Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahaan Shirdi Saibaba!
Mahaan Shirdi Saibaba!
Mahaan Shirdi Saibaba!
Ebook297 pages4 hours

Mahaan Shirdi Saibaba!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“தர்மம் அழிந்து, அதர்மம் தலையெடுக்கத் தொடங்கும் சமயங்களில் எல்லாம் என்னை நானே அவதரித்துக்கொள்வேன். நல்லோரைக் காத்துத் தீயோரை அழிக்க யுகம்தோறும் நான் தோன்றி அருள்வேன்”

இப்படி பகவான் கிருஷ்ணர், தான் வீரன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் ஓதியருளிய பகவத் கீதை புனித நூலில் அளித்த நல்லுரைகளின்படி,

கலியுகத்தில் மனித வடிவில், மகான் ஷீர்டி சாய்பாபாவின் அவதாரம் –-

மராட்டி மாநிலத்தில் உள்ள பாத்ரி என்ற சிற்றூரில், கி.பி. 1854ம் ஆண்டு, புரட்டாசி மாத நவராத்திரியில் இடம்பெறும் புண்ணிய விஜயதசமி நன்னாளில் நிகழ்ந்தது!

அந்த ஞானக்குழந்தை ஆயர்பாடி கண்ணனைப் போல எங்கோ பிறந்து, எங்கோ ஸித்தியாகப் போகும் விந்தையே - இந்த உலக நாடக மேடையில் அரங்கேற்றமாகிறது. ஜெய்சாய்ராம்!

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580141206526
Mahaan Shirdi Saibaba!

Read more from Aroor R. Subramanian

Related to Mahaan Shirdi Saibaba!

Related ebooks

Reviews for Mahaan Shirdi Saibaba!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahaan Shirdi Saibaba! - Aroor R. Subramanian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மகான் ஷீர்டி சாய்பாபா!

    Mahaan Shirdi Saibaba!

    Author:

    ஆருர் ஆர். சுப்பிரமணியன்

    Aroor R. Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aroor-r-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அவதாரக் குழந்தை பாபா

    காட்சி எண்: 1

    பாபாவின் குழந்தைப் பருவம்

    காட்சி எண்: 2

    பாபா ஷீர்டி விஜயம்

    காட்சி எண்: 3

    மகான் பாபா மக்களுக்கு காட்சி தரல்

    காட்சி எண்: 4

    இளைஞன் மாயம்

    காட்சி எண்: 5

    குதிரை – சாந்த்பாய் படேல்

    காட்சி எண்: 6

    மீண்டும் ஷீர்டி விஜயம்

    காட்சி எண்: 7

    ஷீர்டியில் பிட்சை!

    காட்சி எண்: 8

    பயில்வான் மொய்தீன்

    காட்சி எண்: 9

    எண்ணெய் மர்மம்

    காட்சி எண்: 10

    பலப் பரிட்சை!

    காட்சி எண்: 11

    பூசாரிக்கு தலைவலி!

    காட்சி எண்: 12

    பகவத்கீதை இடப்பெயர்ச்சி

    காட்சி எண்: 13

    கைக்குழந்தையும் பாபாவும்!

    காட்சி எண்: 14

    மகான் தற்காலிக மரணம்

    காட்சி எண்: 15

    மகான் எழல்!

