Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valamana Vazhvirku Sufi Thathuvam
Valamana Vazhvirku Sufi Thathuvam
Valamana Vazhvirku Sufi Thathuvam
Ebook193 pages1 hour

Valamana Vazhvirku Sufi Thathuvam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூபியிசம் என்பது நபிகள் நாயகத்திடம் இருந்து அவரது தோழர்கள் முறைப்படி கற்றுக் கொண்ட கல்வி. வாழையடி வாழையாக இது முறைப்படி தொடர்ந்து கொண்டே வருகிறது. ஒருவனுக்குத் தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்கள், இறை சிந்தனை ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் முறைதான் இது. உலக வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகளும், நன்மைகளும் செய்யும் விதத்தில் இருப்பவன்தான் சூபி.

சூபி மகான்கள் பலர் தங்கள் வாழ்க்கையின் மூலம் மக்களுக்கு அரிய பல நல்ல கருத்துக்களை அளித்துள்ளனர். இவை குட்டிக் கதைகளாக இன்றும் உலா வந்து நமக்கு நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் தந்து கொண்டிருக்கின்றன. இந்த புத்தகம் சூபிக்களைப் பற்றிய துல்லியமான பல கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

Languageதமிழ்
Release dateSep 3, 2022
ISBN6580156709014
Valamana Vazhvirku Sufi Thathuvam

Read more from Kundril Kumar

Related to Valamana Vazhvirku Sufi Thathuvam

Related ebooks

Reviews for Valamana Vazhvirku Sufi Thathuvam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valamana Vazhvirku Sufi Thathuvam - Kundril Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வளமான வாழ்விற்கு சூபி தத்துவம்

    Valamana Vazhvirku Sufi Thathuvam

    Author:

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. சூபித்துவம்

    2. சூபியிசம்

    3. சூபி இசை

    4. இந்தியாவில் சூபியிசம்

    5. சூபி ஞானிகளின் வாழ்வில்

    6. சூபிக் கதைகள்

    7. பாடும் பறவை

    8. ஞானம்

    9. இரகசியம்

    10. அபூர்வ பழம்

    11. சமயோசிதம்

    12. யார் குரு?

    13. கடமை

    என்னுரை

    சூபியிசம் என்பது நபிகள் நாயகத்திடம் இருந்து அவரது தோழர்கள் முறைப்படி கற்றுக் கொண்ட கல்வி.

    வாழையடி வாழையாக இது முறைப்படி தொடர்ந்து கொண்டே வருகிறது.

    ஒருவனுக்குத் தேவையான அறிவுரைகள், வழிகாட்டல்கள், இறை சிந்தனை ஆகியவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் முறைதான் இது.

    உலக வாழ்வில் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு உதவிகளும், நன்மைகளும் செய்யும் விதத்தில் இருப்பவன்தான் சூபி.

    மதம், மொழி, இனம், தேசம் போன்ற எந்தவிதப் பாகுபாடும் உண்மையான சூபிக்கு இருக்கவே இருக்காது.

    உயர் பண்பும், நற்குணமும் கலந்த ஒரு பரிசுத்த மனதைக் கொண்டவனாகவே இருப்பதுதான் சூபி.

    சூபி மகான்கள் பலர் தங்கள் வாழ்க்கையின் மூலம் மக்களுக்கு அரிய பல நல்ல கருத்துக்களை அளித்துள்ளனர்.

    இவை குட்டிக் கதைகளாக இன்றும் உலா வந்து நமக்கு நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் தந்து கொண்டிருக்கின்றன.

    இந்த புத்தகம் சூபிக்களைப் பற்றிய துல்லியமான பல கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

    குன்றில்குமார்

    1. சூபித்துவம்

    இஸ்லாம் மார்க்கத்தைக் சேர்ந்த பல கிளைகளில் சூபித்துவம் ஒன்றாகும். இதை தஸவ்வுப் என்றும் அழைப்பார்கள்.  சன்னி இஸ்லாமின் வரலாற்றில் இருந்து பெறப் பட்டது சூபித்துவம்.

