Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வா, என் முதல் எதிரியே..!
வா, என் முதல் எதிரியே..!
வா, என் முதல் எதிரியே..!
Ebook86 pages26 minutes

வா, என் முதல் எதிரியே..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தென்னந் தோப்புக்குள் நுழைந்தாள் சாமந்தி. கிராமத்து கட்டுடலை முரட்டு கைத்தறி சேலை மொய்த்திருந்தது. காலையில் பூசிக் குளித்த மஞ்சள் அந்த மத்தியான நேரத்திலும் - பசேலென்று முகத்திலும் - கைகளிலும் - தங்க நிறமாய் ஜொலித்தது. மூக்கில் மின்னிய சிறிய மூக்குத்தியும், கழுத்திலிருந்த கறுப்பு பாசி மணியும் அவளை எடுப்பாக்கி காட்டின.
 "மாமோவ்..."
 இரண்டு கைகளையும் வாயருகே குவித்து சத்தம் போட்டாள் சாமந்தி. காய்ந்த தென்னம் ஓலைகளை பொறுக்கிக்கொண்டிருந்த - ஒரு பெண் சத்தம் கேட்டு தொலைவினின்றும் திரும்பிப் பார்த்தாள்.
 "சாமந்தி யார தேடறே...? உன்ற மாமனயைா?"
 "ஆமா..."
 "அது கிழக்கால பக்கம் எந்த மரத்திலேயோ தொத்திகிட்டு இருந்தது."
 சாமந்தி தோப்பு வரப்பின் மேல் பி.டி. உஷா மாதிரி ஓடி - தோப்பின் கிழக்கு பக்கத்திற்கு - வந்து ஒவ்வொரு மரமாய் அண்ணாந்து பார்த்தாள்...
 "மாமோவ்..."
 வயிறு எக்கி கத்தினாள்.
 பதிலுக்கு மரத்தின் உச்சியிலிருந்து குரல் வந்தது.
 "அட... ஏம் புள்ளே..."
 சாமந்தி அண்ணாந்து பார்த்தாள். தென்னை மரத்தின் இளநீர் குலைகளுக்கு மத்தியில் அந்த திடகாத்திரமான. மாமன் தெரிந்தான்."எறங்கி வா... மாமோவ்..."
 "என்ன வெஷயம்...?"
 "எறங்கி வா... சொல்றேன்... ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்..."
 சாமந்திக்கு முறை மாமனான ராஜப்பன் அந்த உயரமான தென்னை மரத்தை ஒரே நிமிஷத்தில் வழுக்கிக்கொண்டு கீழே வந்தான். கறுத்த மார்பும், களையான முகமும் வியர்வையில் இருந்தது.
 "என்ன புள்ளே...?"
 "இந்த மட்ட மத்தியானத்துல தென்னை மரம் மேல ஏறிக்கிட்டு என்ன மாமா பண்றே...? காய் பறிப்புக்குத்தான் இன்னும் நாலைஞ்சு நாள் இருக்கே...?"
 "மர எலிங்க ஜாஸ்தியாயிடுச்சு புள்ளே... எத்தினி தேங்காயை சுரண்டி போட்டிருக்குப் பாரு... அதான் பொட்டுக்கடலையில் பாஷாணம் கலந்து வெச்சுட்டிருந்தேன்..."
 "சரி கெளம்பு..."
 "எங்க புள்ளே...?"
 "என்ற வூட்டுக்குத்தான்."
 "எதுக்கு...?"
 "போன மாசம் சித்தரா பௌர்ணமி அன்னிக்கு எங்க அப்பாரு மாரியம்மன் கோயில் வாசல்ல வெச்சு உன்றகிட்ட என்ன சொன்னாரு...?"
 "என்ன சொன்னாரு...?" பின்னந்தலையைக் கீறினான் ராஜப்பன்.
 "நெல்லா ரோசனை பண்ணிப்பாரு..."
 "எ... ன்... ன... சொன்னாரு...?" மூக்கைச் சொறிந்துகொண்டே யோசித்தவன் கண்களை விரித்தான்.
 "ஆங்! வர்ற ஆவணி மாசம் உனக்கும் எனக்கும் கல்யாணத்தை பண்ணி வெக்கிறதா சொன்னாரு..."சொன்னாரு இல்லையா...?"
 "ஆமா..."
 "இப்ப வூட்டு திண்ணையில் உட்கார்ந்துகிட்டு சொல்றாரு என்ற அப்பன்... உனக்கும் எனக்கும் கல்யாணம் இல்லையாம்...?"
 "எ... ன்... ன... து...?" தலைக்கு கட்டியிருந்த, முண்டாசை அவிழ்த்தான் ராஜப்பன். "உங்கப்பனுக்கு என்னாச்சு...?"
 "அதான் தெரியல்ல மாமா…"
 "தண்ணி கிண்ணி போட்டிருக்காரா...?"
 "எங்கம்மா செத்துப்போன அன்னிக்கு! தண்ணிப் பழக்கத்தை விட்டவர்தானே... அதுக்கப்புறம் அவர் தொட்டதே இல்லையே?"
 "பின்னே உங்கப்பனுக்கு என்னதான் ஆச்சு...?"
 "தெரியல்ல... நீயே வந்து கேளு..."
 "நட... சொல்றேன்..."
 ராஜப்பன் அரிவாளை இடுப்பில் சொருகிக்கொண்டு சாமந்தியோடு நடந்தான்.
 "ஆச்சர்யமாயிருக்கு புள்ளே..."
 "எது மாமா...?"
 "உங்கப்பன் சொன்னதுதான்... நேத்துகூட பண்ணையார் வூட்டு வாளத் தோப்புல நான் வேலை பார்த்திட்டிருந்தப்ப... உங்கப்பாரு அந்தப் பக்கமா வந்தாரு... என்ன மாப்ள ஆத்தா சௌக்கியமா இருக்காளான்னு கேட்டாரு... இன்னிக்கு அந்த மனுஷனுக்கு என்னாச்சு...?"
 "தெரியலையே...?"
 "உங்கப்பா அப்படி சொன்னதுக்கு... நீ என்ன சொல்லிட்டு வந்தே...?""நா... என்ன சொல்றது...? அப்பாரு அப்படி சொன்னதுமே நெஞ்சுக்கூடு 'திக்'ன்னு ஆயிடுச்சு... பதறியடிச்சுகிட்டு உன்றகிட்ட ஓடியாறேன்..."
 இருவரும் தோப்பைக் கடந்து எதிர்ப்பட்ட கருப்பராயன் கோயிலைத் தாண்டினார்கள். சலசலத்து நீர் பாய்ந்து கொண்டிருந்த வாய்க்கால் கரை ஓரமாய் நடந்து - ஊர்த் தெருவுக்குள் நுழைந்தார்கள். தெருவின் ஆரம்பத்திலேயே பெட்டிக்கடை வைத்திருந்த - ரங்கம்மா கேட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223835974
வா, என் முதல் எதிரியே..!