    காட்சி எண்: 16

    காகா சாகேப் - மிரீகர் பாம்பு

    காட்சி எண்: 17

    சரஸ்வதி பத்மா

    காட்சி எண்: 18

    மௌலவி சித்திக் பாளங்கே

    காட்சி எண்: 19

    இரண்டாம் தட்சிணை

    காட்சி எண்: 20

    தாஸ்கணு மகராஜ் ஆடம்பரம்

    காட்சி எண்: 21

    நாநாவல்லி எனும் ராமபக்தன்

    காட்சி எண்: 22

    ஸ்ரீராமர் தரிசன காட்சி

    காட்சி எண்: 23

    ராதாபாய் உண்ணாவிரதம்

    காட்சி எண்: 24

    தட்சிணை பேதம்

    காட்சி எண்: 25

    பணிப்பெண் மூலம் உபதேசம்

    காட்சி எண்: 26

    காலரா தேவி

    காட்சி எண்: 27

    பிதலே மகனுக்கு வலிப்பு நோய்

    காட்சி எண்: 28

    உரித்தயிர் பூனை

    காட்சி எண்: 29

    மாம்லத்தார் விருந்து

    காட்சி எண்: 30

    பிரம்ம ஞானம்

    காட்சி எண்: 31

    பகவத் கீதை விளக்கம் நாநாவுக்கு

    காட்சி எண்: 32

    புடவை அதிசயம்

    காட்சி எண்: 33

    துனி அடுப்பு எரியும் தீயில் மகான் கைவிடுதல்

    காட்சி எண்: 34

    கோவிந்த ரகுநாத தபோல்கர் (எ) ஹேமாட்பந்த் முதல் ஷீர்டி விஜயம்

    காட்சி எண்: 35

    மகான் கோதுமை மாவு அரைத்தல்

    காட்சி எண்: 36

    காங்கிரஸ் மாநாடு 1916

    காட்சி எண்: 37

    ராமச்சந்திர படீல் கனவில் பாபா

    காட்சி எண்: 38

    பாபா ஆவேச நிலை

    காட்சி எண்: 39

    புராண உண்மைகள்

    காட்சி எண்: 40

    விஜயதசமி விழாவிற்கு 4 தினம் முன்பு

    காட்சி எண்: 41

    ஷாமா தீக்ஷித் கனவு

    காட்சி எண்: 42

    காகா மகாஜனி வயிற்றுவலி

    காட்சி எண்: 43

    மகான் பாபா சித்தி அடைதல்

    காட்சி எண்: 44

    அவதாரக் குழந்தை பாபா

    இனிமையான புல்லாங்குழல் - பூபாள ராக இசை ஒலிக்கிறது!

    பின்னணிக் குரல்

    "தர்மம் அழிந்து, அதர்மம் தலையெடுக்கத் தொடங்கும் சமயங்களில் எல்லாம் என்னை நானே அவதரித்துக் கொள்வேன்.

    நல்லோரைக் காத்துத் தீயோரை அழிக்க யுகம்தோறும் நான் தோன்றி அருள்வேன்"

    இப்படி பகவான் கிருஷ்ணர், தான் வீரன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் ஓதியருளிய பகவத் கீதை புனித நூலில் அளித்த நல்லுரைகளின்படி,

    கலியுகத்தில் மனித வடிவில், மகான் ஷீர்டி சாய்பாபாவின் அவதாரம், மராட்டி மாநிலத்தில் உள்ள பாத்ரி என்ற சிற்றூரில், கி.பி. 1838ம் ஆண்டு, புரட்டாசி மாத நவராத்திரியில் இடம்பெறும் புண்ணிய விஜயதசமி நன்னாளில் நிகழ்ந்தது!

    அந்த ஞானக்குழந்தை ஆயர்பாடி கண்ணனைப் போல எங்கோ பிறந்து, எங்கோ ஸித்தியாகப் போகும் விந்தையே - இந்த உலக நாடக மேடையில் அரங்கேற்றமாகிறது. ஜெய்சாய்ராம்!

    திரை

    காட்சி எண்: 1

    இடம்: ஒரு சிறிய வீட்டின் வெளிப்புறம், காலைப்பொழுது

    பாத்திரங்கள்: வேதவித்தகர் அரிசாடே, அவன் மனைவி லட்சுமி, பக்கீர்

    (ஒரு சிறிய கட்டில், அதில் தனது இரண்டு மாத வயதே ஆன தன் ஆண்குழந்தை, மடியில் வைத்து, லட்சுமி கண்ணீருடன் செல்லமாகத் தட்டியும், முத்தம் கொடுத்தும் காணப்படல். அப்பொழுது வெளியே எங்கோ போயிருந்த, அவன் கணவர் அரிசாடே வரல்)

    அரிசாடே : என்னம்மா லட்சுமி! இந்த பச்சை உடம்போட, காத்து பலமா அடிக்கற திறந்த வெளிலே உக்காந்திருக்கே…? இது உனக்கும், குழந்தைக்கும் ஒத்துக்காதே அம்மா!

