Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavul Thondriya Kathai
Kadavul Thondriya Kathai
Kadavul Thondriya Kathai
Ebook229 pages53 minutes

Kadavul Thondriya Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோயில்கள், சுவாமி தரிசனம், சிற்பக்கலை என்றால் எனக்கு எப்போதும் அலாதிப் பிரியம் உண்டு. தமிழ்நாட்டுக் கோயில்கள் மற்றும் பிற மாநில அபூர்வக் கோயில்களுக்கு அடிக்கடி நண்பர்களுடன் சென்று திரும்புவதும், அந்த ஆலயங்கள் குறித்து எழுதுவதும் நான் விரும்பிச் செய்யும் காரியங்கள்.

எனக்கு வெகு காலமாகவே சில ஐயங்கள் இருந்து வந்தது. ‘நாம் இன்றைக்கு வழிபடுகிற கடவுள்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்தக் கடவுள் தத்துவம் தோன்றியது எப்படி? விநாயகர், சிவபெருமான், பார்வதி, முருகன் மகாவிஷ்ணு, இப்படி இவர்களை மக்கள் வழிபடும் வழிமுறை எங்கிருந்து ஆரம்பமாயிற்று?’ - இவையே என் ஐயங்கள். இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவே இந்த புத்தகம்.

Languageதமிழ்
Release dateOct 7, 2023
ISBN6580170310296
Kadavul Thondriya Kathai

Read more from J.V. Nathan

Related to Kadavul Thondriya Kathai

Related ebooks

Reviews for Kadavul Thondriya Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavul Thondriya Kathai - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கடவுள் தோன்றிய கதை

    (தெய்வங்களும், திருக்கோயில்களும் தோன்றியது எப்படி?)

    Kadavul Thondriya Kathai

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    முன்னுரை

    E:\Priya\Book Generation\jv nathan\jvn photo-min.JPG

    கோயில்கள், சுவாமி தரிசனம், சிற்பக்கலை என்றால் எனக்கு எப்போதும் அலாதிப் பிரியம் உண்டு. தமிழ்நாட்டுக் கோயில்கள் மற்றும் பிற மாநில அபூர்வக் கோயில்களுக்கு அடிக்கடி நண்பர்களுடன் சென்று திரும்புவதும், அந்த ஆலயங்கள் குறித்து எழுதுவதும் நான் விரும்பிச் செய்யும் காரியங்கள். ‘சக்தி விகடன்’, ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’, கல்கி ‘தீபம்’, ‘இந்து தமிழ் திசை’, நெல்லை ‘தினமலர்’, ‘ஜன்னல்’ இப்படிப் பல இதழ்களிலும் எழுத அவற்றின் ஆசிரியர்கள் எனக்கு மிகுந்த சுதந்திரமும் ஆதரவும் அளித்தார்கள். அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்.

    ஆன்மிகப் பயணங்களுக்கு என்னுடன் உற்சாகமாகப் பயணிக்கும் நண்பர்கள் திரு அரவிந்தன், திரு ‘செக்ரடரி’ நடராஜன், திரு நா. ரமேஷ்குமார், மற்றும் தஞ்சை மாவட்டத்தின் மூலை முடுக்குக் கோயில்களுக்கெல்லாம் வழிகாட்டியாக எங்களுடன் வந்து, ஆலய அர்ச்சகர், அறநிலையத் துறை அதிகாரிகளின் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று எனக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் சேகரிக்க உதவிய, ‘இந்து’ குழுமப் பத்திரிகையாளர், நண்பர் திரு கரு.முத்து ஆகியோருக்கும் என் இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.

    எனக்கு வெகு காலமாகவே சில ஐயங்கள் இருந்து வந்தது. ‘நாம் இன்றைக்கு வழிபடுகிற கடவுள்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்தக் கடவுள் தத்துவம் தோன்றியது எப்படி? விநாயகர், சிவ பெருமான், பார்வதி, முருகன் மகா விஷ்ணு, இப்படி இவர்களை மக்கள் வழிபடும் வழிமுறை எங்கிருந்து ஆரம்பமாயிற்று?’ - இவையே என் ஐயங்கள்.