Read more from Rajeshkumar

Related to வா, என் முதல் எதிரியே..!

Related ebooks

Related categories

Reviews for வா, என் முதல் எதிரியே..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வா, என் முதல் எதிரியே..! - Rajeshkumar

    1

    டேய்... அகில்ஷ்... ஷ்... ஷ்... ஷ்...

    கதவைத் தட்டிக்கொண்டே அம்மா கூப்பிடும் சத்தம் - குளிருக்கு பயந்து போர்வைக்குள் இருந்த அகிலேஷ்க்கு ஈனஸ்வரமாய் கேட்டது.

    போர்வையை உதறிக்கொண்டு எழுத்து உட்கார்ந்தான். அறை ஜன்னலில் இன்னமும் வைகறை இருட்டு தெரிந்தது. தலைக்கு மேல் சீலிங் ஃபேன் பேரிங் தேய்ந்து போனதால் ‘தொட்... தொடக்கா... தட்...தடக்கா...’ என்று தடுமாற்றமாய் ஓடிக்கொண்டிருந்தது. காலண்டரில் அபயம் காட்டி சிரித்த முருகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே கட்டிலினின்றும் கீழே இறங்கிப் போய் கதவைத் திறந்தான்.

    அம்மா நின்றிருந்தாள்.

    உன் ஃப்ரெண்ட் வேல்ராஜ் வந்து காத்திட்டிருக்காண்டா... என்னவோ மேட்ச் ப்ராக்டீஸாம். ஆறு மணிக்கு க்ரௌண்டுக்கு போகணுமாம்...

    நெற்றியில் அடித்துக் கொண்டான். இருபத்தைந்து வயதான அந்த அழகான அகிலேஷ்.

    மறந்து போயிட்டேன்...

    முன்னறைக்கு வந்தான்.

    வார இதழ் ஒன்றைப் புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த வேல்ராஜ் நிமிர்ந்து முறைத்தான்.

    என்னடா ராத்திரி செக்கண்ட் ஷோவா?

    சேச்சே...

    பின்னே என்னடா அஞ்சே முக்கால் வரைக்கும் தூக்கம். ஆறு மணிக்கே க்ரௌண்ட்ல இருக்க வேண்டாம்...?

    ப்ராக்டீஸ் நாளைக்குதான்னு கோச் சொன்ன மாதிரி ஞாபகம்...