    (சற்று அவளை உற்றுப்பாத்துவிட்டு)

    ஏன் அழறே! உடம்பு சரியில்லையா? வைத்தியரை அழைச்சுகிட்டு வரட்டுமா?

    லட்சுமி : என் உடம்புக்கு ஒண்ணுமில்ல… மனசுதான் சரியில்லை.

    அரிசாடே : நீ எதுக்கும் கலங்காதவளாச்சே… அப்படி என்ன நடந்தது அழற அளவுக்கு…

    லட்சுமி : (தயங்கி அழுதவாறு) நேத்து ராத்திரி ஒரு சொப்பனம் வந்தது…

    அரிசாடே : உனக்குமா (ஆச்சர்யமுடன்)?

    லட்சுமி : அப்படின்னா உங்களுக்கும் அது வந்துதா?

    அரிசாடே : நீ சொல்லு, கண்ட கனவை அப்புறமா நான் சொல்றேன்… அழாம சொல்லு…

    லட்சுமி : ராத்திரி நேத்து 2 மணி இருக்கும். ஒரு கனவு வந்தது. அதிலே ஜோதி வடிவா பகவான் வந்து "உனக்குப் பொறந்த குழந்தை தெய்வீக அம்சமானது. உலகத்திற்கே சொந்தமாக போகும் இதை நீ கட்டாயம் பிரிந்துதான் வாழணும்.

    நாளை பகல் பொழுதிலே உன் வீட்டிற்கே ஒரு பக்கீரு வருவார். அவர்கிட்ட உன் பிள்ளையை தயங்காம ஒப்படைச்சிடு. அவன் எதிர்காலத்திலே உலக குருவா திகழப்போறவன். இது தெய்வ ஆக்ஞை" அப்படீன்னு சொல்லிட்டு ஜோதி மறைஞ்சு போயிடுச்சு. நீங்க நல்லா தூங்கினதால, எழுப்பலை… அதிலேர்ந்து ஒரே துக்கமா இருக்கேன். காலைலே இதை சொல்லாம்னு பாத்தா நீங்க வெகு சீக்கிரமே எழுந்து எங்கோ போயிட்டேள்!

    அரிசாடே : (வியப்புடன்) ஆச்சர்யமா இருக்கே…! லட்சுமி! எனக்கும் உன் கனவு மாதிரி நேத்து இரவு வந்திச்சே…

    லட்சுமி : (கண்ணீரை துடைத்துக்கொண்டு) (வியப்புடன்) அப்படியா?

    அரிசாடே : இப்படி ஒரேவகை கனவு ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல வந்ததால… இது வெறும் சொப்பனம்னு இதை ஒதுக்க முடியாது. இன்னிய பகல்பொழுதிலே, நம்பளைத் தேடி யாராவது பக்கீர் வந்தா… அவர் நம்மக்குழந்தையைத் தரச்சொல்லிக் கேட்டா அது கடவுளோட கட்டளையாத்தான் இருக்கும். நாம சாதாரண மனுஷங்க தெய்வத்தோட ஆக்ஞையை மீறினா… அது குற்றமாயிடுமே?

    லட்சுமி : (பெருகும் கண்ணீருடன்)

    அய்யோ! கேக்கவே பெத்த வயிறு எரியுது. ரொம்ப காலம் கழிச்சு நான் பத்துமாசம் சுமந்து அருமையா, பெத்தக் குழந்தையை எப்படி நான் பிறத்தியார்கிட்டே தூக்கித் தரமுடியும்…? நீங்களே சொல்லுங்களேன்.

    அரிசாடே : அம்மா! வேறெ வழியே இல்லையே… எதிர்காலத்திலே இந்த குழந்தை உலக குருவா வந்தா நமக்கு அது சந்தோஷமான விஷயம்தானே?

    லட்சுமி : (பெருமூச்சுடன்) ம்… ம்… நீங்க நெறைய வேத, சாஸ்திரங்களை படிச்சிருக்கறதாலே அதே மனநிலைலே பேசறேள்…

    நான் அஞ்ஞானி…! (அழுதுகொண்டே) இது தெய்வ ஆக்ஞைங்கறதாலே… அதுவும் இந்த பிள்ளையாலே, உலகிற்கே க்ஷேமம் வரும்ங்கறதாலே… இதை பிரிய அரைமனசோட தயாராயிட்டேன்.