    அதாவது, ‘இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்’ எனப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுவோர் ‘சூபிக்கள்’ என்று அழைக்கப் படுகின்றனர்.

    சூபித்துவக் கல்வி என்பது மார்க்கச் சட்ட கல்வியைப் போன்று வெறும் புத்தகத்தின் வாயிலாகவோ அல்லது வெளிப்புற அறிவின் வாயிலாகவே கற்றுணர்வதை விடவும் உள்ளத்தில் இருந்து உள்ளத்திற்கு என்ற முறையில் கற்பிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முகமது நபியின் தோழர் களில் ஒருவரான அபூஹுரைரா, ‘‘இரண்டு விதமான கல்விகளை நபிகளிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஒன்றை மட்டுமே வெளியே சொன்னேன். மற்றதை சொன்னால் என் கழுத்து வெட்டப்பட்டுவிடும்’’ என்றார்.

    வெளிப்புற மார்க்க சட்டக் கல்வியும், ஆன்மீக சூபியிசக் கல்வியும் அந்த இரண்டு விதமான கல்விகள் என்று மார்க்கத்தின் மேதைகள் விளக்குகின்றனர்.

    மார்க்க சட்டக் கல்வியைப் பொருத்தமட்டில் பகிரங்கமாகப் போதிக்கப்படுகிறது. ஆனால் ஆன்மீகக் கல்வி அவ்வாறு கிடையாது. அதற்கென்று சிறப்பான ஒரு வழிமுறை உள்ளது.

    நபிகளிடம் இருந்து அவரது தோழர்கள் இந்தக் கல்வி முறையைக் கற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து வழிவழியாக இது போதிக்கப்பட்டு வருகிறது.

    சூபிக்கள் வேறுபட்ட சூபி கட்டளைகள் அல்லது தரீக்காக்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று அறியப்படுகின்றனர்.

    தரீக்கா என்றால் என்ன?

    ஒரு புகழ்பெற்ற ஆத்ம ஞானியால் மக்களை நல்வழிப் படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஒரு பண்பாட்டு முயற்சி தான் தரீக்கா எனப்படுகிறது.

    தஸவ்வுப் துறையில் சில ஆத்ம ஞான மரபுகள் தோன்றின. குறிப்பிட்ட சில மெய்ஞானக் கருத்துக்களை அடைய முயல்வதற்காகச் சில வழிமுறைகளைக் கொண்டது தரீக்கா ஆகும்.

    சூபித்துவ வரலாற்றில் தரீக்காவிற்கு முக்கிய இடம் உண்டு.  சூபியிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றிய பிரிவுதான் இது. இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் இத்தகைய அமைப்பு எதுவும் காணப்படவில்லை.

    பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, சமூகச் சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றின் காரணமாக சிலர் ஒதுங்கி வாழ முற்பட்டபோது சூபித்துவ சிந்தனை வளர்ச்சி பெறத் தொடங்கியது.

    பின்னர் சூபித்துவம் தனியான பாதையில், தனியான சிந்தனையில் அணிவகுத்து நடைபோட்டபோது அது விரிவடைந்து தரீக்காக்கள் தோன்றின. கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை தரீக்காக்கள் பரிணமித்தன.

    சூபிக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காகக் கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என்று அழைக்கப்படுகின்றன.

    தரீக்காக்களின் மூலக் கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலியின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

    பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி உள்ளிட்ட பல கட்டளைகள் உள்ளன.

    தாங்கள் இஹ்ஸானை பயிற்சி செய்வதாக சூபிக்கள்  நம்புகின்றனர். இஹ்ஸானை என்றால் ‘முழுமையான வணக்கம்’ என்று பொருள். அதாவது வானவரான ஜிப்ரீலால் முகமது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது ஆகும்.

    வணங்கும்போது அல்லாவைப் பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்துடன் வணங்க வேண்டும்.

    சூபி அறிஞர்கள் சூபித்துவமாக இதனைக் கூறியுள்ளனர்.

