Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulavuthurai
Ulavuthurai
Ulavuthurai
Ebook191 pages1 hour

Ulavuthurai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பார்கள். இந்தப் பழமொழி உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிப் போனது. அதேபோல தனிப்பட்ட மனிதன் பழிக்குப் பழி வாங்கினால் அது பெருங்குற்றம். நிச்சயமாகத் தூக்குமேடை உண்டு.

ஆனால் இதே குற்றத்தை ஒரு நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பு செய்தால் அது போற்றிப் புகழப்படும் அம்சமாக, வெற்றிச் சரித்திரமாக இருக்கிறது. இது சரியா, தவறா என்பதல்ல இப்போதைய வாதம். இந்த உளவு அமைப்புகள் சில நாடுகளில் மட்டும் வலுவாக இருக்கிறது. அவை செய்த, செய்கிற பல்வேறு அதிர்ச்சி தரும் செயல்பாடுகளை விளக்குவதே இந்த நூலின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580156708909
Ulavuthurai

Read more from Kundril Kumar

Related to Ulavuthurai

Related ebooks

Reviews for Ulavuthurai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulavuthurai - Kundril Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உளவுத்துறை

    (உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்)

    Ulavuthurai

    (Ulagai Utru Paarkum Kangal)

    Author:

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1 உளவுத்துறை

    2 கே ஜி பி

    3 மொசாட்

    4 சி ஐ ஏ

    5 ஐ எஸ் ஐ

    6 ரா

    7 எம் 15

    என்னுரை

    ப்ரியமானவர்களுக்கு,

    ‘மாமியார் உடைத்தால் மண் குடம்

    மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பார்கள்.

    இந்தப் பழமொழி உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிப் போனது.

    அதேபோல தனிப்பட்ட மனிதன் பழிக்குப் பழி வாங்கினால் அது பெருங்குற்றம். நிச்சயமாகத் தூக்குமேடை உண்டு.

    ஆனால் இதே குற்றத்தை ஒரு நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பு செய்தால் அது போற்றிப் புகழப்படும் அம்சமாக, வெற்றிச் சரித்திரமாக இருக்கிறது.

    இது சரியா, தவறா என்பதல்ல இப்போதைய வாதம்.

    இந்த உளவு அமைப்புகள் சில நாடுகளில் மட்டும் வலுவாக இருக்கிறது. அவை செய்த, செய்கிற பல்வேறு அதிர்ச்சி தரும் செயல்பாடுகளை விளக்குவதே இந்த நூலின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது.

    ப்ரியங்களுடன்,

    குன்றில்குமார்

    1 உளவுத்துறை

    உளவு என்பது மனிதனின் அன்றாட வாழ்வின் ஒரு அம்சம் என்றே சொல்லலாம்.

    பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று திருட்டுத்தனமாகப் பார்க்க நினைக்காதவர்கள் எத்தனை பேர்?

    பத்திரிகையில் முதன்முதலாக கிசுகிசு பகுதியைப் படிக்க நினைக்காதவர்கள் எத்தனை பேர்?

    காதலர்கள் இருவர் பொது இடத்தில் சற்று நெருக்கமாக இருந்தால் அதனை ஓரக்கண்ணால் பார்க்கத் துடிக்காதவர்கள் எத்தனை பேர்?

    எதிரியை வெற்றி கொள்வதற்காக அவனைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள உளவறியாதவர்கள் எத்தனை பேர்?

    மகன் அல்லது மகளைப் பற்றிய சந்தேகம் வந்தால் அவர்களை இரகசியமாகப் பின்தொடர்ந்து தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாத பெற்றோர்கள் எத்தனை பேர்?

    கணவன் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் அவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள அனைத்து முயற்சிகளையும் செய்யாத மனைவி யாராவது உண்டா?

    இப்படி நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்.

