Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Markazhi Pookkal
Markazhi Pookkal
Markazhi Pookkal
Ebook220 pages1 hour

Markazhi Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மார்கழி மாதத்தில் தொடங்குகிறது கதை. ஆண்டாளைப் போல நித்யாவிற்கும் அவளுடைய கண்ணன் கிடைப்பானா என்று கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விவாகரத்தினால் குழந்தைகள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்பதைக் கதையினூடே சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். மூன்று இளம் ஜோடிகளுடன் ஒரு முதிய ஜோடியின் காதலையும் பற்றிப் பேசும் கதை.

Languageதமிழ்
Release dateApr 15, 2023
ISBN6580144609746
Markazhi Pookkal

Read more from Puvana Chandrashekaran

Related to Markazhi Pookkal

Related ebooks

Reviews for Markazhi Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Markazhi Pookkal - Puvana Chandrashekaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    மார்கழிப் பூக்கள்

    Markazhi Pookkal

    Author :

    புவனா சந்திரசேகரன்

    Puvana Chandrashekaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 1

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்!

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

    நாரா யணனே நமக்கே பறைதருவான்

    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

    (திருப்பாவை முதல் பதிகம் ஆண்டாள் அருளியது)

    மார்கழி மாத அதிகாலை நேரம். பனி கொட்டுகிற அதிகாலைப் பொழுது. தலையில் ஈரத் துண்டுடன் பாவாடையைத் தூக்கிச் சொருகிக்கொண்டு வாழைத் தண்டு கால்கள் வெண்மையாகப் பளீரென்று பளிச்சிட தேவதை ஒருத்தி பூமியில் இறங்கி,

    மும்முரமாகக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தாவணியை இறுக்கி இழுத்து இடையில் கட்டிக் கொண்டிருந்தாள்.

    தாவணி போட்ட பெண்ணே பெரிய அதிசயம்! அதிலும் அதிகாலை நேரத்தில் கோலம் போடும் பெண் அதிசயத்திலும் அதிசயம்!

    கோலங்கள் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கணிதத்தின் தாத்பர்யங்களையும் கலைத் திறமையையும் நிர்வாகப் பொறுப்பையும் ஒரு சேரக் கற்றுக் கொடுக்கும் ஒரு சிறந்த சாதனம்தானே? அதனால்தானே நமது முன்னோர்கள் கோலங்கள் போடும் வழக்கத்தையே அதுவும் பெண்களுக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருவதற்காகவே ஆரம்பித்து வைத்தார்கள்.

    ஆனால் இன்றைய காலத்தில் நிறைய பெண்களுக்குக் கோலம் போடத் தெரிவதில்லை. பல வீடுகளில் ஸ்டிக்கர் கோலம்தான். சென்னை போன்ற பெரிய பட்டினங்களில் பல வீடுகளில் கோலமே வீட்டு வேலைக்கு யாராவது வந்த பின்னரே போடப்படுகிறது. அதுவும் பகல் பத்து மணி கூட ஆகிவிடுகிறது.

    தாவணி தேவதை நித்யா கோலம் போடும் அழகை ஒரு ஜோடிக் கண்கள் எதிர்த்த வீட்டில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தன.

    மியாவ்.

    எங்கிருந்தோ ஒரு பூனையின் குரல். ஒரு கறுப்புப் பூனை குதித்து ஓடி வர துள்ளிக் குதித்து அலறியடித்து ஓடினாள் நித்யா.

    கையிலிருந்த கோலப் பொடி டப்பா கீழே விழக் கோலப்பொடி கொட்டிச் சிதறியது. வீலென்று அலறிக்கொண்டு ஓடிய நித்யா, காலில் கல் தடுக்கிக் கீழே விழப் பார்த்தாள். ஓடிச் சென்று கைத்தாங்கலாய் அவளைப் பிடித்தான் நமது கதாநாயகன் சந்தோஷ்.

    ஏற்கனவே பயந்து போய் நடுங்கி ஓடித் தடுக்கி விழுந்த நமது அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரப் பெண் நித்யா புதிதாக ஓர் ஆடவன் தன்னைத் தொட்டுத் தாங்கியதும்,

    இன்னும் கொஞ்சம் பயந்து போய் மயங்கி விழ, அந்த ரோஜாக் குவியலைக் கைகளில் தூக்கிக்கொண்டு திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்தான் சந்தோஷ்.

