Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அந்த சந்திரனே சாட்சி..!
அந்த சந்திரனே சாட்சி..!
அந்த சந்திரனே சாட்சி..!
Ebook73 pages23 minutes

அந்த சந்திரனே சாட்சி..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மழை கனம் குறைந்து போய்க் கொஞ்சமாய்த் தூறிக் கொண்டிருந்தது. சாலையோரமாய்க் காரை நிறுத்தியிருந்த சுபலேகா காரின் கதவைத் திறந்து கொண்டு பெரு மூச்சோடு வெளியே வந்தாள். மணிக்கட்டை உயர்த்திப் பார்க்க ஈஷியிருந்த இருட்டில் டிஜிட்டல் கருமையாய்த் தெரிந்தது. சைடிலிருந்த பட்டனைத் தடவி அமுக்கினாள். மிக சொற்ப வெளிச்சம் டிஜிட்டல் ஸ்க்ரீனைக் கழுவிவிட -
“ஊஹீம் அரைமணி நேரம் காத்திருந்தாகிவிட்டது பூச்சி பொட்டு நடமாடக் காணோம். கார் சனியன் சமயம் பார்த்து மக்கர் ஆகிக் கழுத்தறுக்கிறது.”
நிமிர்ந்து பார்த்தாள். கொஞ்ச தூரத்தில் குன்னூர் வெளிச்சப் புள்ளிகளோடு தெரிந்தது. மேலே நீராவி மாதிரி பனிப்புகை.
‘ஒரு கிலோ மீட்டர் இருக்குமா? பேசாமல் காரைப் பூட்டி சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போய் விட்டாலென்ன? அப்புறமாய் சின்னசாமியை அனுப்பி காரை கொண்டு வரச் சொல்லிவிடலாமே?’
நினைக்க நினைக்கவே நேற்று முன் தினம் எதற்கோ வித்யாசாகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
‘அம்மா சுபலேகா இந்த ஸீஸன்லே காட்டு யானைங்க நடமாட்டம் ஜாஸ்தி. அவளைப் பார்க்கணும்னுட்டு சிடியை தாண்டின இடங்களுக்கெல்லாம் தனியா போயிடாதே... தெரிஞ்சுதா?”
தனியாக நடந்து போகவும் தயக்கமாயிருந்தது.
‘என்ன செய்யலாம்...அழுத்தமாகக் கையை பிசைந்தாள் சுபலேகா. காரின் முன் பக்கமாக வந்து பானட்டைத் திறந்தாள். சுற்றி டிரைவர் ஸீட்டுக்குப் போய் டாஷ்போர்டிலிருந்த ஸ்விட்ச் ஒன்றை அழுத்திவிட பானட்டுக்கும் வெளிச்சம் பிறந்தது.
ஆயில் அடித்துக் கிடந்த எஞ்சின் மேல் மழை காரணமாக மண்ணும் அப்பிக் கிடந்தது. புரியாத ஒயர்கள் கசாமுசாவென்று பின்னிக்கொண்டு புரண்டிருக்க -
‘எதற்காக பானட்டைத் திறந்தோம்?’ தன்னையே கேட்டுக்கொண்டு யோசித்தாள் சுபலேகா.
பாண்ட்டிலினின்றும் தலையை எடுக்க-மறுபடியும் கவலை ஒட்டிக் கொண்டது. மெல்லமாய்த் திருப்பினபோது அந்த ஹேர்பின் வளைவுக்கு அந்தப்புறம் ர்ர்ர்ர்’ரென்ற இரைச்சலும், ஹெட்லைட் வெளிச்சமும்.
பஸ்ஸா?
ஆர்வமாய் எட்டிப் பார்த்தாள்.
அல்ல வேன். கையை ஆட்டினாள்.
இரைச்சலோடு நெருங்கின அந்த வேன் காரைக்கடக்கு போது மெல்ல ஊர்ந்து கொஞ்சம் தள்ளி நின்றது க்ளக்-கெ கதவுகள் திறந்து கொள்ள இரண்டு பேர்கள் இறங்கினார்கள்.
தன்னந்தனிமை சுபலேகாவின் மனசுக்குள் ஒரு இறுக்கமான பயத்தைச் சுழற்றியது.
‘கடவுளே, வருகிறவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’
நெருங்கின அவன் கெச்சலாய்த் தெரிந்தான். தலை முடி பம்மியிருந்தது. மணிக்கட்டு வரை ஸ்வெட்டர் கனமாய் மூடியிருந்தது. இருட்டில் பற்கள் வெள்ளைக் கோடாய் தெரிய சிரித்தவன் கேட்டான்.
“என்னம்மா இந்நேரத்துலே காரை இப்படி நிப்பாட்டிட்டு தன்னந்தனியா நிக்கறே?”
இன்னொருத்தனும் அவனோடு வந்து இணைந்து நின்று கொண்டான். வேண்டாத சதைகளை உடம்பில் வாங்கியிருந்தான். நடு மண்டையில் முடி காணாமல் போயிருந்தது. சின்னக் கண்கள் வேகமாய் சுழன்றது. தடிமான உதட்டுக்கு மேலும் கீழும் மீசையில்லாமல், தாடியில்லாமல் வழவழா“வந்துட்டிருந்தேன். கார் பாதில ரிப்பேர் ஆயிடுச்சு” மெல்லிய குரலில் சுபலேகா சொல்ல -
அவன் கேட்டான். “ரிப்பேர் கூட பார்ப்பியா?”
புரியாமல் தலை உயர்த்தினாள்.
“பானட்டெல்லாம் திறந்து வச்சிருக்கே?”
“ரிப்பேர் பார்க்கத் தெரியாது சும்மா திறந்து பார்த்தேன்.”
இரண்டு பேருமே சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே பிளந்து கிடந்த காரின் முன்புறத்தை நெருங்கினார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 16, 2024
அந்த சந்திரனே சாட்சி..!