    இவை எல்லாமே உளவு சம்பந்தப்பட்டவையே. மற்றவர்களைப் பற்றி அவர்கள் அறியாமல் தெரிந்து கொள்ளத் துடிப்பதும், இரகசியங்களைத் திரட்டுவதும், அதனைப் பயன்படுத்தி அவர்களை வெற்றி கொள்ள நினைப்பதும் உளவு என்னும் ஒருவிதக் கலையே.

    இப்படிப்பட்ட உளவைத் தனி மனிதன் செய்யலாம். சில மனிதர்கள் இணைந்து செய்யலாம். ஒரு அமைப்பு செய்யலாம். ஒரு அரசு செய்யலாம். ஒரு நாடு செய்யலாம்.

    இது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது.

    எனினும் பெரிய அளவில் இந்த உளவு நடைபெறுகிற போது பெரிய அளவில் பேசப்படுகிறது. ஏனென்றால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக அமைந்து விடுகிறது.

    இதுபோன்ற உளவு அரசியல் ரீதியாகச் செயல்படுத்துவது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.

    இது இன்று நேற்றல்ல வெகு காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது.

    கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீசர். ரோமாபுரி தேசத்தை ஆண்ட இணையற்ற சக்ரவர்த்தி.

    இவரது வெற்றிகள் அனைத்துமே உளவாளிகளைப் பயன்படுத்தி, அதன் வாயிலாக எதிரிகளின் பலவீனங்களைச் சரியாகத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப போர் வியூகங்களை வெகு நேர்த்தியாகத் திட்டமிட்டு செய்யப்பட்டது.

    எதிரிகளின் பலத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் அக்கறை காட்டிய சீசர், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதில் உளவறியத் தவறிவிட்டார்.

    விசுவாசிகளாக இருப்பவர்களே அவருக்கு எதிராகச் சில சதித்திட்டங்களை வலையமைத்து வருகிற சேதி சீசரின் காதை வந்தடைந்தது. ஆனால் அதனைக் கூறியவர்கள் அத்தனை முக்கியத்துவம் பெற்றவர்களாக இல்லாத காரணத்தால் அதனை சீசர் அலட்சியப்படுத்தினார்.

    ஒரு கட்டத்தில் ரோமாபுரி செனட் மண்டபத்தில் உண்மையான விசுவாசிகள் என்று நம்பியவர்கள் நாலாபுறம் இருந்தும் அவரைச் சூழ்ந்து கத்தியால் குத்தியபோது சீசர் அதிர்ச்சி மட்டுமா அடைந்தார்? ஆச்சரியம்! கூடவே நம்பவே முடியாத திகைப்பு!

    அதிலும் உண் மையே தோற்றுப் போகிற அளவிற்கு அதற்கும் மேலாக நம்பிய புரூட்டஸ்!

    ‘நீயுமா புரூட் டஸ்?!’ என்று கடை சியாகக் கூறினாரே!

    அது என்ன சாதாரண வார்த் தையா?

    இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள்!

    சீசரின் இந்தப் பரிதாப நிலைமைக்குப் பின்னர்தான் எதிரிகள் எதிரே இருப்பவர்கள் மட்டுமல்ல; உன் அருகிலும் இருக்கிறார்கள். அவர்களையும் உளவறிந்து தெரிந்து வைத்துக் கொண்டே இருந்தால்தான் உண்மையான வெற்றியை அடைந்ததாகக் கருத முடியும் என்ற புதிய இலக்கணம் அரசியலுக்குள் புகுந்தது என்று கூடச் சொல்லலாம்.

    பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செங்கிஸ்கான் மிகத் திறமைசாலியாகத் திகழ்ந்தவன். மங்கோலியாவை ஆண்ட இவன், மாவீரன் நெப்போலியனால் கூட முடியாமல் போன ரஷ்யாவைத் தோற்கடித்து சாதித்தவன். சீனா, ஆப்கன் போன்ற நாடுகளை எல்லாம் வெற்றி கண்டவன்.

