Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒரு அழகான ஆபத்து
ஒரு அழகான ஆபத்து
ஒரு அழகான ஆபத்து
Ebook125 pages40 minutes

ஒரு அழகான ஆபத்து

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயன் அயர்ந்துபோய் அவளைப் பார்த்தான் “நீயா...?”
“ஏன் என்னைப் பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரி தெரியலையா?” கல்யாணி ஒரு சிரிப்போடு கேட்க, ஜெயன் அவளை பார்வையால் கழுவினான்.
“ஒரு அஞ்சு நிமிடம் அப்படி உட்கார். பெரியவரைக் கேட்டுட்டு சொல்றேன்.”
ஜெயன் வரவேற்பறையின் மூலைக்குப் போய்-ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருந்த இன்டர்காமின் ரிசீவரை எடுத்தான். அதிகபட்ச மரியாதைக் குரலில் அரை நிமிடம் பேசினான். பிறகு ரிசீவரை வைத்துவிட்டு கல்யாணியின் பக்கமாய் திரும்பினான்.
“மாடிப்படி ஏறி மேலே போனதும் முதல் அறை. பெரியவர் வரச்சொன்னார். போய்ப் பாரு. அநாவசியமா ரொம்ப நேரம் பேசிட்டிருக்காதே...!”
“ம்... ம்...” தலையாட்டிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தாள் கல்யாணி. ஹாலின் தரைப்பரப்பு பூராவும் கண்ணாடியாய் மொசைக். ஏராளமான சாண்ட்லியர் விளக்குகள். தேக்குமரக் கதவுகள். நிலைப்படிகள். ஆளுயரக் கண்ணாடிகள்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பிரமிப்பாய் மாடிப்படிகளில் ஏறினாள்,
முதல் அறைக்கு முன்பாக வந்து நின்றாள். கதவின் நிலைப்படியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த திரைச்சீலையை மெல்ல விலக்கினாள். குரலின் தொனியை தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.
“நான் உள்ளே வரலாமா சார்?”
“வாம்மா... உள்ளே வாம்மா” குரலில் ஒருவித இனிமை விரவியிருக்க, உள்ளேயிருந்து அழைப்பு வந்ததுகல்யாணி உள்ளே போனாள். அறை அரையிருட்டாய் இருந்தது. அறையின் சன்னல்கள் இறுக்கமாய் சாத்தப்பட்டிருக்க, ஈசிச்சேர் ஒன்றில் ராஜசேகரன் சாய்ந்திருந்தார்.
ஐம்பது வயதான ராஜசேகரன் ரொம்பவும் வயோதிகமாய் தெரிந்தார். “பொல்” லென்று தலையில் வெளுத்து ஒற்றை நாடி சரீரத்தில் நிரம்பவும் ஒடிசலாய் இருந்தார். மனசுக்குள் உலாவுகிற ஒரு இனம்புரியாத கவலை கண்களில் உட்கார்ந்திருந்தது. குளிருக்கு பாதுகாப்பாக உல்லன் கோட்டைப் போட்டு, கழுத்துக்கு மப்ளரை சுற்றியிருந்தார்.
“வணக்கம் சார்.”
“வாம்மா... இப்படி உட்கார்.” ராஜசேகரன் தனக்கு எதிரேயிருந்த சோபாவைக் காட்டினார்.
கல்யாணி சோபாவின் நுனியில் தவிப்பாய் உட்கார்ந்தாள்.
“உன் பேர்தான் கல்யாணியா?”
“ஆமா சார்.”
“சொந்த ஊர் கோயமுத்தூரா?”
“ம்...”
“உன்கூட யாரும் வரலையாம்மா?”
கல்யாணி வெறுமையாய் புன்னகைத்தாள்.
“என்கூட வர்றதுக்கு யாரும் இல்ல சார். எனக்கு அஞ்சு வயசாயிருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் காலமாயிட்டாங்க. எனக்கு கூடப் பிறந்தவங்களும் யாரும் இல்லை. என்னோட சொந்தக்காரங்கள்ல ஒருத்தர் என்னை ஒரு கிறிஸ்தவ அநாதை விடுதியில் கொண்டு போய் சேர்த்துவிட்டார். அந்த அநாதை விடுதியிலேயே வளர்ந்து, சிரத்தையா படிச்சு முன்னுக்கு வந்து, இப்போ ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு இருக்கேன்.”
“எந்த கம்பெனி?”
“ஹைபவர் ட்ரான்ஸ்மிஷன் பெல்ட்ஸ் கம்பெனி.”“என்னவா இருக்கிறே?”
“டைப்பிஸ்டு.”
ராஜசேகரன் சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு, பின் மெல்லிய குரலில் கேட்டார்.
“அந்த திருமண விளம்பரத்தை என்றைக்குப் பார்த்தே?”
“நேத்தைக்கு சாயந்தரம்.”
“அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே உன்னோட மனசுல, என்ன எண்ணம் வந்தது?”
கல்யாணி மெல்ல தலைகுனிந்து தன் வலது கை விரல் நகங்களையே பார்த்துக்கொண்டு சொன்னாள். “சார், நீங்கள் கொடுத்த அந்த திருமண விளம்பரத்தில் வாசகங்கள் வித்தியாசமாக இருந்தன. “அவசரமாய் நடைபெற வேண்டிய ஒரு திருமணம். 25 வயதான அழகான மணமகனுக்கு 20 வயதுக்கு உட்பட்ட மணமகள் தேவை. கடிதப் போக்குவரத்து வேண்டாம். சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் மணப் பெண்ணோடு நேரில் வரவும். முகவரி...” இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் மனதுக்குள்ளே ஒரு இனம்புரியாத ஆவல். எந்தவிதமான சொந்த பந்தம் இல்லாத எனக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் கட்டி வைக்க யாருமே முன்வரப் போறதில்லை. அதனால், இந்த விளம்பரம் மீது அக்கறை எடுத்துகிட்டு நானே புறப்பட்டு வந்தேன்...”
கல்யாணப் பேச்சை நிறுத்திவிட்டு, அவர் முகத்தைப் பார்த்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
ஒரு அழகான ஆபத்து