    ‘இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற அனைத்தில் இருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அறிவியல்’ என்று சூபித்துவம் வரையறுக்கப் பட்டுள்ளது.

    ‘சூபியிசம்’ என்பது இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்ளவும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்கப் பண்புகளால் அழகு படுத்துவதற்குமான அறிவியல்’ என்கிறார் சூபி குரு அகமது இபின் அசிபா என்பவர்.

    திக்ர், துறவறம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்ததை வைத்து பாரம்பரிய சூபிக்களைக் கண்டறிய முடியும்.

    திக்ர் என்றால் இறைவனின் நாமத்தைப் பலமுறை உச்சரிக்கும் ஒருவிதமான பயிற்சி. பொதுவாக தொழுகையின் பின்னர் இது மேற்கொள்ளப்படுகின்றது.

    சூபியிசமானது பல முஸ்லீம்களிடையே பலத்த ஆதரவைப் பெற்றது. ஆரம்பகால உமையாக்கள் உலகப் பற்றினை ஆதரித்த நிலையில், அதற்கு எதிராக இதன் கருத்துக்கள் அமைந்ததால் ஆதரவாளர்கள் பெருகினர்.

    கி.பி. 661 முதல் 750ஆம் ஆண்டுகள் வரை சூபிக்களின் கலாச்சாரம், கொள்கை அனைத்தும் பல கண்டங்களிலும் சிறப்பாக பரந்து விரிந்தது. ஆரம்பத்தில் குறிப்பாக பாரசீகம், துருக்கி, இந்தியா சிறந்து விளங்கியது.

    சிஷ்டி கட்டளை

    சூஃபி பாரம்பரியம் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் அது நான்கு விதமான கட்டளைகளைக் கொண்டதாக அமைந்தது.

    சிஷ்டி கட்டளை

    குவாட்ரிய்யா கட்டளை

    சுஹ்ரவார்திய்யா கட்டளை

    நாக்ஷ்பந்தி கட்டளை

    இவைதான அந்தக் கட்டளைகள்.

    சிஷ்டி கட்டளை என்பது ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய துணைக் கண்டத்தில்தான் முதன்முதலாக உருவானது. ஆப்கானிஸ் தான் நாட்டின் சிஷ்டி என்னும் சிறு நகரில் கி.பி. 930ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதன் முக்கியக் கொள்கை என்னவென்றால் அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவையே. மொய்னுதீன் சிஷ்டி என்பவர் லாகூர் மற்றும் அஜ்மீர் ஆகிய பகுதிகளில் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தக் கொள்கையை செவ்வனே வளர்த்தார்.

    பின்னர் இந்தக் கொள்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கிழக்கு மற்று தென் ஆப்ரிக்க நாடுகளில் தீவிரமாகப் பரவியது.

    தற்போது இது பல கிளைகளாகப் பிரிந்து தெற்கு ஆசியப் பகுதிகள் முழுவதும் பரவிக் கிடக்கிறது. 

    அடுத்து குவாட்ரிய்யா கட்டளை.

    இஸ்லாம் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்து அதனைப் பின்பற்றுவதுதான் குவாட்ரிய்யா.

    இது குறிப்பாக அரபு பேசும் மக்களிடையே வேகமாகப் பரவியது. மேலும் துருக்கி, இந்தோனேஷியா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ரஷ்யா, பாலஸ்தீனம், சீனா, இஸ்ரேல், கிழக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளிலும் பரவியது.

    சுஹ்ரவார்திய்யா கட்டளை என்பது கண்டிப்பாக சன்னி கொள்கைகளையே பின்பற்றும் ஓர் அமைப்பு.

    இஸ்லாமிய சட்டத்தினைக் கண்டிப்பாகப் பின்பற்றும் ஷாஃபி பள்ளியின் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது இது. குறிப்பாக வங்கதேசத்தில் இது அதிகளவில் தடம் பதித்துள்ளது.

