Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்
Ebook98 pages32 minutes

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெல்லி.
பிரதமரின் இல்லம், உதவியாளர், கனோஜ் நேஷனல் செக்யூரிடி ஃபோர்ஸ் அதிகாரி ஃப்ரெட்ரிக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இன்னர்லிங் செக்யூரிடி ஃபோர்ஸில் இருக்கிற ஆறு பேரை இன்றைக்கு. ராத்திரி மாற்ற வேண்டும்
இல்லையா...?”
“ஆமாம்...”
“ட்யூட்டியை யார் யார்க்கு மாற்றுகிறீர்கள்...?”
“தன் சர்ட் பாக்கெட்டில் இருந்த - காலிகோ பைண்ட் செய்யப்பட்ட சிறிய டயரியை எடுத்து - பெயர்களைப்
படித்தார் ஃப்ரெட்ரிக்.
“சில்வா, மஜீம்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், - சித்திக்...”“
மிஸ்டர் ஃப்ரெட்ரிக்! தற்போதைய அரசியல் நிலைமையம், நாட்டின் நிலைமையும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்... பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னும் ஒரு மூன்று மாத காலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கும் அவருடைய குடும்பத்துக்கும் உச்சபட்ச பாதுகாப்பு தேவைப்படுகிறது. இன்னம் ஒரு முன்று மாத
காலத்திற்கு... இந்த அதிதீவிரமான பாதுகாப்பு பிரதமர்க்கு தேவைப்படும்... இந்த காலகட்டத்தில்... அறிமுகம் இல்லாத அந்நிய ஆட்கள் யார்க்கும்…... பிரதமரின் இல்லத்திற்குள் நுழைய அனுமதி யில்லை... விசேஷ க்ரீன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பிரதமரை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்... க்ரீன் கார்டுகள்மொத்தம் ஐந்து பேர்க்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன... அவர்கள் - யார் யார் என்பதை அடுத்த இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்.”
ஃப்ரெட்ரிக் தலையாட்டினார்.
உதவியாளர் கனோஜ் தொடர்ந்தார். இன்னர் லிங்க் செக்யூரிடியில் அடுத்த ஒருவார காலம் பணிபுரியப்போகும் அந்த ஆறுபேர்களையும் நான் இப்பொழுது பார்த்து பேச வேண்டும். முடியுமா...?”“
“முடியும். செக்யூரிடி க்வார்ட்ர்ஸில் தற்போது... ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் வரவழைக்கட்டுமா?”
“வரவழையுங்கள்...!
“ஃப்ரெட்ரிக் அருகே இருந்த செக்யூரிடி ஸெல்லுக்குள் நுழைந்து க்வார்ட்டர்ஸை தொடர்பு கொண்டு விபரம் சொல்லிவிட்டு - வெளியே வந்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம்
சில்வா, மஜும்தார், அரவிந்த், மித்ரா ராவ், ரொமேஷ், சித்திக் - ஆறு பேரும் பாட்டில் பச்சை யூனிஃபார்ம்களில்
பூட்ஸ் சத்தங்களோடு வந்து நட்டு வைத்த - கத்திகள் மாதிரி நின்றார்கள்
பிரதமரின் உதவியாளர் கனோஜ் அவர்களை ஏறிட்டார். “இன்னர்லிங்க் செக்யூரிடி கார்டஸாக நீங்கள் ஆறுபேரும் பிரதமரின் குடும்பத்தை பாதுகாக்கப் போகிறீர்கள். ரிக்கார்ட்ஸ்படி உங்களுடைய ஆறுபேரின் திறமைகள் எனக்குத் தெரியும். ஒரு நெருப்பு வளையம் போல் இருந்து - நீங்கள் செயல்படவேண்டும்.
“எஸ்... ஸார்...”
“நாட்டில் தற்போது இனக்கலவரங்கள் அதிகம். பழைய கோயில் களை புதுக் கண்ணோட்டத்தோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மதத் தலைவர்கள் இதனால் சில அரசியல் தலைவர்களின் மேல்... ஜனங்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களிடையே சிலர் தீவிரவாதிகளாக மாறி - ஆங்காங்கே இனக்கொலைகளைசெய்து வருகிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை... நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...”
கனோஜ் சொல்லி முடித்ததும் - ஆறு பேரும் அட்டென்ஷனுக்கு வந்து - இடுப்பிலிருந்த வளைவான கத்திகளை உருவிக் கொண்டு மண்டியிட்டார்கள். “இந்த தேசம் எங்களுக்கு பெரிது. இந்த நாட்டில் தலைவர் எங்களுக்கு முக்கியமானவர். அவரையும் அவருடைய குடும்பத்தையும் - எங்கள் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை காப்போம், இந்த தேசத்திற்காக எங்களை அர்ப்பணிப்போம்...”
“ஸெக்யூரிடி ஸெல்லுக்குள் டெலிபோன் கிணுகிணுத்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