    மிகச் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், ‘இரசராசன் விருது’, ‘கரிகாற்சோழன் விருது’, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, ‘குறள் நெறிச் செல்வர்’ என விருது பல பெற்றவரும், நிறைய ஆய்வு நூல்கள் படைத்தவருமான முது முனைவர் திரு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து என் ஐயங்களைத் தெரிவித்தேன்.

    அவர் கூறிய கருத்துகளை மூன்று அத்தியாயங்கள் கொண்ட கட்டுரையாக்கி, ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ மாதமிருமுறை இதழுக்கு அனுப்பினேன். இரண்டு நாளில், அப்பத்திரிகையின் ஆசிரியர் திரு ப்ரியா கல்யாணராமன் ஃபோனில் என்னை அழைத்துப் பேசினார்.

    நாதன், நீங்க அனுப்பியிருப்பது மிக அற்புதமான கான்செப்ட். அதை மூன்று அத்தியாயங்களில் முடிப்பது சரியல்ல; விவரமாக சுமார் இருபது முப்பது இதழ்களுக்கு எழுதி அனுப்புங்க!

    திருமிகு ப்ரியா கல்யாணராமன் என் பாசமிகு நண்பர். என் மிது அளப்பரிய அன்பு கொண்டவர். ஒரே ஒருமுறை ‘குமுதம்’ விழா ஒன்றில் சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்ததோடு சரி, ஆனால், அடிக்கடி அலைபேசியில் பேசுவோம். சிக்கல் சிங்காரவேலன் ஆலயத்துக்கு எதிரில் சந்நிதி வீதியில் இருந்த அவர் வீட்டில் அவருடைய அப்பா, அம்மாவை ஒருமுறை நேரில் சந்தித்து, அவர்களின் பாசத்தில் நனைந்த பாக்கியம் உண்டு. கடவுள் அவசரக்காரன், பேராசைக்கார, கொடுமைக்காரன். நல்லவர்களைத் தனக்கு அருகில் இருத்திக் கொள்ள நினைக்கும் அவன் பேராசைக்கார, கொடுமைக்காரன் இல்லாமல் வேறென்ன? நண்பர் ப்ரியா ஸாரை மிகக் குறைந்த வயதில் தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டான், இறைவன் என்னும் அந்தக் கொடியவன். அனைவரிடமும் பாசத்தோடு, கன்னம் குழிவிழச் சிரித்த முகத்தோடு உரையாடும் ப்ரியா ஸார் எல்லோரையும் தவிக்க விட்டுப் போய் விட்டார். அவரை நன்றியோடு நினைக்கும் இந்தத் தருணத்தில், அவர் ஆன்மா சாந்தியடைய நான் அந்தக் கடவுளையே பிரார்த்திக்கிறேன்.

    ப்ரியா ஸார் சொன்னதன் பேரில் திருமிகு முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களைப் பேட்டி கண்டு ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ இதழில் 21 அத்தியாயங்கள் எழுதினேன்.

    குடவாயில் அறிஞர் பெருமகனார், அற்புதமான கருத்துக்களைத் தம் நேர்காணலில் கூறி உதவினார். அவருக்கு என்றென்றும் என் பணிவான வணக்கமும் நன்றிகளும்.

    ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ தொடர் இப்போது புத்தகமாக வருவதால், தொடராக வரும்போது வாசிக்காத தமிழ் மக்களுக்குப் பெரும் சிந்தனைத் தெளிவுக்கான விருந்தாக அமையும் என நம்புகிறேன்.

    ‘புஸ்தகா’ இந்த நூலை வெளியிட முன்வந்தமைக்காக அந்த நிறுவன உரிமையாளர் திரு ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,

    ஜே.வி.நாதன்

    vaithiyanathan@gmail.com

    1

    தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரத்து ஆலயம், தாராசுரம் ஐராவதீச்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்ற பிரம்மாண்ட, சிற்பக் கலை நுட்பச் சிறப்புகள் பெற்ற திருக்கோயில்கள் தொடங்கி நம் நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்கள் எண்ணிலடங்கா.