    நாக்ஷ்பந்தி கட்டளை கி.பி. 1167ஆம் ஆண்டு துர்க்கிஸ்தான் நாட்டில் தோன்றியது. ஹர்சத் அபு பக்கர் சித்திக் என்னும் கலீபா இதன் தோற்றத்திற்கான கர்த்தா. முஜாதித் அல்ஃப் இ சானி என்னும் பெயரில் இவர் தோற்றுவித்த இந்த அமைப்பு, பின்னர் சையத் பஹாஹுதின் ஷா நாக்ஷ்பந்த் என்பவரின் காலத்தில் நாக்ஷ்பந்தி என்று பெயர் மாற்றம் பெற்றது.

    மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஹஜ்ரத் க்வாஜா பாக்பில்லாஹ்  என்பவர் இந்தியத் துணைக் கண்டத்தில் நாக்ஷ்பந்தி அமைப்பை நிறுவி வளர்த்தார்.

    பக்கீர்

    அழுக்கு உடையுடனும், அழுக்கான உடம்புடனும் அசிங்கமாகவும், அநாகரீகமாகவும் இருப்பவர்களை ‘பக்கீர்ஷாக்கள்’ என்று அழைப்பார்கள்.

    ஆனால் உண்மையில் இந்த பக்கீர்களின் இன்னொரு பக்கம் மிக அற்புதமானது. நம்பவே முடியாதது.

    தியாகம், அர்ப்பணிப்பு, கொள்கைப் பிடிப்பு இவற்றைக் கொண்டிருந்தார்கள். அத்துடன் முக்கியமாக இஸ்லாத்தைப் பரப்பக்கூடிய தூதர்களாகவும் இருந்தார்கள்.

    முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக நடந்து கொள்ளவில்லை என்ற குறை உண்டு. சில மன்னர்கள் அப்படி இல்லாமல் இருந்தாலும் பல மன்னர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கானார்கள் என்பதே உண்மை.

    முகலாய மன்னர்கள் பலரும் தங்கள் ஆட்சி அதிகார எல்லையை விரிவடையச் செய்வதைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டார்கள். அதன்காரணமாக அவர்களுக்கு நிறைய எதிரிகள் உருவாகினர். அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

    தங்கள் காலம் முழுவதும் போரைப் பற்றியே சிந்தித்தார்கள். நிறைய போர்களை எதிர்கொண்டார்கள். இஸ்லாத்துக்கு விரோதமாக சிற்றின்பங்களில் திளைத்தார்கள்.

    இது இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களைப் பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இனிமேல் மன்னர்களை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

    சூபிக்கள் மற்றும் ஆலிம்களிடம் சரணடையத் தொடங்கினார்கள் பெரும்பாலான இஸ்லாமியர்கள். இதுபோன்ற நிலை காரணமாக தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது அரசியல் தலைமை என்றும், மதத் தலைமை என்றும் வேறு வேறாகப் பிரிந்தன.

    பக்கீர்களுக்கென்று சூபிக்கள் பிரத்யேக சட்ட திட்டங்களை உருவாக்கினார்கள்.

    * உங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்று சூபிக்களிடம் பையத் செய்ய வேண்டும். பையத் என்றால் சத்தியப் பிரமாணம் என்று பொருள்.

    * உழைத்து சம்பாதிக்க மாட்டேன் என்றும் அவர்கள் சத்தியம் செய்ய வேண்டும்.

    * ஒரு பயணியைப்போல வாழ்க்கையை நடத்த வேண்டும். தாங்கள் பயணி என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ‘முஸாபர்’ என்று தங்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். ‘முஸாபர்’ என்றால் அரபு மொழியில் ‘பயணி’ என்று பொருள். ஆனால் காலப்போக்கில் இது பிச்சைக்காரர்களைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

    * உலக வாழ்க்கையில் ‘மையத்’ போல இருப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ‘மையத்’ என்றால் ‘உயிரற்ற பிணம்’ என்று பொருள்.

    இதற்கு ஒரு சடங்கே உண்டு. அதாவது ஆறடி குழி தோண்டி அதில் சில நொடிப்பொழுதுகள் உயிரோடு அவர்களைப் புதைத்து பிறகு வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1