Read more from ராஜேஷ்குமார்

Related to சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

Related ebooks

Related categories

Reviews for சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - ராஜேஷ்குமார்

    1

    செங்குத்துப்பாறை மலையடிவாரம். இருட்டில் கரைந்து போயிருந்தது. வானத்தில் உடம்பு தேய்ந்து போயிருந்த நோயாளி நிலா ஒரு பெரிய மேகத்துக்குப் பின்னால் மூச்சு திணறிக் கொண்டிருக்க - நட்சத்திரங்கள் அதை கண்டு கொள்ளாமல் கண் சிமிட்டின. அடித்த குளிர் காற்றில் மரங்கள் ஜோராய் கிளைகளை ஆட்டியது. சுற்றிலும் ஒரு பொட்டு வெளிச்சமில்லை.

    ஜோதி பாறைகளின் மேல் தாவி ஏறிக் கொண்டிருந்தாள். சாயம் போன ஸ்டோன்வாஷ் பேண்ட், சர்ட், பரட்டைத்தலை, தாடையில் முள் முள்ளாய் தாடி, உடம்பில் சூடான ரத்தம், பாறைகளைத் தாவி ஏறுவதில் ஒரு துள்ளல், இருபத்தேழு வயது ஜோதி ஒரு வெடிகுண்டுக்கு சமமானவள். பதினான்காவது வயதிலேயே பழுத்து விட்டவன். ட்யூஷன் படிக்கப் போன இளம் மரியபுஷ்பம் டீச்சரையே கற்பழிக்க முயற்சி செய்து போலீசாரால் போர்டு ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு... இருபது வயதில் ஏராளமான சூராதத்தோடும் கோபத்தோடும் விடுதலையாகி, வெளியே வந்து பெற்றவர்கள் வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி விட்டதால் - ரௌத்காரமாய் சத்தம் போட்டு விட்டு - வடநாட்டுப் பக்கம் போய் - கணிசமான கெட்டப் பழக்கங்களோடு திரும்பவும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டான்.

    ஜோதி ஒரு பாறையின் முகட்டுக்கு ஜாக்கிரதை பாய் போய் அதன் இடுக்கில் இறங்கினான்.

    உள்ளே டார்ச் வெளிச்சம் தெரிந்தது.

    ஓரு குரல் மேலே உயர்ந்து வந்தது.

    யார்...?

    நான் ஜோதி…...

    மௌனம்.

    ஜோதி பாறைச் சரிவில் இறங்கி மணலில் குதித்தான் தீப்பந்த வெளிச்சம் அப்போது பிரகாசமாய் அடித்தது. பக்கத்தில் ஒரு ஓடை சலசலவென்று பேசியது.

    தீப்பந்த வெளிச்சத்தில் நான்கைந்து இளைஞர்கள் தெரிந்தார்கள், எல்லோருமே முகத்தில் மூர்க்கம் காட்டும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள். சிவப்பு உறைந்து போன விழிகள். மழிக்கப்படாத தாடைகள் இடுப்பு பெல்ட்களில் பதுங்கியிருந்த பிஸ்டல்கள்.

    என்ன ஜோதி...? ஒருவன் கேட்டான்..."

    க்ரீன் சிக்னல்...

    புறப்படலாமா...?

    ம்... எல்லாமே நமக்கு சாதகமா இருக்கு...

    ஒரு நிமிஷம்! ஹெட் குவார்ட்டர்ஸை கான்டாக்ட் பண்ணி பேசிடலாம். கடைசி நிமிஷ மாறுதல்கள் ஏதாவது இருக்கலாம்...

