வெளிக்காட்டுதலுக்குப் பெயர்தான் பக்தி செலுத்துதல். இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப, நம் மனநிலைக்கு ஏற்ப, நம வசதிக்கேற்ப அந்த பக்தியை வெளியிட முடிகிறது; அதற்குப் பல சலுகைகளும் உண்டு. ஒருவரைப்போல மற்றவர் என்றில்லாமல், ஒவ்வொருவருமே தனித்தனி நடைமுறைகளுடன் இறைவனுக்கு பக்தி செலுத்துவது சாத்தியமாகிறது; எந்த வகையிலும் நம் நன்றியைக் காணிக்கையாக்க முடிகிறது.

அந்த நன்றி அறிவிப்பில் ஒன்றுதான் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது. அப்படிப்பட்ட ஒரு பொதுவான சமுதாய அமைப்பாகத் திகழும் கோயில், அதனுள் இருக்கும் சுவாமி சந்நதிகள், கோயிலில் மேற்கொள்ளவேண்டிய சில நடைமுறைகள் என்று பல விஷயங்களை, இந்தப் புத்தகம் உங்களுக்குத் தருகிறது. கோயில் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இதைக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஏற்கெனவே சொன்னபடி ஒவ்வொரு பக்தரும் தத்தமது இசைவுக்கேற்றபடி பக்தி செலுத்தும் நடைமுறையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அத்தகைய பக்தி நடைமுறைகள் அனைத்தையும் இடம்பெறச் செய்ய முடியாவிட்டாலும், ஒரு பொதுவான, கோயில் அறிமுக தகவல்களுடன் கூடிய புத்தகமாக இதனைக் கருதலாம்.

குறிப்பாக சிறு பிள்ளைகள் ஆன்மிக விஷயங்களில் பல தகவல்களை அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூறும் புத்தகம் இது என்றும் சொல்லலாம்.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580130605698
Chuttigale, Koyilukku Pogalama?

Read more from Prabhu Shankar

Related to Chuttigale, Koyilukku Pogalama?

Related ebooks

Reviews for Chuttigale, Koyilukku Pogalama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chuttigale, Koyilukku Pogalama? - Prabhu Shankar

    http://www.pustaka.co.in

    சுட்டிகளே, கோயிலுக்குப் போகலாம்?

    Chuttigale, Koyilukku Pogalama?

    Author:

    பிரபு சங்கர்

    Prabhu Shankar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/prabhu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சுட்டிகளே, கோயிலுக்குப் போகலாம், வாங்க!

    ரெடியா, கோயிலுக்குப் போகலாமா?

    1. கோபுர தரிசனம், கோடி புண்ணியம்!

    2. துர் எண்ணங்களை பலியிடு

    3. பெருமை வாய்ற்த பிள்ளையார்

    4. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......!

    5. புத்தி தரும் தட்சிணாமூர்த்தி

    6. தீய குணம் விலக்கும் துர்க்கை

    7. சிவன் கோயில் காவலர், சண்டிகேஸ்வரர்!

    8. கோஷ்ட தெய்வங்கள்

    9. சிவபெருமானின வாகனம் நந்தி

    10. சிவபெருமானின் பல ரூபங்கள்

    11. சிவன் தலையில் பிறச் சந்திரன் எப்படி வந்தது?

    12. அம்மன் ஒரு கலங்கரை விளக்கம்

    13. அர்த்தநாரீஸ்வரர் என்பவர் யார்?

    14. பயம் போக்கும் பைரவ தரிசனம்

    15. அர்ச்சாவதாரப் பெருமாள்

    16. சிந்தூர ஆஞ்சநேயர்

    17. சுவாமி ஊர்வலம்

    18. சுவாமி விக்ரகங்கள்

    19. நவகிரக தரிசனம்

    சுட்டிகளே, கோயிலுக்குப் போகலாம், வாங்க!

    கோயிலுக்கு ஏன் போகவேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள், அங்கிருக்கும் கடவுளர்கள், அவர்களுடைய தாத்பர்யங்கள், சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம். பெரியவர்களுடைய சில சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.

    கோயிலுக்குள் போவதற்கு முன்னால்......

    கோயில் இல்லா ஊரே இப்போது எதுவும் இல்லை என்றே சொல்லலாம். பக்தர்களின் எண்ணிக்கையும் இப்போது கோயில்களில் மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆன்மிக விஷயங்களைப் பற்றி பல பெரியவர்கள் வழி வழியாகத் தமக்குத் தெரிந்த தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். புத்தகங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற பலவகை தகவல் தொடர்பு சாதனங்கள் பிற எல்லா விஷயங்களையும் தெளிவாக விளக்குவதுபோல ஆன்மிக விஷயங்களையும் விரிவாகவே அலசுகின்றன.