Read more from ராஜேஷ்குமார்

Related to ஒரு அழகான ஆபத்து

Related ebooks

Related categories

Reviews for ஒரு அழகான ஆபத்து

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒரு அழகான ஆபத்து - ராஜேஷ்குமார்

    1

    கிழக்கு திசை கனகாம்பர நிறத்தில் விடிந்து கொண்டிருக்க, அந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி தன்னுடைய நாளை ஆரம்பித்தது.

    ஒரு பிரமாண்டமான கொசுவலையில் வைத்து மூடின மாதிரி ஊட்டி அடர்த்தியான பனிப்படலத்தில் சிக்கியிருக்க-மக்கள் குளிரைப் பொருட்படுத்தாமல் சால்வைகளைப் போர்த்திக்கொண்டு வீதிகளில் வலம் வந்தார்கள். தொலைதூர மலைச்சரிவுகளில் தேயிலைத் தோட்டங்கள் ஒரு பச்சைக் கோடாய் தெரிய வரிசையாக நின்றிருந்த மலைச்சிகரங்களில் மேகங்கள் திம் என்று உட்கார்ந்திருந்தன.

    ஊட்டி பஸ் ஸ்டாண்டில் வந்து நின்ற சேரன் பஸ்சில் இருந்து முதல் ஆளாய் இறங்கினாள் கல்யாணி.

    கல்யாணியின் உண்மையான வயது இருபத்தி மூன்று. ஆனால் பார்வைக்கு இருபதாய் தெரிந்தாள். மாநிறத்துக்கும் கொஞ்சம் தூக்கலான நிறம். ஏதாவது கிரீம் தடவி பவுடர் பூசினால் சிவப்பாய் தெரிவாள். சற்று நீள சைஸ் முகம். கல்யாணியின் முகத்தில் அவளுடைய கண்கள்தான் ஸ்பெஷல் அயிட்டங்கள். அடுத்தபடியாய் உதடுகள். உண்மையாகவே ஆரஞ்சு சுளைகள். மொசைக்காய் வழவழத்த மோவாயில் ஒரு கடுகு மச்சம் அனாதையாய் ஒட்டியிருந்தது. மார்பையும், இடுப்பையும் வர்ணித்தால் ஆபாச எழுத்தாகிவிடும். அவ்வளவு திரட்சி! திரட்டு!