    சொன்னவன் பாறையின் குடைவுக்குப் போய் அதில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த வயர்லெஸ்ஸை உயிர்க்கு கொண்டு வந்தான். பீங்க்... பீங்க்" என்ற சத்தத்தை தொடர்ந்து அவன் பேசினான்.

    ரத்தத்துளிகள் - எண் - ஐந்து பேசுகிறோம்..."

    ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது?

    தயார் நிலையில்...

    அருள்மிகு சங்கமேஸ்வரரின் நூற்றி முப்பத்தியிரண்டு அடி. கோபுரம்... நாளை காலை ஆறு மணிக்கு தரைமட்டமாகி சாய வேண்டும்...

    சாயும்...

    பொருத்தப்போகிற டைனடைஸ் எந்த வகை...?"

    ஸ்மேஷ்... ஃபார்ட்டி ஸெவன்

    ரிமோட் கண்ட்ரோல்?

    ஆமாம்…...

    ரேன்ஞ்ச...?

    இருநூறு மீட்டர்……"

    "கோபுரம் தரைமட்டமான செய்தி இந்த தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்க வேண்டும்... இந்துக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்து

    கொண்டிருக்கும்போதே முத்து நகரில் உள்ள மசூதி உடைபட வேண்டும்...

    திட்டத்தின் ஒவ்வொரு படியையும் வெற்றிகரமாய் தாண்டுவோம்.

    மகிழ்ச்சியான செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்... வயர்லெஸ் அணைந்தது.

    ஜோதி கேட்டான்.

    என்ன ஹாஜா...?

    ஹெட் குவார்ட்டர்ஸ் தலை அசைத்து அனுமதி கொடுத்தாச்சு...

    கிளம்பலாமா...?

    ம்……

    "டைனமைட் சமாச்சாரங்கள் நிரம்பிய - கருநீல காற்பாஸ் பைகளை சிரமமாய் எடுத்து முதுகோடு சேர்த்துக் கட்டிக் கொண்டார்கள். மற்றவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு - பாறையின் சிப்புகளில் கால் பதித்து மேலே ஏறி வெளியே வந்தார்கள்.

    குளிர்காற்று தாக்கியது.

    நான்கு திசைகளிலும் இருட்டு படுதா.

    தொலைவில் சங்கமேஸ்வர கோயிலின் கோபுர உச்சியும் - அதில் எரிந்து கொண்டிருந்த நீலவிளக்கும் தெரிந்தது.

    அந்த அழகான கோபுரம் நாளைக்கு விடியற்காலை இல்லை ஜோதி சிரித்துக் கொண்டே ஒரு பாறையைத் தாவினான்.

    ஹாஜா கேட்டான்.

    அந்தக் கோபுரம் கட்டி எத்தனை வருஷம் இருக்கும்...?

    எழுநூறு வருஷம்... செண்பக மாறவர்மன் வைஷ்ணவ மதத்திலிருந்து சைவ மதத்துக்கு கட்சி மாறியதும் கட்டின கோபுரம் அது...?

    "கோபுரம் சிதிலமாக ரெண்டு டைனமைட் போதுமா...?

    போதும்...

    கிராமம் அடிவாரத்தில் - சொற்ப விளக்குகளோடு தூங்கிக் கொண் டிருக்க - ஜோதியும் ஹாஜாவும் மளமளவென்று பாறைகளில் சரிந்து - கீழே வந்தார்கள்.

    டயம் எவ்வளவு…...?

    ஒண்ணு பத்து...

    அடிவாரத்தின் கரடுமுரடான இருட்டுப் பாதையில் நடந்து -பனையோலைகள் வேய்ந்த அந்த வீட்டுக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

    ஹாஜா கதவைத் தட்டினான்.

    டொக்... டொக்...

    "உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் குரல்.

    யாரது...?

    நான்தான்... இசக்கி!

    கதவு பளிச்சென்று திறந்தது.

    மாநிறமாய், அழகாய் கொடி மாதிரியான உடலமைப்போடு - இசக்கி பற்களைக் காட்டினாள்.

    கரெக்டா வந்துட்டீங்களே...

    சீக்கிரமா வந்து வைக்கப் போரை அள்ளிப் போடு…...

    இசக்கி வெளியே வந்து - இருட்டில் சுற்றும் முற்றும் பார்த்தாள். "ஹாஜாண்ணே! உங்க கண்ணுக்கும்...

    Enjoying the preview?
    Page 1 of 1