Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruththala Ula
Thiruththala Ula
Thiruththala Ula
Ebook178 pages56 minutes

Thiruththala Ula

By RVS

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இருபது திருத்தலங்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில் சேப்பாயி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படும் என் நான்கு சக்கர வாகனத்தில் சென்று தரிசித்தவை. கோயில்கள் பற்றிய வழக்கமான கட்டுரையாக இல்லாமல் இவையனைத்தும் என்னுடன் நீங்களும் சேப்பாயியில் அமர்ந்து ஊருக்குள் நுழைந்து அந்தப் பெஞ்சு போட்ட டீக்கடை, பச்சை வயல், சலசலக்கும் வாய்க்கால் என்று பார்த்துக்கொண்டேச் சென்று வழியில் பார்க்கும் பெரியவரிடம் “இங்க சிவன்கோயில் எங்கேயிருக்கு?” என்று கோயிலிருக்கும் திசையை வழி கேட்டு நுழைவதிலிருந்து குருக்கள் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுவது வரை நேரில் பார்ப்பது போல புதுக் கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580152708059
Thiruththala Ula

Read more from Rvs

Related to Thiruththala Ula

Related ebooks

Related categories

Reviews for Thiruththala Ula

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruththala Ula - RVS

    http://www.pustaka.co.in

    திருத்தல உலா

    Thiruththala Ula

    Author :

    ஆர்.வி.எஸ்

    RVS

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rvs

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பயணக்கட்டுரைகள்

    "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றார் திருமூலர். அவர் போன்ற சித்தபுருஷர்களுக்கு ஊனுடம்பே ஆலயமாகலாம். ஆனால் சித்தபுருஷர்களின் யோக்கியதையை நாம் பெற்றிருக்கிறோமா? என்பது கேள்விக்குறியே. லௌகீக வாழ்க்கையில் அனுதினமும் அல்லலுறும் போது ஆதரவாகவும் மனசுக்குப் புத்துணர்ச்சியாகவும் இருப்பது தெய்வங்கள் குடியிருக்கும் சான்னித்தியம் மிகுந்த கோயில்களுக்குச் செல்வது ஒன்றுதான்.

    இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இருபது திருத்தலங்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில் சேப்பாயி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படும் என் நான்கு சக்கர வாகனத்தில் சென்று தரிசித்தவை. கோயில்கள் பற்றிய வழக்கமான கட்டுரையாக இல்லாமல் இவையனைத்தும் என்னுடன் நீங்களும் சேப்பாயியில் அமர்ந்து ஊருக்குள் நுழைந்து அந்தப் பெஞ்சு போட்ட டீக்கடை, பச்சை வயல், சலசலக்கும் வாய்க்கால் என்று பார்த்துக்கொண்டேச் சென்று வழியில் பார்க்கும் பெரியவரிடம் இங்க சிவங்கோயில் எங்கேயிருக்கு? என்று கோயிலிருக்கும் திசையை வழிகேட்டு நுழைவதிலிருந்து குருக்கள் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுவது வரை நேரில் பார்ப்பது போல புதுக் கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இவ்வியாசங்களில் இடம்பெற்றிருக்கும் கோயில்கள் நான் சென்னையிலிருந்தோ மன்னையிலிருந்தோ பயணித்துத் தரிசித்தவை. மேலும் இந்த உள்ளடக்கப் பட்டியலில் இருக்கும் கோயில்கள் மட்டுமல்லாது வழியில் இருக்கும் பெருமாள் கோயில், அம்மன் கோயில் என்று சிறுசிறுகுறிப்புகளும் இருக்கிறது. சிலவற்றில் என்னிடமிருந்த படங்களையும் இணைத்துள்ளேன். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் எண்பது சதவிகித கோயில்களில் அரிதாகவும் சிவபெருமானின் அருளிலிருந்தாலும் மட்டுமே சென்று தரிசிக்க இயலும் சுயம்பு லிங்க மூர்த்தங்கள். மப்பேடு தவிர மிச்ச கோயில்கள் அனைத்தும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள். கட்டுரைகளின் தலைப்பு அந்தந்த கோயிலின் தேவாரப் பதிகத்திலிருந்து விசேஷமாக எடுக்கப்பட்டது அந்தப் பரமனின் அனுக்ரஹம்.