    நினைத்துக்கூடப் பார்க்கவே முடியாத கொடுங்கோலனாக விளங்கிய செங்கிஸ்கான் இமாலய வெற்றிகளைப் பெற்றதற்கு முக்கியக் காரணம் திறமையான உளவாளிகளைத் தன் வசம் வைத்திருந்ததே.

    பகல் நேரங்களில் மட்டுமே போர் நடைபெறும் என்பதால் அவனது உளவாளிகள் இரவு நேரங்களில் எதிரிகளின் இராணுவ முகாமுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து அங்குள்ள இராணுவத் தளவாடங்கள் மற்றும் முக்கிய அனைத்து இரகசி யங்களையும் லாவகமாகத் திருடிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

    இதுதான் செங்கிஸ்கானின் அபார வெற்றிக்குக் காரணமாக இருந்தது.

    பதின்மூன்றே ஆண்டுகளில் மூன்று கண்டங்களை வெற்றி கொண்டவன் மாவீரன் அலெக்ஸாண்டர். இவன் சீசருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் உளவுப் படையைத் தனது நண்பர்களைப் பற்றிய விவரங்களை இரகசியமாகச் சேகரிப் பதற்கும் பயன்படுத்தினான்.

    அவனது படை வீரர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எழுதும் கடிதங்களைக் கூடத் தனது உளவாளிப் படையினர் மூலமாகப் பிரித்துப் படித்து தணிக்கை செய்த பின்னரே அனுப்பி வைத்தான்.

    இதன்மூலமாகத் தனது படை வீரர்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும், அதனைப் போக்கி அவர்களை உற்சாகப் படுத்தவும் அவனால் செய்ய முடிந்தது.

    இதற்கும் முன்பாக, அதாவது புராண காலத்திலேயே உளவு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பதை நமது இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

    போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற ராமபிரானின் சேனை எத்தகைய பலம் வாய்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சுகன், சாரணன் என்ற தனது உளவாளிகளை இராவணன் அனுப்பி வைத்தான்.

    அவர்கள் உளவு பார்க்க வந்திருப்பதைக் கண்டுபிடித்த விபீஷணன், அவர்களைப் பிடித்து ராமபிரான் முன்பாக நிறுத்தினான். ஆனாலும் அவர்களை மன்னித்து அனுப்பி விட்டார் ராமபிரான். அவர்களும் தாங்கள் சேகரித்த தகவல்களுடன் இராவணனிடம் வந்து சேர்ந்தனர்.

    இராமபிரான் போர் தொடுப்பதற்கு முன்பாக சீதை எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அனுமனை அனுப்பி வைத்தார். உளவு பார்க்க அனுமன் வந்திருப்பதைக் கண்டுகொண்ட வீரர்கள் அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து இராவணன் முன்பாக நிறுத்தினர்.

    இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு லங்கா புரியின் படைபலம், பாதுகாப்பு போன்றவற்றை விவரமாக அனுமன் சேகரித்ததாக இராமாயணம் விவரிக்கிறது.

    இதேபோல குப்தர்கள் சாம்ராஜ்யத்தின்போதும் உளவு பார்ப்பது நிறைய நடைபெற்றதாக சரித்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சந்திர குப்தனின் உடல்நிலை சற்றே பாதிக்கப்பட்டிருந்தது. அதற்காக வைத்தியர் ஒருவர் சிகிச்சை அளிக்க வந்தார்.

    ஆனால் சாணக்கியனுக்கு அவர் மீது ஏனோ சந்தேகம் எழுந்தது. எனவே அந்த மருந்தை சந்திர குப்தன் அருந்தாமல் தடுத்த சாணக்கியன், அதனை ஒரு தங்கக் கிண்ணத்தில் ஊற்றச் சொல்கிறார். மருந்து தங்கத்துடன் சேர்ந்து இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டதைக் கவனித்தார்.