    பக்கீர் : ஐயனே! இந்த வீடுதானே அரிசாடே, லட்சுமி தம்பதிகள் வீடு? நீங்கதானே…?

    அரிசாடே : ஆமாம்! நான்தான் நீங்க தேடி வந்த நபர். என் பெண்டாட்டி லட்சுமி. அவா கையிலே இருக்கிறது எங்க குழந்தைதான்!

    பக்கீர் : (முகமலர்ச்சியுடன்) நல்லது அந்த அல்லாவின் கருணை தங்களுக்கு பரிபூரணமா கிட்டட்டும்!

    என் கனவுலே, வந்த அந்த ஆண்டவன் கட்டளை என்னன்னா… பாத்ரி கிராமத்திலே வாழற அரிசாடே - லட்சுமிக்குப் பிறந்து வளரும் ஆண்குழந்தையை நீ கேட்டு வாங்கி கொஞ்சகாலம் உனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொடுத்து அருமையாக வளர்த்து வா அப்படின்னு…

    தாயே! இந்தப்பிள்ளையை நல்லா வளர்த்து அவனை ஆளாக்குவது நான் இறைவனுக்கு பட்ட கடன்! தங்களுக்கு கவலை ஏதும் வேண்டாம்.

    தாங்கள் என்னை நம்பி உங்கள் பிள்ளையை ஒப்படைக்கலாம் அம்மா!

    (லட்சுமியும், அரிசாடேயும் அந்தக் குழந்தைக்கு பல முத்தங்களை இட்டு, கதறிக்கொண்டே அதை பக்கீரிடம் தர, அவர் மிக பவ்வியமாக அதனை ஏந்திப்பெறுகிறார்)

    பக்கீர் : நீங்கள் பெற்ற குழந்தையை, உங்கள் பாசத்தையும் மீறி என்னை நம்பி ஒப்படைத்ததற்கும், ஆண்டவன் எனக்கிட்ட ஆக்ஞையை நிறைவேற்ற காரணமாக இருந்ததற்கும் என் நன்றிகள்! நான் புறப்படுகிறேன்.

    (அவர் நான்கடி நடந்து நகர)

    லட்சுமி : பக்கீர் ஐயா! கொஞ்சம் நில்லுங்க…

    பக்கீர் : (திகைப்புடன் மீண்டும் வந்து) சொல்லுங்க தாயே!

    லட்சுமி : என் குழந்தையை கொஞ்சம் தாங்க… (தரவே) (அக்குழந்தைக்கு மீண்டும் பல முத்தங்கள் தந்து அழுகையுடன்)

    ஜயா! இவன் பகலெல்லாம் தூங்கி, ராத்திரியெல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு இருப்பான். ஆனா அதிகம் அழறதில்லை… இந்த பச்சை மண்ணை பத்திரமா வச்சு வளர்க்கனும் நீங்க…

    பக்கீர் : (பணிவுடன்) அம்மா! உங்க தாய்மனம் படற வேதனை எனக்கு நல்லா புரியுது. எனது மனைவி பாத்திமா ரொம்ப நல்லவ உங்க மாதிரியே… வருத்தமே வேண்டாம். நிம்மதியா இருங்க…!

    எனக்கு விடை தாருங்கள்!

    (குழந்தையை மீண்டும் பெற்று பக்கீர் நகர)

    (பக்கீர் சென்ற திசை நோக்கி, அரிசாடே - லட்சுமி தம்பதி பார்த்துக்கொண்டே அழுதல்)

    பாபாவின் குழந்தைப் பருவம்

    காட்சி எண்: 2

    இடம்: சேலூர் ஜமீன்தான் கோபால்ராவ் தேஷ்முக் இல்லம்

    (அங்கே காவி உடை பூண்டு தாடி மீசையுடன் வயதான ஒருவர் நாற்காலியில் அமர்ந்து ஒரு நோட்டில் கணக்கு வழக்குகளை பார்த்திருத்தல், அப்போது புதிய நபர், வயதான தோற்றம் பூண்டவர் அங்கு வந்து…)

    புதிய நபர் : ஐயா! ஜமீன் அய்யா இருக்காருங்களா…?