    இருக்கும்... இருக்கும்... போய் மூஞ்சியை அலம்பிட்டு கிளம்புடா... ஆறு மணிக்கெல்லாம் க்ரௌண்ட்ல இருக்கணும்... இந்த லட்சணத்தல டீமுக்கு நீ காப்டன்...

    அம்மா! இந்த தடியனுக்கு காபி - குடு. நான் ஃபேஷ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.

    எனக்கு காப்பியெல்லாம் வேண்டாம். நீ சீக்கிரம் கிளம்பினா போதும்...

    இதோ அஞ்சே நிமிஷம்! வந்துட்டேன்...

    ஓடிப்போய் டாய்லெட்டுக்குள் நுழைந்தான் அகிலேஷ். அவனுடைய அம்மா சமையலறையிலிருந்து காப்பி டம்ளரோடு வெளிப்பட்டாள்.

    ஏண்டாப்பா வேல்ராஜ்... ஊர் ஊரா போய் பந்தை உதைக்கிறதை விட்டுட்டு... கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு இருக்கக்கூடாதா? எப்ப பாரு விளையாட்டு... விளையாட்டுதானா...?

    வேல்ராஜ் சிரித்தான்.

    அம்மா! நானும் அகிலேஜும் ஃபுட்பால் ப்ளேயர்ஸா இருந்ததினால்தான்... பேங்க்ல உடனடியா வேலை கிடைச்சுது. எங்களுக்கு பேங்க்ல கிடைக்கிற மரியாதைக்கு காரணம் இந்த விளையாட்டுதான்... அடுத்த மாசம் டெல்லியில் இண்டர்நேஷனல் ஃபுட்பால் மேட்ச்... அதுல கலந்துட்டு ஆடறதே ஒரு பெரிய கஷ்டம்...

    என்னமோ போங்கடாப்பா... மாசத்துல பத்து நாள் கூட வீட்ல தங்காமே... ஊர் ஊரா அலையறது எனக்குப் பிடிக்கலை... அகிலேஷுக்கு சீக்கிரமாவே ஒரு கால் கட்டைப் போட்டுடலாம்ன்னு நினைச்சுட்டிருக்கேன். அவனோட அப்பா உயிரோடு இருந்திருந்தா... இந்நேரம்... ஊர்ல இருக்கிற புரோக்கர்களையெல்லாம் வரவழைச்சு... பெண்ணைத் தேடச் சொல்லியிருப்பார். இந்தா காப்பி... குடி...

    வேண்டாம்மா...

    அட... குடிடா... அகிலேஷ் பாத்ரூமிலிருந்து வெளியே வர எப்படியும் பத்து நிமிஷமாகும்...

    சொன்ன மாதிரியே பத்து நிமிஷம் கழித்து அகிலேஷ் வந்தான்.

    டேய் வேல்! எதுல வந்தே...! ஸ்கூட்டரா... பைக்கா...?

    பைக்...

    அப்ப நான் ஸ்கூட்டர் எடுத்துக்க வேண்டாம்...? உன்னோட பைக்லேயே வந்துடட்டுமா...?

    பெட்ரோல் மிச்சப்படுத்தறயா...? சரி... கிளம்பு...

    புறப்பட்டார்கள்.

    அம்மா கேட்டாள்.

    அகிலேஷ்! எத்தனை மணிக்கு வருவே?

    எட்டரை மணிக்கு...

    டிபன் என்ன பண்ணட்டும்...? உப்புமாவா...? பொங்கலா...?

    பொங்கல்...

    தொட்டுக்க...

    தக்காளி சட்னி...

    சாப்பாட்டு ராமா...! கிளம்புடா... வேல்ராஜ் அகிலேஷைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்.

    இன்னமும் இருள் பிரியாத காலை நேரம். குளிர்ச்சியாய் இருந்தது. ஜாக்கிங் சூட்டில் - திணித்து - ‘தஸ்க் புஸ்க்’ - கென்று ஓடிக்கொண்டிருந்த ஒரு குண்டுப் பெண் அகிலேஷைப் பார்த்து ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு - தன் பிரும்மாண்டமான பின் பகுதிகளை காட்டிக்கொண்டு வளைவில் திரும்பினாள்.

    வேல்ராஜ் கேட்டான்.

    யார்ரா இந்தக் குண்டு...?

    என்னோட ஃபேன்... இந்த தெருக்கோடியில் இருக்கிற ஜட்ஜ் வீட்டுப் பொண்ணு...

    ஜாக்கிரதையா இருடா...

    ஏன்டா...?

    "அது சொன்ன குட்மார்னிங்கில் ஏகப்பட்ட காமம். வீட்டுக்கு வான்னு கூப்பிட்டா போயிடாதே... இத்தனை நாளும் நீ பாதுகாத்து வெச்சிருக்கிற

    Enjoying the preview?
    Page 1 of 1