    கல்யாணி ஊதா நிறத்தில் மஞ்சள் பூக்கள் சிரித்த சேலையில், அதே நிற ஜாக்கெட்டில் ஒரு ஊதாப்பூவாய் நடந்தாள், கையில் சின்னதா ஒரு தோல் பை.

    பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து உதிர்கிற பனியில் ரோட்டு ஓரமாய் மெல்ல நடை போட்டாள். டீக்கடை வாசல்களில் உட்கார்ந்து, ஆவி பறக்கும் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த துப்பட்டி போர்த்தியிருந்த - ஊட்டிவாசிகள் கல்யாணியை பார்வையாலேயே மென்றனர்.

    தெருமுனையைத் தாண்டியதும் கல்யாணி எதிரே வந்துகொண்டிருந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிளை எக்ஸ்யூஸ்மீ என்று சொல்லி நிறுத்தினாள்.

    என்ன வேணும்...?

    இந்த அட்ரஸ் எங்கேயிருக்குன்னு சொல்ல முடியுமா...? கல்யாணி கேட்டுக்கொண்டே தன்னுடைய உள்ளங்கையில், நான்காய் மடித்து வைத்திருந்த அந்த சீட்டை நீட்டினாள்.

    கான்ஸ்டபிள் அந்த சீட்டை வாங்கி மெல்ல வாய்விட்டு படித்தார்.

    ராஜசேகரன், எவர்கிரீன் எஸ்டேட்ஸ், சில்வர் லேக் ரோடு, ஊட்டி... அந்த காகிதத் துண்டை மறுபடியும் கல்யாணியிடமே கொடுத்துவிட்டு சொன்னார். இங்கிருந்து கொஞ்சம் தொலைவு நடக்கணுமேம்மா...

    எவ்வளவு தூரம் இருக்கும்?

    கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர்...

    பரவாயில்லை... ஒரு கிலோ மீட்டர்தானே...? வழியைச் சொல்லுங்க... நான் மெல்ல நடந்து போயிடறேன்... கல்யாணி சொல்ல, கான்ஸ்டபிள் கையைக் காட்டினார்.

    நேரா போய்... வலது பக்கம் திரும்பினால் ஒரு சர்ச் வரும். அந்த சர்ச்சை ஒட்டி செம்மண் பாதை ஒண்ணு பிரிஞ்சு போகும். அதே பாதையை பிடிச்சு... ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே போனால் இந்த எவர்கிரீன் எஸ்டேட் வரும்...

    நன்றி.

    கான்ஸ்டபிளுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு நடந்தாள், கல்யாணி. ஐந்து நிமிட நடையில் அந்த லுத்தரன் சர்ச் கண்ணில் பட, அதையொட்டி கோணல் மாணலாய் செம்மண் பாதை ஒன்று புல்வெளிக்கு மத்தியில் ஓடியிருந்தது. கால்நடைகள் அந்நேரத்துக்கே மேய்ச்சலை ஆரம்பித்திருந்தன.

    கல்யாணி அந்த செம்மண் பாதையில் நடந்தாள். பனியில் நனைந்து போய் சொத சொதவென்று இருந்த புல்தரை சேலையின் ஓரங்களை ஈரமாக்கியது.

    ஏற்றத்திலும், இறக்கத்திலும் செம்மண் பாதை ஓடிக்கொண்டேயிருக்க- அதையொட்டி வேகமாய் நடந்தாள். கிழக்குப் பக்கமாய் சூரியன் பீட்ரூட் நிறத்தில் பிறந்து கொண்டிருந்தான். வானம் பூராவும் ரத்தக் கீறல்கள் மாதிரி மேகங்கள். கும்பல் கும்பலாய் பறவை சமாச்சாரங்கள்.

    ஒரு பத்து நிமிட நடை.

    ஏராளமான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில், மைதா மாவால் செய்யப்பட்ட மாதிரி அந்த பங்களா வெள்ளை வெளேரென்று கண்ணுக்குள் எக்கியது.