    மன்னா! மருந்தில் விஷம் கலந்திருக்கிறது என்று கோபத்துடன் கத்துகிறார். அத்துடன் மருந்தை அந்த வைத்தியரையே பருகுமாறு நிர்ப்பந்திக்கிறார் சாணக்கியன். வேறுவழியின்றி அதனைப் பருகிய வைத்தியரும் அடுத்த சில நொடிப் பொழுதில் இறந்து போகிறார்.

    அதாவது வைத்தியர் மூலமாக எதிரிகள் உளவு வேலையை நடத்தி இருந்தார்கள்.

    சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரம்’ உளவாளிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

    ர் உளவாளிகள் எதிரியின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ர் அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்களிடத்தில் குழப்பத்தை உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி, ஒருவரைப் பற்றி மற்றொருவர் அவதூறாகப் பேசுவதாக நம்புகிற மாதிரி சொல்லி பகையை வளர்த்து, அவர்களுக்குள் சண்டையைத் தூண்ட வேண்டும்.

    ர் செல்வாக்கு பெற்று பேரும் புகழும் பெற்று விளங்குகிறவ னின் நண்பனை அணுகி, அவனைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டும். அதே நேரத்தில் செல்வாக்கு பெற்றவனைப் பற்றி இகழ்ந்தும் பேச வேண்டும். இவ்வாறு செய்தால் புகழப்படும் நண்பனுக்கு கர்வம் ஏற்பட்டு, செல்வாக்குப் பெற்றவனைப் பற்றிக் குறைவாகப் பேசத் தொடங்கிவிடுவான்.

    ர் ஆட்சியில் வலுவாக இருப்பவர்களைக் கவிழ்க்க வேண்டும் என்றால் பெண்களைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. பெண்களால்தான் அவர்களுக்குள் போட்டி பொறாமைகளை உண்டாக்க முடியும்.

    ர் அதிகாரத்தை வகிப்பவன் பெண் பித்தனாக இருந்தால், அந்தப் பலவீனத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ர் மன்னனோடு நெருங்கிய விசுவாசத்திற்குரியவனாக இருந்தால் அவனை மன்னனிடம் இருந்து பிரிக்க, அவனது மனைவியைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நகைகள், பரிசுப் பொருட்கள் போன்ற கவர்ச்சிகளுக்குப் பெண்கள் எளிதாக வசப்பட்டு விடுவார்கள்.

    ர் மன்னனோடு நெருக்கமாக இருப்பவனைப் பிரிக்க நினைத்தால் அவன் மன்னனுக்கு எதிரான காரியங்களைச் செய்து வருவதாக ஒரு போலியான கட்டுக் கதைகளைப் பரப்ப வேண்டும். இதற்கு அரண்மனை சமையற்காரன், தோட்டக்காரன், சலவைக்காரன் போன்றோரைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    ர் பண ஆசைப்படுபவர்களாக இருந்தால் அவர்களின் தேவைக்கு மேல் பணத்தைக் கொட்டத் தயங்கவே கூடாது.

    இவ்வாறாக எதிரியை வீழ்த்த உளவுத்துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அர்த்த சாஸ்திரம் தெளிவாகவே விளக்கி உள்ளது.

    உளவு செய்வது என்பது அரசனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை திருவள்ளுவர் தனது திருக்குறளில் ‘ஒற்றாடல்’ என்னும் அதிகாரத்தில் பத்துப் பாடல்களால் விளக்கியுள்ளார்.

    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

    கொற்றங் கொளக்கிடந்தது இல்

    இந்தக் குறட்பாவின் மூலமாக பகை நாட்டு இரகசியங்களை ஒற்றர் மூலமாகத் தெரிந்து கொண்டு அவற்றின் பொருளையும் தெளிவாக ஆய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றியை அடைவதற்கு வழியே இல்லை என்று

    Enjoying the preview?
    Page 1 of 1