    தாடி

    மீசைக்காரர் : வாங்க ஐயா… நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா…?

    வந்தவர் : (கூர்ந்து பார்த்துவிட்டு) ஐயா நீங்க கெங்காதரராவ் தேஷ்முக் தானே… ஜமீனோட காரியஸ்தர்?

    தாடிக்காரர் : ஆமா… உங்க குரல் கேட்டதா இருக்கே… (வந்தவர்கிட்டே வந்து மேலும், கீழும் பார்த்துப்பிறகு, வியப்புடன்)

    அட! நீங்க ஜமீன்தார் ராவ் சாரோட மனைவி வழி உறவு பலராம்ராவ் தேஷ்முக்தானே பாத்து எத்தனையோ வருஷங்களாச்சே? ஜமீன்தாரோட ஏதோ விஷயமா விரோதப்பட்டு, இளம் வயசிலேயே தெற்கே போனீங்க… இப்பதான் வந்திருக்கிங்க… எனக்கு வயசு 80க்கு மேலே ஆனாலும், கடவுள் புண்ணியத்திலே… ஞாபகசக்தியும், கேக்கற சக்தியும் நல்லாவே இருக்கு…!

    வாங்க உக்காந்து பேசலாம்… எதிரே உள்ள நாற்காலியைக்காட்ட, வந்த பலராம்ராவ் அமர்கிறார்.

    (வீட்டை சுற்றி கண்ணோட்டம் விட்டு)

    பலராம் : என்னங்க… தேஷ்முக் ஐயா… வீட்லே யாரையும் காணாம நிசப்தமா இருக்கே… ஜமீன்தார் எப்படியிருக்கார்?

    காரியஸ்தர் : (சோகமாக) இதுக்கு உடனே பதில் சொல்லமுடியாது. இந்தாங்க குடிக்க நீர் (ஒரு வெள்ளிக்கோப்பையில் தந்து)

    பலராம் : (நீரை அருந்தியவாறே) ஐயா பீடிகை பலமா இருக்கே…?

    காரியஸ்தர் : பலராம் ஐயா… விஷயத்தை சுருக்கமா சொல்லிடறேன்.

    நம்ம ஜமீன்தார் பெரிய கல்விமானாயும், தர்மசிந்தனை, தெய்வபக்தி இவை நிரம்பப் பெற்றவராயும் வாழ்ந்து வந்தது உங்களுக்கு தெரிஞ்ச ஒண்ணுதான்.

    பலராம் : (வருத்தத்துடன்) நான்தான் கேப்பார் பேச்சு கேட்டு, புத்தி கெட்டுப்போய் ஒரு சின்னவிஷயத்திலே ஜமீன் ஐயாகிட்ட மனஸ்தாபபட்டு இனிமே இங்கே வரவே மாட்டேன்னு சபதம் போட்டு கிளம்பிப்போனேன். அந்த தர்மவான் பல தடவை பலபேர்கிட்டே சொல்லிகூட அனுப்பிச்சாரு… திரும்பி வந்திடுன்னு

    அந்த முட்டாள்தனமான கோபக்குணத்திலே தெற்கே போனவன், அங்கேயே கல்யாணம் பண்ணிட்டு தங்கிட்டேன். ரத்தம் சுண்டிப்போனப்புறம்தான் நல்ல புத்தியே வருது… நீங்க சொல்லுங்க…

    காரியஸ்தர் : ஜமீன் அய்யா அதுக்குப்புறம் நிறைய தீர்த்தயாத்திரைகள் போனாரு… அவரு இந்து முஸ்லீம் ஜாதின்னு பேதம் பாக்கறவர் இல்லே… உங்களுக்கே அது தெரியும். திருப்பதி வெங்கடசலபதின்னா அவருக்கு ரொம்ப இஷ்டமில்லே… அதனால தன்னை வெங்கடேஸ்வரதாசன்னு அடிக்கடி பெருமையா சொல்வாரில்ல…

    பலராம் : ஆமா!