    கல்யாணியின் இதயம் அம்மாடி என்று ஆச்சரியப்பட்டது. பங்களா காம்பவுண்டை நெருங்கினாள்

    கேட்டின் முகப்பிலேயே எவர்கிரீன் எஸ்டேட்ஸ் என்ற எழுத்துக்களைத் தாங்கிய பித்தளை போர்டு மின்னியது. கேட் அருகே ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த அந்த வாட்ச்மேன் கம்பளிப் போர்வையை போர்த்திக்கொண்டு எழுந்து வந்தான்.

    யாரும்மா வேணும்?

    ராஜசேகரன் இருக்காரா?

    பெரியய்யாதானே...? இருக்காரம்மா. நீங்கள் யார்ன்னு சொன்னால் தேவலை...

    என் பேர் கல்யாணி. கோயமுத்தூர்லேயிருந்து வர்றேன். அய்யாவை ஒரு விஷயமா சந்திச்சு பேசணும்... உள்ளே போகட்டுமா...?.

    ம்... போங்கம்மா. பங்களாவோட முன்னாடி அறையில் மானேஜர் ஜெயன் உட்கார்ந்திட்டிருப்பார். அவர்கிட்ட சொன்னீங்கன்னா அவர் உங்களை பெரியய்யாகிட்டே கூட்டிகிட்டு போவார்.

    கல்யாணி தலையாட்டிவிட்டு உள்ளே போனாள்.

    ரோஜா செடிகள் வரிசையாய் நின்று - ஏராளமான ரோஜாப் பூக்களை இஷ்டமான நிறங்களில் புஷ்பித்திருந்தன. போர்டிகோவில் சாக்லேட் நிற டயோட்டா கார் ஒன்று வெண்ணெய்க் கட்டியாய் நின்றிருக்க- வெள்ளை சீருடை தரித்த கார் டிரைவர் பாலீஷ் துணியால் அதன் உடம்பைத் தேய்த்துக் கொண்டிருந்தான்.

    கல்யாணி போர்டிகோ படியேறி பங்களாவின் வரவேற்பு அறைக்குள் நுழைந்தாள்.

    அதே விநாடி-எதிர் அறையிலிருந்து உல்லன் கோப் அணிந்த இளைஞன் வெளிப்பட்டான். நல்ல உயரத்தில் தாட்டியாய் இருந்தான். சதுர முகம். மோவாயில் தாடியை பயிராக்கி டிரிம் செய்திருந்தான். வாய், சதைப்பற்றுல்லாத உதடுகளின் காரணமாய் ஒரு கோடு கிழித்த மாதிரி தெரிந்தது. சிவப்பான சிறிய கண்கள்.

    இவன் தான் அந்த வாட்ச்மேன் சொன்ன மானேஜர் ஜெயனாக இருக்கும் என்ற நினைப்போடு பவ்யமாய் குட்மார்னிங் சார்... என்றாள்.

    ஆனால், அவனோ கல்யாணியின் குட்மார்னிங்கை அலட்சியம் செய்தபடி அவளை நெருங்கினான். கரகரப்பான குரலில் கேட்டான்.

    யாரு...? என்ன வேணும்?

    நான் மிஸ்டர் ராஜசேகரனைப் பார்க்கணும்...

    ஏதாவது வேலை கேட்டு வந்திருந்தியானால் இப்பவே போயிடு. எந்த வேலையும் இங்கே காலி இல்லை... அவன் அமர்ந்தலாய் சொன்னான்.

    நான் வேலை கேட்டு வரல்லீங்க.

    பின்னே?

    மிஸ்டர் ராஜசேகரன் கொடுத்த கல்யாண விளம்பரம் சம்பந்தமா பேச வந்திருக்கேன்...

    ஓ...! என்றபடி தாடியைச் சொறிந்தான் ஜெயன். உன் பேரென்ன?

    கல்யாணி.

    ஊர்...

    கோயமுத்தூர்.

    விளம்பர வாசகப்படி கல்யாணம் செஞ்சுக்கப்போற. பெண்ணை நேர்ல கூட்டிட்டு வரணுமே...? கூட்டிட்டு வந்திருக்கியா? கேட்டுக்கொண்டே வாசலைப் பார்த்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1