    E:\Priya\Book Generation\Kadavul Thondriya Kathai Deivangalum\100.JPG

    தஞ்சாவூர் கோபுரம்

    E:\Priya\Book Generation\Kadavul Thondriya Kathai Deivangalum\8.JPG

    தாராசுரம் கோவில்

    இந்தப் பிரம்மாண்ட, நுட்ப, கட்டிடக்கலை எப்படி உருவாயிற்று? இவற்றுள் உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்கிற இறைவன், இறைவி, ஏனைய உப தெய்வங்கள் தமிழர் மரபில் எவ்வாறு உருவாயினர்?... இவை மிகவும் ஆழமான கேள்விகள்.

    இக்கேள்விகளுடன் தஞ்சாவூரில் வசித்துவரும் முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்தித்தோம்.

    E:\Priya\Book Generation\Kadavul Thondriya Kathai Deivangalum\2.JPG

    73 அகவை நிறைந்தவர்; தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் 27 ஆண்டுகள் காப்பாட்சியராகவும் வெளியீட்டு மேலாளராகவும் பணி புரிந்தவர்; உலகின் பல நாடுகளிலும் நடைபெற்ற ஆயிரக் கணக்கான கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெருமைக்குரியவர்; இதுவரை 30 அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளவர்; (இவர் எழுதிய தலையணை சைஸ் ஆய்வு நூல்கள் பலவற்றை சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ளார்.) 2015-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது உள்ளிட்ட ஏராள விருதுகள், பரிசுகளைப் பெற்றவர், முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

    இவரைச் சந்தித்து நம் கேள்விகளை முன்வைத்தோம். அவர் தம் ஆராய்ச்சிக் கருத்துக்களை ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ வாசகர்களுக்காக மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

    E:\Priya\Book Generation\Kadavul Thondriya Kathai Deivangalum\1.jpg

    தாய் தெய்வ உருவமான விசிறிக் கல்

    "தெய்வ வடிவம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், ‘விசிறிக் கல்’ என்ற தாய்த் தெய்வ வழிபாட்டில்தான் தொடங்கியது.

    நாகரிகம் எனும் ஏணியில் ஏறத் தொடங்கிய மனிதகுலம் இயற்கையின் பேராற்றல்களை மெல்ல மெல்ல உணர்ந்து அதனைத் தெய்வம் எனக் கண்டு, அத் தெய்வங்களுக்கு உருவம் சமைத்து வழிபட முனைந்தது.

    ஒரு நாட்டுடன் இன்னொரு நாடு எவ்வகையிலும் தொடர்பு கொள்ள இயலாத பழங்காலத்தில் பல்வேறு நாடுகளில் மனிதன் படைத்த முதல் தெய்வ உருவம், ‘தாய்த் தெய்வ’ உருவம்தான். களிமண், சுடுமண் (செங்கல்), பின் கருங்கல் மற்றும் உலோகங்களில் தாய்த் தெய்வ உருவங்களை உருவாக்கி, மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.

    கிரீஸ், சைப்ரஸ், ஸ்பெயின், துருக்கி, மெசபடோமியா, மால்டா, ருமேனியா போன்ற பல்வேறு நாடுகளிலும், இந்திய நாட்டுச் சமவெளிகளிலும், குறிப்பாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொன்மையான தாய்த் தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது, அனைத்து வடிவங்களிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பதைக் காணலாம். தொடர்பே இல்லாத காலகட்டத்தில் படைப்பாளிகளின் கற்பனைப் போக்கு ஒத்த தன்மையதாக இருந்திருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

    தாய்த் தெய்வ உருவமான விசிறிக்கல்லை ஒரு முத்திரை போல (திரு மறு) பல்லவ மன்னர்கள் உருவாக்கிய திருமால் வடிவின் வலது மார்பில் (ஸ்ரீவத்சம் என்ற பெயரில்) பதிக்கப்பட்டு வந்தது ஒருபுறமிருக்க, ஒரு வட்ட மனிதத் தலையும், இரு கைகள், இரு கால்கள் போல் சுருள் வடிவமாக விசிறிக்கல் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

    E:\Priya\Book Generation\Kadavul Thondriya Kathai Deivangalum\3.JPG
    Enjoying the preview?
    Page 1 of 1