Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi
Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi
Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi
Ebook164 pages47 minutes

Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழமை வாய்ந்த இவ்வூரில் உள்ள தேனீசுவரருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்ற இலக்கியம் தான் தேனீசர் அந்தாதி. அந்தாதி என்பது ஒரு பாட்டின் இறுதிச் சொல்லை அடுத்த பாட்டின் முதற்சொல்லாக அமைத்துப் பாடுவது தேனீசரை வணங்கத் தேவருலகத்தின் தேவர்களும் வெள்ளலூருக்கு வந்து வழிபாடு செய்கின்றனர் என்று நயமாகத் தேனீசரின் பெருமையை உரைக்கின்றார்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580174810685
Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi

Related to Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi

Related ebooks

Reviews for Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi - V.K. Baladhandapani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெள்ளநல்லூர் சிவகாமசுந்தரி சமேத தேனீசர் அந்தாதி

    Vellanallur Sivagamasundari Sametha Thenisar Andhathi

    Author:

    வெ.கோ. பாலதண்டபாணி

    V.K. Baladhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vk-baladhandapani

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    பதிப்பாசிரியர் அறிமுகம்

    நூல்

    திருச்சிற்றம்பலம்

    வெள்ளநல்லூர் சிவகாமசுந்தரி சமேத தேனீசர் அந்தாதி.

    இஃது

    ஷெயூர் பல அன்பர்கள் கேட்டுக் கொண்டபடி

    உடுமலை நகர் தமிழ் வித்துவான்

    வெ.ரா. கந்தசாமி பிள்ளையால் இயற்றி ஷெ

    வெள்ளநல்லூர் மகா-ள-ள-ஸ்ரீ

    ந. பழனியப்பத்தேவர் குமாரர்

    கந்தசாமித்தேவர் பொருளுதவியால்

    கோயமுத்தூர்

    கிருஷ்ணவிலாஸ் பிரசில் பதிப்பிக்கப்பட்டது

    1923

    முன்னுரை

    தொன்மைச் சிறப்பையும், இரண்டாயிரத்து இரு நூறு ஆண்டு நெடிய வரலாற்றையும் கொண்டது வெள்ளலூர். நொய்யல் நதியின் தென் கரையில் அமைந்துள்ளதால் தென்னூர் என்றும், அதுவே பின்னர் தேனூர் என்றும் அழைக்கப்பட்டது. ஆதி காலத்தில் இது வேளிர் ஊராக இருந்தபடியால் வேளில், வேளிலூர், வெளிலூர் எனப் பல் வேறு பெயர்களில் விளங்கி வந்துள்ளது. கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருகூர் செப்பேடுகளின் படி இவ்வூர் வெள்ளலூர் என வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவ்வூர் அக்காலத்தில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பெரு வழியான இராஜ கேசரிப் பெரு வழியில் அமைந்திருந்த படியால், சிறந்த வணிக நகரமாக இருந்துள்ளது; எகிப்தியர், ரோமானியர் போன்ற அயல் நாட்டு வணிகர்கள் இங்கு தங்கி வணிகம் செய்ததற்கான சான்றுகள் ஏராளமாக இங்கே கிடைத்துள்ளன. வணிகச் சிறப்பு மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோயில்களும் இவ்வூரில் உள்ளன.

    இத்தகு சிறப்புகள் கொண்ட வெள்ளலூரின் வரலாற்றை விரிவாக எழுத எண்ணி 2014 முதல் 2018 வரை ஆய்வுத் தேடலில் இருந்த பொழுது கிடைத்த ஒரு செய்தி : வெள்ளலூரின் பழமையான கோயிலான தேனீஸ்வரர் கோயிலின் இறைவன் தேனீசர் புகழ்பாடும், நூறு பாடல்கள் கொண்ட தேனீசர் அந்தாதி என்னும் ஒரு நூல் உள்ளது.

    மேற்கண்ட செய்தியைக் காலந்தோறும் வெள்ளலூர் நூலில் பதிவு செய்து, நூல் 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் தேனீசர் அந்தாதி நூலையும் அதை எழுதியதாகச் சொல்லப்பட்ட கந்தசாமிப்பிள்ளை என்பவர் குறித்து அறிந்து கொள்ளவும் உடுமலைப்பேட்டை மற்றும் ஆனைமலை போன்ற ஊர்களில் விசாரித்தும் பயன் ஏதும் இல்லை.

    அதன் பின்னர் காலந்தோறும் வெள்ளலூர் நூலை வாசித்த நண்பர் திரு. தமிழ்மாணிக்கம் அவர்கள் மூலமாக 2022-இல், தேனீசர் அந்தாதி நூல் வெளியிடப்பட்டு 99-ஆம் ஆண்டில் என் கைகளில் கிடைக்கப்பெற்றது. 1923-இல் வெளி வந்த இந்த நூலை நூறாண்டுகள் கழித்து 2023-இல் பதிப்பித்து வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பேறாக எண்ணுகிறேன்.

    இந்த நூலைப் பதிப்பித்து வெளியிடும் நான் இறை நம்பிக்கை அற்றவனாக இருப்பது குறித்து ஒரு விமர்சனம் வரக்கூடும். இருப்பினும் நான் வரலாற்று மாணவனாக உள்ளதாலும், ஏற்கனவே வெள்ளலூர் குறித்த ஒரு வரலாற்று நூலை எழுதியதாலும், அதன் தொடர்ச்சியாக வெள்ளலூரின் மிகப் பழமையான ஒரு கோயிலின் இறைவனைப் பற்றிய இந்த நூலை மீண்டும் பதிப்பித்து எதிர்காலச் சமூகத்தின் கைகளிலே தர வேண்டியது எனது கடமை.