    புராணம் என்பது நமக்கெல்லாம் முந்தைய பல நூறு ஆண்டகளுக்கு முன்பு நடந்திருக்கக் கூடிய சம்பவங்களைப் பற்றிய வர்ணனைதான். ஆனால், பெரும்பாலும் வாய்வழியாகவே இந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டு வந்திருப்பதால், ஒவ்வொருவரும் தாம் கேள்விப்படட அந்தத் தகவல்களை அடுத்தவருக்குத் தெரிவிக்கும்போது தம் ஊகங்களுடனும், அந்தந்த காலத்திற்கு ஏற்ற முறையில் மாறுதல்களுடனும் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் பொதுவாக, இப்படிச் சொல்லப்பட்டவையெல்லாம் ஆக்கபூர்வமானதாக, தனிமனித மன வளர்ச்சிக்காக, பொதுவான சமுதாய முன்னேற்றத்துகாகவே உதவின.

    இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம். உணவு, இருப்பிடம், படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் என்று எல்லாவற்றையும் நாம் சமுதாயத்திடமிருந்துதான் பெறுகிறோம். தனி மனிதனாக நம்மால் இதையெல்லாம் சாதிக்கவே முடியாது. ஒவ்வொருவரும், எதற்காகவாவது யாரையாவது சார்ந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. இப்படி நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சமுதாயத்திற்கு நாம் பிரதி உபகாரமாக எதையாவது செய்கிறோம்.- அதாவது நமக்குக் கிடைக்கும் வசதிகள் பிறருக்கும கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், நாம் ஏதாவது ஒரு வகையில் பணமாகவோ, பொருளாகவோ, உடல் உழைப்பாகவோ கொடுக்கிறோம். இது ஒரு வகையில் நம் சமுதாயத்துக்கு நாம் காட்டும் நன்றி உணர்வின் வெளிப்பாடுதான்.

    அதே போலதான் கடவுளும். நமக்குப் பிறவி கொடுத்து, உயிர் கொடுத்து, உடல் கொடுத்து, இந்த சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக வாழ வழி செய்து கொடுத்த அந்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? அந்த நன்றி வெளிக்காட்டுதலுக்குப் பெயர்தான் பக்தி செலுத்துதல். இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப, நம் மனநிலைக்கு ஏற்ப, நம வசதிக்கேற்ப அந்த பக்தியை வெளியிட முடிகிறது; அதற்குப் பல சலுகைகளும் உண்டு. ஒருவரைப்போல மற்றவர் என்றில்லாமல், ஒவ்வொருவருமே தனித்தனி நடைமுறைகளுடன் இறைவனுக்கு பக்தி செலுத்துவது சாத்தியமாகிறது; எந்த வகையிலும் நம் நன்றியைக் காணிக்கையாக்க முடிகிறது.

    அந்த நன்றி அறிவிப்பில் ஒன்றுதான் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது. அப்படிப்பட்ட ஒரு பொதுவான சமுதாய அமைப்பாகத் திகழும் கோயில், அதனுள் இருக்கும் சுவாமி சந்நதிகள், கோயிலில் மேற்கொள்ளவேண்டிய சில நடைமுறைகள் என்று பல விஷயங்களை, இந்தப் புத்தகம் உங்களுக்குத் தருகிறது. கோயில் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இதைக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஏற்கெனவே சொன்னபடி ஒவ்வொரு பக்தரும் தத்தமது இசைவுக்கேற்றபடி பக்தி செலுத்தும் நடைமுறையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். அத்தகைய பக்தி நடைமுறைகள் அனைத்தையும் இடம்பெறச் செய்ய முடியாவிட்டாலும், ஒரு பொதுவான, கோயில் அறிமுக தகவல்களுடன் கூடிய புத்தகமாக இதனைக் கருதலாம்.

    குறிப்பாக சிறு பிள்ளைகள் ஆன்மிக விஷயங்களில் பல தகவல்களை அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூறும் புத்தகம் இது என்றும் சொல்லலாம்.

    ரெடியா, கோயிலுக்குப் போகலாமா?

    வருடாந்திர பரீட்சைகளெல்லாம் முடிந்துவிட்டன. இன்னும் சுமார் இரண்டு மாதங்களுக்கு ஜாலிதான். ஐந்தாவது வகுப்பு படிக்கும் சுட்டிப் பயல், கார்த்திக். இந்த விடுமுறைக்கும் அவனுடைய அப்பாவும் அம்மாவும் அவனை அவர்களுடைய சொந்த கிராமத்துக்கு அழைத்துப்போவதாகச் சொல்லியிருந்தார்கள்.

    'புது வாசல்' என்றழைக்கப்படும் அந்த கிராமம் சிறியதுதான். மொத்தத்தில் சுமார் நூறு வீடுகள் இருக்கலாம். ஆனால் அந்த கிராமத்தில் அழகான கோயில் ஒன்று உண்டு. அந்த கிராமத்துக்கு ரொம்பவும் அதிகமோ என்று நினைக்கவைக்கக் கூடிய அளவுக்கு பெரியது.