Read more from ராஜேஷ்குமார்

Related to அந்த சந்திரனே சாட்சி..!

Related ebooks

Related categories

Reviews for அந்த சந்திரனே சாட்சி..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அந்த சந்திரனே சாட்சி..! - ராஜேஷ்குமார்

    1

    அந்த வியாழக்கிழமை சாயங்காலத்தின் கடைசி நிமிஷங்களில் பாக்கி இருந்த பத்து சதவீத வெளிச்சமும் நிதானமாய் இருட்டுக்குள் கரைந்து கொண்டிருந்தது. குன்னூரின் பச்சைப் பசேல் தேயிலை எஸ்டேட்களின் மேலே ஓடிய பாஸிட்டிவ் பொலாரிட்டி மேகங்கள் ஜிலீரிடும் நீரைச் சிதைத்து சின்னத் தூறல்களாய்த் தெளித்துவிட்டன.

    வாக்கிங்கை முடித்துக்கொண்டு திரும்பும் வித்யாசாகரை குளிரைத் தடவிக் கொண்ட காற்று குத்தூசி முனைகளாய் மாறி மைனஸ் டிகிரிகளில் தாக்க வித்யசாகர் அணிந்திருந்த ஸ்வெட்டரின் ஜிப்பை பரிபூரணமாய் இழுத்து விட்டுக் கொண்டார். நடையில் கொஞ்சம் வேகம் கொடுத்து, கால்களையும் வாக்கிங் ஸ்டிக்கையும் எட்டி வைத்தார். அந்த மேட்டுப் பகுதியிலிருந்த பங்களாவை ஐம்பதடியில் சமீபிக்க ஓட்டத்தையும் கலந்து கொண்டார்.

    போர்டிகோவைத் தொடுவதற்குள் அவரைப் பற்றி சில வரிகள்...