    இந்நூலை வெளிக் கொணர நிதி உதவி செய்த திரு. வெ.பே. மாரியப்பன் (கோவை சக்தி பில்டர் LLP), திரு. V.V. நாகராஜன் (வழக்கறிஞர்), தலையாசிரியர் திரு. மு. தாமோதரன், சிவத் தொண்டர் திரு. வெ.கு. முனுசாமி (தீயணைப்புத் துறை), வெ.அ. வஜ்ரவேலு (நிலா பாரதி) ஆகியோருக்கு நன்றி. மூல நூலின் பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் மற்றும் தெளிவுரை எழுதிய புலவர் திரு. வீ. சிவஞானம் அவர்களுக்கு நன்றி.

    புலவர் திரு. வீ. சிவஞானம் அவர்களிடம் தெளிவுரை பெற்றும், நூலை மெய்ப்பு திருத்தியும் உதவிய நண்பர் கவிஞர் நிலாபாரதி மற்றும் வெள்ளலூர் இலக்கிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

    வெ.கோ. பாலதண்டபாணி

    46, எல்.ஜி.நகர் I. வெள்ளலூர்,

    கோயம்புத்தூர் - 641 111.

    9445172831

    நன்றி

    வெள்ளாளபாளையம், பஜனைக் கோவில் அருகில் 1965 வரை வாழ்ந்து, அதன் பின்னர் சிங்காநல்லூர் நகருக்குக் குடி பெயர்ந்தவர் திரு. செல்வராஜ் (எ) கவிஞர் தமிழ்மாணிக்கம் அவர்கள். இவரது தந்தையார் திரு. வெங்கடாசலம், தாயார் திருமதி அங்கம்மாள் ஆவர்.வெள்ளலூர் தேனீஸ்வரர் கோயில் தெய்வங்களான சிவகாமசுந்தரி, தேனீசர் குறித்து நூறு பாடல்கள் அடங்கிய தேனீசர் அந்தாதி என்றும் நூலைத் தனது சேகரிப்பில் சுமார் அய்ம்பது ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்தவர். மேற்படி நூலையும், அதை எழுதிய உடுமலை நகர் தமிழ் வித்வான் வெ.ரா. கந்தசாமிப்பிள்ளை அவர்களின் வழித் தோன்றல்கள் குறித்தும் தேடிக் கொண்டிருந்தபோது, ‘அந்த நூல் என்னிடம் இருக்கிறது; கண்டு பிடித்து எடுத்துத் தருகிறேன்’ என்று சொன்னபடி நூலைக் கண்டு பிடித்து கொடுத்தார். நூல் என்னவோ வாய்ப்பாடு போல மிகச் சிறியது தான், ஆனாலும் எம் தமிழ்த் தாயின் அணி கலன் அல்லவா? தமிழ்ச் சமூகத்தின் கைகளிலிருந்து காணாமல் போகாதவாறு காக்க உதவிய கவிஞர் தமிழ்மாணிக்கம் அவர்களுக்கு நன்றி!

    வெள்ளலூர்

    இலக்கிய மன்றம்.

    அணிந்துரை

    பேரா. இ. சுந்தரமூர்த்தி

    கோவை மாவட்டம் வெள்ளலூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேனீசர் - சிவகாமசுந்தரி குறித்து உடுமலை நகர் தமிழ் வித்வான் இயற்றிய தேனீசர் - சிவகாமசுந்தரி அந்தாதி என்னும் இந்நூல் நூறு ஆண்டுகளுக்கு முன் (1923) இயற்றப் பெற்றது. இந்நூல் தேனீசர் அந்தாதி என்றும் வழங்கப் பெற்றது.

    இந்நூல் வெளிவர பொருளுதவி நல்கியவர் வெள்ளலூர் ந. பழனியப்பதேவர் குமாரர் கந்தசாமித்தேவர்.

    வெள்ளலூரில் எழுந்தருளியுள்ள தேனீசர் திருக்கோயில் மிகவும் தொன்மையான கோவிலாகும். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இக்கோயிலில் தொன்மையான சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலில் அமைந்துள்ள பிள்ளையார், உருவத்தில் மிகப் பெரியதாக விளங்கும் சிலையாகும். ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கூறுவர்.

    வயலும் தோப்புகளும் சூழ்ந்த பசுமையான சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. புகழ் பூத்த இக்கோயிலில் பழைய கல்வெட்டுகளும் பொறிக்கப் பெற்றுள்ளமை இக்கோயிலின் தொன்மையைக் காட்டுகிறது.

    வெள்ளலூர் சங்க காலத்தில் வணிகப் பெரு நகரமாக விளங்கிய ஊராகும், நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரைக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் வெளிலூர், தென்னூர், தேனூர், அன்னதான சிவபுரி எனப் பல பெயர்களில் வழங்குகின்றன. இறைவன் தேனீஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.

    பண்டைக் காலத்தில் வேளிர் ஊராகத் திகழ்ந்தமையால் வெள்ளலூர் எனப் பெயர் பெற்றிருக்கக் கூடும். பிற்காலத்தில் வெளிலூர் என்பது திரிந்து வெள்ளலூர் என ஆகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவதும் எண்ணத் தக்கது.

    இந்தியாவின் பண்டைய பெரு வழிகளில் ஒன்றான கொங்குப் பெரு வழியில் இந்த ஊர் அமைந்ததோடு, மற்றொரு பெரு வழியான ராஜ கேசரிப் பெருவழியும் இந்த ஊரின் வழியாகத்தான் சென்றது. வணிகச் சிறப்புப் பெற்ற இவ்வூரில் ஏராளமான ரோமானிய நாணயங்களும், கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் கிடைக்கப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1