    காரியஸ்தர் : ஒருசமயம் ஐயா அகமதாபாத் தீர்த்தயாத்திரை போனப்போ, அங்கே உள்ள சக்தி படைச்ச ‘பீச் அபக்ஷா’ என்ற மகானின் சமாதியை தரிசிக்கப்போறப்போ, அவர் குடிகொண்ட தர்கா சுவர்கள் பலமா அசைய ஆரம்பிச்சு, பிறகு வந்த அசரீரி குரல் நான் பீர் அபக்ஷா பேசுறேன். நீ சென்ற பிறவியில் புனித கபீர்தாசின் குருவான இராமனந்த மகாராஜாவாக காசியில் வாசம் புரிந்தவன். இப்பிறவியில் அந்த கபீர் பாத்ரி கிராமத்தில் அவதரித்துள்ளாய். அல்லாவின் கட்டளை இது. நீ விரைவில் உன்னையடையப்போகும் அந்த கபீர், சாயியாக வர, அந்த சாயியை சீடனாக ஏற்று அனைத்து வேத, சாஸ்திர, கர்மங்களை போதிப்பாயாக" என அவர் யாத்திரை முடித்து வந்த அதே கையோடு என்னிடம் இதனை பகிர்ந்து ஆனந்தம் கொண்டார்.

    பலராம் : (வியப்புடன்) கேட்கவே ஆனந்தமாக உள்ளது. ஒரு மகானுக்கே குருநாதராய் சென்ற பிறவியில் இருந்தவரை, நான் மனஸ்தாபப்பட்டு பிரிந்தது மிக கஷ்டமாகத்தான் உள்ளது. அப்புறம் நடந்தது என்ன? தர்கா மகான் குறிப்பிட்ட சாயி பின்பு வந்தாரா?

    காரியஸ்தர் : நாளாக நாளாக ஜமீன்தாரின், மீது கொண்ட பற்றுகள் அறவே விலகிவிட, அவரை புரிந்துகொண்ட உள்ளூர், வெளியூர்வாசிகள் அவரை அன்புடன் வெங்கடேசர் என அழைப்பது நின்றுபோய் மகான் வெங்கூசா என்றே கூப்பிட்டாங்க.

    சில நாட்கள் கழித்து ஒரு நடுத்தர வயதுடைய முஸ்லீம் பெண்மணி, தன்னோட ஒரு பாலகனை வெங்கூசாவிடம் அழைத்து வந்து மதிப்பிற்குரியவரே! என் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். அல்லா அவருகிட்டே ஆணையிட்டபடி, பாத்ரி கிராமத்தில் இந்து குடும்பத்தில் பிறந்த இரண்டுமாதக் குழந்தையை கேட்டுப்பெற்று, அவனுக்கு இந்து, முஸ்லீம் மார்க்க தர்மங்கள், தான் கற்ற இருமத நூல் விஷயங்கள் அனைத்தும் நன்கு கற்பித்தார். அந்த குழந்தையே இவன்! சென்ற வாரம் அவர் இறப்பதற்கு சற்று முன்பு என்னை அழைத்து இவன் இனி வளரவேண்டிய இடம் சேலூரில் வசிக்கும் புனித வெங்கூசாவிடம்! இது இறைவனின் ஆக்ஞை. தவறாமல் அவனை அவரிடம் ஒப்படைத்துவிடு என சொன்னார். அதனால் அவனை தங்களிடம் அழைத்து வந்தேன். ஏற்றுக்கொள்ளுங்கள் எனப் பணிந்து சொன்னாரு.

    அதனால தர்கா மகான் அடையாளங்காட்டிய இந்த பாலகன் சென்ற பிறவியில் தனது சீடன் கபீர்தான் என்பதை தன் ஞானசக்தியால் அறிந்து அவனை ஏற்றுக்கொண்டு, வந்த முஸ்லீம் பெண்மணியிடம் நன்றி கூறி அனுப்பிவைத்தார் வெங்கூசா.

    பலராம் : கேட்கவே மயிர்கூச்சலிடுகிறது! அப்புறம் என்ன நடந்தது?

    காரியஸ்தர் : தன்னிடம் வந்த பாலகனை சீடனாக ஏற்ற வெங்கூசா அனைத்து ஆன்மீக விஷயங்கள், ரகசியங்கள்,

    Enjoying the preview?
    Page 1 of 1