    கோலம் போடுவதற்காகக் கதவை மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துவிட்டு நித்யா வந்திருந்ததால் உள்ளே சந்தோஷால் தயக்கமில்லாமல் வர முடிந்தது. கிராமத்து வீட்டின் சிறிய முன்பகுதி, இரண்டு சேர்களும், ஒரு காஃபி டேபிளுடன் உள்ளே பெரிய ஹால். கிராமத்து வீடுகளுக்கே உரிய மிகப் பெரிய ஹால். அங்கே அழகான ஓர் ஊஞ்சல் கனமான சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றில் லேசாகத் தானே ஆடிக் கொண்டிருந்தது. ஆபத்துக்குப் பாவமில்லை என்று கையில் சுமையுடன் உள்ளே நுழைந்த சந்தோஷ், தன் கைகளில் கிடந்த பெண்ணை மென்மையாக அந்த ஊஞ்சலில் கிடத்தினான்.

    அதற்குள் ஆளரவம் கேட்டு உள்ளேயிருந்து ஓடி வந்தனர் இரண்டு முதியோர். அந்தப் பெண்ணின் தாத்தா, பாட்டியாக இருக்கலாம்.

    ஐயோ, என்னம்மா ஆச்சு நித்யா? யாருப்பா நீ? நித்யாவுக்கு என்னப்பா ஆச்சு? நித்திம்மா, நித்திம்மா கண் விழிச்சுப் பாரும்மா!

    ஒண்ணும் பயப்பட வேணாம் தாத்தா. நான் எதிர்த்த வீட்டைச் சேர்ந்தவன். நேத்து ராத்திரிதான் ஊரிலிருந்து வந்தேன். காலையில் தூக்கம் வராமல் ஜன்னலில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் பேத்தி ஒரு பூனையைப் பார்த்து பயந்து போய் மயக்கம் போட்டு விழுந்த சமயம், நான் வந்து தாங்கிப் பிடித்தேன். என்னைப் பார்த்து பேயோ, பிசாசோ என்று இன்னும் கொஞ்சம் பயந்துபோய் மயங்கிவிட்டாள். உங்களுடைய துணிச்சலான ஜான்சி ராணி பேத்தி, ஏதோ அதிர்ச்சியால் ஏற்பட்ட‌ மயக்கம்தான். இப்போது தெளிந்துவிடும். பயப்பட வேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்.

    அந்தப் பாட்டி தண்ணீர் கொண்டு வந்து நித்யாவின் முகத்தில் அடிக்க மெல்லக் கண்களை விழித்தாள் நித்யா. கண்ணெதிரே சந்தோஷைக் கண்டு எழுந்து உட்கார்ந்து தாத்தாவின் தோளில் நாணத்துடன் சின்னக் குழந்தை போல சாய்ந்து கொண்டாள்.

    மியாவ் என்று கேலியாகத் திரும்பவும் குரல் கொடுக்கத் திரும்பவும் துள்ளிக் குதித்தாள் நித்யா. சந்தோஷ் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான். வெட்கத்துடன் தலை குனிந்துகொண்டு ஓரக் கண்ணால் சந்தோஷைப் பார்த்தாள் நித்யா. படபடவென்று பட்டாம் பூச்சிகளாய்க் கண்ணிமைகள் அடிக்க, அவளுடைய அழகிய விழிகள் தன்னை வருடியதில் சிலிர்த்துப்போய் நின்றான் சந்தோஷ்.

    என்ன ஒரு தெய்வீகமான மென்மையான அழகு இந்தப் பெண்! விசுவாமித்திரரை மயக்கிய மேனகையாய் இந்த சந்தோஷை ஒரு நொடியில் மயக்கித் தன் விழிகளால் சிறை பிடித்து இதயத்திலும் வந்து அமர்ந்துவிட்டாளே இப்படி!

    கண்டதும் காதல் என்று இதைத்தான் சொல்வார்களோ? ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கி அவளைத் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுவது என்ன ஒரு பண்பில்லாத செயல்! தனது பார்வையைக் கஷ்டப்பட்டு அவளிடம் இருந்து அகற்றி அவளுடைய தாத்தாவின் பக்கம் திருப்பினான் சந்தோஷ்.