    வருடத்திற்கு ஒரு முறையாவது, அந்த கிராமத்துக்குப் போய் வருவது என்பதில் கார்த்திக்கின் பெற்றோர்கள் உறுதியாக இருந்தார்கள். ஒவ்வொரு முறையும் கிராமத்தில் மிகப் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லைதான். மின்சாரம், தொலைபேசி, இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் என்று கிராமத்தைப் புதுமைபடுத்த முயன்றுகொண்டிருந்தன. அந்த கிராமத்தின் பூர்வீகவாசிகளின் வாரிசுகள் அதை விட்டுவிட்டு, வேலை நிமித்தமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகள் என்று தங்கிவிட்டதால், இங்கே சில வீடுகள் சும்மா பூட்டியே கிடந்தன.

    ஆனால் பழைமை மாறாமல், புராதனம் கெடாமல் இன்னும் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருப்பது அந்த கிராமத்தின் கோயில்தான். - ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில். அந்தக் கோயிலுக்குள் எல்லா சுவாமி சந்நதிகளும் இருந்தன.

    கார்த்திக்கின் தாத்தா-, பாட்டி இருவரும் அந்த கிராமத்தில்தான் இருந்தார்கள். வேலை காரணமாகத் தம் பிள்ளைகள் சென்னை, மும்பை என்று வசிக்கப் போய்விட்டலும், அவர்கள் மட்டும் அந்த கிராமத்தைவிட்டு வெளியேறுவதாக இல்லை. அங்கேயே பிறந்து, வளர்ந்து, தன் எழுபது வயது வாழ்க்கையால் அந்த கிராமத்துடனேயே ஒன்றிப் போய்விட்டவர் தாத்தா. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிலுக்குப் போய் சில மணிநேரமாவது இறை சிந்தனையில் ஈடுபட்டிருப்பது அவருடைய தினசரி கடமைகளில் ஒன்று.

    இந்த தாத்தாவைப் பார்ப்பதற்காகவே காத்திருப்பான் கார்த்திக். கடந்த நான்கு வருடங்களாக அவரை அந்த கிராமத்தில் சந்திக்கும் அவனுக்குதான், அவர் எத்தனை விஷயங்கள் சொல்வார்! எத்தனையோ நல்ல கதைகள் சொல்வார். 'தாத்தாவுக்குத் தெரியாததே எதுவும் இல்லையோ' என்று நினைத்து வியப்பான் அவன். இந்த கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு தற்காலத்திய உலக விஷயங்களை அவர் தெரிந்து வைத்திருக்கும் திறமையை வியப்பான். எந்த கேள்வி கேட்டாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல், அலுத்துக் கொள்ளாமல், அவர் சொல்லும் பதில்களால் அவன் மனசு நிறைவடையும்.

    போன வருடம் ஊருக்குப் போய்விட்டு மறுபடியும் தன் பள்ளிக்குத் திரும்பிய அவன், தன் தாத்தாவின் அருமை பெருமைகளை தன் நண்பர்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி சந்தோஷப்பட்டான். அதைக் கேட்ட அவனுடைய தோழர்கள், அடுத்த முறை அவன் கிராமத்துக்குப் போகும்போது தங்களையும் அழைத்துச் செல்லவேண்டுமென்று அவனிடம் கேட்டிருந்தார்கள்.

    அதேபோல இந்த வருடம் வருடாந்திர விடுமுறையில் அவன் ஊருக்குப் புறப்பட திட்டங்கள் போட்டபோது, அவனுடனேயே வர மூன்று சுட்டிகள் தயாராகிவிட்டனர்.

    அமரேசன், நித்யா, பவானி ஆகிய மூவரும் தத்தமது பெற்றோர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டார்கள். கார்த்திக்கின் அம்மா, -அப்பாவும் அந்தக் குழந்தைகளைத் தம் பொறுப்பில் தம் கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக வாக்களித்தார்கள்.

    நால்வர் பட்டாளம் குதூகலத்துடன் 'புது வாசல்' நோக்கிப் புறப்பட்டது. கிராமத்து வாசனைதான் எவ்வளவு ரம்யமாக இருந்தது! கிராமத்தைவிட்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பெரிய சாலையில்தான் போக்குவரத்து இரைச்சலோடு இருந்ததே தவிர, ஊருக்குள் சத்தமாகப் பேசுவதே அநாகரிகம் என்ற அளவுக்கு அமைதி குடிகொண்டிருந்தது. அந்த அமைதியில் பறவைகளின் கீச்சுக் குரலும், மரங்களின் அசைவு ஒலியும், நேரம் தப்பாமல் எழும் கோயில் மணியோசையும், கும்மாளமடித்துக் குளிக்க ஊருக்குள் ஓடும்

    Enjoying the preview?
    Page 1 of 1