    போர்த்தியிருந்த சாம்பல் நிற சால்வையைத் தலையில் போட்டுக்கொண்டு தன் கனத்த சரீரம் குலுங்க, மூச்சு வாங்க ஓடும் ஐம்பத்தியொரு வயது வித்யசாகர்... அந்தப் பிராந்தியத்தில் நாலைந்து தேயிலை எஸ்டேட்களை வளைத்துப் போட்டிருப்பவர். தொடர்ந்து மேலும் வளைத்துப்போடும் முனைப்பில் இருந்த வித்யாசாகர் வயதாகிவிட்டது என்பதாலோ - சேர்த்த சொத்து போதுமென்று சோர்ந்துவிட்டதாலோ- போன வருடத்திலிருந்து விஸ்கரிப்பு முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எண்பது சதவித வழுக்கையைத் தலையில் வாங்கியிருக்கும் வித்யாசாகரைப் பிடித்த நிறம் எது எனக்கேட்டால் ‘தேயிலைப்பச்சை’ என்பார். பிடித்த நபர் யாரென்று கேட்டால் பளிச்சென்று ‘சுபலேகா’ என்பார். கொஞ்ச நாள் முன்னால நடந்த எலெக்ஷனில் வாக்குரிமை இருந்தும் நிலை நாட்டாத சுபலேகா வித்யாசாகரின் ஒரே... (வேண்டாம் அந்த அழகான சுபலேகாவை அடுத்த அத்தியாத்தில் பார்த்துக்கொள்வோமே)

    போர்டிகோவிற்குள் காலை வைத்ததும், ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு மூச்சு வாங்கினார். போர்டிகோ படிகளில் அமர்ந்து காத்து - கொண்டிருத்த சின்னசாமி அவரைப் பார்த்ததுமே - விசுக்கென எழுந்து கொண்டான். காதை மூடின குல்லாய் அவன் தலையில் அமர்ந்திருந்தது. பச்சை கட்டம்போட்ட லுங்கியும், கறுப்பு ஸ்வெட்டரும் போட்டிருந்த சின்னசாமிக்கு வயது முப்பத்தியெட்டு - ப்ளஸ் ஆர் மைனஸ் டூ. உப்பலான உடம்பு. அந்த பங்களாவின் வேலைக்காரன், தோட்டக்காரன், காவல்காரன், இன்னும் இதர காரன்!

    நிதானமாய்ப் படிகளை நோக்கி நடந்து வர ஆரம்பித்த வித்யாசாகரைப் பார்த்துப் பதறலோடு பேசினான்.

    அய்யா நீங்க போகும் போதே சொன்னேன்... இன்னிக்கு வானம் மப்பு போட்டிருக்கு... போகவேண்டாம்னு... கேக்காம போயிட்டு... இப்போ நனைஞ்சுட்டு வர்றீங்க.

    படியேறின வித்யாசகர் சிரித்தார்.

    நான் என்ன முழுசுமாவா நனைஞ்சிட்டேன்? ஏண்டா இப்படி கத்தறே?

    அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - உள்ளே ஓடிப்போய் டவலோடு திரும்பி வந்தான் சின்னசாமி. அவரிடம் நீட்டினான்.

    இந்தாங்கய்யா... துவட்டுங்க.

    வாக்கிங் ஸ்டிக்கை சோபாவின் மேல் கிடத்தின வித்யாசாகர் அவன் நீட்டிய டவலை வாங்கித் துவட்ட ஆரம்பித்தார்.

    இருங்கய்யா நிமிஷத்துல காபி கொண்டாரேன்.

    சொல்லிவிட்டு சின்னசாமி நகரப் போனபோது சட்டென முகம் மாறின வித்யாசாகர் படபடப்பாய்க் கேட்டார்.

    சுபலேகா இன்னும் வரலை?

    சின்னசாமி திடும்மென அவரைப் பார்த்தான்.

    வரல்லீங்களேய்யா...

    லேசாய் கவலை தடவின முகத்தோடு, ‘மேல் ஊட்டியில லாயர் வீட்டுக்குப்போறதா சொல்லிக் காரெடுத்துகிட்டுப் போனா. சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொன்னா! இன்னுமா லாயர்கிட்ட பேசிட்டிருக்கா?’ என்றார்.

    அவஸ்தையாய் வழுக்கையைத் தடவிக்கொண்டே ஹால் கடிகாரத்தைப் பார்த்தார். ஆறு ஐம்பது.

    "வக்கீலய்யா வீட்டுக்காய்யா...? அவரு பொண்ணும் நம்ம அம்மாவும் சேர்ந்துகிட்டா அரட்டைக்குக்

    Enjoying the preview?
    Page 1 of 1