    ரொம்ப நன்றிப்பா. எதிர்த்த வீட்டுக்கு வந்திருப்பதாகச் சொன்னயே நீ? மகேஷ்வரனுக்கு என்ன உறவு நீ?

    மகேஷ்வரனுடைய தம்பி மகாலிங்கத்தின் மகன் நான். பெரியப்பா, பெரியம்மாவைப் பார்க்க நேற்றுதான் சென்னையில் இருந்து வந்தேன்.

    ஓ மகாலிங்கம் பையனா நீ? ரொம்ப சந்தோஷம்பா. ஜானகி‌ நம்ப மகாலிங்கம் பையனாம்மா இது. உள்ளே போய் காஃபி கொண்டு வா தம்பிக்கு.

    இல்லை தாத்தா. ஸாரி தாத்தா என்று சொல்லலாமா?

    தாராளமாகச் சொல்லலாம்.

    நான் இப்ப காஃபி குடிக்க மாட்டேன். யோகா எல்லாம் செய்து விட்டுத்தான் ஏதாவது பழ ஜூஸ் ஜீனியில்லாமல் குடிப்பேன். இன்னொரு நாள் வந்து கண்டிப்பாகக் குடிக்கிறேன். பெரியப்பா என்னைக் காணோமென்று தவித்துப் போயிருப்பார். நான் வீட்டுக்குப் போகணும். உங்க பேத்தியைப் போய் கோலத்தை முடிக்கச் சொல்லுங்கள். பாவம் மயில் ஒன்று ஒற்றைக் காலில் ரொம்ப நேரமாக நின்று கொண்டிருக்கிறது. சீக்கிரம் காலைக் கொடுத்துக் காப்பாற்றச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டுமானால் போய் பூனையை விரட்டத் துணைக்கு நின்று கொள்ளுங்கள்.

    கேலியாகச் சிரித்துக்கொண்டே சந்தோஷ் நகர்ந்தான். பொய்க் கோபத்துடன் தன் கருவண்டு கண்களை உருட்டி விழித்தாள் நித்யா.

    "மார்கழித் திங்களல்லவா!

    மதி கொஞ்சும் நாளல்லவா!"

    பாடலை மென்மையாக முணுமுணுத்துக்கொண்டே சென்றான் சந்தோஷ் தன் வீட்டிற்கு.

    அத்தியாயம் 2

    வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்

    செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

    பையத் துயின்ற பரமன் அடிபாடி

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி

    மையிட்டு எழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;

    செய்யா தனசெய்யோம்; தீக்குறளை சென்றோதோம்;

    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

    உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

    (திருப்பாவை இரண்டாவது பாடல். ஆண்டாள் அருளியது)

    சந்தோஷ் வீட்டிற்குள் புன்னகையுடன் நுழைந்தான். நித்யாவின் அப்பாவியான முகமும், அவளுடைய பயமும், பளீரென்ற அவளுடைய அழகும் அவன் மனதை விட்டு அகலாமல் தொந்தரவு செய்தன. இனிமையான தனது அனுபவத்தை அசை போட்டுக்கொண்டே மலர்ந்த முகத்துடன் தனது வேலைகளைத் தொடர்ந்தான்.

    சிறிது நேரத்தில் ரெடியாகி ஓடுவதற்காக வெளியே வந்தான். ஸ்போர்ட்ஸ் ஷுவெல்லாம் அணிந்துகொண்டு ஓட ஆரம்பித்தவன், எதிர் வீட்டு வாசலில் அழகாகத் தோகை விரித்த இரண்டு மயில்களின் கோலத்தை நின்று ஒரு நிமிடம் ரசித்தான். கோலத்தை நேர்த்தியாக முடித்து வண்ணங்கள் இட்டுக் கலைநயத்துடன் மிக அழகாகவே முடித்திருந்தாள் நித்யா. கோலத்தின் நடுவிலே பசுஞ்சாணத்தில் சொருகி வைக்கப்பட்ட பரங்கிப் பூ. மஞ்சள் நிறத்தில் மனதைக் கவர்ந்து இழுக்கும் அழகான பரங்கிப் பூ.