    இக்கோயில்களுக்கு ஏற்கனவே சென்று தரிசித்தவர்களுக்கு மீண்டும் கட்டுரைகள் வாயிலாக மானசீக உலா வருவது போலவும் புதிதாகப் படிப்பவர்கள் ஒருமுறை என்னுடன் ஊர்தியில் அமர்ந்து திருக்கோயில் உலா வந்தது போன்ற பிரமையையும் ஏற்படுத்துகிறது. - ஆர்.வி.எஸ்

    ஆர்.வி.எஸ்

    சிறுவயது முதலே கோயில்களுக்குச் செல்வதில் பக்தியுடன் பிரியமுள்ள எனக்கு திருமுறைத்தலங்களை அடையாளம் சொல்லிக்கொடுத்து எனக்குள் இருந்த ஆன்மிக ஆர்வத்தை முடுக்கிவிட்ட தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற புலனாய்வுப் பத்திரிகையின் ஆசிரியராகப் பதவி வகித்தவரும், இளம் வயதிலேயே கைலாசப்பதவியை அடைந்தவரும், அன்பொன்றே சிவம் என்று அறியவைத்தவருமான அமரர். திரு. ஆர். சிவகுமார் என்னும் சிவாண்ணாவுக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.

    திருத்தலங்கள்

    1.உள்ளம் கவர் கள்வன் - சீர்காழி

    2. தீவினைக்கோர் மருந்தாவான் - வைதீஸ்வரன்கோயில்

    3. பனங்காட்டூர்ப் பரமன்‬‬ - திருப்பனங்காடு

    4. பிணக்கிலாத பெருமான் - திருக்கழுக்குன்றம்

    5. ஒற்றியூருடைய கோவே! - திருவொற்றியூர்

    6. சடைமேற் பிறையேற்றவர் - ஹரித்துவாரமங்கலம்

    7. காட்டுப்பள்ளித் திருத்தன் - மேலைத்திருக்காட்டுப்பள்ளி

    8. அஞ்சேலென்று அருள் செய்பவன் - திருவையாறு

    9. ஒள்நிறத்த ஒளியார் - திருப்பத்தூர்

    10. சிங்கியின் ஈஸ்வரா - மப்பேடு

    11. ஐயன் நல்அதிசயன் - கூவம்

    12. திருமலர்க்கொன்றையான் - இலும்பையங்கோட்டூர்

    13. வேதம் நாவினர் - வைகல்

    14. நமையாளும் நல்லன் - திருநல்லம்

    15. தன்னொப்பார் இல்லான் - குருவிராமேஸ்வரம்

    16. உமையாள் கணவா! ! - திருக்கச்சூர்

    17. அந்தி வண்ணன் - திருக்களர்

    18. அந்தமில் அழகன் - மகேந்திரப்பள்ளி

    19. வெண்ணீற்றுமை பாகத்தன் - ஆச்சாள்புரம்

    20. அழல் நிறத்தர் - திருவடிசூலம்

    நன்றியுடன்...

    1.உள்ளம் கவர் கள்வன்

    https://4.bp.blogspot.com/-aBLXsQgvQf8/V7b3PUjuUUI/AAAAAAAABas/AiS00cVsCCEb9E7Vbey6xciAlrjEUBGswCLcB/s400/seerkazhi.jpg

    ***

    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

    சிவபாத ஹிருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் வேதியர் குலத்தில் உதித்த ஞானசம்பந்தப் பெருமான் தனது மூன்று வயதில் குளத்தங்கரையில் தன்னை விட்டு நீரில் மூழ்கி மந்திர ஜபம் ஜெபித்த தந்தையைக் காணாது அழுதபோது உமையம்மை பாலூட்டினாள். குளத்திலிருந்து எழுந்து வந்த சிவபாத ஹிருதயர் உதட்டினோரம் பாவழிந்திருப்பது கண்டு யார் கொடுத்த பால்? என்று கேட்க குழந்தை சம்பந்தன் விண்ணை நோக்கிக் கைக்காட்டினான் என்பது வரலாறு. அப்படி முலைப்பாலுண்டு திருஞானசம்பந்தர் எழுதிய முதல் பாடல்.

    அம்மையைத் துதித்து ஆரம்பிப்பதற்காக தோடுடைய செவியன் என்று ஆரம்பித்தாராம். சிவபெருமானின் இடபாகத்தில் தோடு அணிந்திருப்பதால் தோடுடைய செவியன் தூய வெண்மதியைச் சூடி விடையின் மீது ஏறி வரும் சுடுகாட்டுச் சுடலைப் பொடி பூசியவன் என்னுடைய உள்ளம் கவர் கள்வனாகிய இவனை தாமரை மலர் மீதிருக்கும் பிரம்மன் உலகத்தைச் சிருஷ்டிக்க அனுக்ரஹம் செய்ய தவமிருந்த பெருமை மிகு பிரமாபுரம் என்ற நகரில் எழுந்தருளிய பெருமான் இவனன்றோ!

    சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலம். சுயம்பு மூர்த்தி.

    ***

    புறவழிச்சாலைகளில்லாக் காலங்களில் சிதம்பரம், சீர்காழி போன்ற சிவத்தலங்களின் கோபுர தரிசனமாவது செய்யும் பாக்கியம் இருந்தது. இப்போது கடலூர் தாண்டினால் ஒரே மிதி.... சீர்காழி கடந்து புள்ளிருக்குவேளூர் மாயவரம் பாதையில் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. சென்னையில் கிளம்பியதிலிருந்து பெம்மான் தரிசனம் செய்யவேண்டுமென்பது என் அவா. உள்ளம் கவர் கள்வனல்லவா!!

    ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுக்க மனமில்லாத, பரந்துவிரிந்து ஓடும் அகண்ட சாலையிலிருந்து சட்டென்று உதறி பிய்த்துக்கொண்டு சீகாழிக்குள் இறங்கிவிட்டேன். சட்டநாதஸ்வாமி கோயில் தருமையாதீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஒரே மதிலுக்குள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் இரு தனிப்பெரும் கோயில்கள். கொடிமரம் தாண்டி நுழையும் போது வரும் கோபுரவாசலில் 'தோடுடைய செவியன்... விடையேறி..... பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே..."வை வெள்ளைப் பளிங்கு கல்லில் செதுக்கி சுவரில் பார்வையாய் ஒட்டியிருந்தார்கள்.

    சிவபெருமானை தோடுடைய செவியன் என்று பாடியது..... தனக்கு முலைப்பால் கொடுத்து இடப்பாகத்தில் அமர்ந்த அம்மனைப் புகழ்ந்துதான் சிவபெருமானையே பாடினாராம்... சக்தியின் சக்தி. எப்போதோ கேட்டது.

    பிரதோஷமாக இருந்ததால் ஊரார் சிலர் அருகம்புல், பால், வில்வம் என்று கையில் யத்கிஞ்சிதங்களோடு நடமாடினார்கள். கிழக்கு பார்த்த சன்னிதி. கோபுரவாசலிலிருந்தே பிரமபுரீஸ்வரர் காட்சி தருகிறார். பிரம்மா பூஜித்த ஈசன். அரையிருட்டில் சிவத்யானத்தில் இருந்த நந்தியெம்பெருமானை கடந்து செயற்கை விளக்கொளியில்லாமல் சுடராடும் எண்ணெய் விளக்கில் மனசுக்கு இன்னும் நெருக்கமானார் பிரமபுரீஸ்வரர். திருவாசிக்குப் பின்னால் ஏற்றிய ஒற்றை அகலை கிரணங்களாக்கிக் காண்பிக்கும் அந்த சுடர்க் கண்ணாடியில் தீபம் நடமிட ஏகாந்த தரிசனம்.

    சார்... அர்ச்சனை சட்டநாதருக்கா? இல்ல பிரம்ம...

    விசேஷம் யார்க்கு?

    இங்க சட்டநாதருதான்... அவர்தான் வரப்பிரசாதி...

    சட்டநாதருக்கே பண்ணுவோம்...

    உதவிக்கு வந்தவரும் ஒரு சட்டநாதர்தான். சீர்காழி ஆள். வலம் வந்த பின்பு பிரம்மபுரீஸ்வரர் சன்னிதிக்கு பின்புறம் மேலே மாடி ஏறினோம். ஒரு டிக்கெட் விலை ரூ. 5. என்று தகரபோர்டில் எழுதி மாடியேறும் பாதையை மூடியிருந்த கதவில் மாட்டியிருந்தார்கள். சிமென்ட் படிக்கட்டில் நிதானமாக ஏறும்போது ராஜாக்கள் காலத்தில் மரப்படி அமைத்திருப்பார்களோ.... பிற்காலத்தில் அது சிதைந்திருக்குமோ... என்ற எண்ணம் எழுந்தது.

    இருபது முப்பது படிகள் ஏறினால் தோணியப்பர் சன்னிதி வருகிறது. கருவறைக்குள் பிரமாண்டமான உமாமஹேஸ்வர சிலா ரூபங்கள். பெரியநாயகர். பெரியநாயகி. தரிசனம் செய்பவர்கள் கண்டதும் உறைந்துவிடும் ஜாலம் மிகுந்த சிற்பங்கள்.

    இவர் தோணியப்பர்... உமா மஹேஸ்வர்.. சுதைச் சிற்பம்தான். அபிஷேகம் கிடையாது. இவர்தான் இங்கே குருமூர்த்தம். என்றார் குருக்கள்.

    தீபாராதனை. கண்களில் ஒத்திக்கொண்டோம்.

    குருமூர்த்தம்...

    ஆமா.. ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுவார்... இந்த தலத்துக்கு ஒரு பெருமை இருக்கு.. தெரியுமோ?

    என்ன மாமா?

    பல கோயில்ல... ஒண்ணு குருமூர்த்தம் இருக்கும்... இல்ல.. சங்கம மூர்த்தம் இருக்கும்... லிங்க மூர்த்தம் எல்லா கோயில்லயும் இருக்கும்... இங்கதான் மூன்று மூர்த்தங்களும் சேர்ந்தே இருக்கு...

    ........

    "கீழே லிங்க மூர்த்தம்

    Enjoying the preview?
    Page 1 of 1