    எதிர் வீட்டு ஜன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த நித்யாவை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு,

    "மியாவ் மியாவ் பூனைக்குட்டி

    வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி"

    என்று சத்தமாகப் பாடினான் சந்தோஷ்.

    குறும்புப் புன்னகையுடன், உடனே அங்கிருந்து ஜன்னலைவிட்டு நகர்ந்து உள்ளே ஓடினாள் நித்யா. பளீரென்று மின்னல் வெட்டியதுபோல் அழகான ஒரு வண்ணமயில் ஓடி மறைந்தது.

    ஜாகிங்கை முடித்துவிட்டு ஆற்றங்கரையை ஒட்டிய சாலையில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். திரும்பவும் ஏதோ பாடலை ஹம் செய்து கொண்டு நடந்த அவன், சாலையோரம் தாழ்வாக இருந்த மரக்கிளையில் உட்கார்ந்துகொண்டு கைகளில் இருந்த சிறு கற்களை ஆற்றுத் தண்ணீரில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த அவனுடைய தேவதையைக் கண்டு முகம் மலர்ந்தான்.

    வேகமாகச் சத்தம் போடாமல் அவள் அருகில் சென்று பே என்று கத்த அவளோ பதறிப் போய்த் துள்ளிக் கிளையில் இருந்து கீழே குதித்தாள்.

    கலகலவென்று சிரித்த சந்தோஷைக் கோபத்துடன் பார்த்தாள் நித்யா. இப்போது அவள் முகத்தில் நாணம் போய்க் கோபம்தான் குடியேறி இருந்தது. கோபத்தால் சிவந்த அவள் முகத்தை அவன் இன்னும் அழகாகத் தெரிகிறதே என்று ரசித்துக் கொண்டிருந்தான்.

    அங்கிருந்து ஓடுவதற்குத் தயாராகி நித்யா தாவணியை இழுத்து சொருகிக்கொண்டு கிளம்ப, அவள் வழியை மறித்துக்கொண்டு இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றான் சந்தோஷ்.

    எனக்கு வழியை விடப் போறீங்களா இல்லையா?

    குரலில் இயலாமையும் கோபமும் சேர்ந்து கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

    அட, இந்தச் சிலைக்குப் பேசக்கூடத் தெரியுமா? நல்ல வேளை ஊமையோ என்று நினைத்தேன்.

    நான் ஒன்றும் ஊமையுமில்லை‌. செவிடுமில்லை. தெரியுமா?

    செவிடு இல்லை என்றுதான் தெரிந்துவிட்டதே! பூனையின் குரல் கேட்டு ஓடியபோதே நிரூபிக்கப்பட்டது. ஊமையில்லைன்னு இப்போதுதான் தெரிஞ்சது. ஆனால், சரியான பயந்தாங்கொள்ளின்னு தெரிஞ்சுடுச்சு.

    திரும்பத் திரும்ப அதையே சொல்லி கேலி பண்ணினா எனக்குப் பிடிக்கவேயில்லை.

    அடாடா! என்ன பண்ணினா பிடிக்கும். சொன்னால் செய்து விடலாமே?

    வெட்கத்தில் முகம் சிவக்கத் தலை குனிந்தாள்.

    அப்போது அந்தப் பாதையில் சைக்கிளில் வந்த ஓர் இளைஞன் நித்யாவைப் பார்த்து சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தான். ஊருக்குப் புதியவனாகத் தெரிந்த சந்தோஷைப் பார்த்துத்தான் சந்தேகத்துடன் நித்யாவின் அருகில் வந்து பாதுகாப்பாக நின்று கொண்டான்.

    என்ன நித்யா? எனி பாராப்ளம்?

    இல்லை அண்ணா. இவர் எனக்குத் தெரிந்தவர்தான். எங்கள் எதிர்த்த வீட்டுக்காரர்தான்.

    "ஓ அப்படியா! ஸாரி ஸார். உங்களை நான் இதுவரை ஊரில் பார்க்காததால்தான் கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். கிராமத்தில் நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எச்சரிக்கையாக இருப்போம். எங்கள் ஊர்ப் பெண்களிடம் யாராவது புதிதாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1